‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ? அப்ப பெங்களூர் தான்..

tumblr_mvwcdel3Pl1so2j7ko1_500
வகுத்தல் சுத்தமா வராது. கால்குலேட்டர் குடுத்து வகுக்கச் சொன்னாலும் முடியாது. பெருக்கல் பேப்பர்ல எழுதி மெதுவா எப்படியாவது பெருக்கிடுவேன். கால்குலேட்டர்ல சட்டுன்னு போடுவேன்.

பேசும்போது கூட்டிக் கழிச்சி வகுத்து பெருக்கி கணக்கா பேசுறவங்க.. 287 யை 3 ல வகுத்தா என்ன வரும்? என்பது மாதிரி கேட்பார்கள், கொஞ்ச நேரம் கழிச்சி அவுங்களே விடையும் சொல்லிவிடுவார்கள் என்பதால்,
அந்த நேரம் நானும் வகுக்கிற மாதிரி மூஞ்ச வைச்சிக்கிட்டு ‘சீக்கிரம் வகுத்து முடிடா..’ என்று மனசுகுள்ள சொல்லிப்பேனே தவிர.. வகுக்க மாட்டேன். அதான் எனக்குத் தெரியாதே.

‘இதானே விடை..’ என்றவுடன் ‘அதான் தெரியுதுல்ல என்ன ஏன் கேக்குற?’ என்று நினைத்துக் கொண்டு, அவசரமாக ‘ஆமாம் ஆமாம்’ என்பேன். ‘இல்லியே தப்பா வருதே…’ என்றால்.. ‘மூதேவி மொதல்லயே சரியா வகுக்கக்கூடாதா..’ என்று மனதுக்குள் கடுப்பாகி ‘ஓ ஆமா தப்புதான்..’ என்று கணித மேதை மாதிரி வருத்தப்படுவேன்.

கூட்டல் கூட 2 + 2 = 4 ; 8 + 2 = 10 இது மாதிரி என்றால் டக் குனு சொல்லிடுவேன். 18 + 15 எவ்வளவு என்றால்.. முடிஞ்சிது என் கதை.

ஆக, கணக்குல நான் வீக் ன்னு சொல்ல முடியாது. கணக்கே தெரியாது.
‘மீதி சில்லறை வாங்குறது..’ இதெல்லாம் ஒரு குத்து மதிப்பா, முன்ன பின்ன வாங்கிக்கிட்டுதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

ஆனால் என்னையே கணித மேதை ராமானுஜம் ஆக்கிடுவார் போல நம்ம பெங்களூரார்.
‘எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கு. கணக்கு இல்லாமல் எதுவுமே இல்லை. கணக்குத் தப்பானா எல்லாமே தப்பாயிடும்’ என்பார்கள் கணித மேதைகள்.
கணக்குத் தப்பானா தீர்ப்பும் தப்பாயிடுமோ?
ஆனாலும் ‘தீர்ப்பில் ஒரு கணக்கு ‘கச்சிதமா’ இருக்கு’; என்கிறார்கள் நன்றாக ‘கணக்குப் பண்ண’ தெரிந்த இன்னும் சிலர்.
*
இதில் சொல்லப்பட்டிருக்கிற பெங்களூர் ‘அந்த’ பெங்களூர் அல்ல. தீர்ப்பு ‘அந்த’ தீர்ப்பல்ல. முற்றிலும் கற்பனையே..
14 May at 12:59

7 thoughts on “‘கணக்குல புலி’; சிங்கம், சிறுத்தை மற்றவற்றிற்குக் கணக்குத் தெரியாதோ? அப்ப பெங்களூர் தான்..

  1. தீர்ப்பு வரும் ஆனா வராது

  2. தமிழன் வேலு Kanakku pinakku
    Unlike · Reply · 1 · 14 May at 13:02

    Mohamed Ismail Haha
    Unlike · Reply · 1 · 14 May at 13:06

    வே மதிமாறன் இதில் சொல்லப்பட்டிருக்கிற பெங்களூர் ‘அந்த’ பெங்களூர் அல்ல. தீர்ப்பு ‘அந்த’ தீர்ப்பல்ல. முற்றிலும் கற்பனையே..
    Like · Reply · 7 · 14 May at 13:06

    Sivakumar Shanmugam replied · 1 Reply

    Mohamed Ismail “கணக்குல வீக்ன்னு சொல்ல முடியாது. கணக்கே தெரியாது” ரகளை
    Unlike · Reply · 2 · 14 May at 13:08

    M Dhamodaran Chennai கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியா வரும்.வரவில்லை என்றால் தங்களுக்கு கணக்கு பண்ணா தெரியவில்லை.
    Unlike · Reply · 1 · 14 May at 13:10

    Udaya Kumar அரசியல் கணக்களாம் அனுபவிக்கனு ஆராயக்கூடாது அப்படி ஆராய்ஞ்சா இப்படிதான் தப்பு தப்ப வரும்
    Unlike · Reply · 2 · 14 May at 15:24

    Shyama Shyama பெங்களூரை மிகச் சரியாக கணக்குப் பண்ணின பதிவு..உங்களுக்கு கணக்கு வராதுன்னு இதைப் படித்தவர்கள் சொல்லுவார்களா என்ன..? smile emoticon
    Unlike · Reply · 1 · 14 May at 15:39

    Jothi Mani · Friends with ந. நாத்திகன் and 9 others
    கணக்கு சரியாக வரும் எப்போழுது என்றால் ஒருவன் பார்பான் அல்லாமல் இருந்தால் .

    பார்பான் என்றால் கணக்கு????????????????
    Like · Reply · 14 May at 17:56

    Herald Wilson Eppidiya ennamo sollavantha mathri arambici neeyum kolambi ellaraiyum kolapi Ama ippa what is your problem ???
    Like · Reply · 14 May at 19:22

    Sugavanam Natarajan Wrong your honour…. 1+1 = 11… This is the judgement given your honour… 9 went to Judge your honour…..
    Like · Reply · 1 · 14 May at 20:00

    புதிய பாமரன் //இதில் சொல்லப்பட்டிருக்கிற பெங்களூர் ‘அந்த’ பெங்களூர் அல்ல. தீர்ப்பு ‘அந்த’ தீர்ப்பல்ல. முற்றிலும் கற்பனையே..// குமாரசாமியின் தீர்ப்பு குறித்து நீங்கள் விரிவாக எழுதுவீர்கள் என்று காத்திருக்கிறோம்.
    Like · Reply · 1 · 14 May at 22:03

    Abu Ameer · Friends with Anverdeen Mohamed and 6 others
    2+2= tuttudu
    Like · Reply · 14 May at 22:04

  3. அம்மைக்கு நன்மை செய்ய புகுந்த நீதியரசர் ஆப்பு வைத்து விட்டதாக படுகிறது.

  4. Aana mathimaran nakkalukku alave illai….aana avar solla varathu oru periya unmai enbathu mattum nandraaga vilangugirathu….

  5. ANNAE ITHU PAARPANAA SATHIYA ALLATHU AADI DRAVIDA SATHIYA???????

Leave a Reply

%d bloggers like this: