சல்மான்கான்; கண்ணீர் கூட காசு என்ற ‘கிளிசரின்’ இருந்தால் தான் வரும்

Salman-Khan-six-pack-abs-Body
‘கான்’ பரம்பரையின் மாவீரன், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி, சாலையில் படுத்திருந்த நூருல்லா வைக் கொன்றார். முகம்மது கலீமை நொண்டியாக்கினார்.

தற்செயலாக இந்த 3 பேருமே இஸ்லாமியர்கள் தான். ஆனாலும் கொலைகார சல்மான்கான்கானுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்கள், கொலையுண்ட ஏழைகள் குறித்துக் கருத்துக்கூடச் சொல்ல மறுக்கிறார்கள்; இந்து – முஸ்லிம் ஒற்றுமையோடு.

‘காரை நான் தான் ஓட்டினேன்’ என்று சல்மான்கானுக்காகக் கொலைக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு பொய் சாட்சி சொன்ன அசோக் சிங் ஒரு இந்து. என்னடா உங்க மனிதாபிமானம்?
இது மனிதாபிமானமல்ல? வர்க்க அபிமானம்.

அதுசரி. வட்டிக்கு விடுவது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, திரைப்படத்தில் குறைந்த உடைகளுடன் ஆட்டம் போடுவது. இஸ்லாமிர்களுக்கு எதிரான படத்தில் இசையமைப்பது,
சட்டையை கழட்டி விட்டு பெண்களுக்காக கவர்ச்சிக் காட்டுவது, ‘ஜாக்கெட்டுகுள்ளே என்ன இருக்கு?’ என்ற பாட்டுப்பாடி ஊதாரித்தனமாக நடித்து ஊரை சூறையாடுவது, குடிபோதையில் இருப்பது, அதோடே காரை ஓட்டுவது, ஓட்டி ஆளைக் கொல்வது இதற்கெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா என்ன?
இந்திய அரசியல் சட்டம் சல்மான்கானுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. இஸ்லாமியச் சட்டம் என்ன செய்யப்போகிறது? பத்வா வழங்குமா?
குறைந்தபட்சம் அவரை இஸ்லாமியர் இல்லை என்றாவது அறிவிக்குமா? மதத்திலிருந்து விலக்கி வைக்குமா?

தஸ்லிமாவை தண்டிக்க முடிந்தவர்களுக்கு ஏன் சல்மான்கான்களை ஒன்றும் செய்ய முடியவில்லை?
மதத்திற்கு எதிராக நேரடியாகக் கருத்துச் சொன்னால்தான் தவறு. மதக் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக வாழ்வது கூட தவறில்லை என்று ஏதாவது முடிவிருக்கிறதா?

7-05-2015 at 08:33
தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல..

4 thoughts on “சல்மான்கான்; கண்ணீர் கூட காசு என்ற ‘கிளிசரின்’ இருந்தால் தான் வரும்

 1. Parimalan Manickam
  Parimalan Manickam’s photo.
  Unlike · Reply · 1 · Yesterday at 08:40

  பா.மாலதி
  Unlike · Reply · 1 · Yesterday at 08:42

  Kampuli Ayupkhan Cpi அருமையான பதிவு தோழரே …தஸ்லிமாவின் கருத்தை எதிர்த்து பத்வா வழங்கும் மதவெறியர் கூட்டம் இவனைப்போன்ற சினிமா நாய்களுக்கு எதிராக பத்வா வழங்காது …இவர்களை இசுலாமிய இளைஞர்கள் அடையாளம் காண வேண்டும் ….
  Unlike · Reply · 4 · Yesterday at 08:48

  Arumugam Elangovan சட்டம் தன் கடமையைக் காசு உள்ள அளவைப் பார்த்து செய்யும்.
  Unlike · Reply · 3 · Yesterday at 09:12

  Rafi Ahmed · Friends with Abdul Rahman
  சகோதரரே,

  தவறு செய்தவனுக்கு தண்டனை. …See More
  Like · Reply · 7 · Yesterday at 09:24

  Manzoor Ahamed · Friends with புகழ் மாறன் and 2 others
  Brother Fatwa has been given against all cine actors that acting and earning money in that field is haram, alcohol is haram, salman khan has said he is an Hindu and a Muslim so he doesn’t have a stand what he follows, also having just a Muslim name do…See More
  Like · Reply · 2 · Yesterday at 09:28

  Mumin Muhsin · Friends with Abbas Al Azadi and 3 others
  சல்மான் செய்தது குற்றவில் செயல்
  தஸ்லிமா செய்தது கொள்கை முறன்
  இரண்டும் வேறு வேறு …See More
  Like · Reply · 6 · Yesterday at 09:48

  Cb Kaja · Friends with Neelson Jenn and 1 other
  முஸ்லீம் பெயர் வைத்தவர்கள் எல்லாம் முஸ்லீம் ஆகி விட முடியாது ” இஸ்லாம் பேசுபவர்கள் எல்லாம் அவ்வாறே நடந்து விட முடியாது ” இவர்கள் பெயர் தாங்கி முஸ்லீம்கள் [ இவன். கமேன்ட் காஜா ]
  Cb Kaja’s photo.
  Like · Reply · 7 · Yesterday at 09:52

  Mbabu Babu · Friends with Jeeva Sagapthan and 1 other
  சல்மான் கான் ஒரு முஸ்லீம் அதனால் தான் தண்டனை என எந்த ஒரு முஸ்லீமும் ஓலமிடவில்லை.
  Like · Reply · 6 · 23 hours ago

  இளங்கோ மணிவண்ணன் மார்க்கம் மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக உள்ள எதை எதிர்த்தும் போராவேண்டும். சரியானவற்றை மக்களுக்கு பிரச்சாரம் செய்யவேண்டும், அப்படி பிரச்சாரம் செய்பவர்களை, கருத்து தெரிவிப்பவர்களை ஆதரிக்கவேண்டும்.
  Unlike · Reply · 2 · 23 hours ago

  இளங்கோ மணிவண்ணன் இந்திய தண்டனைச்சட்டம். அனைவருக்கும் பொதுவானது என்பது இதுபோன்ற சில நேரங்களில் நிலைநிறுத்தப்படும்.
  Unlike · Reply · 2 · 23 hours ago

  ஹாஜா சாதிக் அலி சாலை விபத்துக்கும், இஸ்லாதின் அடிப்படையை விபத்தாக்குவதற்க்கும் உள்ள வித்தியாடசம் தெரியாத நீங்கள் பகுத்தறிவாளரா???

  நல்ல முயற்ச்சி இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்
  Like · Reply · 1 · 23 hours ago

  Mohamed Asif Azeez Basha · 3 mutual friends
  சகோ, இந்திய தண்டனை சட்டம் இருப்பதால் தான் இவர் இத்தனை ஆண்டு காலம் சுதந்திரமாக சுற்றித்திரிந்தார். இல்லையென்றால் இவர் என்றோ தண்டனை பெற்று இருப்பார் என்பதே நிதர்சனம்..
  Like · Reply · 3 · 23 hours ago

  இளங்கோ மணிவண்ணன் சரி என்றால் ஏற்றுக்கொள்வதும் இல்லையென தெரிந்தால் எதிர்த்து நிற்பதுதான் உண்மையான பகுத்தறிவு.
  Unlike · Reply · 2 · 23 hours ago

  இர.இரா. தமிழ்க்கனல் /இது மனிதாபிமானமல்ல? வர்க்க அபிமானம்./
  Unlike · Reply · 3 · 22 hours ago

  M Dhamodaran Chennai தங்களின் பதிவை முழுமையாக ஏற்றுகொள்கிறேன். ஆனால்,இது தான் இன்றைய நிலை.நீதிமன்றத்தில் குற்றம் நிருபிக்கப்பட்டும் கடைசி வரை உண்மையை அவர் பேசவில்லை,தவறே செய்யத தன் ஓட்டுனரை பலிகடாவாக்குகிறார்,அவருக்கு குடும்பம் இல்லையா. இவர்களை ஆதரிக்கும் சக நடிகர் நடிகைகளையும், அவரை பின்பற்றும் ரசிகர்களையும் என்னவென்று சொல்வது.இஸ்லாம் மார்கம் நல்ல கருத்துக்களை கூறுகிறது ,அதில் பிறந்ததினால் மட்டும் அல்ல,முறையாக பின்பற்றதவனும் நல்ல முஸ்லிம் அல்ல.
  Unlike · Reply · 5 · 21 hours ago

  Subair Subairdienabdulmuthaleef · 33 mutual friends
  இவர் இந்தியாவில் இருப்பதால் தப்பிக்கலாம்(இந்தியதன்டனைச்சட்டம்)இஸ்லாமிய சட்டபடி இவர் தண்டிக்கப்படவேன்டிய குற்றவாலி
  Like · Reply · 4 · 21 hours ago

  Taj Magbul · Friends with ஜெஹபர் சாதிக் and 11 others
  முஸ்லும் பெயர் வைத்திருந்தால் அவன் முஸ்லீமா சல்மானை முஸ்லீமாக ஏற்று கொல்லவே முடியாது மேலும் ஆயிரக்கணக்கான கொலைகளை செய்த மோடியை பிரதமராக ஏற்றுகொண்ட எவருக்கும் இதை பற்றி பேச தகுதியில்லை
  Like · Reply · 5 · 20 hours ago

  Saranath Prasannamadhavan Good article
  Unlike · Reply · 1 · 20 hours ago

  Kuppuraj R · Friends with Rajarajan Artist and 1 other
  இந்த தீர்ப்பின் காரணமாக Bollywood உலகம் மிகவும் வருத்தமாக இருப்பதாக செய்திகளை படிக்கும் போது…சல்மான் மிகவும் மனிதநேயமிக்க செயலை செய்தற்காக சிறை சென்றது போலவும்… மனிதனின் உயிர் மிகவும் சல்லீசாக விற்பதை போல கருதுகிறார்களோ என்னவோ…மிகவும் கேவலமான உலகம்…
  Unlike · Reply · 5 · 20 hours ago

  TamilSae Thanjaavooraan · 13 mutual friends
  தோழர், திரு. வே. மதிமாறன் அவர்களே…

  நடிகர், சல்மான் கான் குற்றமிழைத்தவர் என்பதிலும் சொல்லப்போனால் ஒரு கொலைகாரன் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்…

  இதில் இஸ்லாமியம் எங்கு வந்தது? ஏன் வந்தது? சல்மான்கான் என்ன இஸ்லாமிய மார்க்க அறிஞரா? பிரச்சாரகரா, இல்லை மசூதியின் இமாமா?

  அவர் ஒரு நடிகர் அவ்வளவே…ஒரு தனிப்பட்ட நபர் செய்யும் செயலுக்கு, எதற்கு இஸ்லாத்தை பற்றி பேச வேண்டும். அவர் ஒரு முஸ்லீம் பெயர் தாங்கி அவ்வளவே! இன்றும் கூட நீலப்படங்களில் இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு நடிக்கும் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடி “பத்வா” கொடுத்துக் கொண்டிருக்கவா முடியும்? அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இருக்கிறதா? இல்லையா? என்பது குன்றின் மேலிட்ட விளக்கு.

  ஒவ்வொரு நபர்கள் செய்யும் தனிப்பட்ட செயல்களுக்கு அவர்கள் சார்ந்த மார்க்கம் என்ன செய்யும். ஒருவேளை அவர்கள் சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய சட்டங்களை கடைபிடிக்கும் நாட்டின் குடிமகனாக இருந்து இவ்வாறு செய்திருந்தாலோ, நடந்திருந்தாலோ அவர்கள் நாட்டு சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். இல்லையெனில் அவர்கள் சார்ந்த மார்க்கத்தில் இல்லாததை இருக்கிறதென்றும், இருப்பதை இல்லை என்றும் கொள்கை ரீதியாக பேசினாலோ, எழுதினாலோ அது பற்றி விவாதிக்கலாம்.

  தஸ்லிமா நஸ்ரின் தனது “லஜ்ஜா” என்ற நூலுக்காக தண்டிக்கப்பட்டது சரி என்று சீர்தூக்கி பார்க்கும் தெளிவிருக்கும் எந்த இஸ்லாமியர்களும் சொல்ல மாட்டார்கள். அவர் தமது நூலில் இஸ்லாத்தின் கொள்கைகளை எங்கும் விமர்சிக்கவில்லை என்பதும், அவர் மத அடிப்படைவாதிகளால் தண்டனைக்கு உட்பட்ட காரணம் வேறு என்பதும் தங்களைப்போன்ற எழுத்தாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

  அதை விட்டுவிட்டு எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பதிவிடுவது உகந்ததல்ல தோழரே…

  இது சராசரி மனிதர்களை, நடுநிலையாளர்களை இஸ்லாத்தின்பால் காழ்ப்புணர்வை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பது என் கருத்து. நன்றி.
  Like · Reply · 7 · 19 hours ago

  குறிஞ்சி நாடன் ஜெயலலிதாவிற்காக கோயில் கோயிலாக அவரின் அடிபொடிகள் போவதால் ஒட்டுமொத்த இந்துக்களும் ஜெவின் ஆதரவாளர்கள் என்று கூறுவது போல் உள்ளது உங்கள் பதிவு தோழர்…

  இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்பரிவாரங்கள் களமாடுவதற்கு பாதை அமைப்பது போல் உங்கள் பதிவு உள்ளதாகவே மேற்கண்ட பின்னூட்டங்களை படித்தால் தெரிகிறது….

  மதமே இல்லை என்பது வேறு

  குறிப்பிட்ட மதம்மட்டுமே குற்றம் என்பது என்பது எப்படி

  இந்து

  கிருத்துவ

  இஸ்லாமிய மக்களிடமும்

  நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் மதத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டு நாட்டிற்காக மனித நேயத்தோடு உழைப்பவர்களும் இருப்பது தாங்கள் அறியாததல்ல

  அத்தகயவர்களை வென்றெடுப்பதாக உங்கள் பதிவுகள்.,பேச்சுகள் இருக்கிறது என்பதை பலர் அறிவர்…ஆனால் இப்பதிவு???????
  Like · Reply · 4 · 19 hours ago

  Ilango Pichandy வர்க்க உணர்வுக்கு மதம் என்றுமே எதிரி!
  ———————————————————————
  கொழுத்த பணக்காரப் பன்றியான சல்மான் கான்,
  குடிவெறியில், ஒரு அன்றாடங்காய்ச்சி ஏழையான
  நூருல்லா மீது காரை ஏற்றிக் கொன்று விட்டான்.
  இந்த விவகாரத்தில் செத்துப்போன நூருல்லாவுக்குப்
  பரிந்து கொண்டு எவனும் வரவில்லை. இதைக் கண்டித்து
  தோழர் வே மதிமாறன் பதிவிட்டுள்ளார்.
  **
  இதில் இஸ்லாம் மதத்தின் பெயர் எப்படிக் கெட்டுப்
  போகும்? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பதிவு போடுகிறார்
  மதிமாறன் என்று கூறுவதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா?
  **
  சல்மான் கானை ஆதரித்து நிற்கும் பாலிவுட் பன்றிகளிடம் கூட
  ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கிறது. அவர்கள் பாசாங்கு
  செய்யாமல், போலி முற்போக்கு வேடம் தரிக்காமல்,
  வெளிப்படையாக சல்மானை ஆதரித்து நிற்கிறார்கள்.
  **
  ஆனால், போலி முற்போக்கு மற்றும் போலி நடுநிலைமை
  ஆசாமிகள்தான் மறைமுகமாக சல்மானை ஆதரித்து, தங்களை
  அம்பலப் படுத்திக் கொள்கிறார்கள். கொழுத்த பணக்காரப் பன்றி
  சல்மான் கான் சிறையில் களி தின்றால், இந்த மூடர்களுக்கு
  ஏன் வலிக்கிறது? தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
  புன்னை மரத்தில் நெறி கட்டுகிறதே, ஏன்? வர்க்க உணர்வே
  இல்லாத, பணக்கார எடுபிடித்தனம்தானே காரணம்!
  ——————————————————————————————–
  Unlike · Reply · 3 · 19 hours ago

  Zindahi Farook · 9 mutual friends
  தோழர் வே மதிமாறன்.
  இது அடுக்குமா.?
  என்னவோ இஸ்லாமியர்கள் சல்மான்கானை ஆதரிப்பது போலல்லவா இருக்கிறது
  உங்கள் பதிவு.
  செத்தது முஸ்லிம் என்றல்ல…
  ஒரு இந்துவாக இருப்பினும் சல்மான்கான்
  தண்டிக்கப் படவேண்டியவனே.
  இதில் எங்கிருந்து வந்தது மதம்.
  என்னைக் கேட்டால் அதே காரை வைத்து அவனையும் ஏற்றி கொன்றிருக்க வேண்டும்.
  என்ன செய்வது டுபாக்கூர் ஐ.பி.சியை வைத்துக் கொண்டு இதே அதிகம் தான்.
  சிறு பிள்ளை தனமான பதிவு.
  மாத்தி யோசிங்க.
  இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளனும்னா
  குர் ஆனைப் படியுங்கள்.
  தெளிவாகிவடும். .
  நன்றி.
  Like · Reply · 3 · 16 hours ago

  Thamizh Inian மதி ,,உங்கள் பதிவில் சில நெருடல்கள், இருக்கின்றன ,,, சல்மானை ஒரு இஸ்லாமியனாக எண்ணி இஸ்லாமியர் எப்போ தாவது ஆதரவாக அறிக்கை விட்டனரா? நடந்தது விபத்து போக்குவரத்து விதிமீறல் குற்றம்.திமிர்,.,அலட்சியம்,,,அவ்வளவுதான்,,,இதுவே திட்டமிட்ட கொலையாக இருத்தால் ,,,ஆனால் திட்டமிட்டு கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா?
  Like · Reply · 3 · 16 hours ago · Edited

  TamilSae Thanjaavooraan · 13 mutual friends
  அய்யா Iilango Pichandy அவர்களே..சகோதரர் நூருல்லா மீது காரை ஏற்றி கொன்றதை கண்டித்தார் சரி…கொன்ற கொலைகாரனையும் கண்டிக்கட்டும், இயன்றால் தண்டிக்கட்டும். அதற்காக கண்முடித்தனமாக….வேண்டாம் விடுங்கள்..சல்மானை கண்டிப்பதாலோ, தண்டிப்பதாலோ இங்கு யாருக்கும் வலிக்கவும் இல்லை, எந்த மரத்திலும் நெறி கட்டவும் இல்லை. சல்மான்கான் ஒன்றும் பெரிதாக தண்டிக்கப்படப்போவதில்லை..அதுவும் அவனுக்கு சாதகமான அரசு…! அவனை தூக்கி வைத்து ஆடும் அரசு. நாங்கள் சாதாரணமானவர்கள், உங்களைப்போல் போலியற்ற ஒரிஜினல் முற்போக்குவாதிகள் இப்பிரச்சினையை கையிலெடுங்கள். கொலைகாரனுக்கு மரண தண்டனை வாங்கிகொடுங்கள். தாங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துகள்
  Like · Reply · 2 · 16 hours ago · Edited

  Kaleel Rahuman Rahuman · 3 mutual friends
  தோழரே சல்மான்கானை எந்த முஸ்லிம் அமைப்புகளொ அல்லது எந்த தனிப்பட்ட நபரோ ஆதரித்ததாக உங்களால் கூற முடியுமா?
  Like · Reply · 2 · 16 hours ago

  Niaz Ahamed · Friends with Bala Chander
  Dear brother.. If u want Islamic perspective salman khan would have been hanged 13 Years before or punished as per the victim’s dependant wish . Now u would have not got any such person to comment on.. This is t Islamic law followed still in various countries..
  Like · Reply · 1 · 14 hours ago

  Elango Veeraswamy மாறன் இதெல்லாம் நமது வேலையா.
  Like · Reply · 1 · 14 hours ago

  Mumin Muhsin · 4 mutual friends
  என் முந்தைய கருத்தில் தஸ்லிமா இஸ்லாமிய அடிப்படையோடு முறன்படுவதாக தவறாக பதிவிட்டிருந்தேன்
  அது தவறுதலாக பதியப்பட்டுவிட்டது
  ஆணால தஸ்லிமா தனது லஜ்ஜாவில் நாவலில் கற்பனையாக நடக்காத விஷயங்களை கற்பனையாக நாவலாக எழுதியிருந்தாா்
  பெருமால் முருகன் எப்படி ஒரு கற்பனை நரவல் எழுதினாரோ அதைப்போல
  அந்த நாவல் சமுகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதே நிதா்சனம் அதற்காகத்தான் எதிர்ப்பு காட்டப்பட்டது
  Like · Reply · 1 · 13 hours ago

  Thahir Ahmed சல்மானை இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்க இந்திய குற்றவியல் சட்டத்தில் இடமுள்ளதா?தஸ்லீமா அடிப்படை கொள்கையில் முரண்பாடான கருத்தை தெரிவித்ததால் கண்டிக்கப்பட்டார் என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறேன் தீர்ப்பு எழுதவே 13ஆண்டுகள்
  Like · Reply · 12 hours ago

  Kuppuraj R · 2 mutual friends
  இறந்தவரும் இஸ்லாமியரே..அன்றாடும் காய்ச்சி உழைப்பை நம்பி ஜீவனம் செய்பவர்…சல்மானோ வேடம் போடும் வேஷதாரி இந்த ஊதாரி தனமான செயலை “அல்லாவே” மன்னிக்கமாட்டார்…
  Like · Reply · 2 · 12 hours ago

  Zindahi Farook · 9 mutual friends
  தோழர் வே மதிமாறன். .
  எமக்கு சற்றும் பொருந்தாத பதிவு..!!! ஏனெனில். …..See More
  Zindahi Farook’s photo.
  Like · Reply · 1 · 11 hours ago

  Lenin Lenin · 8 mutual friends
  yellam nalludhukkuthan solveenga bhagavat geethayum nallathukkunnuthan solvan aanal yellam nalladhukkuthan yarukku nalladhu yenbadhuthan prachanai.madham uzhapavanukku nalladha illai uzhaippai surandubhavanukku nalladhaaa.aam yellam nalladhukkuthan solludhu….
  Like · Reply · 11 hours ago

  Yeshuswamy Swamy · 37 mutual friends
  சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்றதால் சாகும் வரை கொடூரத்தை சந்தித்த கான்ஸ்டபிள்: நண்பர் கண்ணீர் பேட்டி

  Updated: Thu, 7 May 2015 11:16

  கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.

  சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.

  சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.

  சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.

  அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.

  கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.

  நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது.

 2. தோழர், இந்த மூன்று கான் களும் எங்களுக்கு முன்மாதிரி கிடையாது, மேலும் இவர்களை யாருமே முஸ்லிம் நாங்கள் சொல்லவில்லையே. இவர்களுக்கு இங்குள்ள சட்டம்,மனிதர்களை ஏமாற்றலாம் தீர்ப்பு நாள் என்று ஒன்று உண்டு என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்பது எங்களது நம்பிக்கை .

 3. Ilango பிச்சாண்டி அவர்களே, தோழர் சரியாகத்தான் பதிவிட்டுள்ளார்.

 4. குறிஞ்சி நாடன் அவர்களே, தோழருடைய பதிவு எந்த இஸ்லாமியரையும் புண்படுத்தாது அவர் சரியாகத்தான் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: