பெரியாரின் பூமாலையும் போர்வாளும்
இன்னொரு புது புத்தகம்
1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்-, தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது. இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி சென்றது போல், மக்களை மையமிட்டு இயங்குகிற, நாடக கலைஞர்களிடம் ஊடுருவியது. கலைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ‘குடியரசு’ இதழை மறைத்து வைத்துப் படித்தார்கள்.
அதன் தாக்கத்திற்கு பல கலைஞர்கள் ஆளானாலும், அறிவாளிகளை அது அதிக அளவில் ஈர்த்தது. அப்படி ஈர்க்கப்பட்ட அறிவாளிகள்தான் என்.எஸ்.கிருஷ்ணணும், எம்.ஆர்.ராதாவும்.
…………………………………………………………….
எம்.ஆர். ராதா – என்.எஸ். கிருஷ்ணன் – கே.பி. சுந்தராம்பாள் நூற்றாண்டு விழாவும்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குழப்பம்
durai:
மதனை அழைத்தது சினிமா வாய்ப்பு தேடுவதற்காகத்தான் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? அந்த விழாவுக்கு அடுத்தப்படியாக எப்போது, எந்த தமுஎச நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மதனின் உதவியுடன் சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
கலைவேந்தன்:
பிரளயன் என்பவரை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்துவைத்தது மதன்தான் என்று பிரளயனே நன்றி பொங்க குறிப்பிட்டுள்ளார். இது போக, தமுஎசவின் முன்னணி பேச்சாளரான பாரதி கிருஷ்ணகுமார், தன்னுடைய வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளை பலநாள் முடக்கிவிட்டு என்ன புரட்சியா செஞ்சாரு? பாரதிராஜாகிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்துக்கொண்டிருந்தார்…
…………………………………………………………….
கே.பி. சுந்தராம்பாள் – தமுஎசவிற்காக -‘சிபிஎம்‘ டி.கே. ரங்கராஜனும்–
எம்.ஆர். ராதாவிற்காக கலைவேந்தனும்
டி.கே.ரங்கராஜன்:
அதேபோல், கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி
விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.
கலைவேந்தன்:
நல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவார்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி…
…………………………………………………………….
விரிவாக அறிய,
விற்பனையில்…
அங்குசம் வெளியீடு
ஞா. டார்வின் தாசன்
15, எழுத்துக்காரன் தெரு
காலடிப்பேட்டை
திருவொற்றியூர்
சென்னை–600 019
பேச: 94443 37384