திருமணமும் திடீர் கருத்தரங்கமும்

1444d1b2-a5e8-4537-9b71-b4cc8e7875b1

4e899dba-453a-4a50-8de9-c0e2b82272db

29 காலை தஞ்சை அருகே கோவில் வெண்ணியில் ரமேஷ் – ரம்யா இருவருக்கும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த திருமணத்தில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்தது திருமணம். திருமணத்தில் மாமிச உணவு (பிரியாணி) விருந்து வைத்தது கூடுதல் சிறப்பு.
*

திருமணத்திற்கு முதல் நாள் பிற்பகலே தஞ்சை சென்று விட்டேன். தோழர் சண்முகசுந்தரம் நான் இருந்த இடத்திற்குச் சந்திக்க வந்தார். நாளை மாலை உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்றால் தஞ்சை இலக்கிய வட்டம் சார்பில் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் என்றார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

‘மாலை 4 மணிக்கு எழுத்தாளர் வே.மதிமாறனுடன் ஒரு கலந்துரையாடல்’ என்று தனது face book ல் பதிவும் போட்டு விட்டார்.

வேலை நாளாக இருந்தும், பல தோழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். 2 மணிநேரத்திற்கும் மேல் மிக விரிவாக ஜாதி ஒழிப்பும் முற்போக்களார்களின் கண்ணோட்டத்தில் மாற்றமும் என்ற அளவில் பேசினோம்.

face book ல் பதிவை பார்த்து விட்டு நெய்வேலியிலிருந்து தோழர்கள் கீதா, சுந்தர் இருவரும் வந்திருந்தது தோழர்கள் பலரையும் நெகிழ வைத்தது.

குறுகிய நேரத்தில் ஒரு கருத்தரங்கத்தை வடிவமைத்து சிறப்பாக நடத்திய தோழர் சண்முகசுந்தரத்திற்குத் தான் நான் சிறப்பு நன்றியை சொல்ல வேண்டும்.
IMG-20160130-WA0001

IMG-20160130-WA0002

IMG-20160130-WA0003

IMG-20160130-WA0004

IMG-20160130-WA0005

IMG-20160130-WA0006

IMG-20160130-WA0007

IMG-20160130-WA0008

IMG-20160130-WA0009

IMG-20160130-WA0010

3 thoughts on “திருமணமும் திடீர் கருத்தரங்கமும்

  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் சார்பில் நேற்று ஜனவரி 31 அன்று திருச்சியில் திண்டுக்கல் செல்லும் வழியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் குழுமிய 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டு பிராட்டியூரை ஆக்கிரமித்தது.

    லட்சக்கணக்கான மக்கள் திரண்ட திடலில் இன்று எங்கு தேடிப்பார்த்தும் ஒரு பீடித்துண்டோ , சிகரெட் பாக்கெட்டோ , மது பாட்டிலோ காணவில்லை.

    என்னது மதுபாடிலே இல்லையா? . மது பாட்டில் இல்லாத ஒரு மாநாடா ? அப்படியென்றால் இது சரித்திரப்புகழ் பெற்ற மாநாடாயிற்றே! என வியந்தோம்.

    அங்கிருந்த ஒரு முஸ்லிம் சகோதரரிடம் வினவியபோது இறைவனுக்கு இணைவைக்காத எந்த முஸ்லிமும் மதுவுக்கு மயங்கமாட்டான் என்றார்.

    இக்காட்சியைப்பார்த்தும் “நீங்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துவதுடன் மதுஒழிப்பு மாநாட்டையும் நடத்திவிட்டீர்கள்” என்றும் நம் தமிழகம் ஜன31 தவ்ஹீத் ஜமாத் மாநாட்டுத்திடலாக அமைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டோம்.
    —– சுவனப் பிரியன்
    ————————————–

    https://youtu.be/ivyUCY637es

  2. இன்று இந்தியாவிலேயே அதிகப்படியான விவாகரத்துக்கள் நடப்பது ப்ராஹ்மின்ஸ் குலத்தில்தான். அனைத்துமே சுபமுகூர்த்தம், ராகுகாலம், எமகண்டம், நாடி ஜோசியம், செவ்வாய் தோஷம் ஆகியவற்றுடன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்த (அதிலே பொன் முத்துராமலிங்க தேவரும் உண்டு உண்டு … சந்தேகமிருந்தால் தேவர் குருபூஜை செய்யும் கோமளவல்லி பாப்பாத்தியிடம் கேட்கவும்) செய்யப்பட்ட திருமணங்கள்தான்.

    இந்த மூடநம்பிக்கையெல்லாம், மக்களை முட்டாளாக்கி உட்கார்ந்து சாப்பிட பாப்பான் கண்டுபிடித்த யுக்திகள் என்பது வெட்டவெளிச்சம். ஆகையால்தான் தந்தை பெரியாரெனும் ரகசிய முஸ்லிம், யானைத்தலையும் மனித உடலும் சுமந்து கொண்டு சுண்டெலி மீது சவாரி செய்யும் பிள்ளையாரெனும் ஒரு உலக மகா புருடாவை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைத்தெறிந்தார். அல்லாஹு அக்பர்.

    இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, திருமணமென்பது ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மணைவியாக சேர்ந்து வாழ்வதற்கான ஒரு சமுதாய ஒப்பந்தம். அவ்வளவுதான். ஒத்து வராட்டி, கணவன் தலாக் சொல்லலாம் மணைவி குலாக் கேட்கலாம். திருமணம் நடந்தாலும் விவாகரத்து நடந்தாலும் மட்டன் பிரியாணி கட்டாயம் உண்டு. அல்லாஹு அக்பர்.

Leave a Reply

%d bloggers like this: