இன்றுமுதல்….

காந்தியைப் போல் இந்தியா முழுக்க பரவலாக அறிப்பட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர். அதுவும காந்திக்கு எதிர்நிலையில் இருந்து ஓடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அரசியல் செய்து அதன்மூலமாகவே பெருவாரியான மக்களால் கொண்டாடப்படுகிற தலைவர் என்பது கூடுதல் சிறப்பு.

பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு இவைகளுக்காக, சுயஜாதி பற்றற்ற நிலையில் இருந்து போராடிய தலைவர். இந்த வகைப் போராட்டங்களில் தந்தை பெரியாரோடு மட்டுமே,  தத்துவ ரீதியாகவும் தோழமையாகிற தலைவர்.

சமூகநீதி அரசியலின் தொட்டில் என்று அழைப்படுகிற தமிழ்நாட்டில், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை, பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் வெளியிடவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த வெட்கப்படும்படியான  செயலாகவே கருதுகிறேன்.

இந்த தவறுக்கு பரிகாரமாக ‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.

அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

7 thoughts on “இன்றுமுதல்….

 1. அய்யா! மதுரையில வெளிவரவிலலையே?

 2. இத்திரைப்ப‌ட‌த்தை த‌மிழ‌க‌த்தில் வெளியிட‌ க‌டும் முய‌ற்ச்சி எடுத்த‌ அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் ந‌ன்றி.

 3. Dear Mathi,

  can you put some information of where I can pay some donation to this movie?

  Thanks

 4. மாபெரும் வெற்றியடைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாழ்த்துகள்..!

 5. வலிபோக்கன்,

  மதுரையில் அலங்கார் தியேட்டரில் வெளியாகி இருப்பதாக ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

Leave a Reply

%d bloggers like this: