பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
தமிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது.
அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களான ‘விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டார்கள்’ என்கிற செய்தியை அவசர அவசரமாக குதூகலத்தோடு, விஷேசப் படங்கள் என்ற வாசகத்தோடு, மகிழ்ச்சியோடு வெளியிட்டு, ‘கல்லாக் கட்டி’ குழப்பம் ஏற்படுத்துகின்றன.
இதுபோல் ஈழ பிரச்சினையில் தொடர்ந்து ஒரு சார்பாக செய்திகள் வெளியிடுகிற ஊடகங்களின் சதி வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் அலுவலகத்தில் ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்று கேக் வெட்டி கொண்டாடினார்களாம். இந்த மனோபாவம் கொண்ட யோக்கியர்கள் வெளியிடுகிற செய்தியின் யோக்கியதை எப்படி இருக்கும்?
இதுதான் இவர்களின் நடுநிலை. நல்லதிற்கும் கெட்டதிற்கும் நடுவில் இருக்கும் இவர்களின் மோசமான நடுநிலை. ஈழப்பிரச்சினையில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் நடத்திய வன்முறை, சிங்கள ராணுவத்தின் வன்முறைக்கு இணையானது.
ஈழமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள் என்கிற உண்மையை உறுதியாக ஆணித்தரத்தோடு வெளியிடாத ஊடகங்கள், ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று உறுதி செய்யப்படாத செய்தியை உறுதியாக வெளியிடுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து வெளியிடுவதின் நோக்கம் என்ன?
பிரபாகரன் இருக்கிறரா? இல்லையா? என்ற விவாத்தை விடுங்கள்.
ஆனால் 25 ஆயிரம் மக்களுக்கு மேல் அங்கு பலத்தக் காயத்தோடு உயிருக்குப் போரடிய நிலையில் ஆதரவற்று இருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அகதிகளாக தமிழகத்துக்குப் படகில் வந்த பலர் உணவின்றி வரும் வழயிலேயே இறந்திருக்கிறாகள் என்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டு, ‘பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்று தொடர்ந்து வெளியிடுவதில் ஏன் ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
செய்திகளைத் தாண்டி, ‘ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்தது’ என்று கருத்துச் சொல்லவேண்டிய கட்டாயம் ஊடகங்களுக்கு ஏன் நேர்கிறது?
இந்தக் கருத்துக்கும் ஊடகங்களுககும் நெருங்கியத் தொடர்பு இருப்பதால்தான் ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று உறுதி செய்யப்படாத செய்தியை, சிங்கள அரசின் சார்பாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
பெரும் திரளான மக்களைக் கொன்ற, சிங்கள அரசின் கொலைகளை மறைந்து ‘பிரபாகரனை கொன்று விட்டது’ என்று கொலைகார சிங்கள அரசை, வீரனைப்போல் சித்திரிக்க வேண்டிய project ஊடகங்களுக்கு தரப்பட்டிருக்கிறது. மக்களின் கவனத்தை திசைமாற்றும் தங்களின் வழக்கமான ஆள்காட்டி வேலையை ஊடகங்கள் கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றன.
ச்ச்சீசீ… இந்த ஈனச் செயலைச் செய்யும், இவர்களை உலகின் மிக மோசமான கெட்ட வார்த்தையால் திட்டினாலும் தவறில்லை….
”போங்கடா….ராஜபக்சே…”
***
20 05 2009 அன்று எழுதியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் மீண்டும் பிரசுரித்திருக்கிறேன்.
தொடர்புடயவை:
கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு
மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட திரு.வே.மதிமாறன் அவர்கள் வழங்கிய செவ்வி
‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com