திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்

resize_image
தூணிலும், துரும்பிலும் இருக்கும் திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். திருமாலைப் போலவே பல அவதாரங்களும் எடுக்கிறார்கள்.

அவர்கள் மத வாதிகளாக இருக்கிறார்கள். மத வாத எதிர்ப்புக்குள்ளும் இருக்கிறார்கள். இனவாதிகளாக இருக்கிறார்கள். இனவாத எதிர்ப்புக்குள்ளும் இருக்கிறார்கள். சில நேரங்களில் ஜாதி ஒழிப்பாளர்கள் போலவும் தெரிகிறார்கள்…

எத்தனை வேடங்கள் போட்டாலும் அத்தனையையும் அம்பலப்படுத்தும் சொல் டாக்டர் அம்பேத்கர்.

சகல பொந்துகளிலும் பதுங்கி இருக்கும் ஜாதி உணர்வாளர்களை, வெறியர்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
வெல்ல முடியாத வீரம்:ஆய்வாளர் அறிஞர் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

வெல்ல முடியாத வீரம்:ஆய்வாளர் அறிஞர் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்

4 thoughts on “திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்

  1. ஜாதி வெறி என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள். ஒவ்வொருவனுக்கும் ஒரு ஜாதி இருக்கிறது. அதை எவ்வாறு ஒழிக்க முடியும்?

  2. கந்தசாமி இதோ உங்கள் பார்வைக்கு….பிரிட்டீஷ்காரன் லாஸ்ட் நேம் இல்லாமல் இந்தியர்கள் எப்படி இருக்கலாம் என்று ஜாதி பேரைப் போட்டுக் கொள்ள செய்தான்…அதான் ஜாதி வெறியின் தொடக்கம்…அதை நீர் ஊற்றி வளர்த்த பெருமை பெரியாரைச் சேரும்…ஜாதி வெறி பெரியாருடன் நன்றாக வளர்ந்தது….இன்று திருமாலைப் போல விஸ்வரூபமெடுத்து வளர்ந்து நிற்கிறது….

    எங்கயாவது அந்த கால எழுத்தாளர்களுக்கு, முனிவர்களுக்கு ஜாதி பெயர் இருக்கிறதா….கபிலர் அய்யர், கம்பர்‍‍ ‍‍‍‍‍‍டேஷ் டேஷ், இளங்கோ டேஷ் டேஷ், இப்படி….

  3. கடந்த நூறு ஆண்டுகளில் ஜாதிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. பெரியாரிஸ்டுகளின் “கொள்கை முழக்கங்களால்” ஜாதிகளை. உட்பிரிவுகளைக் கூட குறைக்க முடியவில்லை. என் தாத்தாவும், என் தந்தையும் நானும் எங்கள் ஜாதிப் பெயரை தம் பெயரில் ஒரு பகுதியாகக் கொள்ளவில்லை. என் மகன் தன் பெயரில் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு இருக்கிறான். பெரியாரும் அவர் சீடர்களும் ஜாதியை ஒழித்த வரலாறு இது !

  4. சகல பொந்துகளிலும் பதுங்கி இருக்கும் ஜாதி உணர்வாளர்களை, ஜாதி வெறியர்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

Leave a Reply

%d bloggers like this: