‘சமஸ்கிருதம் லட்சியம் ஆங்கிலம் நிச்சயம்’

ஜாதிய சமூகத்திற்கு முதலாளித்துவ முகம் கிடைக்க ஆரம்பித்த நாட்களில், இனி முதலாளித்துவம்தான் இந்திய எதிர்காலம் என்று உணர்ந்த முதல் ஜாதி பார்ப்பனியம்தான்.
‘சமஸ்கிருதம் லட்சியம் ஆங்கிலம் நிச்சயம்’ எனச் சமஸ்கிருத புனிதத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, சரசரவென ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில் சில்வர் டங்க்கும் முளைத்தது.
முதலாளித்துவ தாக்கத்தால் சொந்த ஜாதி பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகவும் ராஜராம் மோகன்ராய் போன்ற அறிவுஜீவிகள் உருவானார்கள். அதில் ஒருவர்தான் கர்சன் தாஸ்.
தன் ஜாதிபெண்கள் உட்பட ஒட்டுமொத்த ஜாதிய சமூகமும் தலித் பெண்கள், மக்கள் மீது தீண்டாமையோடு மிகக் கொடூரமான வன்முறைகள் நிகழ்த்தியபோதம் அதைப் பிரதான பிரச்சினையாகக் கொள்ளாமல் தன் ஜாதிக்குள் சீர்திருத்தத்தைச் செய்தனர்.
‘இந்து மதத்தில் எந்த மாற்றமும் செய்யமுடியாது. கூடாது’ என்ற அவர்கள்தான், வெள்ளைக்காரர்கள் ஆட்சியின்போது தங்கள் எதிர்காலம் கருதி தலைகீழ் மாற்றங்களை செய்தார்கள்.
குறிப்பாகச் சொந்த ஜாதி பெண்களைத் துன்புறுத்திய பார்ப்பனிய சடங்குகளுக்கு எதிராகக் கிளர்ந்த பார்ப்பனிய சீர்திருத்தவாதிகளின் கிளர்ச்சிகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு,
இந்து மதத்தில் நம்பமுடியாத அளவிற்கு தலைகீழ் மாற்றங்களைப் பார்ப்பனியம் நிகழ்த்தியது.
பிறகு பெண் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதுகுறித்து பல கவிகள் கவிதை எழுதினார்கள்.
1846 ல் நடைபெறம் கர்சன்தாஸ் குறித்தான அமீர்கான் மகன் நடித்துள்ள ‘மகராஜ்’ இந்திப்படத்தை இந்த அரசியல் பின்புலத்திதான் பாரக்க வேண்டும்-வே. மதிமாறன்.