நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்

கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களோடு, சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன்

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு:

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

பகுதி-2

பார்ப்பனர்களுக்கு விசுவாசமுள்ளவராக இருந்த காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

இதற்கான முடிச்சு தமிழ்நாட்லதான் இருக்கு.

நந்தனாரை, வள்ளலாரை எதற்கு கொன்றார்களோ அதற்காகவேதான் காந்தியையும் கொன்றார்கள்.

இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே ஜாதிக்கு எதிராக பேசுவது, இந்து மதத்திற்குள் பார்ப்பனர்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை செய்ய முயற்சிப்பது, இந்து மதத்திற்குள் தனது உரிமையை கோருவது, இந்துமதத்திற்குள் பார்ப்பனியத்திற்கு எதிராக சமயநல்லிணக்கத்திற்கு முயற்சிப்பது இதுபோன்ற எந்த செயலையும் பார்ப்பனர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி தீவிரமாக இயங்குபவர்களை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து சோரம் போக வைப்பார்கள். அதையும் மீறி முயற்சிப்பவர்களை கொலை செய்து விடுவார்கள்.

அப்படித்தான் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்த வள்ளலாரை ஜோதியில் கலந்தார்கள். சிவனை தரிசிக்க, சிவன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாடாய்படட நந்தனை கொளுத்தினார்கள்.

பெரியபுராணத்தில் வருகிற நந்தன் கதை அதைத்தான் உணர்த்தியது, எச்சரித்தது.

சமணம், புத்தம் சமயங்களால் வீழ்ச்சியுற்ற சைவசமயத்தை, பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்யவந்ததே பெரியபுராணம். அதனால்தான் அதில் வருகிற 63 நாயன்மார்கள் கதாபாத்திரங்களையும், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி அவர்களை முன்னுறுத்தி, சைவசமயத்திற்குள் அய்க்கியபடுத்தி எழுதப்பட்டது.

எல்லா ஜாதியைச் சேர்ந்த நாயன்மார்களுக்கும் காட்சி தரும்போது சிவன் பார்ப்பன உருவம் கொண்டுதான் காட்சி தந்திருக்கிறான். குயவருக்கு காட்சி தந்தால் குயவராகவோ, இயற்பகை நாயனார் என்கிற செட்டியாருக்கு காட்சி தரும்போது செட்டியாராகவோ கூட வரவில்லை. பார்பபன உருவம் கொண்டுதான் வந்திருக்கிறான். காட்சி தந்திருக்கிறான்.

கடவுள் பார்ப்பன உருவத்தில்தான் வருவானே தவிர சூத்திர உருவத்தில் வருவது அவனுக்கு இழுக்கு. பார்ப்பன உருவத்தில் வருவான், பன்னி அவதாரத்தில்கூட வருவான் ஆனால், சூத்திரர் உருவத்தில்வரமாட்டான். அது கடவுள் தன்மையின் புனிதத்திற்கு எதிரானது என்று உணர்த்துவதின் மூலம் பார்ப்பன மேன்மையை அதன் மூலமாக பார்ப்பன நலனை பாதுகாப்பது என்ற அழுத்தமான உள்ளர்த்ததோடு  எழுதப்பட்டது.

சூத்திரர்களுக்கு  எல்லாம் பார்ப்பன உருவத்தில் வந்து காட்சி தந்த சிவன், அப்படிக்கூட நந்தனார் என்கிற தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் நேரில் வந்தும் காட்சி தரவில்லை. கனவிலும் வரவில்லை.

சைவசமயத்திற்கு ஆள் பிடிக்கும் பிரச்சார முயற்சியில்கூட, தாழ்த்தப்பட்டவரை அங்கீகரிக்கிற தன்மையில் இல்லாமல், ‘புனிதமாக அவமானப்படுத்துகிற’, அங்கேயும் தீண்டாமையை கடைப்பிடித்து, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படி பிறஜாதி மக்களைபோல் இறைவனை வழிபட நினைப்பது கூடாது’ என்கிற கருத்தையும உள்ளடக்கிதான் நந்நனார் காதாபத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மற்ற ஜாதிக்காரர்களுக்கு காட்சி தந்த சிவன், நந்தனாருககு காட்சிதரவில்லை என்பது மட்டுமல்ல, நந்தனாரின் வேண்டுகோளுக்கு அவர் கனவில் வந்து பதில் சொல்லாமல், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் வந்து பதில் சொல்லியிருக்கிறான்.

தில்லைவாழ் அந்தணர்கள் அதான் தீட்சிதப் பார்ப்பனர்கள் நந்தனிடம், “சிவன் எங்கள் கனவில் வந்து சொன்னான். உன்மீது உள்ள தீண்டாமை என்கிற இழிவு நீங்கவேண்டுமானால், நெருப்பில் இறங்கி உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நெருப்பில் இறங்கி வெளியே வந்தால், நீ தூய்மையாகிவிடுவாய். உன்னை சிவன் ஏற்றுக்கொள்வான்.“ என்று சொல்லியிருக்கிறார்கள். நெருப்பில் இறங்குனப் பிறகு எங்க வெளியே வருவது? நந்தனின் கதையை இப்படித்தான் முடித்தார்கள் பார்ப்பனர்கள்.

ஆக, இந்துமதத்திற்குள் இருந்துகொண்டு, அல்லது இந்துமதத்தை ஒத்துக்கொண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக தன்னை அறியாமல் உண்மையான பக்தியோடு இயங்கினால்கூட கொலை செய்துவிடுவோம் என்பதாக எச்சரிப்பதுதான் நந்தன் கதை.

2000 ஆம் ஆண்டுகால வரலாற்றில், பார்ப்பனியத்தை இந்து மதத்திற்குள் இருந்துகொண்டு, ‘சிவன் நம் கடவுள், கண்ணன் நம் கடவுள்’ என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் யாரும் ஜெயித்ததில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் சைவசமயம் நம்முடையது. சிவன் நம்கடவுள் என்று முழங்கிய பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களின் கோமாளித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனியத்தின் இன்னொரு நுட்பமான வடிவமான சுயஜாதி பிரியத்திற்குள் சிக்கி மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது.

இந்தப் பார்ப்பன அல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களைப் போல் அல்லாமல், வள்ளலார் தனித்து இயங்கினார். அவரும் பார்ப்பனியக் கடவுளின் ஆதரவு நிலையில் இருந்து பார்ப்பனியத்தை எதிர்த்தார். அவருக்கும் சிவலோக பதவியைத்தான் தந்தார்கள் பார்ப்பனர்கள்.

அகம் வேறு, பிரம்மம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல், பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்.  இதை புரிந்துகொண்டு பார்ப்பனியத்தோடு துண்டாக கோடு கிழித்து எதிர்நிலையில் நின்றவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர், ‘பார்ப்பனியம்தான் வேதம். வேதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் போராடியதால்தான் ஜெயித்தார்.

2500 ஆண்டுகள் தாண்டி புத்தருக்கு பிறகு, ‘பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் நின்று பார்ப்பனியத்தோடு மோதிய பெரியாரும், அம்பேத்கராலும்தான் பார்ப்பனியத்தின் தோலுரிக்க முடிந்தது.

-தொடரும்.

மேடையில் பேசியசெய்திகளோடு, கொஞ்சம் புதிய செய்திகளை சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

9 thoughts on “நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்

  1. உண்மையிலேயே உங்களுக்கு மன தையிரியம் இருந்தால் , மற்ற மதத்தையும் பற்றி எழுதுங்களேன் ?

  2. Mr. Kuni,

    Its not proper to divert the accusations on Hindism and ask them to challenge the other religions.

    Castesim was part of Indian Soceity, which is still prevailing in India.

    The casteism, developed by Indian soceity was loaded and blamed on to Hinduism.

    There is no major accusations against Hinduism, except for casteism.

    Significant number of people had been suppressed due to casteism, and their anger and desparation has to be understood in the right concept.

    If you can make all Hindus equal atleast now, they can atleast find some solace.

    Instead if you react in this way, what is the use?

  3. Dear Thozhar,
    Naan thodarnthu ungal katturaiyai paditthuvarukiren,Miga seriyana niraivana nermaiyana katturaiyaga irunthadu.

    Mikka Nantri,Vazhatthukkal.

    Anbudan
    Pa.Selvaraj,Neelangarai,Chennai-600 041.

  4. Dear Anbarae,

    Vallalar patriya thangaludaiya mulumai yaana karuth thai arinthu kolla virumbuhiraen,,,,anuppi vaikumaaru vaendujiraen,,,

    thangal pani thodara vaalthukkal,,,

    Nallathambi

  5. There is very little sense in comparing Vallalar and EVR.It is like comparing mother theresa with Idi amin or bin laden.Vallalar was a great saint and a noble soul where as EVR was a cheap goonda ,thug and a terrorist.

    What one should compare is EVR and an insane canine;they are more comparable and compatible.

  6. வள்ளலார் இந்து மதங்களிலுள சாஸ்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்றும் ,புராணம்,இதிகாசம்,வர்ணம் ,குலம் ,கோத்திரம் இதெல்லாம் கற்பனைகதைகளே அன்றி வேறு எதுவும் இல்லை என்று சொன்னவர். ஆரிய மொழியே சிறந்தது, எல்லாவற்றுக்கும் தாய் பாஷை என்று கூறிய சங்கராச்சரியனை கண்டித்தவர். மதங்களை ,சாதிகளை வெறுத்தவர். “மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றவர். ஐயா பெரியார் , கடவுளை மறுத்து மனிதனை நினை என்றவர். ஒரு கும்பல் ஒட்டு மொத்த மனித இனத்தையே சுரண்டுவதை கண்டு பொறுக்காது கொதித்து எழுந்தவர். பெரியார் நேரிடையாக பார்பனர்களை தோலுரித்ததால் அவரால் பார்பனர்களின் ஆதிக்கத்தை உடைத்து பெரும் மாற்றத்தை கொண்டு வர முடிந்தது. இருவரின் நோக்கமும் ஒன்றுதான் வழிமுறை தான் வேறு வேறு .

  7. நண்பரே,

    – சாதி இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும்
    மேல் (?) சாதி யினர் இழைக்கும் கொடுமைகளையும்,
    தென் தமிழ் நாட்டில் நிலவும் இரட்டை டம்ளர்
    கொடுமைகளைப் பற்றியும் நீங்கள் விவரமாகப் பேச வேண்டும்/
    எழுத வேண்டும்.

    சாதிப் பித்து இப்போது தென் தமிழ் நாட்டில் தான்
    மிக அதிகமாகப் பீடித்திருக்கிறது.

    காவிரிமைந்தன்
    http://www.vimarisanam.wordpress.com

  8. Vazhatthukkal
    Thangal Pani thodara en VaZhatthukal

    by
    Panneer selvam(09867488167)
    Vizhithezhu Iyakkam
    mumbai

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading