முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை

muthukumar

ழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை.

ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை எழுச்சியோடு பதிவு செய்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் நடத்திய அந்த எழுச்சிமிகு அணிவகுப்பில் கலந்துக் கொண்டதை, என்னுடைய தகுதியாக, என் அரசியல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தா ஒன்றாக, மிகப் பெருமையோடு கருதுகிறேன்.

ஏனோதானோ என்றோ, அல்லது தன்னைப் பெரிய அறிவாளியாக, எழுத்தாளனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ பல மேற்கோள்களைக் காட்டி, படிப்பவனை மிரட்டி நானூறு பக்கங்களுக்கும் மிகாமல், ‘பெரும் குறிப்புவரைகிற எழுத்தாளர்கள் மத்தியில், நான்கே பக்கத்தில், தனது முதல் எழுத்திலேயே, வெறும் துண்டு பிரசுரத்தில் ஓர் இரவுக்குள் தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டி விட்டார் முத்துக்குமார்.

தான் கொண்ட கொள்கையின் மீது அர்ப்பணிப்பும், உண்மையும், துணிவும், தியாக உள்ளமும் இருந்தால், நானூறு பக்கங்கள் அல்ல, நாலே வார்த்தையில் கூட மக்களை தட்டி எழுப்ப முடியும் என்பதற்கு முத்துக்குமாரின்உயில்ஒரு சாட்சி. நமக்கு பாடம்.

***

அரசியல் அலசல் கொண்ட கட்டுரையை, கடிதத்தை மிகச் சிறப்பாக எழுதுவது, முயன்றால் எல்லோருக்கும் முடிகிற காரியம்தான் என்றாலும், மரணத்தை முடிவு செய்துவிட்டு, எழுதச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு ஒண்ணாவது வாய்பாடைக் கூட ஒழங்காக எழுதவராது.

தாய்நாட்டிற்காக, மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்தச் சிறப்பு இந்திய வரலாற்றில் மாவீரன் பகத்சிங்கிடம் இருந்தது.

மறுநாள் காலையில் தூக்கு, இரவு லெனின்அரசும்புரட்சியும்என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார் பகத். சிறைக்காவலர், “மன்னிப்பு எழுதிக் கொடுத்தால், தூக்கிலிருந்து தப்பலாமேஎன்கிறார்.

பகத்சிங் சொல்கிறார், “என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்என்று சொல்லிவிட்டு மீண்டும் தீவிரமாக லெனின்அரசும்புரட்சியும்என்ற நூலைப் படித்திருக்கிறார் பகத். முத்துக்குமாரின் மிகச் சிறப்பும், பகத்சிங்கைப் போன்றே மரணத்தை மயிறளவுக்கூட மதிக்காததன்மைதான்.

தன் மரணத்தை முடிவு செய்துவிட்டு, மிகப் பெரிய அரசில் தீர்வை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் நெருப்பு வைத்து எழுதியிருக்கிறார் தமிழகத்து பகத்சிங் முத்துக்குமார். அவர் வைத்துக் கொண்ட நெருப்பைவிடவும் அவர் வைத்த நெருப்பு, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நெஞ்சில், திகுதிகு வென்று பற்றி சூராவளியாய் தமிழகம் முழுக்க சுற்றி அடிக்கிறது.

தோழர்களே, முத்துக்குமாரின் அந்த நான்கு பக்க தீபந்தம், நம் கையில் இருக்கிறது. அந்த மாவீரன், மாமேதை முத்துக்குமார் நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பது, நம்மை வருத்திக் கொள்ள, கொளுத்திக்கொள்ள அல்ல. தமிழனப் பகையை வருத்த, கொளுத்த.

ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீயை.

அந்தத்தீஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம்.

வே. மதிமாறன்

13 thoughts on “முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை

  1. //ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை.

    அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம்.//

    நூற்றுக்கு நூறு சரி தோழர். வழிமொழிகிறேன்.

  2. இம் முறை உங்கள் கட்டுரை என்னைக் கட்டி வைத்து விட்டது தோழரே. முகம் தெரியாத முத்துக்குமரனுக்கு முன் நானும் மெளனமானேன். வார்த்தைகள் வரவில்லை. வாழ்கிறார்.

    எமது சுவிஸ் ஒலிபரப்பை அவருக்கு சமர்ப்பித்தேன்.

    இதோ இணைப்பு:
    http://www.radio.ajeevan.com/

    நன்றி தோழரே

  3. //ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை.//

    மிகவும் சரியாக எழுதியுள்ளீர்கள்.

    நித்தில்

  4. அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம்.//

    உண்மையான வீரவணக்கத்தை நாமும் செய்வோம்.

  5. சிறப்பான கட்டுரை மதிமாறன் அவர்களே!

    உங்களுக்கு நன்றிகள் பல.

    தமிழகத்தின் அரசியலையும், நாதியற்ற இந்த இனத்தின் விதியையும் புரட்டிப் போட நாம் ஒவ்வொருவரும் தம்மால் ஆனதைச் செய்வோம்.

  6. தமிழ்மணம் (http://tamilmanam.net) தளத்திலும் முத்துக்குமார் நினைவைப் போற்றியிருந்தோம்.

    நன்றி!
    நா. கணேசன்

  7. கோழைத்தனம், உணர்ச்சிவசப்பட்டநிலை, முட்டாள்தனம், பகுத்தறிவற்றதன்மை
    என இப்படியாக முத்துக்குமரனின் தீக்குளிப்புப் பற்றி அறிவுஜீவிகள் முழக்கமிடத் தொடங்கிவிடுவார்கள்.
    தினமணி வைத்தி அய்யர் இருக்காரே ! அதான்….. வைத்தியநாதன் அவரெல்லாம் கூட பகுத்தறிவு பேச ஆரம்பிச்சுட்டார். பகுத்தறிவுப்படி முத்துக்குமாரின் செயல் தவறாம். இவர் சொன்ன இந்தப்பகுத்தறிவை தீக்கதிர் நாளிதளும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஓ ! பூணூல் பாசமாக இருக்கலாம்
    தீக்குளித்துத் தன்னை மாய்த்துக் கொள்வதைக்கூட ஒரு போர்க்கருவியாய்ப் பயன்படுத்த முடியும் என்பதுதான் முத்துக்குமாரின் இறப்பு நமக்குச்சொல்கிற பாடம்.அவர் கூறியபடி நாம் நகலாயுதம் ஏந்த வேண்டும். உங்களின் கட்டுரையும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

  8. தமிழர்கள் தங்களின் எதிரி யார்? துரோகி யார்? என்று உடனடியாக அடையாளங்கண்டு அவர்களுக்கு எதிராக செயலாற்ற வேண்டிய காலம் இது… எனவே ஒவ்வொரு தமிழனும் செயலாற்றுவொம்!

  9. //ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை.//

    நன்று…சொன்னீர்.

  10. ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை.

    மிகச்சிறப்பான வார்த்தை

  11. முத்துகுமாரின் மரணத்தை அரசியல் ஆக்காதீர்கள் என்று கூறி, அரசியல் ஆக்குகிறார் இப்போதைய முதல்வர்.

    மறந்தும் கூட ஒரு அறிக்கை விடவில்லை முன்னாள் முதல்வர்.

    தமிழகத்தின் இப்போதைய அரசியல் நிலை இது தான். ஆனாலும் 4ஆம் தேதி நடைபெற்ற முழு அடைப்பு உணர்வு ரீதியாக வெற்றி பெற்றதை போல் வரும் நாடாளுமன்ற தேர்தலையும்
    ஒட்டு மொத்த தமிழகமும் புறக்கண்ணிக்க வேண்டும்.

    அதன் மூலம் தமிழனிடத்தில் இன உணர்வு மேலோங்கிவிட்டது என்ற உண்மையை தமிழக, இந்திய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளட்டும்.

  12. ///////////At 4:58 PM, NATPUTAN RAMESH said…
    முத்துக்குமாரின் மரணம் சொல்கிற சேதி ஒன்றே ஒன்றுதான் அது புலிகளை ஆதரியுங்கள். இது இலங்கையில் நிராகரிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் இங்குள்ள பிண அரசியலை என்னசொல்வது. இன்னும் பலரை (தற்)கொலைக்கு தூண்டும் வேலை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது தமிழக இளைஞர்கள் ஜாக்கிரதை

    At 12:11 PM, சந்திப்பு said…
    Thanks Ramesh////////////

    தோழர்களே!

    நான் மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் சிபிஎம் கும்பலின் வலைதளம் ( http://santhipu.blogspot.com/2009/01/blog-post_31.html ) ஒன்றிலிருந்து இங்கே பதிகிறேன்.

    நட்புடன் ரமேசு என்கிற பெயரில் “இளைஞர்கள் ஜாக்கிரதை…’ என்று எழுதியிருப்பவன் சிபிஎம் கட்சியின் dyfi என்கிற அமைப்பின் மாநிலத் தலைவன். இதுபற்றிய கருத்துக்களையும் தோழர்களைப் பதியக் கோருகிறேன்.

  13. மிகச் சரியான பதிவு,
    மாவீரன் முத்துக் குமாரனால் ஏற்றப்பட்ட ‘தீ’ அணையாமல் எரிய வேண்டும்,
    அந்தத் தீ நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓட்டு பொறுக்க வரும் பொறுக்கிகளுக்கு எதிராகத் கிளர்ந்து எழவேண்டும், ஓட்டுப் பொறுக்கிகளை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும், தமிழன் என்றுமே ஆண்டான் அடிமை என்கிற நிலைமை இனியாவது மாற வேண்டும், பிழைக்க வந்தவனெல்லாம் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்க இடமளித்துவிட்டு நாம் அவர்களிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் நிலை இனி அடியோடு மாறவேண்டும், இல்லை இல்லை நாம் மற்ற வேண்டும், வாருங்கள் தோழர்களே முத்துக்குமரன் ஏற்றிய தீயை கையில் ஏந்தி போராடுவோம்……….

    இப்படிக்கு
    கோகுலகிருட்டிணன்

Leave a Reply

%d bloggers like this: