‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி

நீதிபதி சந்துரு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடுக்க படடவழக்கின் தீர்ப்பில், நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள்,

‘ஆட்குறைப்பு எதுவும செய்யாது என்று அரசு உறுதி அளி்த்திருக்கிறது.’ என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான பரிந்துரையை அரசுக்கு செய்திருக்கிறார்; அது,

இந்த விவகாரம் தொடர்பாக இந்த நீதிமன்றம் அரசு செயல்படுத்தும் வகையில் சில கருத்துகளையும் தெரிவிக்கிறது. ஏற்கெனவே இருந்த பல்லவன் போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தபோது, வடக்கு மண்டல போக்குவரத்து கழகத்துக்கு வைக்கப்பட்ட அம்பேத்கரின் பெயரை மீண்டும் வைக்க வேண்டும். இதில் அரசு தயக்கம் காட்டக் கூடாது. இது தொடர்பாக ஏப்ரல் 13-க்குள் நடவடிக்கை எடுக்கப்படுமேயானால், அது அம்பேத்கருக்கு செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும். அவரது பெயரை வைப்பதில் தேர்தல் விதிகள் குறுக்கிடாது. ஏனெனில் அந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயர்தான் மீண்டும் வைக்கப்படுகிறது.’ என்று அரசுக்கு அறிவுரையும் பரிந்துரையும் செய்திருக்கிறார்.

இந்த வழக்கின் மனுதாரரோ, அல்லது வேறு யாரும் பரிந்துரைக்காத டாக்டர் அம்பேத்கர் பெயரை, நீதிபதி சந்துரு அவர்கள் பழைய சம்பவத்தை நினைவூட்டி, அவரது பெயரை வைப்பதில் தேர்தல் விதிகள் குறுக்கிடாது. ஏனெனில் அந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயர்தான் மீண்டும் வைக்கப்படுகிறது.’ என்று ஒரு சமூக பொறுப்புடன், தீர்ப்பளித்திருக்கிறார்.

மிக முக்கியத்துவமான, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சந்துரு அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிபதியின் இந்த அறிவுரையை அரசு உடனடியாக அமல் படுத்துமா? இல்லை, போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை வைப்பதால், தேர்தல் நேரத்தில், ஜாதி இந்துக்களின் ஓட்டை இழக்க வேண்டிவரும் என்று தள்ளி வைக்கமா?

உயர்நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று அரசை சமூக அக்கறை உள்ள அனைவரும் வலியுறுத்த வேண்டும். வலியுத்துவோம்.

தொடர்புடையவை:

அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

3 thoughts on “‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி

  1. //இந்த வழக்கின் மனுதாரரோ, அல்லது வேறு யாரும் பரிந்துரைக்காத டாக்டர் அம்பேத்கர் பெயரை, நீதிபதி சந்துரு அவர்கள் பழைய சம்பவத்தை நினைவூட்டி, ‘அவரது பெயரை வைப்பதில் தேர்தல் விதிகள் குறுக்கிடாது. ஏனெனில் அந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயர்தான் மீண்டும் வைக்கப்படுகிறது.’ என்று ஒரு சமூக பொறுப்புடன், தீர்ப்பளித்திருக்கிறார்//

    மிக முக்கியத்துவமான, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சந்துரு அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  2. நீதித்துறையில் ஒரு சில நீதிபதிகள் இவ்வாறு இருக்கிறார்கள்.

    மிக முக்கியத்துவமான, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சந்துரு அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நீதிபதியின் இந்த அறிவுரையை அரசு உடனடியாக அமல் படுத்துமா? இல்லை, போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை வைப்பதால், தேர்தல் நேரத்தில், ஜாதி இந்துக்களின் ஓட்டை இழக்க வேண்டிவரும் என்று தள்ளி வைக்கமா?

    உயர்நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று அரசை சமூக அக்கறை உள்ள அனைவரும் வலியுறுத்த வேண்டும். வலியுத்துவோம்..

Leave a Reply

%d bloggers like this: