கபாலியை விட அரை மணிநேரம் அதிகம்
‘கபாலி படமே ரெண்டரை மணி நேரம்தான். நீங்க 3 மணிநேரம் பேசிட்டிங்க தோழர். அதுல கூட இடைவேளை விட்டாங்க.. நீங்க இடைவெளியே இல்லாமல் பேசினீங்க. சிறப்பான பேச்சு’
என்று என் பேச்சை வெகுவாகப் பாரட்டியும் பேசினார் தோழர் கார்க்கி.
‘சமத்துவக் கழகம்’ சார்பில் கோவையில் ஜுலை 31 அன்று நடந்த கருத்தரங்கத்தில் ‘ஜாதியின் தீவிரமும் முற்போக்காளரின் செயல்பாடும்’ என்ற தலைப்பில் 3 மணி நேரம் உரையாற்றினேன்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்து உரை முழுவதையும் கேட்ட தோழர்களுக்கு நன்றி.
ஹமீது. அன்பு தோழன் மகிழ்ச்சி. தோழரே
Unlike · Reply · 1 · 2 August at 22:46
நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி
நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி · 89 mutual friends
மகிழ்ச்சி
Unlike · Reply · 1 · 2 August at 22:47
அதியமான் பாலு
அதியமான் பாலு Link kudunga anna
Like · Reply · 2 August at 23:29
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Ashok Kumar
Ashok Kumar அண்ணா அதன் ஒளிபதிவு கிடைக்குமா???
Like · Reply · 1 · 2 August at 22:48
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி யை தொடர்பு கொள்ளுங்கள்.
Like · Reply · 4 · 2 August at 22:57
Ashok Kumar
Ashok Kumar மகிழ்ச்சி ணா
Unlike · Reply · 1 · 2 August at 23:01
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Bharathi Mithran
Bharathi Mithran Naangal eppothu ithai ellam ketpathu..? 3 hours 😊😊
Unlike · Reply · 1 · 2 August at 22:50
Kamal Nathan
Kamal Nathan · Friends with Mohamed Kasim and 3 others
போராளிகளுக்கு மூன்று மணி நேரம் போதுமா என்ன
என் இரவு நேரங்களை பெரும்பாலும் உங்களுடைய உரைகளே ஆக்கிரமிக்கின்றன அண்ணா
Like · Reply · 7 · 2 August at 22:50
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி.
Like · Reply · 3 August at 09:26
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
சுப்பு ரத்தினம் தண்டபாணி
சுப்பு ரத்தினம் தண்டபாணி தோழர். உங்களுடன் ஒரு புகைப்படம்…???
Like · Reply · 2 August at 22:53
Mathimaran V Mathi
Mathimaran V Mathi செலவாகும்..
Like · Reply · 1 · 2 August at 23:14
சுப்பு ரத்தினம் தண்டபாணி
சுப்பு ரத்தினம் தண்டபாணி ஆகட்டும் தோழர்… மகிழ்ச்சி
Like · Reply · 2 August at 23:15
View more replies
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
காரை அன்பு
காரை அன்பு அண்ணா லீங்க் கொடுங்களேன்
Like · Reply · 2 August at 22:54
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி யை தொடர்பு கொள்ளுங்கள்.
Like · Reply · 1 · 2 August at 22:58
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
அதியமான் பாலு
அதியமான் பாலு அண்ணா வீடியோ இருக்க வலைப்பூவில்
Like · Reply · 2 August at 22:54
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி யை தொடர்பு கொள்ளுங்கள்.
Like · Reply · 2 August at 23:27
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
உண்மையை உரக்கச் சொல்
உண்மையை உரக்கச் சொல் · 16 mutual friends
எப்படியாவது லிங் அனுப்புங்கள் , ஆவலுடன் நாம்
Like · Reply · 1 · 2 August at 23:01
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி யை தொடர்பு கொள்ளுங்கள்.
Like · Reply · 1 · 2 August at 23:27
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Rameesha Fathima
Rameesha Fathima · Friends with Anand Raj
யாருன்னு நெனச்சிங்க… நெருப்புடா…
Like · Reply · 1 · 2 August at 23:02
Mathimaran V Mathi
Mathimaran V Mathi அது
Like · Reply · 1 · 3 August at 00:37
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Jaffer Kpm
Jaffer Kpm · Friends with Haja Gani and 1 other
தொலைக்காட்சி விவாதங்களில் உங்களை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம் அண்ணா. 🙂
உங்களை கூப்புட்ரதுக்கே பயப்புட்ராய்ங்க ஊடகங்கள்.
Like · Reply · 4 · 2 August at 23:04
Mathimaran V Mathi
Mathimaran V Mathi அதேதான்..
Like · Reply · 4 · 3 August at 09:10
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
வில்வம் கியூபா
வில்வம் கியூபா பாராட்டுகள் தோழர்! பயணம் தொடரட்டும்!
Unlike · Reply · 2 · 2 August at 23:04
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி.
Like · Reply · 1 · 3 August at 11:07
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Suryan Bashkaran
Suryan Bashkaran · 3 mutual friends
தோழர் உங்கள் உரை அற்புதம், வேத காலம், இன்றைய காலத்தில், சாதி, இரண்டிலும் எப்படி எல்லாம் அதன் கோரம் குறையாமல் பங்கு வகிக்கிறது, என்பதையும் , இந்து மதத்தை ஒழிக்காமல், சாதி ஒழியாது என்பதை அரசியல் நகைச்சுவையோடு, நடைமுறை மொழி நடையில் அருமையான பேச்சு, நன்றி தோழர்
Like · Reply · 4 · 2 August at 23:07
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 August at 11:08
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Haji Sikkander Kaleel Rahuman
Haji Sikkander Kaleel Rahuman mahilchi
Like · Reply · 2 August at 23:08
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 August at 12:18
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Hussain Jaseem
Hussain Jaseem · 62 mutual friends
மகிழ்ச்சி
Like · Reply · 2 August at 23:13
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 August at 12:18
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Mohammed Meeran
Mohammed Meeran நீங்கள் பேசிய மாட்டிட்டு கறியும் மதவாத அரசியலும் அருமையனபேச்சு
Unlike · Reply · 5 · 2 August at 23:23
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 August at 22:54
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Jayachandran Mani
Jayachandran Mani · 3 mutual friends
இப்படி ஒரு பேச்சை கேட்டு
நீண்ட நாட்களாகி விட்டது.
சிறப்பாக இருந்தது.
Unlike · Reply · 3 · 2 August at 23:29
Mathimaran V Mathi
Mathimaran V Mathi மகிழ்ச்சி.
Like · Reply · 3 August at 22:54
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Prabhu Rajendiran
Prabhu Rajendiran எங்களுக்கு தெரியாம போச்சு தோழர் Miss பன்னிட்டோம்!
Unlike · Reply · 2 · 2 August at 23:36
Nizamuddin Askarbme
Nizamuddin Askarbme நீங்கள் மூன்று மணி நேரம் தான் பேசுவது வழக்கம் ஆனால் நீங்கள் பேசும்போது நாங்கள் பெரியார் காலத்திற்குப் போய்விடுகிறது எங்கள் மனசு தொடரட்டும் உங்கள் பயணம் மதி பாய்
Unlike · Reply · 7 · 2 August at 23:40
Mahen Dran
Mahen Dran · Friends with Annamalai and 54 others
வாழ்த்துக்கள் !
Unlike · Reply · 2 · 2 August at 23:58
Pugazhenthi Ethiraj
Pugazhenthi Ethiraj · 7 mutual friends
மகிழ்ச்சி
Unlike · Reply · 1 · 3 August at 00:33
Jm Rafeek Rajaghiri
Jm Rafeek Rajaghiri · 5 mutual friends
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Like · Reply · 3 August at 04:57
Varun Shakthi
Varun Shakthi · Friends with Boopathy Karthikeyan
ur many speach really awesome inspiring and true mathimaran ayya
Unlike · Reply · 1 · 3 August at 08:14
Sundaram Baskar
Sundaram Baskar · Friends with நேர் பட பேசு
ஒலி -ஒளி இருந்தால் பகிரவும் தோழரே . எங்களை போன்ற வெளிநாடு வாழ் நண்பர்களுக்கும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் . முடியுமா தயவுசெய்து .
Like · Reply · 3 · 3 August at 08:37
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி யை தொடர்பு கொள்ளுங்கள்.
Like · Reply · 1 · 3 August at 12:33
Sundaram Baskar
Sundaram Baskar · Friends with நேர் பட பேசு
Mathimaran V Mathi கேட்டிருக்கேன். பதிலுக்காக காத்திருக்கேன் தோழரே . உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்
Like · Reply · 3 August at 12:50
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Ameer Khan
Ameer Khan · 8 mutual friends
தோழருக்கு ஒரு வேண்டுகோள்! நீண்ட இடைவேளைக்குப்பின் ஒரு போராட்ட களத்தை கட்டியமைத்து வருகிறீர்கள் . தற்போது தமிழ் சமூகம் பேச்சினை ஆரவாரத்துடன் கைதட்டி மகிழ்வதோடு சரி. எந்த நோக்கத்திற்காக இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுஇனகின்றன. கூட்டக்களுக்கு பிறகு ஆற்ற வேண்டிய களப்பணிகள், செயல் திட்டங்கள் குறித்த செயல்பாடும் சிந்தனையும் குறைவாகா உள்ளதாகவே கருதுகிறேன். எனவே ஒத்த கருத்துடையவர்களை இணைத்து அவர்களுக்கு பயிற்ச்சி பட்டறை தாங்கள் வழங்க வேண்டுகிறேன்.இல்லை எனில் இந்த களம் தங்களோடு முடியம் வாய்ப்பு உள்ளது. அடுத்த தலைமுறைக்கு இந்த போராட்டத்தை கொண்டு செல்லும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதாகவே கருதுகிறேன். ஆதரவு சக்திகளை இனம் காண்பது ஒடுக்கப்பட்டோர் அனைவரும் ஓரணியாக திரள்வது,திரட்டுவது காலத்தின் இன்றைய தேவை என்பதையும் தாங்கள் நன்கறிவீர்கள்.
Like · Reply · 3 August at 10:21
Mathimaran V Mathi
Mathimaran V Mathi முயற்சிப்போம்
Like · Reply · Just now
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Simbu Prathap
Simbu Prathap · Friends with Thozhi Malar and 20 others
Tholar mathimaaran avargal mutpookaalargalin maththiyil saathiyam ,pattaiya kelapitinga ,avasiyam intha CD tholar garkiyidam keatu vaangi paarunga tholargalea
Like · Reply · 3 August at 11:13
Manoj Karunanidhi
Manoj Karunanidhi Sir .video link periyar TV la kidaikuma
Like · Reply · 3 August at 11:33
Sakthi Vel
Sakthi Vel · Friends with Ramesh M Ramesh and 4 others
Thks
Like · Reply · 3 August at 14:26
க.சுரேஷ் குமார்
க.சுரேஷ் குமார் Video Link please
Like · Reply · 3 August at 17:08
Venugopal Chinnasamy
Venugopal Chinnasamy In Kovai your speech was very good. Pillyar politics already many persons discussed like Sivasubramanian etc.. During 1997 our friends group have discussed pillyar replaced Buddha in Arasamaram…I hope you will understand my critics… thanks…
Like · Reply · 3 August at 17:47
Kadarkarai Urkavalan
Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
தோழரே இந்த சொற்பொழிவை தயவு செய்து YOU TUBE இல் பதிவேற்றுங்கள், எங்களை போன்ற நண்பர்கள் கேட்டு பயன்பெறுவோம்
Like · Reply · 3 · 3 August at 20:06
Mohamed Abubacker
Mohamed Abubacker · 3 mutual friends
where we can find this speech because i am in saudi arabia.
Unlike · Reply · 1 · 3 August at 21:20
Gogul Rajini Tendulkar
Gogul Rajini Tendulkar Semma
Unlike · Reply · 1 · 3 August at 21:34
சண்முக நாதன்
சண்முக நாதன் எப்பிடி..இப்புடி..
நெருப்புடா
நெருங்குடா
முடியுமா
கெட்க முடியலைனா
சாவுங்கடா..
Unlike · Reply · 1 · 3 August at 21:57
Kasi Rajan Thamilan
Kasi Rajan Thamilan · 7 mutual friends
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் நீங்கள் ……
Unlike · Reply · 2 · 3 August at 22:38
Leo Charles
Leo Charles · Friends with Sirpi Rajan and 3 others
தோழர் மதி தங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள்,,,
Unlike · Reply · 1 · 23 hrs
http://ippodhu.com/wp-content/uploads/2016/07/ranaayyub-696×417.jpg
கடந்த 2013ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளிலும் மற்றும் 2014ஆம் ஆண்டின் முதற்பகுதியிலும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியைப்பற்றி பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்ட புத்தகங்கள் மோடியை துதிபாடி எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் ஒரு எழுத்தாளர் கடந்த 1970களின் மத்தியில் மோடி இமாலயப்பகுதிகளில் இருந்தபோது டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளதாக எழுதியிருந்தார். மற்றொரு எழுத்தாளர் மோடி கங்கையாற்றில் முதலையுடன் சண்டையிட்டு அதை வீழ்த்திய பராக்ரமசாலி என்றெல்லாம் நம்பும்படியாகவே எழுதியிருந்தார். மேலும் அதிகாலைப் பொழுதில் இரயில் நிலையத்தில் தேனீர் விற்றுக்கொண்டிருந்த சாதாரண மனிதர்தான் மோடி என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தனர்.
மோடி அலை வீசிய அதே நேரத்தில் 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்கு இருந்த தொடர்பு பற்றியும், என்கவுன்டர் மூலம் பலர் கொல்லப்பட்டதில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவிற்கு இருந்த தொடர்பு பற்றியும் புத்தகங்களில் எழுதப்பட்டன. இந்தப் புத்தகம் குடிசையிலிருந்தவர் எப்படி கோபுரத்திற்கு வந்தார் என்பது பற்றி மட்டுமல்ல குஜராத்தில் நடைபெற்ற துயரச்சம்பவங்களில் இந்திய அரசியலின் இரு முக்கிய தலைவர்களின் பங்கையும் எடுத்துரைக்கிறது. ஆனால் இந்த புத்தகம் வெளிவர இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எந்தப் பதிப்பகமும் இந்த புத்தகத்தை வெளியிட மறுத்தது. அதனால் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரே அதை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்தான் ராணா அய்யூப். ஒரு இயக்குனர் போல சென்று 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் காரணங்களையும் அதன் பிறகு நடைபெற்ற என்கவுன்டர் கொலைகளைப் பற்றியும் பலவிதமான தகவல்களுடன் ’குஜராத் ஃபைல்ஸ்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தற்போது வேகமாக விற்பனையாகி வருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்த நிலை இன்னும் மாறவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தை வெளியிட பல வெளியீட்டாளர்கள் முன்வருகின்றனர். ஆனால் அகமதாபாத் நகரத்திலுள்ள சில வெளியீட்டாளர்கள் புத்தகத்தைப் பதிப்பகங்களில் வைத்துக்கொள்ள மறுக்கின்றனர். இதைப்பற்றி ராணா அய்யூப் கூறுகையில் ’’மும்பை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள பதிப்பகத்தார் கடந்த ஒரு வாரத்தில் புத்தகத்தை வெளியிட விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அது ஆச்சரியப்படும்படியாக இல்லை’’ என்றார். மேலும் மும்பையிலுள்ள பதிப்பகங்கள் இந்தப் புத்தகத்தை அதிகளவில் வெளியிட முன்வந்திருக்கின்றன. இதற்கான காரணம், இந்தப் புத்தகம் அமேசானில் சிறப்பாக விற்பனையாகி வரும் புத்தகம் என்பதுதான்.
இந்தப் புத்தகத்தை கடந்த 2010ஆம் ஆண்டு ராணா எழுதத் தொடங்கினார்; 2001 முதல் 2010 வரை குஜராத்தில் அதிகாரத்திலிருந்தவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் இரகசியமாக விவரங்களை சேகரித்துள்ளார். இந்தப் புத்தகத்தில் குஜராத் கலவரத்தைப்பற்றி இதுவரை வெளியிடப்படாத பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரையிலும் எதற்கும் மசியாத ராணா அய்யூப் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்; இந்தப் புத்தகத்தை எழுதும்போது தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் மிரட்டல்களைப் பற்றி கூறியுள்ளார். அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு ’குஜராத் ஃபைல்ஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஜியாவுஸ் ஸலாம் நடத்திய நேர்காணல் இது:
இது போன்ற புலனாய்வு முறைகள் இந்திய பத்திரிகைத்துறையிலும், இலக்கியங்களிலும்கூட அரியதான ஒன்றாக இருக்கிறது. ராணா அய்யூப் என்ற புலனாய்வு பத்திரிகையாளர் எப்படி மைதிலி தியாகி என்ற இயக்குனர் பேரில் குஜராத் கலவரம் பற்றி புலனாய்வு நடத்தினீர்கள்?
இந்தப் புத்தகம் கண்டிப்பாக ஒரு இலக்கியமாக இருக்கப்போவதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு தீவிரமான குற்ற-அரசியலைப் பற்றிய ஆய்வாகும். இந்தப் புலனாய்வு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆள்மாறாட்டம் மற்றும் அனுமதியில்லாமல் அடுத்தவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தல் ஆகியவை புலனாய்வு பத்திரிகைத்துறையில் உள்ள ஒன்றுதான். ஆனால் இது பத்திரிகைத்துறையில் அனைத்து இடங்களிலும் செய்யக்கூடியது அல்ல. மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இந்தப் புலனாய்வு முறை பின்பற்றப்படுகிறது. நெல்லி ப்ளை என்ற புனைப்பெயரில் எழுதிக்கொண்டிருந்த எலிசபெத் கோச்ரன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு புலனாய்வு பத்திரிகையாளர். இவர் பத்திரிகை வரலாற்றில் மிகவும் தைரியத்துடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஒரு தனியார் பாதுகாப்பு அமைப்பிற்கும் இருந்த தொடர்பு பற்றியும் நீண்ட நாட்கள் எழுதியுள்ளார். மைதிலி என்ற பெயர்தான் கடந்த 2010இல் நீதிக்குப் புறம்பான வழியில் ஷராபுதீன் மற்றும் துளசி பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய அமித்ஷா கைதானபோது என்னைக் காத்துக்கொள்ள உதவியது. மைதிலி என்ற பெயரும், அமெரிக்க வாழ் இந்தியரான அவள் குஜராத்தின் பெருமைகளைப் பற்றி படம் எடுக்க வந்தவள் என்பதும் அவளது தந்தை சமஸ்கிருதம் கற்பிப்பவர், ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் பிரச்சாரகர் என்ற பொய்யான தகவல்கள்தான் இந்தப் புலனாய்வுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பிரஞ்சு பயிற்சியாளர் ஒருவரின் உதவியால்தான் மைதிலி என்ற பெயரில் புலனாய்வு செய்தது எளிதாக இருந்தது.
இந்தப் புத்தகம் ஒருபோதும் இலக்கியமாகவோ அல்லது பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களை நெறிப்படுத்தும் ஒன்றாகவோ இருக்காது என்று கூறினீர்கள். அதுபற்றி விரிவாக கூறுங்களேன்?
இந்தப் புத்தகத்தின் மொழியாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பல ஊடகங்களை அணுகினேன். தெஹெல்கா பத்திரிகையைச் சேர்ந்த தருண் தேஜ்பால் மற்றும் ஷோமா செளத்ரி ஆகியோருடன் இந்தப் புத்தகத்தின் தலையங்க முடிவுகளைப் பற்றி ஆலோசித்தேன். மேலும் தற்போது இந்தப் புத்தகம் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பல நல்ல மற்றும் மூர்க்கமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதனால் வாசகர்கள்தான் நீதிபதிகள்.
நீங்கள் புலனாய்வில் அரசியல் தலைவர்களுடனும்,அதிகாரிகளுடனும் இருந்திருக்கிறீர்கள். இதனால் இந்தப் புலனாய்வில் நீங்கள் பிடிபட ஏதேனும் வாய்ப்புகள் இருந்தனவா?
புலனாய்வின்போது பலமுறை நான் பிடிபட வாய்ப்புகள் இருந்தது. ஒருமுறை குஜராத்தின் முன்னாள் டி.ஜி.பி திரு.பாண்டே அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்திக்க அழைத்திருந்தார். அவர்தான் குஜராத் கலவர வழக்கின் எதிர்தரப்பு வழக்கறிஞர். அவருக்கு என்னையும் நன்றாகத்தெரியும். எனவே எனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி பாத்ரூமுக்குள் சென்று ஒருமணிநேரம் வெளியே வரவே இல்லை. பின்னர் திருமதி. பாண்டேவை அழைத்து மிகவும் களைப்பாக உள்ளது எனக்கூறி ஒரு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டேன். அதனால் தப்பித்துக்கொண்டேன்.
மற்றொருமுறை உஷா ராதா என்ற போலீஸ் அதிகாரி நோ ஒன் கில்ட் ஜெசிக்கா என்ற படத்திற்கு அழைத்துச்சென்றார். அது தெஹெல்காவின் புலன்விசாரணை பற்றிய படம். படம் முழுவதும் தெஹெல்காவைப்பற்றி திட்டிக்கொண்டே இருந்தார் உஷா. அப்போது உள்ளே செல்லும் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் நான் பிடிபட்டிருப்பேன். ஏனெனில் என் குர்தாவுக்கு நடுவில் கேமரா இருந்தது. ஆனால் உஷா ஒரு எஸ்.பி என்பதால் அவருடன் சென்ற என்னையும் விட்டுவிட்டனர்.
கடந்த 2012க்குப் பிறகு மோடிக்கு ஆதரவாக பல புத்தக வெளியீட்டாளர்கள் எழுதியிருந்தனர். ஆனால் நீங்கள் குஜராத் கலவரத்தில் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். புத்தகம் வெளியான பிறகு மோடியின் ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை, தொல்லைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?
அது ஒரு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தது. நான் என்னையே ஒரு சரியான பத்திரிகையாளரா என்று சந்தேகிக்கும் அளவிற்கு தள்ளிய ஒரு தருணம். ஏதேனும் ஒரு பத்திரிகையோ அல்லது புத்தக வெளியீட்டாளர்களோ என்னைப் புறக்கணிப்பது சகஜம். ஆனால் கிட்டத்தட்ட பத்து பதினைந்து பத்திரிகைகள் என்னைப் புறக்கணித்தனர். மேலும் ஒரு பத்திரிகையாளராக நான் செய்த பணி பயனற்றதோ என நினைக்கும் அளவிற்கு தனித்து விடப்பட்டதை உணர்ந்தேன். இதனால் ஏற்பட்ட பதட்டமும், மன அழுத்தமும் என் உடல்நலத்தை மிகவும் பாதித்தது. இதனைத் தாங்க முடியாமல் பல நாட்கள் அழுதேன். அதனாலேயே இந்தப் புத்தகத்தை நானே வெளியிட முன்வந்தேன். பிறகு எனது தோழியான வழக்கறிஞர் ஒருவரை அழைத்து நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டு அவளிடமும் அழுதேன். அதன் பிறகு புத்தகம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு வெளியீட்டாளர்கள் எனது புத்தகத்தை வெளியிட ஆதரவு அளித்தனர்.
புத்தக வெளியீட்டிற்குப் பிறகு உங்களைப் பற்றிய எள்ளிநகையாடல்களை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
எனது புத்தகம் ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய தலைவர்களுக்கு எதிரானது. எனவே அரசாங்கத்தை இதுபோன்ற விமர்சனங்களிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு குழு அமைத்து என் மீதும் இந்தப் புத்தகம் மீதும் பலவிதமான காட்டமான விமர்சனங்களும் எள்ளிநகையாடல்களும் வந்து குவிந்தன. ஆனால் அவைகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் இது போன்ற எள்ளிநகையாடல்களை அவர்கள் பணம் வாங்கி செய்கின்றனர். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்மீது எந்தக் கோபமும் இல்லை என நினைக்கிறேன்.
தனிநபர் வெளியிடும் புத்தகங்களுக்கு பொதுவாக இந்தியாவில் வரவேற்பு குறைவு. இது ஏதேனும் ஒரு வகையில் உங்களின் தைரியமான படைப்புக்கு தடையாக இருந்ததா?
இதுபோன்ற தனிநபர் வெளியிடும் புத்தகங்களும் வெளிவர வேண்டும். விழாக்களின்போது மட்டும் இலக்கியங்களின் பெருமையைப் பற்றிப் பேசும் சில வெளியீட்டாளர்களுக்கு இதுபோன்ற தனிநபர் வெளியிடும் புத்தகங்கள் ஒரு பெரிய அடியாக இருக்கும். தனிநபர் வெளியிடும் புத்தகங்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு இல்லை. அதற்குரிய ஒரு ஏற்ற இறக்கம் தனிநபர் புத்தக வெளியீட்டில் இருக்கிறது. மேலும் இந்தியாவில் தனிநபர் வெளியிடும் புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. புத்தகம் வெளியிடப்பட்ட நாளில் இரவு நேரத்தில் அதன் விற்பனைக்காக அமேசான் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டிருந்தேன். அது ஒரு பெரிய வேலையல்ல. ஆனால் அப்போதுதான் ஒரு புத்தக வெளியீட்டில் ஆசிரியருக்கு உள்ள சுதந்திரத்தை உணர்ந்தேன். இந்தியாவில் தனிநபர் புத்தகம் வெளியிடும் நாள் கூடிய விரைவில் வர வேண்டும். அப்போதுதான் நல்ல இலக்கியங்களும், பத்திரிகை செய்திகளும் வரும். தணிக்கைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டு நல்ல புத்தகங்கள் வெளிவர இயலும்.
குஜராத் கலவரத்தைப் பற்றிய உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், உங்களுடைய புலனாய்வுச் செய்திகள் உண்மைதானா? அரசுக்கு இந்தக் கலவரத்தில் பங்கு இருக்கிறது என நினைக்கிறீர்களா? அல்லது இதைப்பற்றி உண்மைகளைச் சொல்ல தகுதியில்லை என நினைக்கிறீர்களா?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இது பற்றிய தீர்ப்பைக் கூற விரும்பவில்லை. இந்தப் புலனாய்வில் கிடைத்த வாக்குமூலங்களைச் சொற்களாக புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். இதைப் பற்றிய தீர்ப்பை வாசகர்களின் வசம் விட்டுவிட்டேன். எந்தவொரு நிறுவனமோகூட இந்தப் புத்தகத்திலுள்ள நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வெளியிடலாம். ஒரு பத்திரிகையாளராக எனது பணியை நான் செய்திருக்கிறேன். மேலும் இந்தப் புலனாய்வில் நான் கண்டுபிடித்த தகவல்கள் பல அரசியல்வாதிகள் கூறும் தகவல்களுடன் போட்டியிட முடியாது. எனவே இதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன். இதற்காக தெஹெல்காவிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் வெளியிடவும் அந்த கமிஷன் உண்மையைக் கண்டறியவும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.
குல்பர்க் சொசைடி வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனை குறித்து ஜாகியா ஜாஃப்ரி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். அந்தப் படுகொலைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறதே….
இந்தத் தண்டனையைப் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் மிகவும் கீழ்நிலையில் இதற்காக வேலை பார்த்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைக்கு மூல காரணமானவர்கள் தப்பித்துக் கொண்டனர்.
கடந்த 2002 பிப்ரவரியில் சஞ்சீவ் பட் பொதுக்கூட்டத்துக்கு வராததைப்பற்றி பேசியிருந்தீர்கள். அங்கிருந்த அசோக் நாராயணன் போன்றோரின் கருத்து என்ன?
சஞ்சீவ் பட் பற்றியும் அவரது நிலைப்பாடு பற்றியும் என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்திலுள்ள எந்தவொரு அதிகாரியின் அடையாளமும் சி.பி.ஐயால் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் பெயர்கள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இதற்குள் சஞ்சீவ் பட் வந்தது மர்மமாகவே இருக்கிறது. இது ஒரு அரசியல் சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம். இதனாலேயே இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டவற்றின் உண்மைத்தன்மையை அறிய வேறு நிறுவனங்களிடம் பொறுப்பை விட்டுவிட்டேன். மேலும் நான் பேசிய அனைத்து அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளேன். இதில் சஞ்ஜீவ் பட்டின் வாக்குமூலமும் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களைப் பொறுத்தவரை பாபு பஜ்ரங்கி மற்றும் மாயா கோட்னானி ஆகிய இருவரும்தான் குஜராத்தில் நடைபெற்ற படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் வேறு யாரேனும் இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
இதைத்தான் புத்தகத்தின் முதற்பகுதியிலேயே சொல்லியிருந்தேன். பாபு பஜ்ரங்கி மற்றும் மாயா கோட்னானி ஆகிய இருவரும் அடிமட்ட வேலையாட்கள். அவர்களை செய்யத்தூண்டிய உண்மையான குற்றவாளிகள் குஜராத்திலிருந்து டெல்லிக்கு சென்றுள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் யார் என்பதை இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காசர் பையின் உறவு குறித்து அவதூறான தகவல்கள் பரப்பப்படுகின்றது. இதனால் மட்டுமே எப்படி என் கவுன்டர் கொலையை நியாயப்படுத்த முடியும்?
அது எப்படி காசர் பையின் கொலையை நியாயப்படுத்த முடியும்? ஒருவேளை ஷராபுதீன் மற்றும் துளசி பிரஜாபதி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என வைத்துக் கொள்வோம். அப்படியானால் காசர் பையின் பெயருக்கு ஏன் களங்கம் விளைவிக்க வேண்டும்? சி.பி.ஐ யின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று காசர் பை அதிகாரிகள் சிலரால் நீதிக்குப் புறம்பான வழியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் உயர்பதவியிலிருக்கும் கீதா ஜோஹ்ரி போன்ற சில அதிகாரிகளே காசர் பையைப் பற்றி அவதூறு பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
ஹரேன் பாண்டியா வழக்கு விசாரணையில் தனக்கு திருப்தி இல்லை என்று ஹரேனின் மனைவி கூறியிருக்கிறார். நாம் அதிலுள்ள உண்மைகளை பார்க்க வேண்டுமா? அல்லது அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பார்த்து குற்ற உணர்ச்சியிலுள்ளோமா?
எனக்கு ஜக்ருதீபன்(ஹரேனின் மனைவி) பற்றி நன்றாக தெரியும். அவர் தனது கணவனின் கொலைக்கு பொறுப்பிலிருக்கும் சில அதிகாரிகள்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இப்போது இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் அதே திசையில்தான் வழக்கு விசாரணை சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். நான் இதனை மக்களிடமும் மற்ற உண்மைத்தன்மையுடன் இருக்கும் பத்திரிகை களிடமும் விட்டுவிடுகிறேன்.
இறுதியாக, சில நெறிமுறை சார்ந்த பிரச்சனைகள் உங்கள் புலனாய்வில் தென்படுகிறதே?
இந்த வழக்கிலுள்ள சில குழப்பங்களைக் களைவதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும். இந்தப் புலனாய்வு இந்த வழக்கிலுள்ள சில சந்தேகங்களை உறுதிப்படுத்தும்விதமாக உள்ளது. ஜி.எல்.சிங்ஹால் என்ற அதிகாரி இஷ்ரத் ஜாஹனைச் சுட்டுக்கொன்றுவிட்டு குஜராத்தின் உயர் அதிகாரிகள், குஜராத் உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் மோடியின் செயலாளர் ஆகியோரை எஸ்.ஐ.டி வழக்கில் விசாரணைக்குள்ளாக்கியதை மறந்துவிட முடியாது. அவை இந்த வழக்கில் ஒரு ஆதாரமாக இருக்கும். எனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்தப் புலனாய்வு நிச்சயமாக இந்த வழக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். மேலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என விரும்புகிறேன்.
நன்றி: ஃபிரண்ட்லைன்
https://www.youtube.com/watch?v=7oMm38BeXXc
ராணா அய்யூபின் கலந்துரையாடல் அல்ஜஜீராவில்!
கார்க்கி தொலைபேசி எண் அளிக்கவும்