‘பெரிய புடுங்கியா நீ’

‘அவருக்கு என்ன கொள்கை, கோட்பாடு, தத்துவம் இருக்கிறது? அவருடன் எப்படி நீங்கள் கூட்டணி வைத்தீர்கள்?’

‘இதெல்லாம் எங்களுக்கு இருக்கிறது என்று எவன் சொன்னான்? திட்டமிட்டு கூட்டணியை உடைக்கும் நோக்கத்தோடு, எங்களுக்கு எதிரா எவனோ புரளியை கிளம்பி விட்டிருக்கான்.’
*

‘யாரை வேணுன்னாலும் விமர்சனம் பண்ணு. பெரியாரை கூடத் திட்டிக்க. அம்பேத்கர் தேவையில்லை. காரல் மார்க்ஸ் அவனெல்லாம் ஒரு ஆளு ன்னு கூட எழுது.

அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல. ஆனால் என் ஜாதிக்காரரை மட்டும் விமர்சிக்கக் கூடாது’ இது அப்போ.
அதன் பிறகு அதுல ஒரு மாற்றம், ‘விமர்சிக்கக் கூடாது ங்கறது மட்டுமல்ல, என் ஜாதிக்காரரை நீ ஆதரிக்கணும்.’

இப்ப இன்னும் டெவலப்பாகி ‘என் ஜாதிக்காரர் யாரை ஆதரிக்கிறாரோ அவரையும் விமர்சிக்கவும் கூடாது. நீ ஆதரிக்கவும் செய்யணும். இல்லன்னா உன்னை அசிங்க அசிங்கமா திட்டுவேன்.பெரிய புடுங்கியா நீ’

இப்படி ஒரு குரூப் சுத்திக்கிட்டுதான் இருக்கு. யாருன்னு கேக்குறீங்களா? தோ.. இப்ப வருவாங்க பாருங்க.
28 March at 10:23

இளையராஜாவிற்கு விருது, பெருமை சேர்க்காது

Best popular film விருது Bajrangi Bhaijaan என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த பொழுது போக்குப் படம்.

ஆனால், ஒவ்வொரு காட்சியும் அன்பினால் நெய்யப்பட்டது. குபீர் சிரிப்பு, நெகிழ வைத்து கண்கலங்க வைக்கிற காட்சிகள் நிறைய.
நாயகனின் பார்ப்பனக் குடும்பச் சூழல் கதைக்கு மிக அவசியம். அவனை இந்து அமைப்பைச் சேர்ந்தவனாகக் காட்டியதை தவிர்த்திருக்கலாம்.

கதை பாகிஸ்தான் – இந்தியா பிரச்சினையோடு தொடர்புடையது என்பதாலும், நாயகனாக நடித்த சல்மான் கான் முஸ்லீம் என்பதினாலும் இந்துத்துவ அடையாளம் அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்ப்பினி பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கொலை செய்கிற இந்து அமைப்பிலிருந்து வந்தவன், ஒரு குழந்தைக்காகப் பல தியாகங்கள் செய்ய முடியும்? மற்றபடி, நான் கொண்டாடிப் பார்த்தப் படம்.
*
Piku அமிதாப்பை சிறந்த நடிகராக ஆக்கியிருக்கிறது. சரியான தேர்வு. Piku விற்கும் சிறந்த படத்திற்கான விருது அல்லது திரைக்கதைக்கான விருது தந்திருக்கலாம். இப்படி ஒரு வாழ்க்கையை இதுவரை எனக்குத் தெரிந்து யாரும் சொன்னதில்லை.

தந்தை – மகளுக்குமான உறவை, பெண்களின் அன்பின் இன்னொரு பரிமாணத்தை நுட்பமாக, நவீனமாகச் சொன்னதற்குச் சிறப்பு விருது கிடைத்திருக்க வேண்டும்.
இயந்திரங்களால் (CG) உருவாக்கப்பட்ட பாகுபலி யோடு ஒப்பிடும் போது, மனிதர்களின் உன்னத உணர்வுகளால் உருவான Piku 100 முறை சிறந்த படம்.

மற்றபடி இளையராஜாவிற்குத் தந்திருக்கிற விருது, அவருக்கு ஒரு போதும் பெருமை சேர்க்காது. திருவள்ளுவருக்குக் கலைமாமணி விருதா கவுரம் தரப்போகிறது?
இந்த விருதை அவர் நேரில் சென்று வாங்குவார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

கதம்பம்

12494851_199039147139033_7272773281750527666_n
பரவாயில்லை சாமியார்; ‘மானஸ்தன்’ தான். தலைய இந்தப் பக்கம் வச்சாரே.
25 March ·

திருமதி. பிரேமலதா family யின் இரண்டாவது தேர்தல் கூட்டணி அறிவிப்புக் குறித்த தொலைக்காட்சி விவாதங்களுக்கு,
நண்பர்கள் என்னை அழைக்க வேண்டாம் என்று அன்புடனும், கெஞ்சியும் கேட்டுக் கொள்கிறேன்.
23 March at 12:27 ·

தோழர் ஓவியா, தோழர் அருள்மொழி (Annamalai) இருவருடன் தான் திருச்சி திராவிடர் கழக மாநாட்டுக்கு பயணமானேன்.
18 தேதி இரவு 10.45 மணிக்கே ஜாதி ஒழிப்பு மாநாட்டுக் கருத்தரங்கம் எங்க மூணுபேருடன் rockfort express லேயே துவங்கிடுச்சி.

10.45 மணியிலிருந்து அரசியல், குடும்பம், சினிமா, பிரமுகர்கள் என்று நிறையத் தலைப்புகளில் தோழமையா + இணக்கமா பேசினோம். எதிர் x எதிரா பேசினோம். பேசினோம், பேசினோம் காலை 4 மணி வரை non stop பா பேசிக்கிட்டே இருந்தோம்.
middle berth ல இருந்தவர நினைச்சா வருத்தமாதான் இருக்கு. பாவம் யார் பெத்த புள்ளையோ?

அவ்வளவு விரிவா பேசியும், பாருங்க… நாளையோட ஒரு வாரம் ஆகபோகுது, ஒருத்தரோடையும் இதுவரை போன்ல கூடப் பேசுல. அவ்வளவும் ரயில் சினேகம் போலவே போயிடுச்சி.

இனி அடுத்தமுறை இதேபோல் ரயிலில் சேர்ந்து போற வாய்ப்பு வந்தால் திரும்பத் தீவிரமா பேச வேண்டியதுதான்.
ஆனால், அதே ஆள் middle berth ல வரமா இருக்கணும். அவரு நல்லதுக்குதான்.

25 March at 22:10 ·

சங்கரை படுகொலை செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் போலீஸ் உடந்தை

12541031_643942799081664_7027840033451763870_n
தலித் இளைஞன் சங்கரை படுகொலை செய்த ஜாதி வெறியர்களைப் போலீஸ் திட்டமிட்டே அவர்கள் முகத்தை மறைக்காமல், ஊடகங்களின் முன் நிறுத்தியிருக்கிறது.

இது வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர்கள் விடுதலை ஆவதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படும் என்றார் சென்னை அய்கோர்ட்டின் மூத்த வழக்கிறஞர் மரியாதைக்குரிய திலகராஜ் அவர்கள்.

சங்கரின் மனைவி கவுசல்யா, அடையாள அணிவகுப்பில் யார் யார் குற்றவாளி என்று மிக உறுதியாகக் அடையாளம் காட்டினாலும், பின்னாட்களில் வழக்கு நடக்கும் போது, குற்றவாளிகள் தரப்பு வக்கீல்,

‘கவுசல்யா பத்திரிகைகளில், இணையதளங்களில் வெளியான படங்களைப் பார்த்துதான் அடையாளம் காட்டியிருக்கிறார். இது செல்லாது’
என்று சொல்வதற்கும் அதைக் கோர்ட் ஏற்றுக் கொள்வதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன் நடந்த பல வழக்குகளின் தீர்ப்புகளே சாட்சியாக இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டே இதுபோன்ற முறையில் குற்றவாளியை விடுதலை செய்திருக்கிறது.

ஒரு வழக்கில், போலீஸ் குற்றவாளியை கோர்ட்டுக்கு, முகத்தை மூடாமல் பஸ்சில் கூட்டிச் சென்றதை குற்றவாளிக்கு சாதகமாக்கி,
குற்றவாளி பஸ்சில் போகும் போது அடையாளம் காட்டியவர் வழியில் எங்காவது அவரைப் பார்த்திருப்பார். அதானல் இதைச் சாட்சியாக ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் குற்றவாளியை விடுதலை செய்த ‘நீதி’ முன் மாதிரியாக இருக்கிறது.

சங்கரை கொலை செய்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் இதைக் காட்டி இன்னும் சில ஆண்டுகளில் கொலைககாரர்கள் குற்றமற்றவர்களாக விடுதலையாகி கூடுதல் சுதந்திரமாகப் பல ஆணவக் கொலைகளைச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் வழக்கறிஞர் திலகராஜன்.

தேர்தல் ஒரு கேடா?

உடுமைலையில்.. சங்கரை கொன்றது கூலிப் படையல்ல, அது தலித் விரோத ஜாதிப் படை. கொலைக்குக் கூலியே, தலித் உயிர் தான்.

தலித் மக்கள்; ஜாதி இந்துக்களை விடப் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட, ஜாதி இந்துக்கள் மீது, ஜாதி ரீதியான தாக்குதலை எப்போதும் நடத்தியது இல்லை.

அவ்வளவு ஏன்? தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிற ஜாதி வெறியர்களுக்கே எதிராகக் கூட அவர்கள், ஜாதி ரீதியாகக் கிளர்ந்து ஒன்று சேர்ந்து, பதிலடிக்கூடக் கொடுத்ததில்லை.

அவர்கள் மற்றவர்களைப்போல், இந்த மண்ணில் வாழ்வதற்காகக் கூட அல்ல, நடமாடுவதற்கு முயற்சிக்கும்போதுான் கொலை செய்யப்படுகிறார்கள்.

இது ஒரு நாடா? மானங்கெட்ட தலித் விரோத ஜனநாயக முறைக்குத் தேர்தல் ஒரு கேடா?
‘தண்ணீ சரியா வரல, ரோடு இல்ல’ என்பது போன்ற காரணங்களுக்காகவே பல ஊர்களில் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் மக்கள்.

அவர்களுக்கு இருக்கிற அரசியல் அறிவுகூட ஜாதி ஒழிப்புப் பேசுகிற நம்மிடம் இல்லை. நான் எப்போதுமே வாக்களித்தவன் இல்லை. இதுவரை நான் தேர்தலை புறக்கணித்தற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் தலித் விரோத ஜாதி எதிர்ப்பு அரசியலும் ஒன்று.

இந்தமுறை நான் தேர்தலை, ஒரே ஒரு ஒற்றைக் காரணத்தை மட்டும் தீவிரமாக முன்வைத்துப் புறக்கணிக்கிறேன்.
இந்த நாடு மிகத் தீவிரமான தலித் விரோத நாடாக மாறிவருவதைக் கண்டித்துத் தேர்தலை புறக்கணிக்கிறேன்.

15 March at 10:16

‘இந்தச் சாவுக்கு நம்ம அட்டன்டன்ஸ்’ என்ற பாணியில் ‘சாதி வெறி’ என்று சாதாரணமாக முடித்துக் கொள்கிறார்கள், ‘ஜாதி ஒழிப்பாளர்கள்’.

‘அடுத்தச் சாவு வருகிற வரை நமக்கு இது ஒரு சடங்கு’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் கூட, ரொம்பப் புத்திசாலித்தனமாக தலித் மீது வன்முறை செய்த ஜாதியை கண்டிக்காமல், கண்டிப்பவர்களைக் கண்டித்து விட்டு, தன் தலித் ஆதரவு கணக்கில் வரவு வைத்து விடுகிறார்கள்.

எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் வன்முறை நிகழ்த்துகிறார்களோ, அந்த ஜாதியின் பெயரை சொல்லி கண்டிப்பது தானே, ஜாதி ஒழிப்பு படிநிலை.

உடுமலையில் சங்கரை படுகொலை செய்தது‘தேவர் ஜாதி வெறி’ என்று சொல்ல முடியாத பலர், ‘அவர்கள் இதைக் கண்டிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

இது இவர்களின் இயலாமை, ஓட்டரசியல், சந்தர்ப்பவாதம், பயம், ஜாதி உணர்வு, அந்த ஜாதியைச் சேர்ந்த தன் நலம் விரும்பிகளின் நட்பு நாடுதல்.

இதுவே தான் கொஞ்சம் கூடுதலாக அவர்களுக்கும். இந்த இரண்டே நிலைதான் ஜாதி ஒழிப்பு அரசியலாக இங்கு இருக்கிறது. இன்னும் சாதி ஒழிப்பிலும் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது – கூட்டணியை வைத்து முடிவாகிறது.

இப்படியிருந்தால்.. ஜாதி ஒழிப்பல்ல, ஜாதி மயிரைக்கூடப் புடுங்க முடியாது.
15 March at 18:55

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது

10636714_833153493461570_4737935019808150692_o (1)
20 காலையில் தான் நான் பேசுறேன். ஆனால், நாளை காலையிலேயே அங்கிருப்பேன். நண்பர்களைத் தோழர்களைச் சந்திப்பதை விட வேறுஉண்டோ ஆனந்தம்.. ‘சந்திப்போம்’

BHEL நிறுவனத்தில் வேலை செய்யும் தோழர்கள் திலிப், ஆண்டிராஜ், கனிவண்ணன், சந்திரன், பஞ்சு;
shift system முறையில் நாளைக்கு நிறையத் தோழர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதைவிட முக்கியம் திலிப் வீட்டில் விருந்து. (Thilip Kumar)
‘மனுசங்க சாப்பிடற எல்லாத்தையும் சாப்பிட வேண்டியதுதான்’

இன்னொரு முக்கியமான ரகசியமான விஷயம். நம்ம தம்பி ஒருத்தர், ஜாதி இந்து பொண்ண லவ் பண்ணிட்டார். அந்தப் பொண்ணும் ‘கட்டுனா இவரதான் கட்டுவேன்’ என்று அடம் புடிக்குது. எப்பவும் போல பொண்ணு வீட்லதான் பிரச்சினை.
தர்மபுரி, ஓமலூர், உடுமலை சம்பவங்களையெல்லாம் பத்து பைசாவிற்குக்கூட மதிக்கவில்லை இந்தக் காதலர்கள்.

ஏற்கனவே இதுபோன்ற திருமணங்களைப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி நடத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், பெற்றோர்களின் சம்மத்துடன் நடத்த முயற்சிப்போம்.
‘சம்மதம் இல்லாட்டியும் நடக்கும். உங்களுக்குதான் அசிங்கமாயிடும்’ என்பதைத் தன்மையா புரிய வைச்சிட்டா நிச்சயம் சம்மதிப்பார்கள்.

அரசியல் பின்னணியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் வீரமெல்லாம் அப்பாவிகளாகப் பயந்து வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்துகொள்கிறவர்களிடம் தான்.

பெரியார் இயக்கங்கள், கம்யுனிஸ்ட்டுக் கடசிகள் எவ்வளவோ ஜாதி மறுப்புத் திருமணங்களை (ஆண் தலித் – பெண் ஜாதி இந்து) செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். (அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுப்பாங்களே தவிர, அவுங்கக்கிட்ட யாரும் சண்டைக்கு வர முடியாது.)

ஆக, ஜாதி ஒழிப்பு மாநாட்டைச் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டியதுதான்.
சந்திப்போம். திருச்சி சிறுகனூரில்.

ஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா?

944864_1697088637197928_6623391724081281150_n
காவி வேட்டி கட்டுனவன் ஜட்டி போடாததினால் வேட்டியோட நிப்பாட்டி இருக்கு போலீஸ்.
ஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா? இதுதான் ஜாதி. இதுதான் வர்க்க உணர்வைத் தாண்டிய ஜாதி வெறி.
இத புரிஞ்சிக்கிட்டு மார்க்சை பேசுங்க. அதுதான் அந்த மாமேதைக்குச் செய்யும் மரியாதை.
15 March at 22:22

உடுமைலையில்.. சங்கரை கொன்றது கூலிப் படையல்ல, அது தலித் விரோத ஜாதிப் படை. கொலைக்குக் கூலியே, தலித் உயிர் தான்.
தலித் மக்கள்; ஜாதி இந்துக்களை விடப் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட, ஜாதி இந்துக்கள் மீது, ஜாதி ரீதியான தாக்குதலை எப்போதும் நடத்தியது இல்லை.

அவ்வளவு ஏன்? தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிற ஜாதி வெறியர்களுக்கே எதிராகக் கூட அவர்கள், ஜாதி ரீதியாகக் கிளர்ந்து ஒன்று சேர்ந்து, பதிலடிக்கூடக் கொடுத்ததில்லை.
அவர்கள் மற்றவர்களைப்போல், இந்த மண்ணில் வாழ்வதற்காகக் கூட அல்ல, நடமாடுவதற்கு முயற்சிக்கும்போதுான் கொலை செய்யப்படுகிறார்கள்.

இது ஒரு நாடா? மானங்கெட்ட தலித் விரோத ஜனநாயக முறைக்குத் தேர்தல் ஒரு கேடா?
‘தண்ணீ சரியா வரல, ரோடு இல்ல’ என்பது போன்ற காரணங்களுக்காகவே பல ஊர்களில் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் மக்கள்.

அவர்களுக்கு இருக்கிற அரசியல் அறிவுகூட ஜாதி ஒழிப்புப் பேசுகிற நம்மிடம் இல்லை. நான் எப்போதுமே வாக்களித்தவன் இல்லை. இதுவரை நான் தேர்தலை புறக்கணித்தற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் தலித் விரோத ஜாதி எதிர்ப்பு அரசியலும் ஒன்று.

இந்தமுறை நான் தேர்தலை, ஒரே ஒரு ஒற்றைக் காரணத்தை மட்டும் தீவிரமாக முன்வைத்துப் புறக்கணிக்கிறேன்.
இந்த நாடு மிகத் தீவிரமான தலித் விரோத நாடாக மாறிவருவதைக் கண்டித்துத் தேர்தலை புறக்கணிக்கிறேன்.

‘இந்தச் சாவுக்கு நம்ம அட்டன்டன்ஸ்’ என்ற பாணியில் ‘சாதி வெறி’ என்று சாதாரணமாக முடித்துக் கொள்கிறார்கள், ‘ஜாதி ஒழிப்பாளர்கள்’.
‘அடுத்தச் சாவு வருகிற வரை நமக்கு இது ஒரு சடங்கு’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் கூட, ரொம்பப் புத்திசாலித்தனமாக தலித் மீது வன்முறை செய்த ஜாதியை கண்டிக்காமல், கண்டிப்பவர்களைக் கண்டித்து விட்டு, தன் தலித் ஆதரவு கணக்கில் வரவு வைத்து விடுகிறார்கள்.

எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் வன்முறை நிகழ்த்துகிறார்களோ, அந்த ஜாதியின் பெயரை சொல்லி கண்டிப்பது தானே, ஜாதி ஒழிப்பு படிநிலை.
உடுமலையில் சங்கரை படுகொலை செய்தது‘தேவர் ஜாதி வெறி’ என்று சொல்ல முடியாத பலர், ‘அவர்கள் இதைக் கண்டிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

இது இவர்களின் இயலாமை, ஓட்டரசியல், சந்தர்ப்பவாதம், பயம், ஜாதி உணர்வு, அந்த ஜாதியைச் சேர்ந்த தன் நலம் விரும்பிகளின் நட்பு நாடுதல்.
இதுவே தான் கொஞ்சம் கூடுதலாக அவர்களுக்கும். இந்த இரண்டே நிலைதான் ஜாதி ஒழிப்பு அரசியலாக இங்கு இருக்கிறது. இன்னும் சாதி ஒழிப்பிலும் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது – கூட்டணியை வைத்து முடிவாகிறது.

இப்படியிருந்தால்.. ஜாதி ஒழிப்பல்ல, ஜாதி மயிரைக்கூடப் புடுங்க முடியாது.
15 March at 22:22

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்

எம்.ஜி.ஆர். – சிவாஜி உடைதான் லெக்கின்ஸ்

ஆணாதிக்கத்திற்கு ஆதரவாகப் பெண்கள் பேசுவது பொதுவாக அதிகம் காணப்படுகிற ஒன்றுதான். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் அவல நிலையே அதுதான்.

ஆணாதிக்கத்திற்கு எதிராகக் கறாராக ஆண் பேசுவது அரிதான ஒன்று. பெரியார் போல் நான் விவாதித்திருக்கிறேன்.

ஜனவரி 30 பதிவு செய்யப்பட்டு, பிப்வரி 7 ஒளிபரப்பானது. இதுவரை பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் என் பேச்சின் சாரம் கெடாமல் ஒளிபரப்பானது இந்த நிகழ்ச்சியில் தான். நன்றி கேப்டன் டி.வி.

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

… அதை விடப் பெரிய வன்முறை

201603090214395346_If-the-answer-to-speculation-about-the-political-strategies_SECVPF
கேக் வெட்டி கொண்டாடினாராம். மகளிர் தினமா இல்ல தமிழிசை சவுந்தரராஜனின் பிறந்த நாளா? ‘பெண் இழிவான பிறப்பு. கணவன் இறந்தால் உயிரோடு கொளுத்து. கங்கையில் அமுக்கு.’ என்ற கொடூரங்களைப் புனிதமாகவும் தனது தத்துவமாகவும் கொண்டிருக்கிற ஒரு கட்சி பா.ஜ.க.

‘இந்துப் பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்று இன்றும் பெண்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசுகிற ஒரே கட்சி பா.ஜ.க.
காதல், அன்பு, பாசம் அல்ல அதன் நோக்கம். வெறுப்பு, ஆண் ஆணவம், பெண் அடிமைத் தனம் இவையே இந்து அமைப்புகளின் தத்துவம்.

கொடுமை, அந்தக் கட்சியில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுகூட அல்ல; அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் இருக்கிறது. இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சிகூட மகளிர் தினம் கொண்டாடுகிறது. கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சிகரப் பெண்களை இதை விடக் கேவலப்படுத்த முடியாது.

பா.ஜ.க. அல்லாத பல முன்னணி பெண்கள், பா.ஜ.க. கொண்டாடிய மகளிர் தினத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கமலா செல்வராஜ், இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பின்னணி பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி, ஓய்ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி.

இவர்களுக்குத் திமுக, மதிமுக, காங்கிரஸ் இதெல்லாம் கட்சியாகவே தெரியாதோ? விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், புதிய தமிழகம், தமிழ் நாட்டில் மகளிர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடிய ஒரே கட்சியான ஆதித் தமிழர் பேரவை இந்தக் கட்சிகளை எல்லாம் இவர்கள் கண்ணால் பார்த்தால் கூடத் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று நினைப்பார்களோ?

‘இவா’ எல்லாருக்கும் பெண் என்பதைத் தாண்டி இன்னொரு ‘ஒற்றுமை’ இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பா.ஜ.க. வை விரும்ப வைக்கிறதோ?

இதில் டாக்டர் கமலா செல்வராஜ் பா.ஜ.க வை தீவிரமாக ஆதரிக்கலாம். அந்தக் கட்சியினால் அவருக்கு லாபம் இருக்கிறது.
‘பெண் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்ற பா.ஜ.க வின் கொள்கை அவருக்கு நிச்சயம் அதிகம் பிடித்திருக்கும். அதனாலேயே அதை அவர் ஆதரிக்கலாம். ஆனால், அவர் எப்படி மகளிர் தினம் கொண்டாடலாம்?

தமிழக உழைக்கும் பெண்கள் மீது இந்து அமைப்புகள்கூட இத்தனை நூற்றாண்டுகளாக நிகழ்த்தாத மோசமான வன்முறையை இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

தன் உடல் உருக்கி, உயிர் உருக்கி தன்னிலை மறந்த நிலையில் பிரசிவிப்பதே தாய்மை. இனி குழந்தையைத் தவிர, தனக்கான வாழ்க்கை வேறொன்றுமில்லை என்ற பரிதாப நிலைதான் தாய்மை. என்னைப் பொறுத்தவரை பெண்ணின் வாழ்க்கையில் தாய்மைதான் பெரும் துயரம்.

ஆனால், இவரோ கர்பப்பை என்பதையே ஏதோ ‘கை’ பை என்பதாகச் சித்திரித்து, ‘பை யிலிருந்து பொருளை எடுத்து தந்துவிட்டுப் போய்க் கொண்டே இரு’ என்பதைப் போல் மாற்றி விட்டார் தாய்மையை. பொருள் கூட யாரிடம் தருகிறோம் என்பது தெரியும்.

ஆனால், தான் பெற்ற குழந்தையை யாரிடம் தருகிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரு தாய், குழந்தையை அல்ல தாய்மையை விற்று விட்டு செல்வது, இதுவரை பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையிலேயே மிக மோசமான வன்முறை.

அந்த வன்முறைக்குப் பெயர் ‘வாடகை தாய்’. அதைத் தமிழகத்தில் முதல் முறையாக நிகழ்த்திய டாக்டர் கமலா செல்வராஜ் கூட மகளிர் தினம் கொண்டாடுவது, அதை விடப் பெரிய வன்முறை.

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

டாக்டர் முத்துலட்சுமி: பத்திரிகைகளின் ‘தந்திரம்’

ஜெயகாந்தன் VS கே. பாலசந்தர்

எழுத துவங்கிய ஜெயகாந்தன் தன்னுடைய கதாபாத்திரங்களாகத் தெருவில் சோறு விற்கும் பெண், வண்டி இழுக்கும் முதியவர், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் என்று எளிய மனிதர்களைச் சுற்றி, சுற்றியே கதையமைத்தார். அவர்தான் அதை முதலில் செய்தார். அந்தச் சிற்பபுக்குரியவர் அவர்.

ஆனால் அந்தத் தகுதி பிரபலமாவதற்குப் போதாது. நவீன இலக்கிய அந்தஸ்தும் கிடைக்காது என்பதால்; தி.ஜானகிராமன், லா.சா.ரா. முறையில் பார்ப்பனக் குடும்ப பின்னணி அல்லது பார்ப்பனர்களைப் பாத்திரங்களாக வைத்து கதை செய்தார். நவீன இலக்கியத்திற்கு இதுதான் அப்போதும் அடிப்படைத் தகுதி.
அவர் ஆனந்த விகடனில் அனுமதி வாங்கியதே இந்தப் பின் புலத்தில்தான்.

அவருடைய ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதை தான் விகடனில் முதலில் பிரசுரமானது. அது அதுவரை வந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பின்புலம்.

கல்லூரியில் படிக்கும் பெண், சூழல் காரணமாக ஒரு நபரோடு வன்முறையால் அல்ல, கட்டாயப் பாலிய உறவுக்கு, பயன்படுத்தப்படுகிறாள். அது தெரிந்து பதட்டமைந்த அவளின் தாயார், பிறகு நிதானித்து இது ஒரு விபத்து என்று அவளுக்குப் புரியவைத்து, மகளின் தலைக்கு முழுக்குப் போட்டு, அந்தப் பிரச்சினையிலிருந்து பெண்ணை வெளியே கொண்டு வருகிறாள்.

யார் அந்த ‘ஆண்’ என்றே தெரியாத போது, மகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அறிவாளியான தாய், எந்த ஜாதியைச் சேர்ந்தவளாக இருந்தாலும், இப்படி ஒரு முடிவுதான் எடுத்திருப்பாள். ஜெயகாந்தனின் அந்த முடிவு தாயுள்ளதோடுதான் இருந்தது. முடிவுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஆனாலும் அவரின் ‘பிரபல’ பிரேவேசத்திற்கு ‘அக்னிப்பிரவேசம்’ தடையாகவே நின்றது.

அதனால்தான் அதே பாத்திரங்கள் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று நாவலுக்குள் பிரவேசித்தபோது, அது கமலின் ‘சகலகலா வல்லவன்’ பாணியில் எவன் ‘கெடுத்தானோ’ அவனுக்கு அவளைக் கட்டிவைப்பது என்று ‘அக்கினிப்பிரவேசம்’ சிறுகதைக்கு எதிராக மாறியது.

பார்ப்பன சமூகத்திலிருந்து அவருக்கு எழுந்த எதிர்ப்பை அல்லது புறக்கணிப்பை சரிகட்டிக்கொள்ள அவருக்கு இந்த முறை பெரியளவில் உதவியாக இருந்திருக்கும். இருந்தது.

ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ கதையால் அதிக அளவில் கோபப்பட்டவர் இயக்குநர் K. பாலசந்தர் என்று சாட்சி சொல்கிறது, அந்தக் காலக்கட்டத்தில் வந்த அவரின் ‘அவள் ஒரு தொடர்கதை’

அந்தப் படத்தில் ஒரு விதவைப் பெண்ணும் அவரின் மகளும் ஒரே ஆணுடன் உறவிலிருப்பாதாகக் காட்டி, ஏறக்குறைய அந்த விதவை பெண்ணையும் அவர் மகளையும் பார்வையாளர்களுக்கு ஒழுக்கக் கேடானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சித்திருப்பார்.

இதுக்கும் ஜெயகாந்தனுக்கும் என்ன தொடர்பு?
அந்த விதவைப் பெண் ஜெயகாந்தனின் தீவிர வாசகர். படத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகம் பல காட்சிகளில் வந்து போகும்.

கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு