தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களிடம் தெளிவில்லை…

mns

மும்பையையும் இந்தியாவையும் சேர்த்து சூறையாடும்  மராட்டியர் அல்லாத டாடா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் நன்றியோடு வாலாட்டி விட்டு, பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பிகாரியை சுத்தி வளைத்து தாக்கும் ராஜ் தாக்கேரே என்ற சமூக விரோதியின் நவநிர்மான் அமைப்பின் ரவுடிகள்
—-

உழைக்கும் தமிழர்களுக்கே எதிரானதாக இருக்கிறது வரையறை அற்ற தமிழ்த் தேசியம்… பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் இதுவல்ல.

பகுதி மூன்று

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம்.

‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன செய்திகள் ஆழமாக கேட்பவரை போய் சேரும். இன்னும் அதிகமானவர்கள் கேட்க முடியும்’ என்று நண்பர்கள்  கேட்டுக்கொண்டதால், ஒலி வடிவப் பேட்டியை ஒவ்வொரு கேள்விகளாக வெளியிடுகிறோம்.

இந்தக் கேள்விகளை தனித்தனியாக சிறப்பான முறையில் தொகுத்து எடிட் செய்த நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி.

கேட்க விரும்பினால், கீழே உள்ள ஒலி சுட்டியை அழத்தவும்.

12.4.2009 அன்று எடுத்தப் பேட்டி.

-தொடரும்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

4 thoughts on “தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களிடம் தெளிவில்லை…

 1. மதிமாறன், ஈழச்சிக்கல் மூலமாக நான் தெரிந்து கொண்ட ஒன்று, யுரேகா என்று சொல்லுமளவுக்கு நான் உணர்ந்த ஒன்று, உலகில் எந்த ஒரு இசமும் இயங்கவில்லை. அனைத்தும் பொய், அனைத்தும் பலனற்றது. சிங்ளனிடம் புத்திசம் தோற்றது. ரஷ்யா, சீனா, கியூபா இங்கெல்லாம் கம்யூனிசம் தோற்றது. உங்களைப் போன்றவர்களிடம் பகுத்தறிவும் தோற்றது.

  எம்மின மக்களை அழிக்க, ஆயுதம் கொடுக்கிறான் இந்தியன். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரை இரண்டு மாதங்களில் கொன்ற சிங்களனுக்கு, ஐ. நா. அவையில் அங்கு படுகொலை நடக்கவில்லை, அதனால் குற்ற விசாரணை வேண்டாம் என்கிறான் இந்தியன். தமிழக மக்களை குசுவுக்கும் மதிக்காமல் நடத்துகிறான் இந்தியன். 15 பேரின் தீக்குளிப்பை அல்பமாகப் பார்க்கிறான் ‘உங்களின் இந்தியன்’. அடித்தால் தான் அடக்குமுறையா, தோழரே! பகுத்தறிவு இருந்தால் மட்டும் போதாது, சற்று நேர்மையும் வேண்டும். நேராக விவாதிக்க வருவீரா? உண்மையாகவே அழைக்கிறேன்.

  ஈழ உழைக்கும் மக்களைப்பற்றி சீனன் கவலை கொள்ளவில்லை. மண்ணுக்கொரு குணம் உண்டு. தமிழன் நல்லவன். ஆனால், நல்லவன் வாழ்வதில்லை. அதனால் தான், அந்தந்த ஊரின் உழைக்கும் மக்களோ, யாரோ அவரவர்கள் ஊரிலேயே போராடி வெல்லட்டும். கண்டவனை உள்ளே விட்டால், ஈழ மக்களின் கதி தான் தமிழகத் தமிழனுக்கும்.

  நான் குருகிய மனம் கொண்டவனல்ல. ஆனால், எனது பட்டறிவில் சொல்கிறேன், நவநிர்மான் சேனாவின் நிலைப்பாடு சரிதான். அவனவன் ஊரில் அவனவன் வாழ்க.

  பார்ப்பான் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் நுழையாமல் இருந்திருந்தால், இந்த மன் இந்த அளவுக்கு நாசமாயிருக்குமா? இப்போது தலையிலடித்துப் பயன் என்ன?

  ஒரு மத குருமார் இறந்தான். பஞ்சாபே கலவர பூமி. கொலைக்கு இந்தியா காரணமல்ல.

  ஒரு லட்சம் பேரை இந்தியாவே மறைமுகமாகக் கொன்றது. ஆனால், சலசப்பில்லை ஐயா. தமிழ் மக்கள் குழந்தைகள் போல. அவர்களைக் காக்க வேலி ஒன்று தேவை. அது தான் தமிழத்தேசியம்.

  இது பற்றிப் பல பதிவுகளை உங்கள் தளத்தில் பதித்துள்ளேன்.

  உலகின் எல்லா இசங்களும் தோற்று விட்டன. பெரியாரின் பகுத்தறிவு மட்டும் வாழ்கிறதா என்ன?

  நேர்மையுள்ள மனிதனுக்கு எந்த ஒரு இசமும் தேவையில்லை.

  அப்படியான மனிதர்கள் மிக, மிக சொற்பம்!

 2. தமிழ் தேசியவாதிகளை விமர்சிப்பதை விடுத்து தமிழ் தேசிய சிந்தனைக்கான காரணங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் பார்க்க மதிமாறன் தவறிவிட்டதாக தெரிகிறது. தாங்கள் பெரியார்வாதத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஈழத்தில் தனிநாடு கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது தமிழ்நாட்டில் இன்னும் ஏற்படவில்லை, மேலும் காஷ்மீர் போன்ற மாநிலங்களை போன்ற சூழ்நிலை இங்கே இல்லை, அவர்களே வலியை சகித்துக்கொண்டு இந்தியனாக வாழும் போது இந்த தமிழன் அடக்கிகொண்டு வாழ வேண்டியது தானே என்பது போல பேசியிருப்பதும், தமிழன் கண்ணட எதிர்ப்பு பேசுகிறான், மலையாள எதிர்ப்பு பேசுகிறான், உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறான், சாதி மதத்தை இன்னும் ஒழிக்கவில்லை என்ற பார்வைகளை கொண்டு தமிழ்தேசியம் கூடாது என்பது சகிக்கவில்லை. அரசியல், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதும் சட்ட ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டிருப்பதிலும் விடுபட தமிழ்தேசியம் வேண்டும் என்ற பெரியாரின் பார்வையை இருட்டடிப்பு செய்துவிட்டு ஏதேதோ பேசுகிறீர்கள். இதெல்லாம் எந்த வகை அடிமைத்தனம் என்பதுதான் எமக்கு புரியவில்லை தோழரே!

 3. தமிழ்த்தேசியத்திற்கான ஒரே தேவையைச் சொல்கிறேன்.

  பார்ப்பனீய தொடர்ந்த சதிகளால் தான் இந்தியா இன்னும் தனது அடிப்படை சிக்கல்களிலிருந்து மீளவில்லை.

  ஒன்றுபட்ட இந்தியா உள்ள வரை பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இயலாது.

  எனவே, சாதியம் ஒழிய, உண்மையான மனிதநேயம் மலர, அனைவருக்குமான தேசம் மலர, ஒரே அடிப்படைத் தேவை என்பது தமிழ்த்தேசியம் தான். (இந்தியா பிரிவதும் அடங்கும்).

  கம்யூனிச தத்துவத்தை சிதைத்து போதித்து அந்தக் கருத்தியலையே அழிக்கும் பார்ப்பானைப் போலவே செயல்படுகிறார், பெரியாரிசம் பேசும் மதிமாறன்.

  மார்க்ஸோ அல்லது பெரியாரோ முக்கியமல்ல. அந்த தத்துவங்களும் அவற்றிறகான காலம் சார்ந்த, சமூக பொறுத்தப்பாடுகளும் தான் முக்கியம்.

  இந்தியர்களால் நாம் கேவலமாக இழிவு படுத்தப்பட்டுள்ளோம்.

  நம்மைச் சுரண்டும் அவர்கள் நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

  மதியாதார் தலைவாசல் மிதியாதே! மிடுக்கென்று திரும்பி நட.

 4. Dr. V. Pandian , இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் “சந்தர்ப்பவாதக் குற்றங்களே” அவற்றை ஒரு புறம் தள்ளுங்கள், இலங்கையில் தமிழ்த்தேசியத்தின் தேவை இருப்பதாகவே கருதும் அத்தனை பேருக்கும் சேர்த்து, அதைப் பெற்றுக்கொள்ள உங்களைத் தடுப்பது எது? என்று கூறுவீர்களா?

Leave a Reply

%d bloggers like this: