ஜாதிப் பு‘ளி’ – தாலி எதிர்ப்புப் ‘புலி’?

and-symbol
நாட்டுக்கோட்டை செட்டியார் ஜாதி சங்க விழாவில் 26-1-2011 அன்று பழ. கருப்பையா:
நகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை: நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடுதல் ஆகும்.
இந்த அடையாளகள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடரவேண்டுமென்றால், நாம் கலப்பு மணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறி கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை நம் சமூத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும். என்று பேசியிருக்கிறார்

அப்போது அப்படிப் பேசி, ‘புலியை இடறிய’ அவர்தான் இப்போது ‘புலியை இடறுகிறார்கள்! என்ற தலைப்பில் நக்கீரனில், தாலி ஆதரவு இந்து அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்து எழுதியிருக்கிறார்.
இப்படியும் சொல்லலாம், அன்று ஜாதி மறுப்பத் திருமணம் செய்து கொண்டவர்களின் தாலியை அறுத்து விட்டு, இன்று தாலி அகற்றும் போராட்டத்தை எதிர்ப்பவர்களை எச்சரித்து எழுதியிருக்கிறார்.

‘தாலி இல்லாமல் கல்யாணம் பண்ணாலும் ஒரே ஜாதியிலதான் பண்ணணும்’ என்ற நிலையிலிருந்து எழுதியிருக்காரா? இல்லை ஜாதி மறுப்பாளராகவும் தாலி மறுப்பை ஆதரிக்கிறாரா? அதில் விளக்கம் இல்லை.

அந்தக் கட்டுரையை அன்புக்குரிய தோழர் விஜய்கோபால்சாமி மே 1 அன்று ‘அதிமுக முகாமிலிருந்தும் இப்படி ஒரு குரல் வருவது அதிசயம். பாராட்டுக்கள்.’ என்று குறிப்பு எழுதி அதை • Share செய்திருந்தார்.
அதில் நான் எழுதிய Comment :

//என்னுடைய பாராட்டுகளும். ஆனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை.
‘நக்கீரன்’ என்பதும் அதிமுக எதிர்ப்புக் குறியீடு மட்டுமல்ல, அது திமுக ஆதரவுக் குறியீடும் தான். பழ. கருப்பையா நீண்ட நாளா அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கார். தேர்தல் வருகிறது மீண்டும் அவருக்குச் சீட் கிடைக்க வாய்ப்பில்லை.
திமுக வில் கிடைக்கலாம். வாழ்த்துகள். எல்லாவற்றிற்கும்.//

6 May at 08:35

தாலியோ தாலி..

கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

ருணாக்கயிறு பூணூல் கயிறு தூக்குக் கயிறு

One thought on “ஜாதிப் பு‘ளி’ – தாலி எதிர்ப்புப் ‘புலி’?

Leave a Reply

%d bloggers like this: