ராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்?

ராஜாஜிதான் தமிழர்களுக்கான தலைவர் காமராஜர் தமிழர் நலனுக்கு எதிரானவர் என்று என் நண்பன் சொல்கிறான்?

-கு. செல்வநம்பி.

காமராஜரை பெரியரோடு, டாக்டர் அம்பேத்கரோடு ஒப்பிட்டு விமர்சிக்க முடியும்.

ஆனால், ஒருவன் ராஜாஜியோடு ஒப்பிட்டு காமராஜரை இகழ்கிறான் என்றால் அவன் நிச்சயம் குழந்தையை கழுத்த நெறுச்சி கொன்னுட்டு, அந்த தாயை பாலியல் வன்கொடுமை செய்து மகிழ்ச்சியடைகிற ஒரு சமூக விரோதியாகத்தான் இருப்பான்.

தன் ஆட்சியில் இந்தி திணிப்பை செய்த ராஜாஜி, தான் ஆட்சியில் இல்லாதபோது இந்தி எதிர்ப்பு, தேவிகுளம், பீர்மேடு போராட்டங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலை என்பதெல்லாம் தமிழ் உணர்வின் காரணமாக செய்யவில்லை. காமராஜருக்கு எதிரான நிலையில் இருந்துதான் செய்தார்.

எப்படியாவது காமரஜருக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி அவர் ஆட்சியை அகற்றிவிட்டு மீண்டும், தன்னுடைய தமிழ் விரோத, குலக் கல்வித் திட்ட, பார்ப்பன ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்திற்காகத்தான் அவர் செயல்பட்டார். ராஜாஜியின் அந்த சதியை முறியடிக்கத்தான் பெரியார், காமராஜ் ஆட்சியை உறுதியாக ஆதரித்தார்.

ராஜாஜியின் தமிழ் உணர்வு பற்றி, பெரியாரின் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால், ‘பாரப்பனர்கள் கோழிக்கு ரெண்டு கால் என்று சொன்னால் நான் கோழிக்கு மூன்று கால் என்று சொல்வேன்.’ என்பார்.

அவர்களின் அந்த உண்மைக்கு பின்னால் பெரிய சதி மறைந்திருக்கும் என்பதே பெரியாரின் கூற்று. அதையே ராஜாஜி தொடர்ந்து நிரூபித்தார்.

இந்த கேள்வியை கேட்ட திரு. செல்வநம்பி, உங்கள் நண்பர், பார்ப்பனராக இருக்க வாய்ப்பில்லை. பார்ப்பனர்களிடம் பொறுக்கி திங்கலாம், பார்ப்பன பத்திரிகைகளில் கட்டுரை எழுதியே தமிழர் தலைவனாக ஆகிவிடலாம் என்பது போன்ற திட்டம் உள்ளவராக இருக்கலாம். ஜாக்கிரதை.

உங்கள் வேட்டியும் நீங்களும்.

 

தொடர்புடையவை:

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்


12 thoughts on “ராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்?

  1. பார்ப்பன பத்திரிகைகளில் கட்டுரை எழுதியே தமிழர் தலைவனாக ஆகிவிடுவது தானே நடக்குது

  2. Pingback: Indli.com
  3. அண்ணே, டாப்

    ‘அவன் நிச்சயம் குழந்தையை கழுத்த நெறுச்சி கொன்னுட்டு, அந்த தாயை பாலியல் வன்கொடுமை செய்து மகிழ்ச்சியடைகிற ஒரு சமூக விரோதியாகத்தான் இருப்பான்’

    சீக்கரம் குணமாகனும் பெரியார் பாசறையில் வேண்டிக்கிறேன்!

  4. அர்ச்சகர் பணி சாதரமானது என்றால் அதை பங்கு போட்டுக்கொள்ள பிராமணனுக்கு ஏன் கசக்கிறது?
    தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க.

    சின்ன சின்ன கோயில்களில் உள்ள நடைமுறையை சொல்லி குழப்பவேண்டாம். அங்கேயும் வருமானம் கூடியவுடன் எப்படியும் நுழைந்து விடுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாமி பக்தி இருப்பதாக காட்டி கொள்ளும் உங்களுக்கு சாமி பயமும் இல்லை; அதர்ம பயமும் இல்லை. ஆண்டவன் உங்களை கோயிலுக்குள் சேர்க்கக்கூடாது;முடியாவிட்டால் ஆண்டவன் வெளியேறி விடவேண்டும்.

    கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.

    பிராமணன், பிராமணன் என்று நினைப்பதை நிறுத்தி தமிழன்/
    தெலுங்கன்/கன்னடன்/மலையாளி/ குஜராத்தி/மராத்தி/….என நினைக்கவும். தமிழ் பிராமனுக்கென்று
    தனி பாஷை, கலாச்சாரம், தனி அடையாளங்கள்- நாங்களா ஒதிக்கி வைக்கிறோம். சத்யம் பேசுங்கள். ஞாயமாக நடந்துகொள்ளுங்கள். முடிவில் தர்மம் தான் வெல்லும்.

    pl see link regarding Racism and solution:

    http://bruno.penandscale.com/search/label/Racism

  5. எப்படியாவது காமரஜருக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி அவர் ஆட்சியை அகற்றிவிட்டு மீண்டும், தன்னுடைய தமிழ் விரோத, குலக் கல்வித் திட்ட, பார்ப்பன ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்திற்காகத்தான் அவர் செயல்பட்டார்.//
    அதனால் ராஜாஜியின் கட்டளையை ஏற்று அண்ணா அவர்கள் குல தொழில் திட்டத்தை/பிராமணீயத்தை கொண்டு வருகிறேன் என்று அவருக்கு வாக்கு கொடுத்து இருப்பார் அதனால் ராஜாஜியை அண்ணா ஆதரித்து இருப்பார் என்று நினைக்கிறேன்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading