சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

black board attack 003

சேதப்படுத்தப்பட்ட தகவல் பலகைக்கு முன் தோழர் கண்ணன்

4-10-2009 அன்று மும்பை தாராவியில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’ என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றிய என்னுடைய புத்தக அறிமுக விழாவும், டாக்டர் அம்பேத்கர் படத்துடன் உள்ள டி சர்ட்டும் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்வுகளாலும், எரிச்சலைடந்த இந்து மத ஜாதி வெறி கும்பல், தங்கள் ஆத்திரத்தை தங்கள் கையாலாகா தனத்தின் மூலம்  வெளிபடுத்தியிருக்கிறது.

மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த தோழர் கண்ணன், அங்குள்ள தகவல் பலகையில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’| என்ற புத்தகத்திலிருந்து,

‘அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

சரியாகவோதவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்காரர்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?

என்ற வரிகளை 10-10-2009 அன்று காலை எழுதியிருக்கிறார். இந்த வரிகளினால், ஆத்திரம் அடைந்த ஜாதிவெறி இந்து மதவாத கும்பல், அன்று இரவு பலகையை சேதப்படுத்தி, அதன் மேல் ‘கடவுள்’ என்று எழுதிவைத்திருக்கிறது.

தோழர் கண்ணன் தகவல் பலகையில் எழுதிய இந்த வரிகளில், கடவுள் குறித்தோ, இந்து மதம் குறித்தோ நேரடியாக எதுவும் இல்லை. ஆனாலும் ஏன் இந்து மதவாதிகள் கோபப்படுகிறார்கள்?

இந்து மதம் வேறு, ஜாதி வேறு அல்ல என்பதைத்தான் இவர்களின் கோபம் மீண்டும் நிரூபிக்கிறது.

black board attack 004

பெயரும் ஊரும் சொல்லாத, ஒரு குரல் தோழர் கண்ணனின் செல்லுக்கு தொடர்பு கொண்டு, “இனிமேல் இதுபோல் எழுதினால், உன் கையை வெட்டுவேன்” என்று மிரட்டி இருக்கிறது.

பதிலுக்கு தோழர் கண்ணன், “என் கை இருப்பதே இதுபோல் எழுதுவதற்குத்தான்” என்று பதில் அளித்திருக்கிறார். மீண்டும் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துவிட்டு துண்டாகியிருக்கிறது அந்தக் குரல்.

அம்பேத்கர் என்கிற சொல், நேரடியான இந்து மதவெறியர்களுக்கும், ஜாதிய உணர்வாளர்களுக்கும் மட்டுமல்ல, வேறு மதங்களில் இருக்கிற தலித் விரோத எண்ணம் உடையவர்களையும், தங்களை ‘முற்போக்காளராக’ காட்டிக் கொள்கிற, பல பேரின் ஜாதி உணர்வையும், அவர்களின் தலித் விரோதப்  போக்கையும் அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் பற்றிய நூலை எழுதியதாலும், டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்டை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டுவந்ததாலும் நான் பல ‘முற்போக்காளர்களால்’ கடுமையாக தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறேன். புறக்கணிக்கப்படுகிறேன். அல்லது அவர்களின் ஜாதி உணர்வை தலித் விரோதப் போக்கை உணர்ந்துகொள்கிறேன்.

புத்துக்குள்ளாற புகையை வைச்சி ஊதுனா, உள்ள இருக்கிற விஷ பாம்பு வெளிய வரமாதிரி, டாக்டர் அம்பேத்கர் நிலையில் இருந்து ஜாதியை அனுகினால், முற்போக்காளர்களிடம் இருந்தும் ஜாதிவெறி படம் எடுத்து ஆடுகிறது.

இதுபோன்ற வன்முறைகளும், கொலை மிரட்டல்களும் ஜாதிவெறிக்கு எதிராக தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்வதும், போராடுவதும்தான் நமது முதன்மையான கடமை என்பதையே நமக்கு மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது.

அண்ணலின் வழியில் தொடர்ந்து போராடுவோம். சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலப்படுத்துவோம்.

96 thoughts on “சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

  1. //பதிலுக்கு தோழர் கண்ணன், “என் கை இருப்பதே இதுபோல் எழுதுவதற்குத்தான்”“ என்று பதில் அளித்திருக்கிறார்.// – சரியான பதில்.

  2. எதிர்க் கருத்துக்களை வன்முறை மூலமோ, வசவுகள் மூலமோ, உணர்வுகளைத் காயப்படுத்தும் சொற்கள் மூலமோ சந்திப்பது இயலாமை மற்றும் கோழைத்தனம். அறிவுப்பூர்வமான விவாதங்களை முன் வைப்பது உயர்வு.

    கண்ணனை அச்சுறுத்தியவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

    http://kgjawarlal.wordpress.com

  3. பார்ப்பன கும்பலின் கைகளை அல்ல‌ குடலை உருவி எடுக்க வேண்டும்.
    துணிவுடன் போராடும் தோழர் கண்ண‌னுக்கு வாழ்த்து.

  4. I’m not well versed in all these casteism. But a general doubt. You have said that, “தோழர் கண்ணன் தகவல் பலகையில் எழுதிய இந்த வரிகளில், கடவுள் குறித்தோ, **இந்து மதம்** குறித்தோ நேரடியாக எதுவும் இல்லை.” But as per the words on the board, “அம்பேத்கரை புறக்கணிக்கிற, *பார்ப்பனரில்* இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை”. Isn’t Brahminism (paarpanar) part of **Hindu** society?

    Also, “தோழர் கண்ணன் தகவல் பலகையில் எழுதிய இந்த வரிகளில், கடவுள் குறித்தோ, இந்து மதம் குறித்தோ நேரடியாக எதுவும் இல்லை. ஆனாலும் ஏன் **இந்து மதவாதிகள்** கோபப்படுகிறார்கள்?”. Does ‘God’ only related to Hindu activists?? Doesn’t other religion have any ‘God’??

  5. பார்பன கும்பலுக்கு குறுக்கு வழிதான் தெரியும் எதையும் நேரடியாக எதிர்க்க திராணி கிடையாது. மேற்கு மாம்பலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் , நண்பர் ஒருவர் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார் ,அந்த வீட்டின் மீது சில வழக்குகள் உள்ளது ,ஆனால் அந்த வீட்டை வாடகைக்கு விட இயலும். நண்பர் அந்த வீட்டில் குடி போக சென்றுள்ளார், அந்த குடியிருப்பு சங்கத்தை சேர்தவர்கள் இவரிடம் சண்டைக்கு வந்துவிட்டனர் ,ஒரு கேள்வியும் கேட்டுள்ளனர் நண்பரிடம் “Which social animal you are?” , பார்ப்பான சவுக்கால அடிச்சாலும் திருந்த மாட்டான் என்பதற்கு இதுவே உதாரணம்.

  6. “அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை….”

    ஐயோ…ஐயோ…இதில் யார் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள் என்பது தோழர் கண்ணன் எழுதியதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
    இதே கருத்தை…

    “சட்ட மாமேதையான அம்பேத்கார் எழுதிய சட்டத்தைப் படித்து மேதைகளாகி, அம்பேத்காரையே புறக்கணிப்பது என்பது மிகவும் மோசமான செய்ல்”

    இப்படி எழுதி இருக்கலாம். ஆனால் தோழர் எழுத்தில் கருத்தை விட, சாதியே மேலோங்கி இருப்பதால் வந்த வினை. தகவல் பலகையை நாசப்படுத்தியது பெரிய தவறில்லை. அழித்திருக்கலாம். தோழருக்கு மிரட்டல் விடுத்தது பெரிய தவறு.

    தலித் இலக்கியங்களை தலித் தான் எழுத வேண்டும் என்று ஒரு எழுத்தாளர்கள் கும்பல் சொல்லி கொண்டிருக்கதே…உண்மைங்களா?

  7. துணிவுடன் போராடும் தோழர் கண்ண‌னுக்கு வாழ்த்து.

  8. /சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலப்படுத்துவோம்.//

    முண்டம் மதிமாறன்,

    தமிழ் நாட்டில் உள்ள ஜாதி வெறியர்கள் அனைவரும் தி க,தி மு க,பா ம க,பெ தி க,ம க்இ க போன்ற கழகப் பொந்துகளில் ஐக்கியமாகி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றனர்.முதலில் இந்த கழகப் பொந்துகளை களையுங்கள்.

  9. Saathi veri piditha manithargal oliga

    துணிவுடன் போராடும் தோழர் கண்ண‌னுக்கு வாழ்த்து.

  10. முதலில் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்தியவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..

    “தொலைபேசியில் மிரட்டுவது, காவல் துறையில் அவரை தெரியும் இவரை தெரியும்னு சொல்லுவது, என்னை ஒன்னும் பண்ணமுடியாது நாங்கலாம்”

    இந்த மாதிரி எல்லாம் பேசுவது பார்ப்பான் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் செயலே..தனக்கு சாதகமாக அனைவரையும் பேச வைப்பது (ஏனா இவாள்கள் தானே படிச்சவங்க, அறிவாளிங்க ஆச்சே *சமுதாயத்திற்கு பயன்படாத அறிவு என்ன அறிவோ* )

    இதெல்லாம் இன்னக்கி நேத்து இல்ல ஆயிரம் வருசமா எந்த வேலையும் பாக்காம வயிறுவளர்த்த திமுரு பேசவைக்குது..

    இந்த கும்பலுக்கு நாம் கொடுக்கும் பதில் இதுவே

    // தோழர் கண்ணன், “என் கை இருப்பதே இதுபோல் எழுதுவதற்குத்தான்” என்று பதில் அளித்திருக்கிறார்.//

    வாழ்த்துகள் தோழரே

    நம்மளையே ஒருவருக்கொருவர் மோதவிட்டு இந்த திருட்டுக்கும்பல் தொடர்ந்து தப்புச்சுக்கிட்டே வருது..எந்த ஒரு காலகட்டத்திலும் தன்னை பச்சோந்தி போல மாத்தி மாத்தி இந்த திராவிட சமுதாயத்தையே அழித்த (அழித்துக்கொண்டிருக்கும்) நச்சுக்கிருமியே பார்ப்பான்..

    ” பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே ” என்று சொன்னது பாரதியே. நீங்க கோவப்பட வேண்டியது பாரதியார்கிட்ட சரியா ..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன் )

  11. இங்கெ கபிலன் என்பவர் எழுதியுள்ள கருத்துக்கள் சரியானவை.

    //“அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை….”

    ஐயோ…ஐயோ…இதில் யார் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள் என்பது தோழர் கண்ணன் எழுதியதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
    இதே கருத்தை…

    “சட்ட மாமேதையான அம்பேத்கார் எழுதிய சட்டத்தைப் படித்து மேதைகளாகி, அம்பேத்காரையே புறக்கணிப்பது என்பது மிகவும் மோசமான செய்ல்”

    இப்படி எழுதி இருக்கலாம். ஆனால் தோழர் எழுத்தில் கருத்தை விட, சாதியே மேலோங்கி இருப்பதால் வந்த வினை. தகவல் பலகையை நாசப்படுத்தியது பெரிய தவறில்லை. அழித்திருக்கலாம். தோழருக்கு மிரட்டல் விடுத்தது பெரிய தவறு.//

    DR. அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    அப்படிப்பட்ட அறிங்கர் அம்பேத்கர், இன்றைக்கு தமிழ் நாட்டில் சாதி வெறியர்கள் கையில் சிக்கிய பதுமை ஆகி விட்டார்.

    அந்த சாதி வெறி சண்டையால் DR. அம்பேத்கர் இங்கெ அவமானப் படுத்தப் படுவது போதாது என்று “அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை….” எழுதி வைத்ததன் மூலம், தமிழ் நாட்டில் உள்ள சாதி சண்டையை
    DR. அம்பேத்கர் பிறந்த மண்ணுக்கும் கொண்டு போகிறார்கள்!

    இவர்களின் சாதி சண்டையால் ஒரு பிரிவினர் அம்பேத்கர் அவர்களின் சிலையை அவமானப் படுத்துவதும், அதற்குப் பதிலாக இன்னொரு பிரிவினர் இன்னொரு தலைவரின் சிலையை அவமானப் படுத்துவதுமாக,
    உலகின் மிக ஆழமான அரசியல் சட்டத்தை வகுத்த மேதை அம்பேத்கரை தமிழ் நாட்டிலே, ஒரு சாதி சங்க தலைவரைப் போல ஆக்கி விட்டனர்.

    இதே பாணியை இப்போது அவர் பிறந்த மண்ணுக்கும் ஏற்றுமதி செய்வதாகவே முடியக் கூடும்.

    சாதி வேறுபாடு பார்க்கவில்லை. பார்க்க விருப்பமில்லை என்றால் கூட, இல்லை நீ உன் சாதியை வைத்துக் கொண்டே ஆக ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது போல உள்ளது இந்த “புதிய சீர்திருத்தவாதி”களின் வழி.

    மதிமாறன் போன்றவர்கள் , சமூக நல்லிணக்கத்துக்கும், சமத்துவ சமூகம் அமையும் வண்ணமும் தங்கள் பாணியை மாற்றினால், அதனால் எல்லோருக்கும் நல்லது.

    தலித்துகள் பொது மக்களுடன் கலப்பது, ஒரே இனமாக ஒன்று படுவது நாட்டின் அவசியம். அது தலித்துகளுக்கும் மிக அவசியம்.

    போராடுவது ஒன்று படுவதற்க்குத்தான், பிரிந்தே இருப்பதற்கு அல்ல.

  12. இந்து மதவெறியர்கள், ஜாதிய உணர்வாளர்கள் கும்பலுக்கு குறுக்கு வழிதான் தெரியும் எதையும் நேரடியாக எதிர்க்க திராணி கிடையாது……….

    தலித்துகள் பொது மக்களுடன் கலப்பது, ஒரே இனமாக ஒன்று படுவது நாட்டின் அவசியம். அது தலித்துகளுக்கும் மிக அவசியம்.

    போராடுவது ஒன்றுபடுவதற்க்குத்தான், பிரிந்தே இருப்பதற்கு அல்ல.

    சட்ட மாமேதையான அம்பேத்கார் எழுதிய சட்டத்தைப் படித்து மேதைகளாகி, அம்பேத்காரையே புறக்கணிப்பது என்பது மிகவும் மோசமான செய்ல்”

  13. இந்து மதவெறியர்கள், ஜாதிய உணர்வாளர்கள் கும்பலுக்கு குறுக்கு வழிதான் தெரியும் எதையும் நேரடியாக எதிர்க்க திராணி கிடையாது……….

    தலித்துகள் பொது மக்களுடன் கலப்பது, ஒரே இனமாக ஒன்று படுவது நாட்டின் அவசியம். அது தலித்துகளுக்கும் மிக அவசியம்.

    போராடுவது ஒன்றுபடுவதற்க்குத்தான், பிரிந்தே இருப்பதற்கு அல்ல.

    சட்ட மாமேதையான அம்பேத்கார் எழுதிய சட்டத்தைப் படித்து மேதைகளாகி, அம்பேத்காரையே புறக்கணிப்பது என்பது மிகவும் மோசமான செய்ல்”

    Nellai srithar
    mumbai

  14. அட பயந்தாங்கொல்லி வேடம் பாப்பான் கூட பிறந்ததுதான் தோழர்களே இதற்கெல்லாமா நாம் அடங்குவோம்.

    தோழர்.கண்ணன் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள் அதுகள் நாகரீகமற்ற நாய்கள்(நாய்கள் கோபிக்கக்கூடாது) ஆதனால் நேரடியாக மோதமாட்டான்கள்.

    தோழர்.மதிமாறன் எனக்கு சில சட்டைகளை எடுத்துவையுங்கள் நான் ஊர் வந்து பெற்றுக்கொள்கிறேன்.துபாயில் நிறைய பேருக்கு கொடுக்கனும்.

  15. மேலும் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அபுதாபி அம்பேத்கர் சர்வதேச (பஞ்சாப் தலித்கள்)அமைப்பின் அழைப்பை ஏற்று வருகிற 16ந்தேதி நடக்கவிருக்கும் நிகழ்வில் பெரியார் குறித்து பேசப்போகிறோம். அறிக..

    சுத்துப்பட்டுல இருக்குற நம்ம சனங்கெல்லாம் வந்துடுப்பா…

  16. kavimathi sir,
    //அட பயந்தாங்கொல்லி வேடம் பாப்பான் கூட பிறந்ததுதான் தோழர்களே இதற்கெல்லாமா நாம் அடங்குவோம்.

    தோழர்.கண்ணன் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள் அதுகள் நாகரீகமற்ற நாய்கள்(நாய்கள் கோபிக்கக்கூடாது) ஆதனால் நேரடியாக மோதமாட்டான்கள்.//

    bramanargalai oda oda viratti kudimigalai aruththavargal nagareegamanavargala?

  17. அருமையான வாசகம் எங்கள் பகுதியிலும் இதே வாசகத்தை எழுத வேண்டும் என்று விரும்புகிறோம். ஆதிக்க சாதிவெறியர்கள் இதை படித்தாலாவது அண்ணலை பற்றிய கருத்து அவர்களின் அறிவில் அடிக்கட்டும்.

    இதை படித்ததும், அட பாவிங்களா! திருந்த மாட்டீங்களா என்று எண்ணத்தோன்றுகிறது. சாதி இந்துக்களை பார்த்து மட்டுமல்ல. திருச்சிக்காரன் போன்ற குடுகுடுப்புகாரர்களையும் பார்த்து.

    //DR. அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.//

    இதை எத்தைனையோ முறை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

    அந்த சினிமாக்காரங்க தான் அப்படின்னா நீங்களுமா? உங்கள் பற்றிய புகழ் பாட கேட்க படிக்க ஆசையா? நீங்களே ரெக்கார்டு செய்து, நீங்களே டைப் செய்து பார்த்து கேட்டு நீங்களே மகிழுங்கள் திருச்சிக்காரரே! எங்களை விட்டுவிடவும்!

    அண்ணல் அம்பேத்கரை ஆஹா ஓஹோ என்று புகழ்வது போல் பின்னாடியே இந்துத்துவத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிப்பது தான் நம்ம திருச்சிகாரருடைய வேலையே.

    திருச்சிக்காரரே, இவ்வாறான சாதிய செயல்களை செய்தவனிடத்தில் உபதேசிக்கப்பதை விடுத்து இனிமேலும் நம்மிடையே உபதேசித்து நீங்கள் போலியான அம்பேத்கரிய பிரியர் என்று நிரூபிக்க வேண்டாம்.

  18. ஜாதியின் அடிப்படையில் எழுதவேண்டாம் , இந்தியன் என்ற உணர்வோடு தொடர்ந்து எழுதவும்..வாழ்த்துக்கள் .

  19. திரு. வேந்தன் அவர்களே,

    //DR. அம்பேத்கர் என்றவுடன் நினைவு வருவது ஒரு நண்பரின் மாணவப் பருவம்தான்!
    சென்னை கன்னிமரா நூலகத்தில்,அவர் சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவாராம். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வாராம்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.//

    ok, atleaset now? இதை நான் என் சுய புராணம் பாட எழுதவில்லை. நான் என் பெயரை உயர்த்த இங்கெ வரவில்லை.

    //அண்ணல் அம்பேத்கரை ஆஹா ஓஹோ என்று புகழ்வது போல் பின்னாடியே இந்துத்துவத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிப்பது தான் //

    நாம் முன்பே கூறியது போல நம்முடைய சிந்தனை எல்லைகள அற்றது. இந்த மதத்தில் மட்டும் அல்ல, கிருஸ்துவ , இசுலாமிய மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை மக்களுக்கும் சமூகத்துக்கும் உதவக் கூடிய கருத்துக்களை எடுத்துக் காட்டுவோம், அதே நேரம் அந்த மதங்களில் (இந்து மதம் உட்பட) உள்ள கருத்துக்கள் தவறாகப் போதிக்கப் பட்டாலோ அந்தக் கருத்துக்கள் தவறாகவே இருந்தாலோ அதையும் எடுத்துக் காட்டுவோம்!

    //திருச்சிக்காரரே, இவ்வாறான சாதிய செயல்களை செய்தவனிடத்தில் உபதேசிக்கப்பதை விடுத்து //

    சாதியக் கருத்துக்களைப் பரப்புபவர்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் அதை சுட்டிக் காட்டி விளக்க வேண்டியது அவசியம்.

    //நீங்கள் போலியான அம்பேத்கரிய பிரியர் என்று நிரூபிக்க வேண்டாம்//

    முன்பு நமது தமிழனத் தலைவர், அவரை பாராட்டுபவர்களுக்கு எல்லாம் தமிழர் சான்றிதலும், விமரிசப்பவர்களுக்கு எல்லாம், துரோகி சான்றிதலும் வழங்கியது நினைவுக்கு வருகிறது.

    இப்போது திடீரென நண்பர் வேந்தன் நமக்கு போலி சான்றிதழ் வழங்குவதைப் பார்த்தால், இனி அம்பேத்கர் பற்றி எழுதவே அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று யாரும் தவறாக என்ன வேண்டாம்.

  20. @@@@ திருச்சிக் காரன்
    \\\\தலித்துகள் பொது மக்களுடன் கலப்பது, ஒரே இனமாக ஒன்று படுவது நாட்டின் அவசியம். அது தலித்துகளுக்கும் மிக அவசியம்\\\\\\\

    பொதுமக்கள் என்று யாரை சொல்கிறீர்கள் திருச்சிக் காரான்…. பொது மக்கள் வேறு…. தலித்துக்கள் வேறு என்று பிரித்து வைத்துள்ள உங்களை போன்றவர்களின் சாதிய மனோபாவங்களே… ஆதி மக்கள் இன்னும் அடிமையாய் வாழ்வதற்கு வகை செய்கின்றது….
    இங்கே மதிமாறன் அவர்களின் ஒருவரியை நினைவு படுத்துவது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்… “சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்”””
    உங்கள் வார்த்தை உம்மை அம்பலபடுதுகிறது….

  21. WHY WE DO NOT GIVE MUCH IMPORTANCE TO AYOTHITHASA PANDITHAR AND RETTAMALAI SEENIVASAN WHO ARE TAMIL DALITS THAN NORTH INDIAN DALIT LEADERS? PARTICULARLY, NORTH INDIAN NON-TAMIL MAYAVATHI CAN OPEN BRANCH IN CHENNAI , BUT, THIRUMA OR KRISHNASAMY CAN NOT OPEN THEIR BRANCH IN NORTH INDIA. NORTH INDIANS DO NOT ACCECPT TAMILS EITHER SC OR B.C. THAT IS THE REASON FOR NON TAMIL PRIME MINISTERS IN INDIA…..

  22. தமிழ் மொழி வாழ்த்து
    by தமிழ் – Tamil (videos)
    2:54
    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழிய வே!

    வான மளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழிய வே!

    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசைகொண்டு வாழிய வே!

    எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
    என்றென்றும் வாழிய வே!

    சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
    துலங்குக வையக மே!

    தொல்லை வினை தரு தொல்லை யகன்று
    சுடர்க தமிழ்!

    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ்மொழி யே!

    வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழிய வே!

  23. திருசிகாரரே,
    ஆஊனா உடனே எல்லோரையும் கேள்வி கேட்போம் அப்படிங்கறது , எங்க கேள்வி ,நீங்க என்ன கேள்வி கேடீர்கள் பார்பன துரோகிகளை, இந்து மதவெறியர்களை , பொய் புராணங்களை ?
    //சாதியக் கருத்துக்களைப் பரப்புபவர்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் அதை சுட்டிக் காட்டி விளக்க வேண்டியது அவசியம்//

    யாரு சாதிய கருத்துக்கள பரபுனது ? தப்பு செஞ்சவன கண்டிக்க வக்கில்லை .. சாதியை எதிபவர்களை நேக்காக ‘எந்த பிரிவினராக இருந்தாலும்…. ‘ அப்படிங்கறது ..

    சாதி ஒழிப்பை பற்றி பேசும் முன் உங்கள் சாதி அடையாளமான பூணூலை அறுத்து எரிந்து விட்டு வாருங்கள்.

  24. முரண்பாடுகள் முட்டி மோதி தேவையானது வெளிவரும்வரை….இந்த கலகங்கள் தொடரட்டும்…..

    தமிழர்கள் மத்தியில் இருக்கும் சாதிய முரண்பாடுகள் முட்டி மோதி சுயஆய்வை நோக்கி நகரட்டும்…..

    தமக்குள் இருக்கும் சாதிய உணர்வு இழிவு என்பதை உணரும் வரை இந்த முரண்பாடுகள் கூர்மையடையட்டும்….

    அடிமைத்தளைகள் உடையட்டும்….

    இந்த முரண்பாடுகள் வலுக்க வலுக்க இழப்புகள் நிச்சயம் உண்டு….ஆனால், இழப்புகள்தான் அடுத்த கட்டத்துக்கு நம்மை செம்மை படுத்தும்…

    சாதியை ஒழிக்க எதையும் இழப்போம்,,,,,இழக்க துணிவோம்…..

    தமிழர் என்ற அடையாளப்படுத்துதலுக்கு தேவையான முன்நிபந்தனை சாதி ஒழிப்புதான், அதை நேர்மையாக முன்னெடுப்போம்

  25. முரண்பாடுகள் முட்டி மோதி தேவையானது வெளிவரும்வரை….இந்த கலகங்கள் தொடரட்டும்…..

    தமிழர்கள் மத்தியில் இருக்கும் சாதிய முரண்பாடுகள் முட்டி மோதி சுயஆய்வை நோக்கி நகரட்டும்…..

    தமிழர்கள் தமக்குள் இருக்கும் சாதிய உணர்வு இழிவு/கேவலம்/அவலம் என்பதை உணரும் வரை இந்த முரண்பாடுகள் கூர்மையடையட்டும்….

    அடிமைத்தளைகள் உடையட்டும்….

    இந்த முரண்பாடுகள் வலுக்க வலுக்க இழப்புகள் நிச்சயம் உண்டு….ஆனால், இழப்புகள்தான் அடுத்த கட்டத்துக்கு நம்மை செம்மை படுத்தும்…

    சாதியை ஒழிக்க எதையும் இழப்போம்,,,,,இழக்க துணிவோம்…..

    தமிழர் என்ற அடையாளப்படுத்துதலுக்கு தேவையான முன்நிபந்தனை சாதி ஒழிப்புதான், அதை நேர்மையாக முன்னெடுப்போம்

  26. ஐயா Matt,

    “ஆஊனா உடனே எல்லோரையும் கேள்வி கேட்போம் அப்படிங்கறது , எங்க கேள்வி ,நீங்க என்ன கேள்வி கேடீர்கள் பார்பன துரோகிகளை, இந்து மதவெறியர்களை, பொய் புராணங்களை ?”

    எந்த சாதிக்காரனா இருக்கட்டும், பார்ப்பனன், கள்ளர், பரையர்,முதலி, வன்னியர், தேவர், சக்கிளி என எவர் தவறு செய்தாலும் கேள்வி கேட்கிறோம். ஏதோ ஒரு இடத்தில் சாதிக் கொடுமை நடந்தால், அதை சாதி சமயம் பாராமல், எல்லோரும் எதிர்க்கிறார்களே? பெரியாரிஸ்ட் மட்டும் தான் எதிர்க்கிறாங்களா?

    அப்பாவி தலித்துகளை, அதிகார வர்கத்தில் உள்ள தலித்துகள் ஏமாற்றி வருவதை இப்பொழுது அனைவரும் உணர்ந்து கொள்ளத் துவங்கிவிட்டனர். இதே நிலையில் இதற்கு முன்பு பிற்படுத்தப்பட்டவர்களும், மி.பிற்படுத்தப்பட்டவர்களும் இருந்தார்கள். முறையே அந்த சங்கம், இந்த சங்கம் என சம்பாதித்துக் கொண்டிருந்தனர். காலத்தின் போக்கால், அவையை அச்சமூகத்தை சேர்ந்தவர்களே தூக்கி எறிந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

    சாதி அழிந்தால் தம் பிழைப்பு போய்விடுமே என்ற பயத்தில், அப்பாவி மக்களுக்கு நஞ்சு புகட்டுகிறீர்கள் !

    புராணங்கள் எங்கள் நம்பிக்கை. அதை நம்பாத உங்களைபற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இந்து சமயத்தைப் பின்பற்றுவதே, உங்களுக்கு எல்லாம் மத வெறியாகத் தோன்றும் போல….

    “சாதி ஒழிப்பை பற்றி பேசும் முன் உங்கள் சாதி அடையாளமான பூணூலை அறுத்து எரிந்து விட்டு வாருங்கள்.”

    சரி. விபூதி, நாமம் போட்டுக்கலாமாங்க…..இல்லை அதுவும் போடக் கூடாதா ?

    அப்புறம் இதுக்கு பதிலே சொல்லலிங்களே…

    “அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை….”

    ஐயோ…ஐயோ…இதில் யார் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள் என்பது தோழர் கண்ணன் எழுதியதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

  27. தோழர் கண்ணனின் கைப்பேசி எண்:09892403408

    தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கவும்

  28. சத்தமாக பேசினால் பொய்யை உண்மை ஆகிவிடும் என்று சிலர் சத்தமாக பேசுவர். அதுபோல் வலையில் நிறைய பெரிதாக எழுதினால் உண்மையாகிடும் என்று இவர்கள் நம்புகிறார்கள் போலும் .

    இந்து மதத்தை பற்றி உங்களுக்கு விளக்கவேண்டும் என்றால் அராம்பதில் இருந்து வரவேண்டும் ,அப்படி எடுத்து சொன்னாலும் நீங்கள் எல்லாம் திருந்த போவது இல்லை.
    தூங்குறவன எழுபுலாம் தூங்குற மாதிரி நடிகிரவன…

  29. எங்களைத் திருத்தும் கஷ்டமான வேலை உங்களுக்கு வேண்டாம் ஐயா…
    அப்பாவி தலித்துகளை ஏமாற்றி,அதிகார வர்கத்திடம் பணம் பறிக்கும் வழியை தொடர்ந்து செய்யுங்கள்!

  30. “சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதி ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்” – நாம் இவர்களை அம்பலப்படுத்த தேவை இருக்காது போல ! தானக அம்பலபடுகிறார்கள் ! முதலில் நம் வேலையை எளிதாக்கிய கபிலன் அய்யாவிற்கு நன்றி சொல்வோம் !

    (“தலித் இலக்கியங்களை தலித் தான் எழுத வேண்டும் என்று ஒரு எழுத்தாளர்கள் கும்பல் சொல்லி கொண்டிருக்கதே…உண்மைங்களா?” )
    இவரு சும்மா தெரிஞ்சிகத்தான் இப்படி கேட்டாரு,வேறு எந்த நோக்கமும் இவருக்கு இல்ல ! ரொம்ப நல்லவரு! எல்லோரும் நம்புங்க ப்ளீஸ் !

  31. ஹாஹா….தங்களுடைய பகடைக் காயாக, அப்பாவித் தோழர் கண்ணனை மாட்டி விட்டிருக்கிறீர்கள். அனைவருக்கும் தங்கள் எண்ணங்கள் புரிய ஆரம்பித்துவிட்டன ஐயா.

    அனைவரும் ஒன்று தான். சமுதாயத்தில் நலிந்த ஏழை எளிய மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டும் என்று தான் குரல் கொடுக்கிறோம். அப்பாவி தலித் சமுதாயத்தினரை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தும் கூட்டம் விரைவில் அம்பலமாகுமோ என்ற பயத்தில் தாங்கள் இருப்பது தெரிகிறது.

  32. த‌மிழ‌ர்க‌ளின் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம் அவ‌ர்களிடையே உள்ள ஒற்றுமையின்மை.

    இதில் ம‌ல‌யாளிக‌ளை பார‌ட்ட‌லாம். அவ‌ர்க‌ள் எந்த‌ சாதியாக‌ இருந்தாலும், எந்த‌ ம‌த‌மாக‌ இருந்தாலும், ஒரு ம‌லையாளி இன்னொரு ம‌ல‌யாளியை விட்டுக் கொடுக்க‌ மாட்டான்.

    தொழில் முய‌ர்ச்சி, உற‌வு இதில் எல்லாம் ம‌ல‌யாளிக‌ள் ம‌த‌, சாதி வித்யாச‌ம் பார்க்காம‌ல் இணைவார்க‌ள்.

    ஓரு பியூன் ம‌ல‌யால‌த்தில் பேசினால், பொது மேளாள‌ரும் ம‌ல‌யாள‌த்தில் ப‌தில் சொல்வார்க‌ள்.

    ஆனால் த‌மிழ‌ரோ, ச‌க‌ த‌மிழ‌ரை ம‌திப்ப‌து இல்லை. த‌மிழில் பேசினாலும் ஆங்கில‌த்திலே ப‌தில் அளிப்பார்க‌ள்.

    இந்தியாவிலே சாதிப் பிரிவினை எல்லா இட‌ங்க‌லிளும் உள்ளது. ஆனால் ஆச்ச‌ரிய‌ப் ப‌டும் வ‌கையிலே சாதிப் பிரிவினைக‌ள் குறைந்து வ‌ருகிற‌து. குறிப்பாக‌ சாதிக‌ளுக்கிடையெ சுமூக‌ நிலைக்கான‌ முன்னேற்ற‌ம் உள்ளது.

    ஆனால் த‌மிழ் நாட்டிலே சாதிக‌ளுக்கிடையேயான‌ காழ்ப்புண‌ர்ச்சி அதிக‌ரித்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌து.

    க‌டும் உழைப்பும், வேலைத் திற‌னும் இருந்தாலும் த‌மிழ‌ர் இடையே ஒற்றுமை இல்லாத‌தால் பின்ன‌டைவு உண்டாகிற‌து.

  33. ச‌கோத‌ர‌ர் ம‌கிழ‌ன் அவ‌ர்க‌ளே,

    //முரண்பாடுகள் முட்டி மோதி தேவையானது வெளிவரும்வரை….இந்த கலகங்கள் தொடரட்டும்…..

    தமிழர்கள் மத்தியில் இருக்கும் சாதிய முரண்பாடுகள் முட்டி மோதி சுயஆய்வை நோக்கி நகரட்டும்…..

    தமிழர்கள் தமக்குள் இருக்கும் சாதிய உணர்வு இழிவு/கேவலம்/அவலம் என்பதை உணரும் வரை இந்த முரண்பாடுகள் கூர்மையடையட்டும்….

    அடிமைத்தளைகள் உடையட்டும்….

    இந்த முரண்பாடுகள் வலுக்க வலுக்க இழப்புகள் நிச்சயம் உண்டு….ஆனால், இழப்புகள்தான் அடுத்த கட்டத்துக்கு நம்மை செம்மை படுத்தும்…

    சாதியை ஒழிக்க எதையும் இழப்போம்,,,,,இழக்க துணிவோம்…..//

    சாதிய‌ அடிப்ப‌டையிலோ, ம‌த‌ அடிப்ப‌டையிலோ, இன‌ அடிப்ப‌டையிலோ, மொழி அடிப்ப‌டையிலோ இழிவு ப‌டுத்த‌ப் ப‌டுத‌ல், வாய்ப்புக‌ள் மறுக்க‌ப் ப‌டுத‌ல்,ஒதுக்க‌ப் ப‌டுத‌ல், க‌ட்ட‌ம் க‌ட்ட‌ப் ப‌டுத‌ல் இவை எல்லாம் அநீதியான‌வை, அக்கிர‌ம‌ம் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்து இல்லை.

    ச‌ம‌ர‌ச‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம் (Homogeneous soceity)அமைக்க‌ முடியும் என்ப‌தில் நான் உண்மையான ந‌ம்பிக்கை வைத்து இருக்கிரேன்.

    ஆனால் முட்டி மோதி, கலகங்கள் தொடரட்டும் போன்ற‌ க‌ருத்துக்கள் எல்லாம், சாதி அமைப்பை, சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை இன்னும் வ‌லுவாக்கி , அதிக‌மாக்க‌வே செய்யும் என்ப‌தாக‌வே முடியும்.

    இந்த‌ முட்டி மோத‌ல்க‌ள், தலித் இன‌ மக்க‌ளை இன்னொரு ஆதிக்க‌ குண‌ம் உடைய‌, அரிவாள் வீச்சு க‌லாச்சார‌ ச‌மூக‌ நிலைக்கு உய‌ர்த்துமேய‌ல்லாது, சாதிக‌ள‌ற்ற‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைய‌ உத‌வாது.

    அப்போது சாதிக‌ள் நிர‌ந்த‌ர‌மாக்க‌ப் ப‌டுவ‌தோடு, மோத‌ல்க‌ளும் நிர‌ந்த‌ர‌மாக்க‌ப் ப‌டும்.

    ஆனால் நீங்க‌ள் மனித‌ர்க‌ளின் மேல் ந‌ம்பிக்கை வைத்து இருக்கிறீர்க‌ளா? அவ‌ர்க‌ளை நியாய‌த்தின் அடிப் ப‌டையில், அறிவின் அடிப்ப‌டையில் க‌ன‌வான் ஆக்கி அவ‌ர்க‌ள் ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்துக்கு ம‌ன‌ப் பூர்வ‌ ஒப்புத‌லும், ப‌ங்கீடும் அளிக்க‌ வைக்க‌ முடியும் என்று ந‌ம்புகிறீர்களா?

    அப்ப‌டி அவ‌ர்களை என்னால் (ம‌கிழ‌னால் ) உருவாக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை உங்க‌ளுக்கு இருக்கிற‌தா?

  34. Dear Brother Matt,

    As usual, please spare me some time, I will reply intact!

    T.kaaran

  35. Dear Brother Matt,

    Please bear with me for some time. I will clarify your points!

    T.kaaran

  36. //திருசிகாரரே,
    ஆஊனா உடனே எல்லோரையும் கேள்வி கேட்போம் அப்படிங்கறது , எங்க கேள்வி ,நீங்க என்ன கேள்வி கேடீர்கள் பார்பன துரோகிகளை, இந்து மதவெறியர்களை , பொய் புராணங்களை ?//

    எந்த தளங்களில் மதக் கருத்துக்கள் எழுதப் படுகின்றனவோ, அங்கேதான் நாம் அதைப் பற்றி விளக்க முடியும். நாம் பிற தளங்களில் எழுதியதையும், அதற்காக நமக்கு கிடைத்த விமரிசங்களையும் இங்கெ வைக்கிறேன்.

    திருச்சிக் காரன்
    //நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

    கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா? //

    ———–

    கள்ளபிரான்
    7 October 2009 at 10:19 am

    Mr Tirchy!

    இந்த தலைப்பும் அதன் வாசிப்பும், வாசித்து விவாதிப்ப்வர்களுக்கும் இடையிலே ஒரு பொது உண்மை உண்டு அவர்கள் வெவேறு மத்ததவர்களாயிருப்பினும் கூட.

    அனைவரும் கடவுள் உண்டு என்ற கொள்கையுடையவர் என்பதுதான் அவ்வொற்றுமை. ஆத்திகர்கள்.

    நாத்திகர்கள் இத்தலைப்பை ஒட்டிய விவாதத்தில் கலத்தல் பொறுத்தமில்லாதது.

    ஒரு நாத்திகன் ஒரு கோயிலில் இப்படி பூசை செய்யாதீர்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்வதைப்போல.

    கடவுளே இல்லையென்று சொன்னபிறகு, பூசையைப்பற்றிய தலைவலி அவனுக்கு ஏன்?

    கடவுளை நிரூபிக்கமுடியாது என்பதும் நாத்திகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி.

    உங்களுக்கு இங்கே என்ன வேலை?

    Santhosh
    7 October 2009 at 12:03 pm
    இந்து மதத்தில் ஏன் இவ்வளவு குழப்பங்களை என்று இப்போது புரிகிறது. இந்த திருச்சிக்காரன் போல நாலு பேர் சேர்த்தால், தாங்கள் நினைத்ததை எல்லாம் இந்துமத உண்மைகள் என்று சொருகி ஒரு புது மதத்தையே கொண்டுவந்துவிடுவார்கள். எப்பா திருச்சிக்காரன், இப்போ நீங்க என்னதான் சொல்லவரீங்க?
    ஜெயந்திரரைவிட நீங்க பெரிய ஆள்ன்னு நாங்க நினைக்கணுமா?
    இயேசுவை வணங்கலாம்ன்னு சொல்லறீங்களா, இல்லை வேண்டாம்ன்னு சொல்லறீங்களா?
    நீங்க நாத்திகரா, ஆத்திகரா?
    ஒன்னுமே புரியலை சார்.
    இந்த siteஇல் அதிகமாக நீங்கதான் பின்னூட்டம் எழுதி இருப்பீங்க. ஆனா நீங்க என்ன சொள்ளவரீங்கன்னு யாருக்கும் புரியலை.

    குழம்பியவனாய்,
    சந்தோஷ்

  37. //ச‌ம‌ர‌ச‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம் (Homogeneous soceity)அமைக்க‌ முடியும் என்ப‌தில் நான் உண்மையான ந‌ம்பிக்கை வைத்து இருக்கிரேன்.///
    எல்லாம் தானாய் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது…

    ////ஆனால் முட்டி மோதி, கலகங்கள் தொடரட்டும் போன்ற‌ க‌ருத்துக்கள் எல்லாம், சாதி அமைப்பை, சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை இன்னும் வ‌லுவாக்கி , அதிக‌மாக்க‌வே செய்யும் என்ப‌தாக‌வே முடியும்.
    இந்த‌ முட்டி மோத‌ல்க‌ள், தலித் இன‌ மக்க‌ளை இன்னொரு ஆதிக்க‌ குண‌ம் உடைய‌, அரிவாள் வீச்சு க‌லாச்சார‌ ச‌மூக‌ நிலைக்கு உய‌ர்த்துமேய‌ல்லாது, சாதிக‌ள‌ற்ற‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைய‌ உத‌வாது.
    அப்போது சாதிக‌ள் நிர‌ந்த‌ர‌மாக்க‌ப் ப‌டுவ‌தோடு, மோத‌ல்க‌ளும் நிர‌ந்த‌ர‌மாக்க‌ப் ப‌டும்.///

    நான் கூறிய முரண்பாடுகள் சாதிச்சண்டைகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது….சமரசம் பேச கூட்டம் போட்டு மக்களிடையே இருக்கும் ஆதிக்க சாதி உணர்வை அப்புறப்படுத்திவிட முடியாது…

    தான் மேல் சாதி என்ற நினைப்பு ஆதிக்க சாதி அன்பர்களுக்கு தகரும் வரை சாதியை இழிவாக கருத மாட்டார்கள்…இந்த படிநிலை சாதிய சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சாதி திமிருக்கு எதிராக செய்யும் கலகம்தான்..மேல் சாதியாக கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இழிவை உணர்த்தும்………தன்னை தாழ்த்தி வைத்திருக்கும், தன்னை விட மேல்சாதியாக கருதிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு எதிராக களம் காண So called…மேல்சாதிக்கு வழி வகுக்கும்….

    இதில் பிழைகள், குறைகள் நிறைய வர வாய்ப்புண்டு….ஒன்றையும் இழக்க துணியாமல்….தானாக மாற வேண்டும் என்பது நடக்காத காரியம்…

    எரிமலை வெடிக்கும் பொழுது பூக்கள் கருகுமே என்று காத்துக் கொண்டிருக்க முடியாது…….

    ////என்னால் (ம‌கிழ‌னால் ) உருவாக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை உங்க‌ளுக்கு இருக்கிற‌தா?///
    என்னால் முடியும் என்று நம்பும் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது…என்னால் மட்டுமே முடியும் என்ற மூடநம்பிக்கை எனக்கு கிடையாது….சமூக தளத்தில் ஒத்த கருத்துக்களை உடையவர்களை ஒருங்கிணைத்து(சில முரண்பாடுகள் இருந்தாலும்) சமூக நலத்திற்காக திட்டங்களை வகுத்து முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்ல கண்டிப்பாக என்னால் முடியும்…….

  38. திருச்சிக் காரன் என்ற ஸ்ரீரங்கத்துக்காரன் அவர்களே

    மகிழ்நன் மற்றும் கண்ணன் போன்ற தோழர்கள் எமது சமூகத்திற்கு (திராவிட = தமிழ்) எது தேவையோ அதை செயல்படுத்திக்கொண்டுள்ளார்கள்…

    சும்மா சொன்னதையே சொல்லாமல் வேற ஏதாவது பொழப்பு இருந்தா போயி பாருங்க.. இல்லேனா எமது சமூகத்தை சீரழிக்கும் ஒரு செயலை செய்து வரும் அந்த பதிவுகளுக்குச் சென்று உங்கள் அரிப்பை சொறிஞ்சு கொள்ளவும்…

    ////DR. அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.//

    இதை எத்தைனையோ முறை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

    அந்த சினிமாக்காரங்க தான் அப்படின்னா நீங்களுமா? உங்கள் பற்றிய புகழ் பாட கேட்க படிக்க ஆசையா? நீங்களே ரெக்கார்டு செய்து, நீங்களே டைப் செய்து பார்த்து கேட்டு நீங்களே மகிழுங்கள் திருச்சிக்காரரே! எங்களை விட்டுவிடவும்//

    இதுமட்டுமில்லை வேந்தன் அவர்களே இந்த ஸ்ரீரங்கக்காரன் (திருச்சி) எழுதிய எல்லாமே வெட்டி ஓட்டும் (paste) வகையாரா தான்..ஒருதடவை எழுதி வைத்து அதை எல்லா பெரியார் மற்றும் அம்பேத்கார் பதிவுக்கும் சென்று ஒட்டி (paste) விடுகிறார்.. என்ன கொடுமைங்க ..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன் )

  39. Mr திருச்சிக் காரன்,

    We are expecting you @ http://www.vinavu.com . Because we want some relaxation there. Those people are very serious :(:(:(:. please come there :):):):).

  40. //நாம் முன்பே கூறியது போல நம்முடைய சிந்தனை எல்லைகள அற்றது. இந்த மதத்தில் மட்டும் அல்ல, கிருஸ்துவ , இசுலாமிய மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை மக்களுக்கும் சமூகத்துக்கும் உதவக் கூடிய கருத்துக்களை எடுத்துக் காட்டுவோம், அதே நேரம் அந்த மதங்களில் (இந்து மதம் உட்பட) உள்ள கருத்துக்கள் தவறாகப் போதிக்கப் பட்டாலோ அந்தக் கருத்துக்கள் தவறாகவே இருந்தாலோ அதையும் எடுத்துக் காட்டுவோம்//

    எடுத்துக்காட்டி என்ன பண்ணபோறீங்க???
    இந்து மதத்திற்கு ஆள் சேர்க்க போறீங்களா?

    பசப்பிப்பேசும் பேச்சை விடுத்து முதலில் கறாராக பேசுங்கள்.
    நல்ல கருத்து எங்கிருந்தாலும் எடுத்துகொள்வது என்பது எல்லா அறிவார்ந்த மனிதனுக்கும் தெரிந்ததே! என்னமோ உபதேசம் செய்ய வந்துட்டீங்க?

    தவறிழைத்தவனை கண்டிக்கும் போது உங்களை போன்ற ஞான சிகாமணிகள் வந்து ”அவரிடம் இருந்து கற்க வேண்டியதும் இருக்கிறது” என்று உபதேசிப்பது காமெடியிலும் காமெடி.

    இந்து மதத்தில் உள்ள நல்ல விடயங்களை சொற்பமாக காட்டி மக்களை விகாரமாக ஒடுக்கும் சனாதன இந்து மதத்தை ஆதரிக்கும் உங்களை போன்றோர் ‘இந்து மதத்தில் இருந்து கற்க வேண்டியதும் இருக்கிறது’ என்று உபதேசிப்பது காமெடியிலும் காமெடி. விசமத்திலும் விசமம்.

    திருச்சிகாரரே! நீங்க நல்லவரா? கெட்டவரா?

    அம்பேத்கரை ஆதரிக்கும் யாரும் இந்து மதத்தை ஆதரிக்க முடியாது. இந்து மதத்தை ஆதரிக்கும் யாரும் அம்பேத்கரை ஆதரிக்க முடியாது. அப்படி இருந்தால் ரெண்டுங்கெட்டானின் அறிவாகத்தான் இருக்க முடியும்.

    உடனே மறுபடியும் நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பிப்பீர்களே!!

    உங்கள் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியனின் செயலில் அவனிடத்தில் உள்ள நல்ல செயலை எவ்வாறு இனம் காண்பீர் திருச்சிகாரரே??அவன் திணித்தது நல்ல மலமா? நாற்றமடித்த மலமா என்றா??

    சாதியின் பெயரால் ஆதிக்க சாதி வெறியன் உங்கள் வாயில் ஆண் குறியை விட்டு மானபங்கபடுத்தினால் அவனிடத்தில் உள்ள நல்ல கருத்துக்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள் திருச்சிகாரரே???
    அப்பாடா! ஆண் குறியை மட்டும் தான் வைத்தான் நல்ல வேளை சிறுநீர் கழிக்கவில்லையே என்று அவன் செயலில் உள்ள நல்ல கருத்துக்களை தேடுவீரோ??

    இதுபோல் தான் உள்ளது உங்கள் இந்து மதத்தில் தேடும் நற்கருத்துகள். சாதியின் ஆணிவேரே இந்து மதம்.

    அதை எவ்விதத்திலும் நியாப்படுத்த முயன்றாலும் நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிக்கே தூபம் போடுகிறீர்கள்.

  41. //இதுமட்டுமில்லை வேந்தன் அவர்களே இந்த ஸ்ரீரங்கக்காரன் (திருச்சி) எழுதிய எல்லாமே வெட்டி ஓட்டும் (paste) வகையாரா தான்..ஒருதடவை எழுதி வைத்து அதை எல்லா பெரியார் மற்றும் அம்பேத்கார் பதிவுக்கும் சென்று ஒட்டி (paste) விடுகிறார்.. என்ன கொடுமைங்க ..//

    தோழரே, வர வர திருச்சிக்காரர் ஜோக்கராகி வருகிறார்.

    அதை அவரின் எழுத்துக்களிலே நாம் காணலாம்.

    திருச்சிக்காரரே,

    வெட்டி ஒட்டுவதையே ஒரு வேளையாவே வைச்சிருக்கீங்களா!

    என்ன கொடுமை சார் இது!!

  42. முகமது பாரூக்
    “(திராவிட = தமிழ்)”

    இது உலக மகா காமெடி…
    கன்னடன், தெலுங்கன் திராவிடன் இல்லையா…
    ராமசாமி நாயக்கரே திராவிடன் இல்லைன்னு சொல்றீங்களா ? : )

    வேந்தன்
    “அம்பேத்கரை ஆதரிக்கும் யாரும் இந்து மதத்தை ஆதரிக்க முடியாது.”

    வேட்டி கட்டுகிறவன் பேன்ட்டே போடக் கூடாதா?
    அதென்ன அம்பேத்காரை நீங்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுறீங்க…
    ஒரு தலைவரைப் பேச புகழ பின் தொடர சமயம் ஒரு தடையே இல்லை.

    “வெட்டி ஒட்டுவதையே ஒரு வேளையாவே வைச்சிருக்கீங்களா”

    வெட்டி ஒட்டுகிற வேலை செய்றது பெரியார் கும்பலோட வேலை என்பது உலகறிந்த விஷயம். அதெல்லாம் சுட்டு போட்டாலும் எங்களைப் போன்ற ஆட்களுக்கு வராது : )

  43. ///வேட்டி கட்டுகிறவன் பேன்ட்டே போடக் கூடாதா?
    அதென்ன அம்பேத்காரை நீங்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுறீங்க…
    ஒரு தலைவரைப் பேச புகழ பின் தொடர சமயம் ஒரு தடையே இல்லை.///

    வேட்டியை உடுத்திக்குட்டு பேன்ட்டு போடுறது உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும் தோழர்…அடுத்த அன்பர்களது பின்னூட்டங்களை காமெடி என்று சொல்லிவிட்டு…நீங்க மெகா சைஸ் காமெடி பண்றீங்களே………?

    அதோடு ஒரு பொந்துங்க்குள்ளிருந்து “எங்களை போன்ற” என்று சொல்லிக்கொண்டு ஒரு பாம்பு வெளியே வந்துட்டு….

    நம் பணி தொடரட்டும்

  44. //வேட்டி கட்டுகிறவன் பேன்ட்டே போடக் கூடாதா?
    அதென்ன அம்பேத்காரை நீங்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுறீங்க//

    வேட்டிக்கட்டுகிறவர்கள் பேண்ட் போடலாம் கபிலரே!
    ஆனால் வேட்டியை அணிந்து கட்டிக்கொண்டே யாராலும் பேண்ட் போட முடியாது என்று தான் சொல்கிறேன். ஒன்னு வேட்டி கட்டியிருக்கனும், இல்லைனா பேண்ட் போட்டுருக்கனும். நீங்க இரண்டையும் ஒன்னா போடுவேன் என்று அடம் பிடித்தீங்கன்னா காமெடியனா ஆயிடுவீங்க. இதேபோல் தான், உங்களை போன்ற இந்து மத ஆதரவாளர்கள் இந்து மத எதிர்ப்பாளரான அண்ணல் அம்பேத்கரை ஆதரிக்கும் போது நகைப்பு வருகிறது. அண்ணல் அம்பேத்கரை யாரும் குத்தகைக்கு எடுக்கவில்லை. எடுக்கவும் முடியாது. முதல்ல இந்து மதத்தை பற்றி அண்ணலின் எழுத்துக்களை படித்து வந்து வாதம் செய்யுங்கள்.

    //ஒரு தலைவரைப் பேச புகழ பின் தொடர சமயம் ஒரு தடையே இல்லை//

    ஒரு சமய கருத்தை தீவிரமாக எதிர்த்த நபரையும், அதே சமய கருத்தையும் எப்படி ஆதரிக்க முடியும்?
    ஒரு மகன் தன் அப்பாவையும் அவன் அப்பாவிற்கு ஆப்பு வைத்தவரையும் ஆதரிக்க முடியுமா? எப்படி ஆதரிக்க முடியும் கபிலரே??

    //இது உலக மகா காமெடி…
    கன்னடன், தெலுங்கன் திராவிடன் இல்லையா…
    ராமசாமி நாயக்கரே திராவிடன் இல்லைன்னு சொல்றீங்களா //

    தோழர் பாருக் கருத்தை காமெடி என்று கலாய்க்கும் கபிலரே, இப்போது தான் உங்க காமெடிக்கான காரணம் புரியுது.
    திராவிடம், தமிழ் குறித்து விளங்காமல் பேசுவதே உங்கள் காமெடிக்கு காரணம். போய் அண்ணலின் இந்தியா குறித்த ஆய்வு நூலை படிங்க. பிறகு தமிழ்ன்னா திராவிடம்னா என்னன்னு தெரிஞ்சுக்குவீங்க.

  45. //தவறிழைத்தவனை கண்டிக்கும் போது உங்களை போன்ற ஞான சிகாமணிகள் வந்து ”அவரிடம் இருந்து கற்க வேண்டியதும் இருக்கிறது” என்று உபதேசிப்பது காமெடியிலும் காமெடி.

    இந்து மதத்தில் உள்ள நல்ல விடயங்களை சொற்பமாக காட்டி மக்களை விகாரமாக ஒடுக்கும் சனாதன இந்து மதத்தை ஆதரிக்கும் உங்களை போன்றோர் ‘இந்து மதத்தில் இருந்து கற்க வேண்டியதும் இருக்கிறது’ என்று உபதேசிப்பது காமெடியிலும் காமெடி. விசமத்திலும் விசமம்.//

    இந்து மதம் மட்டும் அல்ல. பிற மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. சாக்ரடிஸ், ஜேகே போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களும் உள்ளன. பெரியாரும் சில முக்கியமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

    ஏதோ ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அந்தக் கொள்கை எப்படியாவது சிறப்பானது என்று காட்டி விட வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்யாமல் எந்த விதமான நிபந்தனைகளும் மற்று சிந்திக்கும் போது உண்மைகளும், தெளிவுகளும், நன்மைக்கான வழியும் கிடைக்கும்.

    அதை அறிந்த பின் அறிவின் அடிப்படையில், அன்பின் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்குவதே நம் வழி.

    ப‌ல வ‌ருட‌ங்க‌ள், சிந்தித்து, விவாதித்து ஒரு முடிவை, ஒரு க‌ருத்தை ச‌ரி பார்க்க‌, உண்மை என்னும் உரை க‌ல்லே சிற‌ந்த‌து, உண்மையை அழிக்க‌ முடியாது,

    க‌ட‌வுள் என்று ஒருவ‌ர் இருந்தால் அவ‌ர் கூட‌ உண்மையை எதிர்த்து நிற்க‌ முடியாது என்று ஒரு நிலைப் பாட்டுக்கு வ‌ந்தோம்.

    அதே க‌ருத்தை ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன் “ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தே” என்று உப‌னிஷ‌த்திலே சொல்லப் ப‌ட்டுள்ளது. அதே நிலைப் ப‌ட்டுக்குதான் நாங்க‌ளூம் வ‌ந்தோம். என‌வே இந்து ம‌தத்திலே உள்ள‌ க‌ருத்துக்களை உப‌யோக‌ப் ப‌டுத்த‌ த‌ய‌ங்க‌ வேண்டிய‌து இல்லை.

    மேலும்

    “அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),
    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),
    கருண ஏவ ச (கருணையுடன் )
    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)
    ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”

    என்ப‌து இந்து ம‌த‌த்தின் மிக‌ முக்கிய‌க் க‌ருத்து. இதை உப‌யொக‌ப் ப‌டுத்தி ச‌ம‌ர‌ச‌, ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியும், சாதிக‌ல‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம் (Homogeneous soceity) அமைப்ப‌தோடு, மத‌ங்க‌ளுக்கிடையிலும் ச‌ம‌ர‌ச‌த்தை உருவாக்க‌ முடியும், என்று க‌ருதுகிரேன்.

    எல்லா க‌ருத்துக்க‌ளையும் விருப்பு வெருப்பின்றி அணுகி அதை ஆராயும் முறை யே சிற்‌ந்த‌து.

    Let us discuss the good points in other religions in our next comment.

  46. //வெட்டி ஒட்டுகிற வேலை செய்றது பெரியார் கும்பலோட வேலை என்பது உலகறிந்த விஷயம். அதெல்லாம் சுட்டு போட்டாலும் எங்களைப் போன்ற ஆட்களுக்கு வராது..//

    உண்மைதான் கபிலரே. ஆனால் அதற்காக கவலை படாதீர்கள். உங்கள் மேல் தவறில்லை கபிலரே! உங்கள் ஆரம்ப மக்களே அவ்வாறு தான் தெரியாமல் தப்பு தப்பாக ஒட்டத் தெரியாமல் ஒட்டி இருந்திருக்கிறார்கள். சுட்டு போட்டாலும் உங்களைப் போன்ற ஆட்களுக்கு வராது.

    விநாயகன் தலையை வெட்டி பிறகு அதற்கு பதிலாக யானை தலையை ஒட்டியது.

    அமுதம் அருந்தும் போது ராகு,சனி கழுத்தை வெட்டி பிறகு அவர்களின் தலையயும் மாற்றி ஒட்டியது.

    இப்படி மாத்தி ஒட்டிட்டு அதை சமாளிப்பதற்கு நம்மை அதை வணங்க செய்துவிட்டனர்.

    நம் தலைமுறையிலாவது நீங்களாவது நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளீரே! நன்றி!

  47. திருச்சிகாரரே! நீங்க நல்லவரா? கெட்டவரா?

    அம்பேத்கரை ஆதரிக்கும் யாரும் இந்து மதத்தை ஆதரிக்க முடியாது. இந்து மதத்தை ஆதரிக்கும் யாரும் அம்பேத்கரை ஆதரிக்க முடியாது. அப்படி இருந்தால் ரெண்டுங்கெட்டானின் அறிவாகத்தான் இருக்க முடியும்.

    உடனே மறுபடியும் நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பிப்பீர்களே!!

    உங்கள் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியனின் செயலில் அவனிடத்தில் உள்ள நல்ல செயலை எவ்வாறு இனம் காண்பீர் திருச்சிகாரரே??அவன் திணித்தது நல்ல மலமா? நாற்றமடித்த மலமா என்றா??

    சாதியின் பெயரால் ஆதிக்க சாதி வெறியன் உங்கள் வாயில் ஆண் குறியை விட்டு மானபங்கபடுத்தினால் அவனிடத்தில் உள்ள நல்ல கருத்துக்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள் திருச்சிகாரரே???
    அப்பாடா! ஆண் குறியை மட்டும் தான் வைத்தான் நல்ல வேளை சிறுநீர் கழிக்கவில்லையே என்று அவன் செயலில் உள்ள நல்ல கருத்துக்களை தேடுவீரோ??

    இதுபோல் தான் உள்ளது உங்கள் இந்து மதத்தில் தேடும் நற்கருத்துகள். சாதியின் ஆணிவேரே இந்து மதம்.

    அதை எவ்விதத்திலும் நியாப்படுத்த முயன்றாலும் நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிக்கே தூபம் போடுகிறீர்கள்

  48. “மகிழ்நன்
    அதோடு ஒரு பொந்துங்க்குள்ளிருந்து “எங்களை போன்ற” என்று சொல்லிக்கொண்டு ஒரு பாம்பு வெளியே வந்துட்டு….”

    நண்பரே…எங்களைப் போன்ற என்று சொல்வதில் என்னங்க தவறு இருக்க.
    “நம் பணி தொடரட்டும்” என்று நீங்கள் சொல்லலாம், ஆனா, “எங்களைப் போன்ற” என்று நாங்கள் சொன்னால் பாம்பு வெளியே வந்துடுச்சுன்னு சொல்றீங்க. ஒரே ஸ்கேலை வச்சு அளவு எடுங்க ஐயா..அப்ப தான் கணக்கு சரியா வரும்.

  49. “வேந்தன் (04:25:12) :

    //வேட்டி கட்டுகிறவன் பேன்ட்டே போடக் கூடாதா?
    அதென்ன அம்பேத்காரை நீங்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுறீங்க//

    வேட்டிக்கட்டுகிறவர்கள் பேண்ட் போடலாம் கபிலரே!
    ஆனால் வேட்டியை அணிந்து கட்டிக்கொண்டே யாராலும் பேண்ட் போட முடியாது என்று தான் சொல்கிறேன். ”

    ஐயா, வேட்டிக் கட்டிக் கொண்டு கோவிலுக்கு போவோம், பேண்ட் போட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு போவோம். என்னங்க ஐயா….நாங்க என்ன சூப்பர் மேனா? ஒண்ணு மேல ஒண்ணு போடுறதுக்கு : )

    “//ஒரு தலைவரைப் பேச புகழ பின் தொடர சமயம் ஒரு தடையே இல்லை//

    ஒரு சமய கருத்தை தீவிரமாக எதிர்த்த நபரையும், அதே சமய கருத்தையும் எப்படி ஆதரிக்க முடியும்? ”

    காந்தியை பிடித்தவர்களுக்கு, சுபாஷ் சந்திர போசை பிடிக்கக் கூடாதா?
    எனக்கு காந்தியையும் பிடிக்கும், சுபாஷ் சந்திர போஸையும் பிடிக்குங்க…: )

    “//இது உலக மகா காமெடி…
    கன்னடன், தெலுங்கன் திராவிடன் இல்லையா…
    ராமசாமி நாயக்கரே திராவிடன் இல்லைன்னு சொல்றீங்களா //

    திராவிடம், தமிழ் குறித்து விளங்காமல் பேசுவதே உங்கள் காமெடிக்கு காரணம். போய் அண்ணலின் இந்தியா குறித்த ஆய்வு நூலை படிங்க. பிறகு தமிழ்ன்னா திராவிடம்னா என்னன்னு தெரிஞ்சுக்குவீங்க.”

    ஐயா, ஏதோ, கொஞ்சம் வரலாறு படிச்சிருக்கேன்…
    ஆனா,அண்ணலின் புத்தகம் படிக்கல..படிக்குறேன்.
    ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலிங்களே…
    கன்னடத்துப் பெரியார் திராவிடனா இல்லையா?

  50. நண்பர் வேந்தன் அவர்களே,

    //திருச்சிகாரரே! நீங்க நல்லவரா? கெட்டவரா?//

    நான் சாதிப் பாகுபாடுகள் அற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு உடையவன். அப்படிப் பட்ட வகையிலே நான் என் நண்பர்களிடம் பேசியும் , பழகியும் செயல்பட்டும் வருகிறேன். சாதிப் பாகுபாடுகள் தீர வேண்டுமானால் மக்களின் மன நிலையில் மாற்றம் உருவாக வேண்டும் , மக்கள் மன முதிர்ச்சி அடைந்தாலன்றி சாதிப் பாகுபாடுகள் மாறாது, என எண்ணுகிறேன்.

    அதே நேரம் மக்களை மன முதிர்ச்சி உடையவராக்க வேண்டும், அது முடியும் என்று நம்புகிறேன்.

    சாதி அடிப்படையில் இல்லாமல், இன, மத, மொழி காழ்ப்புன்ர்ச்சிகளும் இல்லாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌தே என் நிலைப் பாடு.

    நான் ந‌ல்ல‌வ‌ன், ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் என்று நான் சொல்லிக் கொள்ள‌ வேண்டுமா? நான் ந‌ல்ல‌வ‌னா இல்லையா என்று என‌க்குத் தெரியாது. நான் சாதார‌ண‌மான‌வன்.ஆனால் இது வ‌ரையில் பிற‌ர் பொருளுக்கு ஆசைப் ப‌ட்டதும் இல்லை.த‌வ‌ரான‌ வ‌ழியில் பொருள் ஈட்டிய‌தும் இல்லை. இத‌ற்க்கு மேல் என்ன‌ சொல்ல வேண்டும் என்று சொல்லுங்க‌ள்.

    //உங்கள் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியனின் செயலில் அவனிடத்தில் உள்ள நல்ல செயலை எவ்வாறு இனம் காண்பீர் திருச்சிகாரரே??அவன் திணித்தது நல்ல மலமா? நாற்றமடித்த மலமா என்றா??//

    சிறுமை க‌ண்டு பொங்குவ‌து அதாக‌ வ‌ரும் நிலைப் பாடு. வாயிலே பீ திணித்த‌ செய‌லைக் க‌ண்டு வாளா இருக்க‌ முடியாது. ஆனால் உன்மையில் த‌மிழ் நாட்டிலே எல்லோரும், த‌லித் த‌லைவ‌ர்க‌ள் உட்ப‌ட பீ திணிப்பு செய‌லைக் க‌ண்டு கொள்ளாம‌லே விட்ட‌ன‌ர்.

    ஆனால் த‌லித் அல்லாத‌ ஒவ்வொருவ‌ரும், த‌லித்துக‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்த‌ விரும்புவ‌தாக‌ நினைப்ப‌து த‌வ‌று. த‌லித்துக‌ள் அல்லாத‌வ‌ரில் பெரும்பான‌மையின‌ர் த‌லித்துக‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்துவ‌து த‌வ‌று என்ப‌தோடு, தலித்துக‌ள் உள்ளிட்ட‌ எல்லோரும் ம‌னித‌ர்க‌ள் தான், எல்லொருமே ஒன்றுதான் என்ப‌தைப் புரிந்து கொண்டே உள்ளன‌ர்.
    நீங்க‌ள் தலித் அல்லாத‌ எல்லோரையும் சாதி உண‌ர்வு உடைய‌வ‌ர்க‌ள் எண்ண வேண்டிய‌தில்லை. த‌லித் இன‌த்தை செர்ந்த‌வ‌ர்க‌ளே ப‌ல‌ர் அப்ப‌ட்ட‌மான‌ சாதி உண‌ர்வு உடைய‌வ‌ர்க‌ளாய், போஸ்ட‌ரிலே பெய‌ரை விட‌க் கொட்டையாக‌ சாதிப் பெய‌ரைப் போடுவ‌து, க‌ட்சி சார்பு இல்லாத‌ த‌லித்துக‌ள் ப‌டித்து ப‌ணியில் இருப்ப‌வ‌ர்க‌ள் கூட பெருமையாக‌ சாதி பெய‌ரை யாரும் கேட்க்காம‌லேயே கூறுகின்ற‌ன‌ர்.

    வாயில் பீ திணிப்ப‌த‌ற்க்கு ச‌ட்ட‌ பூர்வ‌மாக‌ க‌டுமையான‌ த‌ண்ட‌னை த‌ர‌ப் ப‌ட‌ வேண்டும், அவ‌ர்க‌ளப் போன்ற‌வர்க‌ள் மன‌ முதிற்ச்சீ இல்லாத‌ காட்டு மிராண்டிக‌ள்.

  51. நண்பர் வேந்தன் அவர்களே,

    வேந்தன் (20:28:18) :

    //இதுமட்டுமில்லை வேந்தன் அவர்களே இந்த ஸ்ரீரங்கக்காரன் (திருச்சி) எழுதிய எல்லாமே வெட்டி ஓட்டும் (paste) வகையாரா தான்..ஒருதடவை எழுதி வைத்து அதை எல்லா பெரியார் மற்றும் அம்பேத்கார் பதிவுக்கும் சென்று ஒட்டி (paste) விடுகிறார்.. என்ன கொடுமைங்க ..//

    தோழரே, வர வர திருச்சிக்காரர் ஜோக்கராகி வருகிறார்.

    அதை அவரின் எழுத்துக்களிலே நாம் காணலாம்.

    திருச்சிக்காரரே,

    வெட்டி ஒட்டுவதையே ஒரு வேளையாவே வைச்சிருக்கீங்களா!

    என்ன கொடுமை சார் இது!!//

    நான் ப‌ல‌ த‌ள‌ங்க‌லுக்கு செல்வ‌து இல்லை. அதிக‌ ப‌ட்ச‌ம் நான்கு அல்ல‌து ஐந்து த‌ளங்க‌ளில் ப‌திவு இடுகிரேன்.

    ஒரே வ‌கையான‌ கேள்விக‌ள் , அத‌ற்க்கு நான் ஏற்க்க‌ன‌வே ப‌தில் அளித்து விட்டேன்.

    மீண்டும், அதே கேள்விய‌ கேட்டால், ப‌தில் முன்பு உள்ள‌துதானே?

    நான் வெட்டுவ‌தோ ஒட்டுவ‌தோ – அவை என் சிந்த‌னையில் உருவான‌ க‌ருத்துக்க‌ளே!

  52. Dear Brother முகமது பாருக்,

    //முகமது பாருக் (17:24:44) :

    திருச்சிக் காரன் என்ற ஸ்ரீரங்கத்துக்காரன் அவர்களே

    மகிழ்நன் மற்றும் கண்ணன் போன்ற தோழர்கள் எமது சமூகத்திற்கு (திராவிட = தமிழ்) எது தேவையோ அதை செயல்படுத்திக்கொண்டுள்ளார்கள்…

    சும்மா சொன்னதையே சொல்லாமல் வேற ஏதாவது பொழப்பு இருந்தா போயி பாருங்க.. இல்லேனா எமது சமூகத்தை சீரழிக்கும் ஒரு செயலை செய்து வரும் அந்த பதிவுகளுக்குச் சென்று உங்கள் அரிப்பை சொறிஞ்சு கொள்ளவும்…//

    1) I am not from Srirangkam , I am from Uraiyoor

    2) I would continue to write here, but what the best I can suggest you is that you can approach our brother Ve. Mathimaaran and request him to remove my comments. But I cant say if he would concede with your request!

    Any way, Best of luck to you!

  53. “முகமது பாரூக்
    (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன் )

    சும்மா சொன்னதையே சொல்லாமல் வேற ஏதாவது பொழப்பு இருந்தா போயி பாருங்க.. இல்லேனா எமது சமூகத்தை சீரழிக்கும் ஒரு செயலை செய்து வரும் அந்த பதிவுகளுக்குச் சென்று உங்கள் அரிப்பை சொறிஞ்சு கொள்ளவும்..”

    எங்கேயோ இடிக்குதுங்க…: )

  54. //லெமூரியன் (05:08:27) :

    @@@@ திருச்சிக் காரன்
    \\\\தலித்துகள் பொது மக்களுடன் கலப்பது, ஒரே இனமாக ஒன்று படுவது நாட்டின் அவசியம். அது தலித்துகளுக்கும் மிக அவசியம்\\\\\\\

    பொதுமக்கள் என்று யாரை சொல்கிறீர்கள் திருச்சிக் காரான்…. பொது மக்கள் வேறு…. தலித்துக்கள் வேறு என்று பிரித்து வைத்துள்ள உங்களை போன்றவர்களின் சாதிய மனோபாவங்களே… ஆதி மக்கள் இன்னும் அடிமையாய் வாழ்வதற்கு வகை செய்கின்றது….
    இங்கே மதிமாறன் அவர்களின் ஒருவரியை நினைவு படுத்துவது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்… “சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்”””
    உங்கள் வார்த்தை உம்மை அம்பலபடுதுகிறது….//

    பிரிக்க‌ அல்ல‌, சேர்க்க‌வே நான் விரும்புகிரேன்.

    நானா பிரித்து வைத்தேன்?

    இப்போது த‌மிழ் நாட்டி ல் உள்ள கிராம‌ங்க‌ளில் எல்லாம்
    த‌லித்துக‌ள் பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்து எல்லோரும் ஒன்றாக‌ ப‌ழ‌கும் நிலை உருவாகி விட்ட‌தா, அது என‌க்கு மிக‌வும் ம‌கிழ்ச்சி அளிக்கும் நிலை ஆகும்.

    என் மீது காழ்ப்புண்ர்ச்சி, பார்க்காம‌லே காத‌ல் போல‌ இது பார்க்காம‌லேயே போல‌ இருக்கிர‌து. ம‌ன‌ முதிர்ச்சி அடையுங்க‌ள்.

  55. சாதிகளற்ற சமுதாயத்தை சமரசத்தின் மூலியமாக , கலகம் இல்லாமல் ,எதிர் கருத்துக்கள் இல்லாமல் செய்யவேண்டும் என்கிறார்கள். இதற்கு அர்த்தம் ,

    ௧) தீட்சிதர்கள் விடயத்தில் யார் வேண்டுமானாலும் தீட்சிதர்கள் ஆகலாம் ,அதற்காக வடமொழி வழிபாட்டை எதிர்க்க கூடாது, தமிழ் வழிபாட்டை ஆதரிக்க கூடாது.
    ௨) தனி ஈழத்தை , விடுதலை புலிகளை எதிர்க்க வேண்டும் ,ஆனால் அந்த மக்களுக்காக பரிதாபபடுவதாக கூறிக்கொள்ள வேண்டும். மேதகு பிரபாகரன் அவர்களை பின்பற்றினால் தலைவராக ஏற்று கொண்டால் அவர்கள் தேச துரோகிகள் என்று நம்ப வேண்டும்.
    ௩) முஸ்லிம் ,கிருத்துவர் அல்லாதவர்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் .
    ௪) பார்ப்பார்கள் தமிழர்களுக்கு விரோதமாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் .
    ௫) இந்து மதத்தின் நம்பிக்கைகளை ஏற்று நடக்க வேண்டும்.பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.
    ௭) சேது சமுத்திர திட்டத்தில் இடையூறாக உள்ள மணல்திட்டை ராமன் பாலம் என்று நம்ப வேண்டும். குரங்குகள் அதை கட்டியதாக நம்ப வேண்டும்.(சேது திட்டமே நின்றுபோனாலும் சரி)
    ௮) இஸ்ரைலை ஆதரிக்க வேண்டும் ,ஏன் என்றால் அவர்கள் அறிவாளிகள்(வேறெந்த காரணமும் கிடையாது).

    இதெல்லாம் தான் மறைமுகமாக இவர்கள் சொல்ல வருவது,இதை எல்லோரும் ஏற்றுகொண்டால் சமதர்ம சமுதாயம் உபநிடத்தில் சொன்னது போல சாதிக்கலாம் என்பதுதான் திருச்சிகாரரின் வாதம். திருச்சிகாரர் மறுப்பு தெரிவிக்க விரும்பினால் இதில் உள்ளவைகளில் எதை ஆதரிக்கிறார் ,எதை ஆதரிக்கவில்லை ஏன் என்று தயவு செய்து கூறட்டும்.

  56. சகோதரர் Matt அவர்களே,

    //சாதிகளற்ற சமுதாயத்தை சமரசத்தின் மூலியமாக , கலகம் இல்லாமல் ,எதிர் கருத்துக்கள் இல்லாமல் செய்யவேண்டும் என்கிறார்கள். இதற்கு அர்த்தம் //

    எதிர்க் கருத்துக்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. எந்த ஒரு Systemலும் எதிர்க் கருத்துக்கள் அனுமதிக்கப் பட வேண்டும், அவை நல்லதும் கூட. உங்களின் கருத்துக்களை முன் வையுங்கள்!

    ஆனால் கலகம் என்பது வன்முறையையும் அதிகப் படுத்தி பிரிவினையை ஆழப் படுத்தும்.

    சாதிப் பாகுபாடுகள் குறைந்து வருகின்றன. மக்களின் சிந்தனைகள் செம்மையாகின்றன.

    எனவே பிரச்சாரம், நல்லிணக்கம், நியாயத்தை எடுத்துக் கூறுதல், மன முதிர்ச்சி பெறுதல், அதனால் கண்ணியம் அடைந்த கனவான் நிலையிலே ஒன்றாக இணைவதற்கு முடியும் என்றே கூறுகிறேன்.

    எதிர்க் கருத்துக்களை தடுக்கவில்லை, வரவேற்கிறேன்.

    கலகம் என்று வந்தால் அது கோவில் திருவிழாவிலே இந்த வருடம் ஒரு சாரார் சில தலைகளை உருட்டுவதும், அடுத்தவருடம் இன்னொரு பிரிவினர் சில தலைகளை உருட்டுவதுமாக இருந்தால், காட்டு மிராண்டி நிலையிலே சமத்துவம் உருவாக முடியாது. அப்போது இன்னும் அதிக காட்டுமிராண்டித் தனம் செய்யக் கூடியவன் என்ற வகையிலே தான் போட்டி நடக்கும்.

    சகோதரர் வேந்தன், Matt ன் உணர்வுகளை அறிய முடிகிறது. நான் கூறும் கருத்துக்கள் குறித்து ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  57. தந்திரமாக எங்கள் எல்லோரையும் காட்டுமிராண்டிகளாகவும் வன்முறையாளர்களாகவும் சித்தரிதுவிடீர்கள் , சரி .நான் முன்பு குறிபிட்ட விடயங்களில் உள்ளவற்றை ஒப்புகொள்கிறீர்களா ? இல்லை என்றால் ஏன் என்று சொல்லமுடியுமா ? அதை பற்றி வாயை திறக்க வில்லையே ..!?

  58. ௧) தீட்சிதர்கள் விடயத்தில் யார் வேண்டுமானாலும் தீட்சிதர்கள் ஆகலாம் ,அதற்காக வடமொழி வழிபாட்டை எதிர்க்க கூடாது, தமிழ் வழிபாட்டை ஆதரிக்க கூடாது.

    //தீட்சிதர்கள் விடயத்தில் யார் வேண்டுமானாலும் தீட்சிதர்கள் ஆகலாம்//

    பார்ப்பனர் அல்லாதவர்களும், அர்ச்சகர் ஆவதை வூக்குவிக்கிறோம். குறிப்பாக தலித் பிரிவை சேர்ந்தவர்கள் அர்ச்சகர் ஆவதை வூக்குவிக்கிறோம்.

    //அதற்காக வடமொழி வழிபாட்டை எதிர்க்க கூடாது, தமிழ் வழிபாட்டை ஆதரிக்க கூடாது//

    வடமொழி வழிபாட்டை எதிர்க்கவில்லை, தமிழ் மொழி வழிபாட்டை ஆதரிக்கிறோம், எந்த மொழி வழிபாட்டையும்
    கட்டாயப் படுத்தவில்லை.

    இதிலே கோவிலில் வந்து வழிபாடு செய்யபவர்களின் விருப்பம் தான் முக்கியம். அவர்களுக்கும் சுதந்திரம் உண்டு. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், நாம் அவரிடம் வந்து கோரிக்கை வைப்போம் என்றே பலரும் அங்கே வருகிறார்கள். உடல் நிலை சரியில்லாதவர்களின் உறவினர்களும் வருகின்றனர். அவர்களிடம் போய் நாம் கட்டாயப் படுத்த விரும்பவில்லை.

    எனவே அர்ச்சனை தட்டை வாங்கும் போது அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமா, இல்லை வட மொழியிலா என்று கேட்டு, ஒவ்வொரு மனிதரின் விருப்பத்திற்கு ஏற்ப அர்ச்சனை செய்யப் படுவதுதான் நல்லது.

    ஹோட்டலில் சாப்பிடப் போகும் நபர் கூட தோசை வேண்டுமா, சோலா பட்டூரா வேண்டுமா என்று ஆர்டெர் செய்யும் சுதந்திரம் உள்ள போது, கோவிலுக்கு செல்லும் மக்களின் சுதந்திரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

  59. //தந்திரமாக எங்கள் எல்லோரையும் காட்டுமிராண்டிகளாகவும் வன்முறையாளர்களாகவும் சித்தரிதுவிடீர்கள்//தவறு, மக்களுக்கான வழி முறைகளை உருவாக்கும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
    எனவே நீங்கள் உருவாக்கும் வழிமுறைகள் தவறான விளைவுகளை உண்டாக்கக் கூடாதே என்பதாலேயே அப்படி சொன்னேன்.

  60. //௨) தனி ஈழத்தை , விடுதலை புலிகளை எதிர்க்க வேண்டும் ,ஆனால் அந்த மக்களுக்காக பரிதாபபடுவதாக கூறிக்கொள்ள வேண்டும். மேதகு பிரபாகரன் அவர்களை பின்பற்றினால் தலைவராக ஏற்று கொண்டால் அவர்கள் தேச துரோகிகள் என்று நம்ப வேண்டும்.//

    தனி ஈழத்தை எதிர்க்கவில்லை.

    மலையாளிகளாக இருந்தால் இந்நேரம் தனி ஈழமோ, அல்லது கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒரு நிலையை பெற்று இருப்பார்கள். தமிழர்களைடம் ஒற்றுமை இல்லை.

    I already wrote about this as a comment for this same article.

    இப்போதைய கையறு நிலையில் முள்கம்பியில் சிக்கியவரை மீட்பதே முக்கியம். Brother matt இதை புரிந்து கொள்ளவில்லையா?

  61. //௩) முஸ்லிம் ,கிருத்துவர் அல்லாதவர்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் //
    என்று நான் கூறவில்லை.
    நான் ஒரு நாத்திகன் என்றும் இந்து அல்ல என்று என்னை, பலரும் கூறியும் திட்டியும் வருகின்றனர்.

  62. //௪) பார்ப்பார்கள் தமிழர்களுக்கு விரோதமாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் //

    அப்பாவித் தமிழ்ர்களுக்கு அநீதி, அக்கிரமம் செய்பவர்களை ஆதரிப் பவர்கள் யாராக இருந்தாலும் சரி, பார்ப்பாராக இருந்தாலும் சரி அவர்களை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

    குறிப்பாக ராம், சாமி , சோ போன்றவர்கள், எல்லாமே சரியாகி விடும் என்பது போல ராஜ பக்ஷேவுக்கு ஆதரவு அளித்து இப்போது வாய் மூடி மவுனி ஆகி விட்டனர். குறிப்பாக ராம் லங்கன் ரத்னா அவார்டு வாங்கியது அசிங்கம்.

    இப்போது திருடனுக்கு தேள் கொட்டிய நிலையிலே , வாயில என்ன கொழக்கட்டையா என்று கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

  63. //௫) இந்து மதத்தின் நம்பிக்கைகளை ஏற்று நடக்க வேண்டும்.பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.//

    இதெல்லாம் அவரவர் விருப்பம். எந்தப் பண்டிகியும் கொண்டாடுவதும் , வெறுமனே இருப்பதும் அவரவர் விருப்பம்.

    ஆனால் இப்போது தீபாவளி வருகிறது. எல்லார் வீட்டுக் குழைந்தைகளும், பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் உண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றன.

    நான் சிறுவனாக இருக்கும் போது, நாங்கள் நண்பர்கள் இரண்டு மாதம் முன்பே வாங்க வேண்டிய பட்டாசுகலைன் பட்டியலைத் தயாரிப்போம். அதில் எத்தனை பட்டாசு எங்களுக்கு கிடைக்கும் என்பது வேறு விஷயம்.

    நாம் மட்டும் கொண்டாடாமல் இருந்தால், குழைந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனப் ப‌க்குவ‌ம் உடைய‌வ‌ராக‌ இருப்ப‌து அரிது. ஏமாற்ற‌ங்க‌ள், அவ‌ர்க‌ள் மன‌தில் காய‌ங்க‌ளை உருவாக்க‌லாம்.

  64. “முகமது பாருக் (09:33:55) :

    கபிலரே கீழே உள்ள சுட்டியை படிச்சுட்டு வாங்க பேசலாம்

    http://mathimaran.wordpress.com/2009/07/30/article-223/

    ஹி ஹி….என்னாங்க சம்மந்தம் இல்லாம ஒரு சுட்டி கொடுத்திருக்கீங்க…பெரியார் ஒரு தமிழ் விசுவாசி மாதிரி சொல்லி இருக்கு அந்தப் பதிவுல. அதுவும் இல்லாமல் திராவிடர் குறித்த சூப்பர் கதை சொல்லி இருக்கார்.

    “தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி ” – தந்தைப் பெரியார்
    தொல்காப்பியரை,வள்ளுவரை,கம்பரை எப்படியெல்லாம் பேசினார் என்பது ஊரறிந்த மேட்டர்.
    தமிழுக்கும் பெரியாருக்கும் முடிச்சு போடாதீங்க..
    பெரியாரின் தமிழுணர்வை விவாதிக்க இது சரியான இடம் இல்லை.

  65. கபிலரே உங்களுக்கு எல்லாமே நகைசுவைதான் போங்கோ!!!!

    தந்தை பெரியார் எம் இனத்தின் வழிகாட்டி, எங்களின் எதிரி யார் என்று எங்களுக்கு அடையாளம் காட்டினார்.. எமது மக்களுக்காகவே வாழ்ந்தார் எம்மக்களை என்றும் வழிநடத்துவார்..

    தன் கண்ணுக்கு முன்னால் தன் இனம் அழிவதை தடுக்க முடியாத கையறு நிலையில் இருந்தோமே அதற்கு என்ன பெயர்.. தமிழை ஒரு மொழிபோல் (தொடர்பு சாதனம்) பாருங்கள், மதம் = வெறியாக பார்த்தால் பிரச்சினையே..

    //“தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி ” – தந்தைப் பெரியார்
    தொல்காப்பியரை,வள்ளுவரை,கம்பரை எப்படியெல்லாம் பேசினார் என்பது ஊரறிந்த மேட்டர்.
    தமிழுக்கும் பெரியாருக்கும் முடிச்சு போடாதீங்க..
    பெரியாரின் தமிழுணர்வை விவாதிக்க இது சரியான இடம் இல்லை//

    ஆமா சொன்னாரு கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் மனிதன் பேசிய மொழி (தமிழ்) அப்படிதான் இருந்துருக்கும்….தந்தை பெரியார் வள்ளுவரை ஏற்றுக்கொண்டார் அதுவும் விமர்சனத்தோடு..

    அந்த தமிழுக்காக போராடியதும் அவரேதான்..தமிழனுக்கு பகுத்தறிவை ஊட்டியதும் அவரே.

    தமிழை நீச பாசைனு சொன்ன சங்கராச்சாரி (*மனித சமூகத்திற்கு எந்த செயலும் செய்யாத*) மேல வராத கோபம் பெரியார் (**எமது மக்களுக்காகவே வாழ்ந்த அய்யாவின்) மேல மட்டும் ஏன் வருகிறது..

    **நீங்க எப்போதுமே இப்படிதான் பாஸ் விவாதத்திற்கு வருவது போல வந்து விவாதத்தை திசை திருப்புவதே வேலையா போச்சு..என்னத்த சொல்ல!!!

    இப்ப நம்ம விசயத்திற்கு வருவோம் தோழர் கண்ணன் அவர்களை நேரில் பார்த்து இப்படி எழுத வேணாம் என்று சொல்லவேண்டியதுதானே அது ஏன் செய்யவில்லை..

    அதற்கு பேர்தான் “அந்த ” திமுருங்கறது..

  66. //அதுவும் இல்லாமல் திராவிடர் குறித்த சூப்பர் கதை சொல்லி இருக்கார்//

    அப்படி வாங்க!!! திராவிடர் இந்த மண்ணின் பூர்வக்குடிகள், அது கதை இல்ல கபிலரே!!

  67. //இப்ப நம்ம விசயத்திற்கு வருவோம் தோழர் கண்ணன் அவர்களை நேரில் பார்த்து இப்படி எழுத வேணாம் என்று சொல்லவேண்டியதுதானே அது ஏன் செய்யவில்லை..//

    தோழர் முகமது பாருக்கின் இந்தக் கருத்து சரியே.

    தோழர் கண்ணனை சந்தித்து நேரிலே பேசி தாங்கள் வருத்தம் அடைந்துள்ளதை தெரிவித்து இருக்கலாம்.

    அது ஒரு நல்லெண்ண வகையினதாக இருந்திருக்கும். போனில் அழைத்து மிரட்டுவது தவறு, சட்டப் படிக் குற்றமுமாகும்.

    இதுவும் காட்டு மிராண்டி தனமே.

  68. //௭) சேது சமுத்திர திட்டத்தில் இடையூறாக உள்ள மணல்திட்டை ராமன் பாலம் என்று நம்ப வேண்டும். குரங்குகள் அதை கட்டியதாக நம்ப வேண்டும்.(சேது திட்டமே நின்றுபோனாலும் சரி)//

    சேது கால்வாய் திட்டத்திலே எல்லோருமே இதை மத ரீதியிலேயே அணுகுகிறார்களே தவிர இதன் உபயோகம் என்ன என்பதை கணிக்கும் வகையிலே அணுகவில்லை.

    முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வைச்சேன். ரெண்டு குளம் பாழு, ஒன்னு தண்ணியே இல்லை என்கிற பாடலுக்கு உதாரணமாகவே உள்ளது இந்த சேது சமுத்திரத் திட்டம்.

    Analysis:

    SETHU CANAL : தமிழகம், மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு திட்டத்தையும், நல்ல மனம் படைத்த பண்பாளர்கள் வரவேற்கவே செய்வார்கள்! ஆனால் உண்மையிலேயே இந்த சேது கால்வாயினால் பலன் இருக்கிறதா?

    How the Canals are useful for Freight transportation: இரண்டு பெரிய கடல் பகுதிகள் ஒரு சிறிய நிலப்பரப்பினால் பிரிந்து இருந்தால், கால்வாயினை வெட்டி அவற்றை ஒன்று சேர்த்து, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வது மற்ற இடங்களிலும் நடை பெற்று உள்ளது!

    உதாரணமாக கி. பி. 1914 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடைய கப்பல்கள் முழு தென் அமெரிக்கா கண்டத்தையும் சுற்றி கேப் ஹோர்ன் முனை வழியாக 22,500 கி. மீ. வரை சுற்றி செல்ல வேண்டியிருந்தது! வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு நடுவில் பநாமா கால்வாய் வெட்டப் பட்டதால், பயண தூரம் 13,000 கி.மீ. குறைந்தது! இப்போது கப்பல்கள் 9,500 கி.மீ. பயணம் செய்தால் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடையலாம்!

    அதைப் போல, மத்திய தரை கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஸூயெஸ் கால்வாய் கட்டப் பட்டதால் 20,000 கிலோ மீடர் கால் பயணம் மீட்சம் ஆனது- இல்லையெனில் ஐரோப்பியாவிலிருந்து ஆசியா வர முழு ஆப்ரிக்க கண்டத்தையும் சுற்றி வர வேண்டும்- வாஸ்கொடகாமவைப் போல! இந்த பின்னணியில் நம்முடைய சேது கால்வாய் திட்டத்தின் சாதகங்களை ஆறாய்வோமா?

    மற்ற கால்வாய்கள் எல்லாம் 13,000 கி.மீ பயண மிச்சம் தரும் போது, சேது கால்வாய் வெறும் 650 கி.மீ. மட்டுமே பயண தூரத்தைக் குறைக்கிறது! மேலும் கால்வாய் வழியே பயணம் செய்வது, பெருங் கடலில் பயணம் செய்வதை விட அதிக ரிஸ்க் ஆனதும், கடினம் ஆனதும் ஆகும்!

    எனவே மாலுமிகள் வெறும் 650 கி. மீ. மிச்சம் செய்ய, ஆழ்கடலில் பயணம் செய்வதை விடுத்து, குறுகிய சந்து போன்ற கால்வாய் வழியாக செல்ல விரும்புவார்களா? இது சம்பந்தமாக சர்வதேச மாலுமிகளிடம் கருத்து கேட்டுப் பெறப்பட்டதா? வெறுமனே கால்வாயை வெட்டி விட்டு உட்கார்ந்தால் போதுமா?

    ஒரு நாளில் எத்தனை கப்பல்கள் இந்த கால்வாய் வழியே செல்லப் போகின்றன? 4000 கோடி செலவு என்றால், ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 360 கோடி வருமானம் ஆவது வர வேண்டாமா? அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வர வேண்டும்! அதற்க்கு ஒரு நாளைக்கு 50க்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் செல்ல வேண்டும்! ஒரு மாதத்திற்காவது, 50 கப்பல்கள் செல்லுமா?

    Does the proposed Sethu Canal situated in any Major Sea Route ?

    சர்வதேச போக்குவரத்தை ஆராய்ந்தால், இன்றைய தினம் உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து எங்கே நடக்கிறது?

    உலகின் முன்னணி உற்ப்பத்தி கேந்திரங்கலான, ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா இந்த நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மேற்கு திசையில் உள்ள ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்ரிக்ா, இவற்றுக்கு செல்ல வேண்டும்! இதற்கான கடல் வழி என்ன?

    சீனா மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்களுக்கு, இந்த சந்து கால்வாய்க்குல், புகுந்து செல்ல வேண்டிய அளவுக்கு பயண நேரமும், தூரமும் வித்தியாசம் இல்லை!

    ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா நாடுகளில் இருந்து புறப்படும் கப்பல்கள், நிகொபார் தீவுகளுக்கும், இந்தோணேசியவிற்க்கும் இடையே உள்ள கடல் பகுதி வழியே இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வருகின்றன! அங்கிருந்து அரபி கடல் பகுதி செல்ல, ஸ்ரீலங்காவின் தென் முனை வழி யாக செல்வது கிட்டத்தட்ட ஒரு கிடை மட்ட நேர்கோடு (Horizontal straight line)வழியாகும்! அதை விட்டு விட்டு, கப்பல் தலைவர்கள், மேல் நோக்கி வங்காள விரிகுடா வந்து, யாழ்ப்பாண தீபகற்பத்தை சுற்றிக் கொண்டு, சேது கால்வாயில் நுழைந்து, இந்திய தீபகற்பத்தின் தென் முனை ஐயும் சுற்றி கொண்டு அரபிக் கடலில் நுழையும் வழியில் (circutous and inconvenient route) வர வேண்டிய அவசியம் என்ன? இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால் கூட சேது கால்வாய் அவர்களுக்கு உபயோகப் படுமா?

    எனவே மிக முக்கியமாக மாலுமிகளிடம் கருத்து கேட்காமல், பூகோள காரணங்களை நோக்காமல், நமக்கு பெயர் வர வேண்டும் என செயலில் ஈடுபடலாமா? 4000 கோடி கொட்டி, வெட்டியாக கால்வாய் வெட்ட வேண்டுமா?

    What is the effect of this canal in freight movement within India :

    Even if we consider the ship traffic within India:

    இந்தியாவின் கிழக்கு மற்றூம் மேற்கு கரைகளுக்கு இடையே பெரிய கப்பல் போக்குவரத்து ஓன்றும் கிடையாது! இந்தியாவின் மேற்க்கு கரையில் இருந்து, கிழக்கு கரைக்கு கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்தியா மக்கள் தொகையில், பெரிய நாடாக இருந்தாலும், சிறிய நிலப் பரப்பு உடையது! Russia , USA , China போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் நிலப் பரப்பு மிகவும் சிறியது! சாலை மற்றூம் இருப்புப் பாதை போக்குவரத்தே, சாலச் சிறந்தது!

    ஒரு நாள் காலையில் சரக்கு யெற்றி அனுப்பினால், அடுத்த நாள் காலையில் போய் சேர்ந்து விடும்! சரக்குப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். மக்களுக்கு , வியாபாரிகளுக்கு, சரக்குப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாதபோது, எதற்க்கு அரசாங்கப் பணத்தை வீணடிக்க வேண்டும்?

    முக்கிய நகரங்கள் மும்பை, டில்லி, பங்களூரு, சென்னை, ஐதராபாத் இவை சாலை மற்றும், இருப்பு பாதைகளையே உபயாகப் படுத்த முடியும்!

    மேலும் மும்பை போன்ற நகரங்களில் இருந்து வைசாக், கல்கட்டா போன்ற கிழக்கு நகரங்களுக்கும் சாலை மற்றும் இருப்பு பாதையே அதிகம் உபயோகப் படுகிறது! மும்பையில் இருந்து சரக்குகள் வைசாக் செல்ல – ஆலையில் இருந்து ஒரே நாளில் சாலை வழியே சென்று விடலாம்!

    ஆனால் கப்பலை உபயோகப் படுத்தினால்,

    1)முதலில் சரக்கு வூர்தியில் சரக்கை ஏற்ற வேண்டும்.

    2) மும்பை துறை முகம் கொண்டு சென்று, அங்கே சரக்கு வூர்தியில் இருந்து இருந்து துறை முகத் தளத்தில் இறக்க வேண்டும்!

    3) பிறகு மும்பை துறை முகத்தில் சரக்கை கப்பலில் ஏற்ற வேண்டும்.

    4)பிறகு வைசாக் துறைமுகத்தில் சரக்கை துறை முகத் தளத்தில் இறக்க வேண்டும்.

    5)வைசாக் துறைமுகத்தில் சரக்கை திரும்பி Lorry இல் யெற்ற வேண்டும்!

    6) இறுதியில் பொருளை விநியோகிப்பாளர் குடோனில் இறக்கி வைக்க வேண்டும்.

    இவ்வளவும் செய்வது எளிதில் முடியக் கூடிய ஒரு வேலையை இடியாப்பச் சிக்கலாக ஆக்குவது ஆகும்.

    Is there any scope of economic prosperity for Tutucorin, southern Tamil nadu or India due to this canal?

    ஐயா, தயவு செய்து தென் மாவட்டங்களிலும், தூத்துக்குடியிலும் தொழில் வளர்சி உண்டாக வழியைப் பாருங்கள்! இப்போது இந்தக் கால்வாயை வெட்டியதால் தூத்துக்குடிக்கும், தென் மாவட்டங்களுக்கும் எப்படி வளார்ச்சி உண்டாகும்? நாங்கள் இங்கே இருந்து எந்தப் பொருளை யெற்றுமதி செய்யப் போகிரோம்? ஏற்றுமதி செய்யப் படுவது எல்லாம் மேற்கு திசை நாடுகளுக்கு தான்! அந்த கடல் வழிக்கும், இந்தக் கால்வாய்க்கும் என்ன சமபந்தம்?

    தூத்துக்குடி துறைமுகத்தில் 75% இறக்குமதி தான்! அதிலும் பெரும்பங்கு அனல் மின் நிளயத்துக்கான நிலக்கரிதான்! அந்த நிலக்கரியை கொண்டு வரும் கப்பல்கள், ஏறத் தாள 600km பயண மீட்ச்ம் அடையும்! இதைத் தவிர ஒரு பயனும் இல்லை! ஏற்கனவே வரும் நிலக்கரி தான்! இதனால் எப்படி வேலை வாய்ப்பு பெருகும்? எப்படி வள்ர்சி அடையப் போகிரோம்!

    NOIDA,டில்லி, பங்களூரு,ஐதராபாத், COIMBATORE , TIRUPPUR போன்ற நகரங்கள் துறைமுகம் கூட இல்லாமல் உள்ளன! ஆனால் இந்த நகரங்கள் பெரிய தொழில் வளர்ச்சி அடைந்தது எப்படி?

    அதே நேரத்தில் கொச்சின், VIZAG, பாரதீப் போன்ற, மிகப் பெரிய துறை முகங்களை உடைய நகரங்கள், தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளன!!

    எனவே தொழில் வளர்ச்சிக்கு, மக்கள் வூக்கம், திறமை, ஆக்கம் இவைதான் முக்கியமே தவிர வெறும் கால்வாய் வெட்டுவதால் என்ன பயன் ?

    இப்போது இந்த காள்வாயினை வெட்டி முடித்த பின் தூத்துக்குடியலிரிந்து, ஸிஂங்கபுர், மலேசியா, ஷங்காய் போன்ற நாடுகளுக்கு , கார், டி.வி இவற்றை யெற்றுமதி செய்யப் போகிரோமா? எதற்கு மக்களை ஏமாற்ற வேண்டும்? தூத்துக்குடிக்கு முதல் தேவை தொழில் வளம்! அதற்க்கு தேவை டைடாநீயம் போன்ற ஆலைகள்! அதில், நிலத்தை அடி மாட்டு விலைக்கு விற்க தரகு வேலை பார்த்ததால், மக்கள் விரட்டி விட்டனர்!

    Is this really a Bridge?

    இந்தப் பாலத்தில் அகழ்வாரைய்ச்சி நடத்தி பாலத்தின் , நீல, அகல, உயர பரிமாணங்கள், Contour Chart எடுத்தால் தெரிந்து விடும்! அகழ்வாரைச்சி செய்ய நீதி மன்றங்கள் அரசுக்கு வலியுறுத்தியும், மைய அரசு அந்த ஆராய்ச்சியில் இறங்க மனமில்லாமல் இருக்கிறது.

    இதை வெறும் மணல் திட்டுகளாகவே முடிவு கட்டுவது – எப்படியாவது இது பாலம் இல்லை, இராமாயணம் உண்மையில் நடந்தது அல்ல என்று எப்படியாவது காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே அப்படி செய்ய முடியும்.

    எனக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. எது உண்மையானாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயார். சாட்டிலைட் அளிக்கும் படங்களை கூகிள் எர்த்தில் காணலாம். இயற்க்கை எப்படி அவ்வளவு நேர்த்தியாக ஒரு கோட்டில் முறையாக பாலம் போல அமைப்பை உருவாக்கும் என்பது ஆச்சரியமே. ஆராய்ச்சி செய்வது அவசியமே!

    What is the cultural analysis of the said bridge

    இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியா என்பது நமக்குத் தெரியாது. அது உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அதே நேரம் இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி யாக இருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. வரலாறு என்பதே அந்தந்த கால கட்டத்தில் எழுதப் பட்ட நூல்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை வைத்து எழுதப் படுவதுதான். தாக கூறப் படும் இராமாயணம் என்பது உண்மையாக நடந்த ஒரு பழைய வரலாற்று நிகழ்ச்சியாக இருந்திருக்கக் கூடுமானால் அதற்கான பண்பாட்டு பகுத்தாய்வு இங்கெ அளிக்கிறோம்.

    Does The Ramar Bridge Represent Indias Culture?

    ராமர் பாலம் இந்தியாவின் கலாச்சாரச் சின்னம்தானா? கேட்பதில் தவறில்லை! இந்திய மக்கள் கலாசாரம் என்பது என்ன? எனக்குத் தெரிந்த வரையில் 1) அடுத்தவருக்கு துன்பம் கோடுக்காமால் வாழ்வது 2) உண்மை பேசுவது, உண்மையைத் தேடுவது 3) குடும்ப வாழ்க்கை 4) பிறர் மனைவியை விரும்பாமை 5) ஒழுக்கமான வாழ்க்கை 6) விருந்தோம்பல்… இப்படியான பண்புகளின் படி வாழ்ந்து வந்த சமுதாயம் தான் இந்திய சமுதாயம், தமிழ் சமுதாயம்! இப்போது கணிசமான அளவில் இந்தப் பண்புகளில் இருந்து மாறு பட்டு வாழ்ந்தாலும், மேற்கூறிய, மற்ற பிற நல்ல பண்புகளை குறிக்கோளாக வைத்துதான், இந்திய சமுதாயம் செயல் பட்டு வருகிறது ! இராமாயணம் அரசியல், சமூகம் என பல பரிமாணங்களை உடையது! அரசியல் ரீதியாகப் பார்த்தால் “பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது! கொள்கை என்பது இடுப்பில் அணியும் வேட்டி போன்றது” என்றார் அண்ணா! தன் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றூம் கொள்கைக்கு ஆக, தன் பதவியை துச்சமாக கருதி காடு சென்றது தான், இராமாயணத்தின் முதல் முக்கிய நிகழ்ச்சி இரண்டாவது நிகழ்ச்சி இராமனோடு, சீதையும் தானாக வனம் சென்றது! இந்திய வரலாற்றிலே, கண்ணகி,சீதை, சந்திரமதி போன்ற சில பெண்கள் உலகிற்கு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்! அது என்னவென்றால் “கற்பு என்பது கணவனோடு மட்டும் உறவு கொள்வது” -என்பது மட்டும் அல்ல!’- கணவன் எந்த தாழ்ந்த நிலயை அடைந்தாலும், அவனை விட்டுக் கொடுக்காமல், விட்டு விலகாமல், அவன் துயரங்களில் பங்கு எடுத்து, அவன் மீண்டு வர ஒத்துலைப்பதுதான் கற்பு’ என்பதுதான் கண்ணகி சீதை போன்ற பெண்கள் உலகிற்கு விட்டுச் சென்ற வரலாறு! அப்படிப்பட்ட கற்புக்கரசிகளின், கர்ப்பளிக்க கயவர்கள் முனையும்போது,நாகரீக சமுதாயம் வேடிக்கை பார்க்காது- எவ்வளவு சிரமப் பட்டாலும், அந்தக் கர்ப்புக்கரசிக்கு உதவி செய்யும் என்பதன் சான்றுதான் இராமாயணமும், சிலப்பதிகாரமும், இந்தப் பாலமும்! எனவே இந்தப் பாலம் இந்திய மக்களின் கலாச்சாரத் தோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது ! அதே நேரத்தில் இந்தப் பாலம் ஒரு நிணவுச் சின்னம் என்பதால், இந்தப் பாலம் முக்கியமா அல்லது கால்வாய் முக்கியமா என்று கேட்பதில் தவறு இல்லை!

    மற்றவரின் நன்மைக்கு ஆக தான் துயரங்களை சுமப்பது தான் இராமரின் கொள்கை! எனவே இந்தப் பாலத்தை இடிப்பதால் இராமருக்கு ஒரு நட்டமும் இல்லை! ஆனால் எல்லோரும் தங்கள் பெற்றோர் நினைவாக ஏதாவது ஒரு பொருளை வைத்திருப்பது போலத்தான் இந்தப் பாலமும்! எனவே இந்தக் கால்வாயினால் உண்மை உபயோகம் இருந்தால், கால்வாயை வெட்டிக் கொள்ளலாம்!

    உதாரணமாக இராமர், வட அமெரிக்கா தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் கட்டியிருந்தால், அதில் கால்வாய் அமைப்பது உபயோகம் ஆனா ஒன்று! ஆனால் வெறும் 450 KM பயண தூரம் மிட்சப் படுத்த 5000 கோடி கொட்டி, தண்டதிற்கு கால்வாய் அமைக்க வேண்டியது என்ன? விட்டால் அண்டார்டிகாவில் போய் கால்வாய் வெட்டுவார்கள்? யார் பணத்தில் – மக்களின் வரிப் பணத்தில் !

    இந்த பாலத்தை மேடுருட்டி வீதி சமைத்தால், பாக் ஜலசந்திக்கு இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள் வாழ்வில் வளம் கொழிக்கும். 20 நிமிடத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சரக்கு லாரிகள் யாழ்ப்பாணம் சென்று விடலாம். ஈழத் தமிழருக்கும் நல்லது- இந்தியத் தமிழருக்கும் நல்லது.

    இராமர் தன் மனைவியை இராவணனிடம் இருந்து மீட்க கட்டியதாக கூறப் படும் பாலத்தை, தமிழர் வாழ்வில் வளம் கொழிக்க மேடுபடுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

    ஆனால் சிலர் தேனை எடுக்கலாமா, புறங்கையை நக்கலாமா என்று நினைப்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து உள்ளனர்.

    இப்போது ஜெயாவும் பி.ஜெ,பியும் ஆட்சியில் இருந்தாலும் ஆயிரம் புராணக் காரணங்களை கூறி, சில பல பூஜைகளைப் போட்டு , இதே கால்வாயை வெட்டி தேனை எடுத்திருப்பார்கள்- அதாவது ப்ராஜக்டை முடித்திருப்பார்கள் என்றே கூறலாம்.

    எனவே இந்த வெட்டிக் கால்வாயால் ஒரு நன்மையும் இல்லை என்பதை புரிந்து கொண்டே மக்கள் அமைதியாக மனதுக்குள் சிரித்த வண்ணம் உள்ளனர்.

  69. //‘அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

    அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

    சரியாகவோ-தவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்காரர்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?’’

    அய்யா திருச்சி எழுதிய கருத்தில் எந்த தவறும் இல்லை இப்படித்தான் இருக்கவேண்டும் சரியா..

  70. அம்பேத்கர், இந்தியா நாட்டின் மக்களால் போற்றப் பட வேண்டிய அறிங்கரும், தலைவரும் ஆவார். கடின உழைப்பும், அறிவாற்றலும், அர்ப்பணிப்பும் உடைய மேதையாக அம்பேத்கர் இருந்தார்.

    அவரைப் புரிந்து கொள்ளாதவர்களும், சரியாகப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு விளக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

    அம்பேத்கரின் புகழையும், சிறப்பையும் சாதிக் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் குறைத்து காட்டலாம். ஆனால் அதற்காக இந்தியாவில் உள்ள தலித் அல்லாத பிரிவை சார்ந்தவர்கள் எல்லோரும் அம்பேத்கரின் மேல் மதிப்பு இல்லாதவர்கள் என்று முடிவு கட்டுவது தவறு.

    பெரும்பாலான மக்கள் அம்பேத்கர் நாட்டுக்கு ஆற்றிய பணியை அங்கீகரித்தே உள்ளனர். அவர் மேல் மரியாதையுடனே உள்ளனர் என்பதாகவே அறிகிறேன்.

    அம்பேத்கரின் அருமையைப் புரியாமல் சிலர் அம்பேத்கரை தங்கள் சாதிக் காழ்ப்புணர்ச்சியைக் காட்ட உபயோகிப்பது எப்படித் தவறோ,

    அம்பேத்கரின் புகழை உயர்த்துவதில் அக்கறையுடன் செயல் படுவதாக எண்ணுபவர்கள், அம்பேத்கரின் புகழை பெருமையை சிறப்பை தங்களின் சாதிக் காழ்ப்புணர்ச்சியைக் காட்ட வடிகாலாக பயன்படுத்துவது அதே போன்ற தவறே.

    யாராவது குறிப்பிட்ட சிலர் அம்பேத்கருக்கு மரியாதை செய்யவில்லை, முக்கியமான சட்டத் துறை வல்லுனர்கள் யாராவது அம்பேத்கருக்கு மரியாதை செய்யவில்லை என்றால், அதை குறிப்பட்டு அந்த நபர்களுக்கு கடிதம் எழுதி அதன் நகலை பத்திரிக்கைகளுக்கும் கொடுக்கலாம்.

    இப்படி சகட்டு மேனிக்கு எல்லோரையும் அம்பேத்கர் மேல் மரியாதை இல்லாதவர்களாக காட்டுவது, அம்பேத்கருக்கு இழைக்கப் படும் அவமானமே.

    நான் சட்டத் துறையை சார்ந்தவன் அல்ல. சட்டம் படித்தவன் அல்ல.

  71. //‘அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

    அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

    சரியாகவோ-தவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்காரர்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?’’// சரியா..?

    இதில் நம்முடைய கருத்து என்ன என்று தோழார் கேட்பதால் இதை தெளிவாக விளக்க வேண்டியதாக உள்ளது .

    இது அம்பேத்கருக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க வில்லையே என்ற ஆதங்கத்தினால் எழுந்த கோவமாகத் தெரியவில்லை.

    இது அம்பேத்கரை சிலர் மரியாதை செலுத்த தருவதை காரணமாகக் காட்டி, தன்னுடைய சாதிக் காழ்ப்புணர்ச்சியை முழு வீச்சில் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

  72. திருசிகாரரே, வடமொழியை பார்பனை தவிர யாரும் ஆதரிக்கவில்லை, ஏன் என்றல் யாருக்கும் அந்த மொழியே தெரியாது. ஈழ பிரச்சினையில் எல்லோருடைய எண்ணமுமே மக்களின் விடுதலைதான், விடுதலை புலிகளை பக்கம் போகமலேயே கருத்து தெரிவித்த உங்கள் சாமர்த்தியத்திற்கு பாராட்டுக்கள். சேது திட்டத்தை பற்றிய இந்த விளக்கம் எல்லாம் (நன்மை,தீமை) ஏற்கனவே பல ஆய்வாளர்கள் எடுத்து உரைத்துள்ளனர். எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

  73. விடயத்துக்கு வருவோம் , நாங்கள் சாதியை ஒழிக்க தயார் அதற்கு அடையாளமாக எங்களிடம் சாதியை குறிக்கும் எந்த குறியீடும் இல்லை. நீங்களும் சாதியை ஒழிக்க உங்கள் பூணூலை அறுத்து எறிந்துவிட்டு வாருங்கள். பிறகு சாதி ஒழிப்பை பற்றி பேசுவோம் !

  74. பூணூல் பற்றி பேசும் பற்றி பேசும் நீங்கள் ஏன் குல்லா,தாடி,சிலுவை பற்றி பேச மறுக்கிறீர்கள்.அதை பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
    ஊருக்கு…

  75. சகோதரர் சுரேஷ் குமார் ,

    சகோதரர் matt பூணூலை சாதியின் அடையாளம் என்று கருதுகிறார். எனவே தான் அவர் பூணூலை எடுக்க வேண்டும் என்கிறார்.

    அவர் கூறுவதன் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும், இதில் பிற மதத்தவரின் சின்னங்களை இழுப்பது பொருத்தமல்ல.

    Dear Brother matt,

    bear with me for some hours. I will reply !

  76. நான் பார்த்த வரையில் திருச்சிகாரர் அறிவுப்பூர்வமாகவும்,நாகரீகமாகவும்,சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று அதை வீழ்த்துவது போல் தைரியமாகவும் வாதிடுகிறார்.அவரை எதிர்க்கும் நாத்திக வாதிகளும்,பிற மதத்தினரும் அவருடன் வாதிட முடியாமல்,அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்
    .-தனபால்.

  77. ///உங்கள் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியனின் செயலில் அவனிடத்தில் உள்ள நல்ல செயலை எவ்வாறு இனம் காண்பீர் திருச்சிகாரரே??அவன் திணித்தது நல்ல மலமா? நாற்றமடித்த மலமா என்றா??

    சாதியின் பெயரால் ஆதிக்க சாதி வெறியன் உங்கள் வாயில் ஆண் குறியை விட்டு மானபங்கபடுத்தினால் அவனிடத்தில் உள்ள நல்ல கருத்துக்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள் திருச்சிகாரரே???
    அப்பாடா! ஆண் குறியை மட்டும் தான் வைத்தான் நல்ல வேளை சிறுநீர் கழிக்கவில்லையே என்று அவன் செயலில் உள்ள நல்ல கருத்துக்களை
    தேடுவீரோ??//

    மேலே குறிப்பிட்ட வேந்தனின் பதிவுகள் மிகவும் கீழ்த்தரமாக,மிகவும் அருவருப்பாகவும் உள்ளது.
    பழத்தை கொண்டு மரம் அறியப்படுகிறது.அதை போல் உங்கள் பதிவை கொண்டு நீங்கள் அறியப்படுகிறீர்கள்

    நான் பார்த்த வரையில் திருச்சிகாரர் அறிவுப்பூர்வமாகவும்,நாகரீகமாகவும்,சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று அதை வீழ்த்துவது போல் தைரியமாகவும் வாதிடுகிறார்.அவரை எதிர்க்கும் நாத்திக வாதிகளும்,பிற மதத்தினரும்,அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
    -dhanabal

  78. திருச்சிகாரரே

    //இந்திய மக்கள் கலாசாரம் என்பது என்ன? எனக்குத் தெரிந்த வரையில் 1) அடுத்தவருக்கு துன்பம் கோடுக்காமால் வாழ்வது 2) உண்மை பேசுவது, உண்மையைத் தேடுவது 3) குடும்ப வாழ்க்கை 4) பிறர் மனைவியை விரும்பாமை 5) ஒழுக்கமான வாழ்க்கை 6) விருந்தோம்பல்… இப்படியான பண்புகளின் படி வாழ்ந்து வந்த சமுதாயம் தான் இந்திய சமுதாயம், தமிழ் சமுதாயம்!//

    இது தான் இந்திய கலாச்சாரமா!!! இந்த கலாச்சாரம் தெரு நாய், பொரிக்கி தின்னும் பன்றி, குரங்கு கூட்டம் போன்ற எல்லா விளங்குகளில்டமும் இருக்குதே. இது தான் கலாச்சார புரிதல் என்றல் என்னன்னு சொல்றது.

  79. பென் அவ‌ர்க‌ளே,

    //இந்திய மக்கள் கலாசாரம் என்பது என்ன? எனக்குத் தெரிந்த வரையில் 1) அடுத்தவருக்கு துன்பம் கோடுக்காமால் வாழ்வது 2) உண்மை பேசுவது, உண்மையைத் தேடுவது 3) குடும்ப வாழ்க்கை 4) பிறர் மனைவியை விரும்பாமை 5) ஒழுக்கமான வாழ்க்கை 6) விருந்தோம்பல்… இப்படியான பண்புகளின் படி வாழ்ந்து வந்த சமுதாயம் தான் இந்திய சமுதாயம், தமிழ் சமுதாயம்!//

    இது தான் இந்திய கலாச்சாரமா!!! இந்த கலாச்சாரம் தெரு நாய், பொரிக்கி தின்னும் பன்றி, குரங்கு கூட்டம் போன்ற எல்லா விளங்குகளில்டமும் இருக்குதே. இது தான் கலாச்சார புரிதல் என்றல் என்னன்னு சொல்றது.//

    இதில் சில‌ ப‌ண்புக‌ள் வில‌ங்குக‌ள் ச‌மூக‌த்திலும் உள்ள‌ன‌.

    ஆனால் உல‌கில் ப‌ல‌ ச‌மூக‌ங்க‌ள் வில‌ங்குக‌ளை விட‌க் கேவ‌ல‌மாக‌ ந‌ட‌ந்து கொள்கிறார்க‌ள்.

    ஒரு பெண்ணை ச‌ந்திக்கும் போதே , அந்த‌ப் பெண்ணை எப்போது டேட்டிங்குக்கு அழைக்க‌லாம் என்று ம‌ன‌தில் எண்ணும் வாழ்க்கை முறையை, நாக‌ரீக‌மாக‌ கொண்ட ச‌மூக‌ங்க‌ள்‌ உள்ள‌ன‌.

    என‌வே- 1) அடுத்தவருக்கு துன்பம் கோடுக்காமால் வாழ்வது 2) உண்மை பேசுவது, உண்மையைத் தேடுவது 3) குடும்ப வாழ்க்கை 4) பிறர் மனைவியை விரும்பாமை 5) ஒழுக்கமான வாழ்க்கை 6) விருந்தோம்பல்… – இவை எல்லாம் க‌லாச்சார‌ம் இல்லை என்றால், வேறு எவை எல்லாம் என்று பென் அவ‌ர்க‌ள் விள‌க்கினால் நாங்க‌ள் தெரிந்து கொள்வோம்.

  80. நான் ஏன் விளக்கனும். நீங்க தான் கலாச்சார காவலர் நீங்க தான் விளக்கனும். எனக்கு கலச்சாரம் இனம் போன்ற போலியான அடயாளங்கள் தேவை இல்லை.

    //ஒரு பெண்ணை ச‌ந்திக்கும் போதே , அந்த‌ப் பெண்ணை எப்போது டேட்டிங்குக்கு அழைக்க‌லாம் என்று ம‌ன‌தில் எண்ணும் வாழ்க்கை முறையை, நாக‌ரீக‌மாக‌ கொண்ட ச‌மூக‌ங்க‌ள்‌ உள்ள‌ன‌.//

    பிறந்த உடனே கல்யாணம் செய்து வைக்கும் சமூகத்துக்கும், எவனோ தெரியாத ஒரு பன்னாடைக்கு கல்யாணம் பண்ணிவைக்கும் சமூகத்துக்கு இது எவளோ தேவை இல்லை. ‘கற் கால சிந்தனை’ இது தான் கலாச்சாராம் அவ்வளவு தான் வேற எதுவும் இல்லை நாங்க இப்பிடியே தான் இருப்போம் மாற மாட்டோம் ஆனால் நாங்க தான் ஒஸ்தி. சபாஷ் வேற பேசறதுக்கு எதுவும் இல்லை.

  81. பென் அவ‌ர்க‌ளே,

    இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு துணையைத் தேர்ந்து எடுத்து மணம் செய்து வைத்து குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
    காதல் திருமணங்களும் நடந்து வருகின்றன. நான் காதல் திருமணங்களையும் வரவேற்கிறேன்.

    இந்தியாவில் காதல் திருமணம் ஆனாலும், பெற்றோர் தேர்ந்து எடுத்த திருமணம் ஆனாலும், பெரும்பாலான தம்பதிகளின் மண வாழ்க்கை இறக்கும் வரையில் தொடர்ந்து இருக்கிறது.

    பல நாடுகளில் திருமணம் இல்லாத டேட்டிங்க் வாழ்க்கை முறையாக உள்ளது.

    நீங்கள் எந்த வாழ்க்கை முறையை உயர்வாகக் கருதுகிறீர்களோ, அதை நீங்கள் கூறலாம்.

    பெற்றோர் பார்த்து மணம் முடித்து வைத்தவருடனோ, அல்லது தானே காதலித்து மணம் முடித்தாவருடனோ சாகும் வரை வாழ்வது அவலமானது,
    மாதா மாதம் புது துணையை தேடி வாழ்க்கையை ருசிப்பதுதான் மேலான வாழ்க்கை, என்று நீங்கள் கருதினால், அதை கூறலாம்.
    நான் தடுக்கவில்லையே. உங்களைக் குறை கூறவில்லையே?

    //இது தான் இந்திய கலாச்சாரமா!!! இந்த கலாச்சாரம் தெரு நாய், பொரிக்கி தின்னும் பன்றி, குரங்கு கூட்டம் போன்ற எல்லா விளங்குகளில்டமும் இருக்குதே. இது தான் கலாச்சார புரிதல் என்றல் என்னன்னு சொல்றது.//

    //இது தான் கலாச்சார புரிதல் என்றல் என்னன்னு சொல்றது.//

    நான் புரிதல் செய்தது தவறு என்றால், எது சரியான புரிதல் என்று கூறினால் தானே புரிந்து கொள்ள இயலும்.
    விளங்கி கொள்ளவே கேட்டேன்.

  82. //இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு துணையைத் தேர்ந்து எடுத்து மணம் செய்து வைத்து குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.//

    இதனால் சாதியம் தான் கட்டி காப்பாற்றபட்டது. கல்யாணம் என்பது வெறும் சடங்கு உண்மையான வாழ்வு என்பது திருமணம். ஒருவரொருவர் கூடி வாழ வேண்டும் என்றால் எதற்கு கல்யாணம் கருமாந்தரம் எல்லாம். கல்யாணம் என்பது பெண் அடிமைத்தனம். பெரியார் பற்றி படித்த நீங்கள் இந்த விடயத்தை படிக்காதாது அச்சியரம் தான்.

    //பெற்றோர் பார்த்து மணம் முடித்து வைத்தவருடனோ, அல்லது தானே காதலித்து மணம் முடித்தாவருடனோ சாகும் வரை வாழ்வது அவலமானது,
    மாதா மாதம் புது துணையை தேடி வாழ்க்கையை ருசிப்பதுதான் மேலான வாழ்க்கை, என்று நீங்கள் கருதினால், அதை கூறலாம்.
    நான் தடுக்கவில்லையே. உங்களைக் குறை கூறவில்லையே? //

    கலாச்சார காவலரே இதில் உங்கள் பிரச்சனை என்ன. அந்த பகவானே ஆயிரத்தெட்டு வச்சிருந்தான் சாதரண மனிதன் வச்சிக்க கூடாதா. பெண்கள் வெச்சிக்கிடா சரி இல்லை உங்கள் சாஸ்திர படி, அதில் தானே பிரச்சனை.

    //நான் புரிதல் செய்தது தவறு என்றால், எது சரியான புரிதல் என்று கூறினால் தானே புரிந்து கொள்ள இயலும்.
    விளங்கி கொள்ளவே கேட்டேன்.//

    கலாச்சாரம் என்று சொல்ல படும் ஒன்றிற்கு வரை முறை கிடையாது. காலத்திற்கேற்ப மனித வாழ்விற்கேற்ப அதன் வரைமுறை மாறாவிடில் அது ஒரு கலாச்சாராம் என்று சொல்வதே அபத்தம். இதனால் தான் மேற்கத்திய நாடுகளில் சமூக மாற்றம் எங்கோ இருக்கும் பட்சத்தில் நீங்கள் அப்பா அம்மா பார்க்கும் பெண்ணை (ஒரு மாடை சந்தையில் பார்ப்பதுபோல்) திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு என்று கேட்கும் அவல நிலையில் நமது சமூகம் உள்ளது.

    P.S:கலாச்சார காவலரே குழந்தை திருமணம் எங்கு உள்ளது, டோவ்ரி பிரச்சனை, அடுப்பு வெடித்து இறப்பவர் எங்கே அதிகம், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் எங்கே அதிகம், சொந்த பெண்ணை வெட்டி கொல்வது எந்த நாட்டில் அதிகம், ஒரு திருமணத்தால் எங்கே சாதி வன்முறை நடக்கிறது. இது எல்லாம் இந்தியா என்ற புண்ணிய நாட்டில் தான். எல்லாம் கலாச்சாரத்தின் விளைவு தான்.

  83. சகோதரர் தனபால் அவர்களே,

    //நான் பார்த்த வரையில் திருச்சிகாரர் அறிவுப்பூர்வமாகவும்,நாகரீகமாகவும்,சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று அதை வீழ்த்துவது போல் தைரியமாகவும் வாதிடுகிறார்.அவரை எதிர்க்கும் நாத்திக வாதிகளும்,பிற மதத்தினரும்,அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
    -dhanabal//

    உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஆனால் நீங்கள் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோருமே நண்பர்கள்தான். இதில் சிங்கம் , குகை என்று எதுவும் கிடையாது. அருகருகே வசிக்கிறோம் , எல்லோரும் காலையில் இட்டிலி , பொங்கல் சாப்பி விட்டு பணிக்கு செல்லுகிறோம். கருத்துக்களை எடுத்து வைக்கிறோம். அதில் வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் எந்தக் கருத்தை யார் கூறினாலும், அதில் எவ்வளவு நன்மை உண்டு என்று அணுக முயலுவோம்.

    நீங்கள் யாரையாவது பாராட்டுவது என்றால், உண்மையில் சகோதரர் மதிமாறன் அவர்களே பாராட்டுக்குரியவர்.
    மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்கிறார்.

    சகோதரர் வினவு தளத்திலே ஒரே ஒரு பின்னூட்டம் தான் இட்டேன். அதையும் எடுத்து விட்டார்.

    அந்த வகையிலே சகோதரர் மதிமாறன் நான் பதிவு செய்த எல்லாவற்றையும் வெளியிடுகிறார்.

    சகோதரர் மதிமாறன் அவர்களே பாராட்டுக்குரியவர்.

  84. நன்றி திரு.திருச்சிக்காரர் அவர்களே,
    இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்.மாற்றுக் கருத்தை தொடர்ந்து அனுமதிக்கும் திரு மதிமாறன் அவர்களுக்கும் நன்றி.

    -dhanabal

  85. சகோதரர் matt அவர்களே,

    //விடயத்துக்கு வருவோம் , நாங்கள் சாதியை ஒழிக்க தயார் அதற்கு அடையாளமாக எங்களிடம் சாதியை குறிக்கும் எந்த குறியீடும் இல்லை. நீங்களும் சாதியை ஒழிக்க உங்கள் பூணூலை அறுத்து எறிந்துவிட்டு வாருங்கள். பிறகு சாதி ஒழிப்பை பற்றி பேசுவோம் !//

    நீங்கள் பூணூலை சாதியின் அடையாளமாக பார்க்கிறீர்கள். பூணூலை அணிந்தவர்கள் சிலர் அதை அணிந்ததாலேயே தங்களை உயர்வானவராக கருதிக் கொண்டதால் , அப்படி அவர்கள நடந்து கொண்டதால் நீங்கள் இப்படி கருதுவது புரிந்து கொள்ளக் கூடியதே.

    ஆனால் நான் பூணூலை அணிவது, நான் உயர்ந்தவன் என்று பெருமைப் பட்டுக் கொள்ள அல்ல, பிறரை வித்யாசப் படுத்தி வாழ்வதற்கு அல்ல.

    நான் பூணூலை அணிவது, அது என் குறிக்கோளை நினைவு படுத்துவதால். அது தவறான எண்ணங்கள் மனதில் எழும் போது எச்சரிப்பதால். நான் அணியும் பூணூல் எனக்கும் என் மனசாட்சிக்கும் தொடர்பு படுத்துவதாக உள்ளது.

    ஏன் எங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா, நாங்கள் எல்லாம் தறி கெட்ட வாழ்க்கையா வாழ்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்னது அந்த பொருளில் இல்லை. நீங்கள் வாழ்வது சிறந்த வாழ்க்கைதான். நாம் எல்லோரும் ஒரே முறையான வாழ்க்கையை தான் வாழ்கிறோம்.

    உண்மையிலே காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுக்கும் வரை, நாம் செய்யும் செயல்கள் , உண்ணும் உணவு , பேசும் பேச்சு எல்லாமே ஒன்றுதான்.

    அப்ப என்ன, பூணூலை அறுக்க வேண்டியதுதானே, இவ்வளவு பேச்சு பேசுறியே என்று நீங்கள் கூறலாம்.

    பூணூல் சில முக்கியமான விடயங்களை நினைவு படுத்துகிறது.

    குளித்து விட்டு வரும்போது, உடல் முழுவதையும் துவட்டினாலும், பூணூலில் ஈரம் போக அதை அழுத்தி துவட்டுகிறேன். அப்போது மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபட எனக்கு நினைவு வருகிறது. கூடுமான வரையில் எல்லா நாட்களிலும் , விடுமுறை நாட்களில் நிச்சயமாக வும் நான் மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபடுகிறேன்.

    நான் கடவுளை கண்டதில்லை என்றும், கடவுள் என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா என்பதை , அப்படி இருந்தால் நான் நேரில் கண்ட பிறகே அதை உறுதி செய்து கூற முடியும் என்பதையும் பல தளங்களில் எழுதி விட்டேன். இந்த முயற்ச்சியில் எனக்கு மனக் குவிப்பு அவசியமாகிறது.

    எனவே சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதான என் நோக்கத்திற்கோ, அதற்க்கு நான் தேர்ந்து எடுத்த பாதைக்கோ நான் அணியும் பூணூல் தடையாக இல்லை, தூண்டு கோலாகவே உள்ளது.

    நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது?

    நீங்கள் ஏன் பூணூல் அணிந்து ஒவ்வொரு நாளும், அல்லது குறைந்த பட்சம் வார விடுமுறை நாட்களிலாவது மனக் குவிப்பு பயிர்ச்ச்யில் ஈடு படக் கூடாது|?

    அப்படி தொடர்ந்து ஒரு 6 மாதம் மனக் குவிப்பு பயிற்ச்சி செய்து, அதனால் உங்கள மனம் அமைதியும், வலிமையும், முன்னேற்றமும் பெற்று உள்ளதா என்பதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாமே?

    என் மனதில் வித்யாசம் இல்லாத போது, நான் யாரையும் தாழ்வாக எண்ணாத போது, எல்லோரின் மன நிலையையும் சமத்துவ சமூகத்துக்கு உயர்த்துவதில் நேர்மையான நோக்கம் உடையவனாக இருக்கும் போது,

    “நான் பூணூலை அறுத்து விட்டேன், பார்த்தீர்களா நான் சமத்துவக் காரன்” என்று அறை கூவ வேண்டுமா?
    பூணூல் அணியாதவர்கள் சாதி வித்தாயசம் பார்க்கவில்லையா? பூணூல் அணியாதவர்கள் சாதி காழ்ப்புணர்ச்சி உடையவராக இருப்பதில்லையா?.

    சாதி வெறியும் , சாதிக் காழ்ப்புணர்ச்சியும் மனதில் தானே இருக்கிறது. அது பூணூலிலும் ஆடைகளிலும் ஒட்டிக் கொண்டு இருக்கிறதா?

    பள்ளிகளில் எல்லா மாணவர்களும் சீருடை அணிகிறார்கள்- சாதி வித்யாசம் மறைந்து விட்டதா?

    சன் கிளாஸ் அணிவது இரண்டு காரணக்களுக்காக இருக்கலாம்.
    ஒன்று கண்ணைக் காக்க, இரண்டாவது ஸ்டைலுக்காக.

    பூணூல் அணிவதும் இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம். ஒன்று தான் உயர்ந்த சாதி என்ற எண்ணத்தில். இரண்டாவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.

    நான் சன் கிளாஸ் அணிவது கண்ணைக் காக்க. பூணூல் அணிவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.

    நீங்கள் என்னை பூணூலை அறுக்க சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைப் பூணூல் அணியச் சொல்லுகிறேன்.

    நான் பாரதியார் அல்ல. நான் ஒரு சாமானியன். உங்களைப் போன்றவன்!

  86. என்ன திருச்சியாரே பதில் ஏதும் காணும். அப்பிடியே வேற topic போயிடேல்…

  87. Brother Ben,

    Bear with me for some time. I will be back. Also mention specifically as upon which comment you are keen to get that feedback!

  88. நான் நினைத்து பூணூல் சாதியின் அடையாளமாக வில்லை. உங்கள அறுக்க சொன்னால் என்னையே மாட்ட சொல்றீங்க. இது போல சப்ப கட்டுக்கள் பலபேரிடம் உண்டு. எல்லாம் பேசுவார்கள் சமுதாயம் சீர்திருத்தம் என்று ஆனால் அதை நடைமுறை படுத்த அவர்களுடைய சாதியோ, ஆசாரமோ தடுக்கும் இதுதான் உண்மை, மனதை ஒருநிலை படுத்தவும் , லட்சியத்தில் உறுதியாக இருக்கவும்,ஒழுக்கமாக இருக்கவும் பூணூல் தேவை என்றால் பூணூலை கண்டுபுடிச்சவனே சிரிப்பான்.
    அப்படி உங்களுக்கு இதுபோல எந்த தடையும் இல்லை என்றால் உங்கள் பழக்கத்தை மாற்றி கொள்ள நீங்கள் தயாராக இல்லை என்று அர்த்தம். இது எப்படி என்றால்,
    ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வரும்போது ஒரு பூனை குறுக்கும் நெருக்கும் ஓடி தொல்லை கொடுத்ததாம். ஆசிரியர் மாணவர்களிடம் அதை பிடித்து கட்ட சொன்னாராம். பிறகு ஆசிரியரும் இறந்துவிட்டார் ,பூனையும் இறந்துவிட்டது. அதன்பிறகு வந்த ஆசிரியரும் பூனை இல்லாததால் ஒரு பூனையை பிடித்து கொண்டுவந்து கட்டியவுடந்தான் பாடத்தை ஆரம்பிப்பார். இதுபோல் தான் சடங்குகளும் சம்பரதயாங்களும்.
    சீருடை போட்டுக்கொண்ட மாணவர்களிடம் வேற்றுமை இல்லையா என்றால் அதற்காக சீருடையை எடுத்துவிடலாமா? காவல் நிலையங்கள் இருந்தும் குற்றம் நடகிறதே காவல் நிலையங்களை மூடிவிடலாமா ? எல்லோரிடம் இருந்தும் வேறுபடுத்தி காட்டும் பூணூலை போட்டுகொண்டு எப்படி எல்லோரிடமும் இணைய முடியும்.எல்லோருக்கும் பொதுவான விடயத்தை பின்பற்றினால் தான் சமுதாயத்தில் கலக்க முடியும்.ராஜா காலத்து உடை உடுத்தி கொண்டு இந்த காலத்தில் உலவ முடியுமா அதுபோலத்தான்.
    சமுதாயத்தை திருத்த நினைக்கு முன் உங்களை திருத்திக்கொள்ள முயலுங்கள்.உங்களையே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள், உங்களுக்கே நிறையே உண்மைகள் தெரியவரும் ,அதை தெரிந்து கொண்டால் உங்கள் தவறை உணர்வீர்கள். நாம் மற்றவர்களை கேள்வி கேட்க தேவை இல்லை ,நம்மையே முதலில் கேள்விகேட்டு கொள்வோம். நீங்கள் வெற்றியடய வாழ்த்துக்கள். எல்லோரும் சேர்ந்து சாதியை ஒழித்து புதிய சமுதயாத்தை அமைப்போம்.

  89. சகோதரர் matt அவர்களே,

    //நீங்கள் வெற்றியடய வாழ்த்துக்கள். எல்லோரும் சேர்ந்து சாதியை ஒழித்து புதிய சமுதயாத்தை அமைப்போம்.//

    மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்களுக்கு தகுதியாகும் வகையிலே நடந்து கொள்வேன்.

    “எல்லோரும் சேர்ந்து” என்று நீங்கள் குறிப்பிட்டது எனக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது மிகவும் முக்கியம். இதுதான் சமத்துவத்தின் முதல் படி என்று எண்ணுகிறேன்.

    எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருப்பதுதான் சமத்துவத்தின் உச்ச நிலையும். எனவே முதல் படியையும், முடிவுப் படியையும் ஒரே வாக்கியத்தில் வைத்து வாழ்த்தியதற்கு நன்றி.

  90. matt sir,
    தென் மாவட்டங்களில் முக்குலதோருக்கும்,தாழ்த்தப்பட்டவர்களுக்கும் நெடுங்காலமாக பகை இருந்து வருகிறது.முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்களிடையே கூட ஜாதி வெறி அதிகமாக உள்ளது. பள்ளர் சமுதாயத்திற்கும் பறையர் சமுதாயத்திற்கும் இடையே திருமணங்கள் நடப்பதில்லை.சில கிராமங்களில் ஒருவர் தெருவுக்குள் மற்றொருவர் நுழைய முடியாத நிலை உள்ளது.இந்த இரண்டு சமுதாயத்துக்கும் இடையே அடிக்கடி கொலை,அடிதடி போன்ற சட்ட ஒழுங்கு பிரச்னை நடைபெற்றுக்கொண்டு இர்ருக்கின்றன.தயவு செய்து பகுதறிவாலர்களாகிய நீங்களும்,நாங்களும் தென் மாவட்டத்தில் உள்ள ஜாதி வெறி யை நீக்க ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம்.அதன் பின்பு பூணூல் விசயத்திற்கு வருவோம்.
    நானும் தென் மாவட்டத்தை சேர்ந்தவன்.இவர்களின் ஜாதி வெறியினால் பாதிப்படைபவர்களுடன் நானும் ஒருவன்.
    -தனபால்

  91. திரு Matt அவர்களே,
    எனக்கு தெரிந்த வரையில் உங்களைப் போன்ற பகுத்தரிவாளர்கலுக்குத் தான் ஜாதி (பிராமண ஜாதி மேல்) வெறி அதிகமாக உள்ளது .

  92. அய்யா கபிலரே.. போயும்போயும் இந்து மதத்துக்கா பரிந்து பேசுகிறீர்கள் ? இந்து மத்தய்ப் பற்றி அவ்வளவு உயர்வான எண்ணமா உங்களுக்கு ? உலகிலுள்ள மதங்களனய்த்தய்யும் ஒருபக்கத்தில் நிறுத்தினால், அதன் எதிர் திசய்யில் இந்து மதம் இருக்கும், பிறப்பால் ஒருவனய் தீண்டத்தகாதவன் என்று நாயய்விட கேவலப் படுத்தும் மதம் இந்துமத்தய்த் தவிர வெறு மதம் உண்டா ? அடுத்தவன் வீடு புகுந்து பிறன் மனய்வியய் வன்புணர்ச்சி செய்த கடவுள் வேறுமதத்தில் உண்டா ? அவன் கொடுத்த சாபத்தால் தன் ஆண்குறியே அம்பேலான கடவுள் வேறு மதத்தில் உண்டா ? ஆணும் ஆணும் உறவு கொண்டு பிள்ளய் பெற்ற கடவுள் வேறு மதத்தில் உண்டா ? ஆணய்ச் சேராமல் குழந்தய் பெற்று அதய்க் கடவுளாக்கிய பிறமதக் மடத்தனத்துக்கு இந்துமத இந்த அயோக்கியத்தனம் எந்த விதத்தில் குறய்வு ? என்னய்யா நண்பரே, நல்லவற்றய்ச் சிந்திக்கும் திறனய் இழந்துவிட்டோமா ? உங்களுக்கு அரிசி வேண்டுமென்றால் கடய்யில் போய் வாங்குங்கள், மலத்தய்க் கிளறி அரிசியய்த் தேடாதீர்கள் என்ற அய்யாவின் கருத்துதான் இப்போது நினய்வுக்கு வருகிறது.

Leave a Reply

%d bloggers like this: