பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

gun

மிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது.

அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களான விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டார்கள் என்கிற செய்தியை அவசர அவசரமாக குதூகலத்தோடு, விஷேசப் படங்கள் என்ற வாசகத்தோடு, மகிழ்ச்சியோடு வெளியிட்டு, ‘கல்லாக் கட்டி’ குழப்பம் ஏற்படுத்துகின்றன.

இதுபோல் ஈழ பிரச்சினையில் தொடர்ந்து ஒரு சார்பாக செய்திகள் வெளியிடுகிற ஊடகங்களின் சதி வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் அலுவலகத்தில் ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்று கேக் வெட்டி கொண்டாடினார்களாம். இந்த மனோபாவம் கொண்ட யோக்கியர்கள் வெளியிடுகிற செய்தியின் யோக்கியதை எப்படி இருக்கும்?

இதுதான் இவர்களின் நடுநிலை. நல்லதிற்கும் கெட்டதிற்கும் நடுவில் இருக்கும் இவர்களின் மோசமான நடுநிலை. ஈழப்பிரச்சினையில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் நடத்திய வன்முறை, சிங்கள ராணுவத்தின் வன்முறைக்கு இணையானது.

ஈழமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள் என்கிற உண்மையை உறுதியாக ஆணித்தரத்தோடு வெளியிடாத ஊடகங்கள், ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று உறுதி செய்யப்படாத செய்தியை உறுதியாக வெளியிடுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெளியிடுவதின் நோக்கம் என்ன?

பிரபாகரன் இருக்கிறரா? இல்லையா? என்ற விவாத்தை விடுங்கள்.

ஆனால் 25 ஆயிரம் மக்களுக்கு மேல் அங்கு பலத்தக் காயத்தோடு உயிருக்குப் போரடிய நிலையில் ஆதரவற்று இருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அகதிகளாக தமிழகத்துக்குப் படகில் வந்த பலர் உணவின்றி வரும் வழயிலேயே இறந்திருக்கிறாகள் என்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டு, ‘பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்று தொடர்ந்து வெளியிடுவதில் ஏன் ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

செய்திகளைத் தாண்டி, ‘ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்தது’ என்று  கருத்துச் சொல்லவேண்டிய கட்டாயம் ஊடகங்களுக்கு ஏன் நேர்கிறது?

இந்தக் கருத்துக்கும் ஊடகங்களுககும் நெருங்கியத் தொடர்பு இருப்பதால்தான் ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று உறுதி செய்யப்படாத செய்தியை, சிங்கள அரசின் சார்பாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

பெரும் திரளான மக்களைக் கொன்ற,  சிங்கள அரசின் கொலைகளை மறைந்து ‘பிரபாகரனை கொன்று விட்டது’ என்று கொலைகார சிங்கள அரசை, வீரனைப்போல் சித்திரிக்க வேண்டிய project ஊடகங்களுக்கு தரப்பட்டிருக்கிறது. மக்களின் கவனத்தை திசைமாற்றும் தங்களின் வழக்கமான ஆள்காட்டி வேலையை ஊடகங்கள் கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றன.

ச்ச்சீசீ… இந்த ஈனச் செயலைச் செய்யும், இவர்களை உலகின் மிக மோசமான கெட்ட வார்த்தையால் திட்டினாலும் தவறில்லை….

போங்கடா….ராஜபக்சே…

_____________________________________________________

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

_____________________________________________________

17 thoughts on “பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

 1. ச்ச்சீசீ… இந்த ஈனச் செயலைச் செய்யும், இவர்களை உலகின் மிக மோசமான கெட்ட வார்த்தையால் திட்டினாலும் தவறில்லை….

  ”போங்கடா….ராஜபக்சே…”/////////////

  அங்கு இருக்கும் மக்கள் பற்றி கவலை இல்லை….
  தலைவர் இறந்து விட்டார் என்ற பொய் கூறி 25 ஆயிரம் மக்கள் கொலை செய்யும் திட்டம் ராஜபக்சே இருக்கு என்பதை நம் மறக்க வேண்டாம்..

  எப்படியாவது அங்கு இருக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும்…

  பார்பனியம் வேலை எப்படி இருக்கு என்று ஒரு எடுத்து கட்டு இது…..

  போங்கடா காங்கிரஸ்…

 2. நான் இதற்கு பதில் எழுதும் போது சில தடங்கல்கள் எனது கணனியில் ஏற்பட்டதில் அவை
  அழிந்துவிட்டன. நான் அதை இந்த தளத்தில் http://nanilangaitamilan.blogspot.com இடுவேன். அப்போது உங்களுக்கும் பின்ஊட்டம் இடுகிறேன். உங்கள் ஆக்கம் சிறப்பாக அமைந்தது. மேலும் எழுதுக. நன்றி.

 3. ஈழப்பிணங்கள்
  சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

  ………………..

  இலங்கைஅரசின் இந்தப்பிரச்சாரம் எதற்காக? கடந்த மூன்று நாட்களுக்கு உள்ளே மட்டும் 25000ற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் பாசிச சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. இந்தியஊடகங்களும் அப்பனுக்கு தப்பாது தாளம் போடுகின்றன. கொல்லப்பட்ட 25000க்கும் அதிகமானமக்களைப்பற்றியோ இன்னும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல பத்தாயிரம் மக்களைபற்றி பேசாத ஊடகங்கள் பிரபாகரன் இறந்தாதாக கூறப்படுவதை இரண்டு நாட்களாக ஒளிபரப்புகின்றன.

  பாசிச சிங்கள வெறி அரசும் ஊடகங்களும் மக்களை திசைதிருப்புவதற்கான முயற்சி இது. கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பற்றிபேசாது வேறு ஒரு செய்தியை பேசவிடுவதன் மூலம் பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 25000க்குமேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தபிரச்சினை ஆரம்பிக்கும் போதே புலித்தலைவரின் மரணம் குறித்த செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டது.
  அப்படியே மக்களின் மரணம் கொல்லப்பட்டது. இனி மக்களின் உணர்வுகள் மக்களின் உணர்வுகள் மெல்லமெல்ல அடங்குது தேவைப்படுகின்றது. பிரபாகனின் இருப்பு குறித்த சந்தேகத்தினை கிளறுவதன் மூலம் தன்னுடைய படுகொலைகளுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் மூலதனத்திற்கும் பாசிசத்துக்கும் இல்லாது போகிறது.

  http://kalagam.wordpress.com/2009/05/20/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 4. ithilirunththu ulakil thamizan sellakkaasakka pala sathikal seernththuLLana ..
  enavee kiraamamaddaththilirunththu thamiz uNarvukaL vaLarththu inam kaappoom.

  from this event what you feel?
  They don’t like tamils becoming strong power in this world…
  World tamils needs unity and awareness to protect tamils..start from village..
  cinema and political diverted tamils from tamil unity..
  start think and do… take care about your enemy.. man on you..

 5. if u scold them “போங்கடா….ராஜபக்சே…” .. they may scold you “போங்கடா..ndtv,போங்கடா cnnibn,போங்கடா dinamalar”…

 6. இதுவரை எங்கும் இதுவரை நடந்திராத , நடக்க கூடாததுமான ஒரு பேரின படுகொலையை மறைக்க இப்படி ஒரு நாடகத்தை ராஜபக்செ செய்து இருக்கிறான் . போராளி அழிக்கப்படுவதில்லை,விதைக்கபடுகிறான்.

 7. //ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் அலுவலகத்தில் ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்ட்டார்’ என்று கேக் வெட்டி கொண்டாடினார்களாம்.//

  இது உண்மையா? அப்படி கூடவா அநாகரீகமாக இதயமற்றவர் போல செய்திருக்க முடியும்?

  சிங்கள வூடகங்கள் அப்படி செய்திருந்தால் அதைப் புரிந்து கொள்ளலாம்! ஆனால் இந்திய ஊடகங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

  எந்த ஊடகம் என்று தெளிவாக எழுத தயக்கம் ஏன்? சும்மா “யாரோ சொன்னார்கள் , கேட்டதாக நினைவு” என்பது போல “ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் அலுவலகத்தில்” என எழுத வேண்டியது ஏன்?

  சென்ற ஆண்டு அனுராதபுரத்தில் போராளிகள் சிங்கள விமான தளங்களையும், விமானங்களையும் தகர்த்த போது அதை NDTV ஒளிபரப்பிய தொனியில் கூட பெருமை இருந்தது.

  ” They are asking where are LTTE ? They reply ” HERE , WE ARE!” – என NDTV செய்தி வாசிப்பாளர் ஆங்கிலத்தில் முழங்கியது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது!

  கடந்த சில வருடங்களாகவே மலையாள தொலைக் காட்சி சேனல்கள் , ஈழப் போரை தெளிவாக கவர் செய்வதுடன் , தமிழர் தரப்பு நியாயத்தை தெளிவாக எடுத்து உரைக்கின்றன.

  தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைக் காட்சி சேனல்கள் அரசியல் கட்சிகளின் ஊது குழளாக இருப்பதோடு, பெரும் சத்தம் எழுப்புவதாகவே உள்ளது.

 8. உலகத்தை இராஜதந்திர ரீதியில் வெல்ல வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டு எமது மக்களின் வேதனைகளை துடைத்தெறிய வழி செய்வோம்.

 9. தோழர் மதி,
  ஊடகங்களின் வன்முறைப்போக்கினை மிகத்தெளிவாக தோலுரித்துள்ளீர்கள் மிக்க நன்றி. இந்த இந்த ஊடக வன்முறையாளர்களை இனம் கண்டு சான்றுகளுடன் அம்பலப்படுத்துவதை மாந்த உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்துச் செய்ய வேண்டும்.இந்த ஊடக வன்முறையாளர்ககள் தான் தொலைக்காட்சித்தொடர்கள், குத்தாட்டங்கள், மூடநம்பிக்கைத்தொடர்கள்,சோதிடம், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல வழிகளில் மக்களை போதையில் ஆழ்த்தி வருவாய் ஈட்டுகின்றனர். தொலைக்காட்சித்தொடர்கள் ஒரு வாரத்திற்கு இல்லையென்றால் இந்த மக்களில் பாதிப்பேர் பைத்தியமாகி விடுவார்கள் என்பதே உண்மை. மக்களின் போதை தெளிய, புதுப்பாதை மலர தங்களின் எழுத்துக்கள் பயன்படட்டும்.

  தோழமையுடன்,
  மா.தமிழ்ப்பரிதி
  http://www.thamizhagam.net/

 10. மதி,

  உங்களைப் போன்ற ஓரிரு தனியாரின் Blog குகளில் தான் உண்மையை எழுதுகிறார்கள். மற்றப்படி, ஒவொரு நாட்டின் தேசிய ஊடகங்களும் சிங்கள அரசின் பொய்ப்பிரச்சாரத்தை தான் கண்ணும் கருத்துமாக ஒப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் பற்றிய செய்திகளினால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களின் படுகொலைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இடைத்தங்கல் முகாம்களில் ஈழத்தமிழர்களின் அவலங்கள் தாங்கொணா கொடுமைகளாக எல்லை தாண்டிக்கொண்டிருக்க இவர்கள் அதையெல்லாம் மறைக்க, இலங்கை அரசுக்கு இனப்படுகொலைக்கு துணை போய்க்கொண்டிருக்கிறார்கள்.

  இதற்கெல்லாம் உடந்தையாக கையாலாகாத‌ ஐ.நா, மற்றும் சர்வதேசமும் துணைபோகிறதா என்று சந்தேகிக்க தோன்றுகிற்து? வெறும் அறிக்கைகளால் மட்டும் ஊடகங்களின் பக்கங்களை நிரப்புவதற்கு என்று ஓர் சர்வதேச அமைப்பு ஐ. நா. உண்மையில் இங்கு ஈழத்தமிழர்களுக்காக இரங்குகவதற்கு ஒன்றிரண்டு தனிமனிதர்களை தவிர வேறு யாருமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

 11. பிரபாகரனின் கொலை (?) செய்தியை, கேக் வெட்டிக் கொண்டாடிய ஆங்கில ஊடகம் எதுவென்று தெரியாமல் குழம்பிப் போனேன். அந்தக் குழப்பத்தை புறம்போக்கு நீக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றிகள் பல.

 12. my kind request to press, and reporter,if u want to earn money ,so many way pls do not give the flase news, ond day it will be effect u and ur press,do honestly if not better shut up

Leave a Reply

%d bloggers like this: