வைரமுத்துவை மிஞ்சினாரா நா. முத்துக்குமார்?

vairamuthu
நா.முத்துக்குமார், தேசிய விருதை இரண்டாவது முறை வாங்கியிருக்கிறார். அதனால் முத்துவை, வைரமுத்துவோடு ஒப்பிடுகிறார்கள் பலரும். வைரமுத்துவின் மேல் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவருடைய வார்த்தைகள் கண்ணதாசன் வார்த்தைகளை விட ஆளுமை நிறைந்தது.

அதுபோல் பெரியார் ஆதரவை, திராவிட இயக்க ஆதரவு அரசியலை ஒரு போதும் கவிஞர் வைரமுத்து மறைத்ததில்லை. அதைப் பல நேரங்களில் தீவிரமாகப் பேசவும் செய்திருக்கிறார். பாபர் மசூதி இடிப்பதற்கு நெருக்கமான காலங்களில், பார்ப்பனர்கள் நிறைந்த சபையில்,
“கடவுளுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்குக் கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை.” என்று தீர்க்கமாகத் தீர்த்துப் பேசினார். அப்போதும் அவர் புகழின் உச்சியில் இருந்தார்.

நா. முத்துக்குமாரும் திராவிட இயக்க பின்னணியின் காரணமாகத்தான் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அவர் தன் அரசியலை ரகசியமாக வைத்துக் கொண்டு, தன் தொழில் தர்மங்களை மட்டுமே தான் பிரதானப்படுத்துகிறார்.

திராவிட இயக்க எதிர்ப்பாளரான சுந்தர ராமசாமியிடம் இலக்கியச் சுவையை ருசிக்கிறார் பகிரங்கமாக. ஆனால் பெரியார் ராமசாமிக் குறித்து அதுபோல் சிலாகிப்பதில் அவரிடம் ஒரு அச்ச உணர்வு இருக்கிறது.
ஆக, வைரமுத்துவை விட இன்னும் கூடுதலாக முத்துக்குமார் தேசிய விருதுகள் கூடப் பெறலாம். ஆனால் ஒரு போதும் அவரால் வைரமுத்துவின் இடத்தைப் பிடிக்க முடியாது.
வைரமுத்துவின் இடம் வெறும் சினிமா பாடல்களால் நிரம்பியதல்ல, அது தமிழ் மொழி உணர்வும், தன் மண்ணின் மீதான அன்பும், திராவிட இயக்க அரசியல் பின்னணியும் கொண்டது.

28 March

7 thoughts on “வைரமுத்துவை மிஞ்சினாரா நா. முத்துக்குமார்?

 1. You, Mohammed Sharukh Khan, Singarajah George, Sudhar Sanan and 465 others like this.
  71 shares
  Jahir Rawther · 10 mutual friends
  பாபர் மசூதி இடிப்புப் பற்றி பேசியது ஒருபுறம் இருக்கட்டும். குஜராத் இனக்கலவரம் பற்றி எறிந்தபோது இவர் சார்ந்த திமுக கழகம் அன்றைய பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது. இன்றைய மஞ்சள் துண்டுக்காரர் அன்று மட்டும் பாஜக அமைச்சரவையிலிருந்து விலகியிருந்தால், அவரை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, நம்ம ராமதாஸ் இவர்களும் விலகுவதாகச் சொல்லியிருந்தால், அப்போதே குஜராத் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டடிருக்கும். 3 முறை தற்போதுள்ளவர் முதலமைச்சர் ஆக வந்திருக்கமுடியாது. இந்த அளவு காவிக்கூட்டம் இன்று வெறிபிடித்து அலைந்திருக்காது. ஆனால், இவர் கூட அதை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. உங்கள் பேச்சை மதிக்கும் நான் இவரை நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. இன்னும் சொல்வதாக இருந்தால், தமிழை வைத்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று கனவு கண்ட தருண் என்ற எம்பிக்கு வக்கலாத்து வாங்கியவர். இடைத்தேர்தலில் பாஜக தோற்றவுடன் இங்கு நம்முடைய பருப்பு வேகாது என்று தமிழை மறந்தவர்கள். பாருங்கள், சட்டமன்றத்தேர்தல் நேரத்தில் இந்த தருண் எம்பியைத்தான் தமிழ்நாடு பாஜக வின் மேலிடப்பார்வையாளராக அனுப்புவார்கள்.
  28 March at 10:32 · Like · 23
  Arumuga Vel அதனால்தான் தருண் விஜய்க்கு சொம்பு சுமந்தாரா ?
  28 March at 10:33 · Like · 8
  புதிய பாமரன் நெருடுகிறது தோழர். அதாவது, கழிசடைகளில் ஓரளவு நல்ல கழிசடை என்று ஏறுக்கொள்ளவேண்டுமென்று சொல்ல வருகிறீர்களா?!
  28 March at 10:35 · Like · 7
  புதிய பாமரன் பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்: “நமது புலவர்கள் படித்துப்போட்டு அளப்பார்கள் தோழர்களே! சாதாரணமாகப் படிக்காதவரிடமாவது பகுத்தறிவு வாசனையினைக் காணலாம், இந்தப் புராணக் குப்பைகளைப் படித்து அதனை தமது வாழ்வுக்கு கருவியாக அமைத்துக் கொண்டவர்களிடம் மருந்துக்கும் கூட பகுத்தறிவு தோன்றாது…. மிருகங்கள் மட்டும்தான் தாம் பிழைப்பதற்காக மட்டும் வாழ்கின்றன. மனிதன் அப்படியல்ல பிறருக்காக வாழவேண்டும். நம் இனத்திற்கு மரியாதை உண்டாக்க வேண்டும்…” (திருச்சி பெரியார் பயிற்சி பள்ளி இலக்கியமன்ற திறப்புவிழா, சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் பெரியார் ஆற்றிய உரை, 23-8-1963 & 30-10-1967) – வினவிலிருந்து…
  28 March at 10:38 · Like · 16
  புதிய பாமரன் ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது… – எச்சரிக்கை! இலக்கிய அமீத்ஷாக்கள்…
  28 March at 10:42 · Like · 20
  Jayaseelan Ganapathy · 36 mutual friends
  நா.முத்துக்குமார் …
  Jayaseelan Ganapathy’s photo.
  28 March at 10:47 · Like · 4
  Sathya Saravanan · Friends with வால் பையன்
  அப்படி ஒன்றும் பெரிய ஆளுமை இருப்பதாக தோன்றவில்லை…
  வைரமுத்துவின் வரிகள் சமுதாய மாற்றத்திற்கு வழி காட்ட வில்லை
  28 March at 10:59 · Like · 2
  Sivakumar Shanmugam · 50 mutual friends
  உணமை
  28 March at 11:01 · Like
  Neelson Jenn sema thozhar
  28 March at 11:02 · Like
  TamilSae Thanjaavooraan · 12 mutual friends
  கவிஞன் என்பவன் உண்மையானவனாக இருக்க வேண்டும். அவன் காசுக்கவியோ, மாசுக்கவியோ, மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக மக்கள் முன் வைக்கும் துணிவும், தெளிவும் இருக்க வேண்டும் அந்த வகையில் வைரமுத்து ஒரு வீரிய வித்து….வாழ்க மானுடம்
  28 March at 11:17 · Like · 4
  புதிய பாமரன் எங்களையெல்லாம் பயிற்றுவிக்கிற உங்களின் எழுத்துக்களில் அத்தி பூத்தாற்போல சில நேரங்களில் பதர்-விதைகளை உதிர்த்துவிடுகின்றன என்பதை குறித்துக்கொள்ளுங்கள் தோழர் மதிமாறன்.
  28 March at 11:17 · Like · 12
  Athi Narayanan · 17 mutual friends
  உண்மை தான்… ஆனால் அவருடைய சமிபத்திய நடவடிக்கைகளை பார்த்தால் மாற்றுக்கருத்து வருவதை மறுக்க முடியவில்லை… அதுதான்… சமஸ்ஹிருத தருண்விஜய்க்கு பாராட்டு விழா நடாத்தியது…
  28 March at 11:19 · Like
  Arivu Selvan · Friends with பசி தி.வி.க and 41 others
  ஆள்வோரை அண்டிப் பிழைக்கும் வைரமுத்து, தமிழை வைத்துத் தன்னுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டவர். தமிழ் மக்ககளின் உரிமைப் போராட்டங்களுக்கு, ஒரு கலைஞனாக அவரின் பங்களிப்பு ஒன்றுமில்லை.
  28 March at 11:21 · Edited · Like · 8
  Sathya Saravanan · Friends with வால் பையன்
  நீங்கள் விவாதம் செய்யும் அளவுக்கு வைரமுத்து ஒன்றும் போராளி இல்லை…
  கவி தொழில் செய்யும் சராசரி மனிதன் அவ்வளவுதான். ..
  28 March at 11:25 · Like · 6
  செந்தில் குமார் வெள்ளிக்கண்ணு · 2 mutual friends
  இந்த வைரமுத்துதான் சமஸ்கிருத சொம்பு தருன் விஜய் தமிழ்நாடு வர மாமா வேலை பார்த்தார்.
  எல்லாம் ஒரூ பத்ம விருதிற்காகப் செய்யபட்டது.
  28 March at 11:27 · Like · 4
  Sathya Saravanan · Friends with வால் பையன்
  சாதி , மத, இன, மொழி , ஆரிய ,திராவிட
  வேற்றுமை மற்றும் அடக்குமுறை பற்றி விவாதம் மட்டுமே செய்து உங்கள் சக்தியை விரயம் செய்யாதீர்கள். ..என்று உன் முன்னேற்றம் ஒரு சமூக முன்னேற்றத்திற்கு வழி காட்டியாக உள்ளதோ அது தான் உண்மையில் புரட்சி
  28 March at 11:36 · Like
  Mohamedihshanullah Mohamedihshanullah Neengal solvathu unmaithaan…
  28 March at 11:39 · Like
  மாறன் அழகு · Friends with BK BK and 219 others
  வாஜ்பாய் ஆட்சியை 13 மாதத்தில் அதிமுக கவிழ்த்தது. அந்த சமயத்தில் எந்த தேவையும் ஏற்படாமல் பாஜகவுக்கு திமுக முட்டுக்கொடுத்தது. அடுத்த தேர்தலில் பாஜகவைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுமந்தது. அப்போது. “பிஜேபியுடன் திமுக கூட்டணி வைப்பது சரிதானா? என்று கேட்டப…See More
  28 March at 11:43 · Like · 16
  Vilvam Cuba வைரமுத்து கொள்கை உடையவர் என்றாலும், சமூகத்திற்குப் பெரிதும் பயனில்லாதவர். சகப் பாடலாசிரியர்களுக்கு இடையூறு செய்தவர், இறுமாப்புக் காட்டியவர். நிறைய அரசியல் செய்பவர். அவருக்காக நீங்கள் ஏன் இவ்வளவு…?
  28 March at 12:38 · Like · 8
  Vcksiva Bharathi உண்மை பதிவு..
  28 March at 12:39 · Like
  Mohd Kuthbudeen · 2 mutual friends
  ஒரு படைப்பாளிக்குள் பல பரிமானங்கள் உண்டு. பல கருத்து வேறுபாடுகளும், பல சிந்தனை முறண்களும் உண்டு. காலத்திற்க்குத் தகுந்தாற்போல் கருத்துக்களைச் சொல்வதில் தவறு இல்லை. கொள்கைகளைத்தான் பச்சோந்தி போல மாற்றிக் கொள்ளக் கூடாது. வைரமுத்துவிடம் பல முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக அவரின் படைப்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. க்ண்ணதாசன் குடிகாரராக இருந்ததால் அவரின் படைப்புகளை ரசிக்காமலா இருக்கிறோம்? மனிதனாகப் பிறந்த யாவரும் 100% குறையற்றவர்கள் இல்லை என்பதை உணர்ந்தாலே போதும்.
  28 March at 13:13 · Like · 6
  Puliangudi Seyad Ali · 66 mutual friends
  உண்மை தான்… ஆனால் அவருடைய சமிபத்திய நடவடிக்கைகளை பார்த்தால் மாற்றுக்கருத்து வருவதை மறுக்க முடியவில்லை… அதுதான்… சமஸ்ஹிருத தருண்விஜய்க்கு பாராட்டு விழா நடாத்தியது…
  28 March at 13:28 · Like · 4
  Samooga Neethi Mu Garkey · 68 mutual friends
  நாம் கவிஞர் வைரமுத்து அவர்களிடம் எதிர் பார்ப்பது அதிகம், கலைஞரிடம் எதிர்பார்ப்பது போல, ஆனால் அவர் அரசியல் தரகர் ஆகி நெடுநாள் ஆகிவிட்டது
  28 March at 13:37 · Like · 7
  Ko Prince வைரமுத்துவுக்கு உண்மையில் இவ்வளவு ஆழமான அரசியல் ஆர்வமும் புரிதலும் உள்ளதா என தெரியவில்லை … தருண்விஜய்க்கு பாராட்டு விழா நடத்திய கணங்களில் வைரமுத்துவின் மீதான அன்பின் கரிசன கதவுகளையும் நம்பிக்கை கீற்றுகளையும் மூடியேவிட்டேன்…
  28 March at 13:41 · Like · 10
  Habeeb Rahman · Friends with RajaRaja Ark
  ஒருவர் மீதுள்ள விருப்ப மற்றவர் மீது வெறுப்பாக மாற்ற வேண்டாம் இருவரும் தமிழ்தாயின் பிள்ளைகள் இதில் யார் பாராட்டப்பெற்றாலும் வாழ்த்துவோம்
  28 March at 13:57 · Like · 7
  Selvaraj Ksraj · Friends with Feroz Babu and 15 others
  தங்களுக்கு எது பொருளாதார அரசியல் அதிகார நலன்களை கொடுக்கிறதோ அதற்க்குதகுந்தமாதிரி பேசுவதும் எழுதுவதும்தான் கனதாசன் முதல்கொண்டு இன்றைய முத்துகுமார்வரையுலும் நிலைப்பாடாக இருக்கிறது மானையும் தேனையும் மயிலையும் இவர்களின் மசாலாவில் குருமாவைத்து படைத்த கவிதைகளைத்தவிர வேருஎன்னகவிதைகளை படைத்தார்கள் ?
  28 March at 14:07 · Like · 4
  Aari Baskar D · 7 mutual friends
  அவர் அரசியல் தரகர் ஆகி நெடுநாள் ஆகிவிட்டது
  28 March at 14:21 · Like · 2
  Senthil Kumar Sambantham · 50 mutual friends
  Aam Aari,murppukku sinthanaikkum pakuththarivu sinthanaikkum
  28 March at 15:40 · Edited · Like
  Krishdaiya Sudhakar · 9 mutual friends
  தோழரே எனக்கு வைரமுதுமேல் ஒருசந்தேகம் இருந்தது அவர் வடநாட்டு RSS MP க்கு பாராட்டுவிழாஎடுதாரல்லவா (திருக்குறள்)அப்பொழுது.
  28 March at 16:18 · Like
  Roszali Zali · Friends with Abdul Khader M
  Oru,padaippaalikku,adhum,thamizhlanukku,virudhu kidaitthaal paaraattungal. Oppeedu thewaiyillai.awar vazhli very Ivar vazhli very.Anal perumai thamizhlanukku….
  28 March at 16:32 · Like
  Thamizh Chelvan · 176 mutual friends
  திராவிடமா? அப்படின்னா?
  28 March at 16:50 · Like · 3
  Pandiyan Kittappa உண்மை மதிமாறன் சார்.. வைரமுத்து என்றும் வைரம்தான்.
  28 March at 18:07 · Like
  Vijayan Kathirvel · 60 mutual friends
  திராவிடர் என்ற இனம் எங்கே இருக்கிறது?

  திராவிடர்க்கான நிலப்பரப்பு எங்கே இருக்கிறது?

  அப்படி நிலப்பரப்பு இருந்தால் தயவு செய்து எங்கள் தமிழ்நாட்டை விட்டுவிட்டு வைரமுத்து போன்ற கருணாநிதியின் அடிவருடிகள் எல்லாம் அங்கே சென்று விடுங்கள்
  28 March at 18:08 · Like · 3
  Siva Erambu Jaffna · 50 mutual friends
  ௱வரமுத்து என்றும் நி௱லயான கவிஞன்.

  அவர் எழுதிய.

  மலரோடு மலர் இங்கு மகிழ்தாடும் போது.
  மனதோடு மனமிங்கு ப௱க கொள்வதேனோ???

  இது நமக்கெல்லாம் பொருந்தும்.

  கண்ணதாசனின் ஆத்திக கருத்துக௱ள வழித்துவிட்டு அவரு௱டய நாவல்கள், கவி௱த,பாடல்கல்க௱ளப்பார்த்தால். இந்த மொழிக்கு நாம் சொந்தகார்காளா? என்றால் என்னால் எனது உணர்ச்சிக௱ள கட்டுப்படுத்த முடியவில்௱ல!

  தமிழ்நாட்டு தமிழர்கள்ளென்றால் ஜால்றா, ஜால்றா என்றால் தமிழ்நாட்டு குடிமக்கள்.
  28 March at 18:19 · Like
  Inba Karunko · Friends with வேந்தன். இல and 27 others
  http://www.vinavu.com/…/vairamuthu-selling-out-to-bjp…/
  தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து | வினவு
  தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே,…
  vinavu.com
  28 March at 22:35 · Like · 3 · Remove Preview
  Inba Karunko · Friends with வேந்தன். இல and 27 others
  புதிதாக வெள்ளை அடித்த சுவருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இன்னொரு ஜென்மம் வைரமுத்து.http://www.vinavu.com/…/vairamuthu-kumudam-periyava…/
  ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து |…
  vinavu.com
  28 March at 22:35 · Like · 8 · Remove Preview
  Deiva Kumar பள்ளி படிப்பைத் கூட தாண்டாத கண்ணதாசனின் ஆளுமைக்கு முன் பல்கலைக்கழக பட்டம் படித்த வைரமுத்துவின் ஆளுஆளுமை எம்மாத்திரம்.
  28 March at 23:11 · Like · 3
  Johnny Prakash · 6 mutual friends
  தமிழ் வித்த(க)வர்…வைரமுத்து. ..
  28 March at 23:49 · Like
  ஜெபி. தென்பாதியான் வைரமுத்து கதை ஊரறிந்தது. நீங்கள் காவடி தூக்க வேண்டாம் தோழரே.
  29 March at 00:20 · Like · 2
  ஜெபி. தென்பாதியான் வைரமுத்து கம்யூனிசத்தை தூக்கி நட்டம நின்றதும் அதன் மூலம் பைசா பேறாது என்று அவர் நட்டம நிப்பாட்டியதும் ஊரறியும். நா.மு தான் போராளி என்று எங்கும் தம்பட்டம் அடிக்கவில்லை. நீங்க ஏன் தோழர் இப்படி ஆயிட்டீங்க.
  29 March at 00:24 · Like · 2
  ஜெபி. தென்பாதியான்
  ஜெபி. தென்பாதியான்’s photo.
  29 March at 00:26 · Like · 1
  Muthuvel Perumal · Friends with Sukumar Chakrapani
  ஒரு கண்ணதாசன் ஒரு வைரமுத்து ஒரு முத்துக்குமார் என்று அவரவர்க்கு உள்ள தனித்தன்மையுடன் இயங்கட்டும் கின்டிவிட்டு வேடிக்கைபார்க்க நினைப்பவரா நீங்கள் உங்களின் ஆதங்கம்தான் என்ன திராவிடன் யார் தமிழன் என்ற பெயர் தமிழர்களுக்கு பொருத்தம்மில்லையா இல்லை இன்னும் திராவிடன் திராவிடன் என்று எதைக்கூற விரும்புகிரீர்கள் திராவிடம் தமிழ் என்று மற்றவரை சூடேற்றிவிட்டு தம்மக்களை இந்தியும் ஆங்கிலமும் படிக்கவைத்த தமிழரிங்கர்கள் தானே மேர்க்கூரிய உங்கள் தலமைகள் வேரொரருவனுக்கு கிடைக்கமும் மரியாதையை பொருத்துக்கொள்ள இயலாத உங்கள் பொறாமைகள் எதற்க்கும் உதவாது
  29 March at 01:55 · Like · 3
  Rahuman Aboo · Friends with Vallam Basheer and 1 other
  பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு கண்ணீரை வர வைத்த வைர முத்துவின் வரிகளை போன்று
  எதிர் காலத்தில் தாஜ்மஹால் காவிகளால் அழிக்கப்படலாம்
  அப்போது நா முத்துக்குமாரின் வரிகள்!…See More
  29 March at 05:26 · Like
  Siva Kumar Siva கண்ணா எ சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்துருச்சு… என பல புரட்சி பாடலை எழுதியவர் தான் வைரமுத்து… இந்திய தேசியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் தான் கவிப்பேரரசு…. பெண்களை கொச்சைபடுத்தி முத்துக்குமார் பாடல் எழுதியதாக நான் அறிந்த வரை இல்லை… அப்படி இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்…
  29 March at 09:49 · Like · 2
  Veeramani Mani · 13 mutual friends
  Vairamuthu is very great person
  29 March at 11:14 · Like
  Vijay Kumar · 19 mutual friends
  அருமையான பதிவு தோழர்
  29 March at 11:51 · Like
  Siva Kumar Siva தமிழா… தமிழா… உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா…? இல்லையா….? ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா…கவிப்பேரரசு…
  29 March at 15:15 · Edited · Like
  Pushparaj Rex · Friends with தமிழ் டெனி and 3 others
  உண்மையாவா..?
  29 March at 20:26 · Like
  Yogi Devaraj super
  Yogi Devaraj’s photo.
  29 March at 20:45 · Like · 1
  டி.வி.எஸ். சோமு வே மதிமாறன் சார்.. தாங்கள் ஒரு கருத்தியல்வாதி. என்னைப்போல் வெறும் பத்திரிகையாளன் அல்ல. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது சரி என தோன்றுகிறது..
  29 March at 22:46 · Like · 1

  Gopalakrishnan Sudalaiyandi முத்துகுமாரை வெளிப்படையாக களமாட அழைக்கும் செய்தியாகதான் பார்க்கிறேன்., ஒரு பாவேந்தர் அளவுக்கு இல்லை என்றாலும் இன்றைய தலைமுறைக்கும் நம் கருத்தை கொண்டு சேர்க்க கவிஞர்கள் வேண்டும்
  2 April at 13:02 · Edited · Like

 2. Mr.Vairamuthu supports only higher caste / power people , he never supported Ilayaraja though Mr.Ilayaraja provided support , moreover Mr.Vairamuthu played a role to split of Mr.Ilayaraja and Mr.Bharathiraja friendship. There are Globally known more negative factors about Mr.Vairamuthu available on net

 3. Vairamuthu oru saathi veri pidichaa aaalu…thanudaiya niraya paadalgalil devanda endru saathi perai solli eluthum pokai than neengal pagutharivu endru solluringalaa

 4. எப்பா சாமி உங்களுக்கு வைரமுத்து கவிதை பகுத்தறிவா தெரியுதா ? என்ன சாமி சொல்லுற நீ?..மதி மாறன் தான இதை எழுதுவது……அவரு உருக்கமா எழுதுன கவிதை ஒன்னு ”ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன் பெத்தவளே உன் பெருமை ஒரு வரி சொல்லலியே..””பொன்னையா ”தேவன்” பெத்த பொன்னே குல மகளே ..என்று அழுவார் வைரமுத்து ..இது தான் பகுத்தறிவா? ..;;”பொன்னையா பெத்த மகளே என்று சொல்லி இருந்தா பரவால.”… அவர் சினிமா சூழ்நிலை காரணமா தான் அவர் சாதி பேரை குரிபிடுகின்றார் என்று தப்பித்து கொள்ள அது ஒன்று சினிமா இல்லை.. அவர் கூறிய கவிதை ஒரு பொது மேடையில் கூற பட்டது ….”பொது மேடைன்னு கூட தெரியாம பீறிட்டு வருது சாதியின் நாற்றம் அவர் வாயில் ”,,அப்புடி என்ன கிழிச்சு புட்டார் பொன்னையா தேவனின் பேரன் என்று தெரியவில்லை…பகுத்தறிவாதி என்பது அவர் போட்டு கொண்ட முகமூடி ..அவரின் உண்மை முகம் எல்லாம் கிழிந்து தொங்கி ரொம்ப நாள் ஆச்சு… அந்த பொன்னையா தேவன் பேரனுக்கு சொம்பு தூக்குற வேலை எல்லாம் வேண்டாம் தோழரே …..அவர் சொல்லி தான் எங்களுகே தெரியும் அவர் சாதி பேரு…

 5. arun kumar rite your ms , mathimaran annaku enna achu………..

Leave a Reply

%d bloggers like this: