?!?!…தமிழர்களாமே…?!?!

பெரியார், அம்பேத்கார் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையாமே

சிவபாலன், தஞ்சாவூர்.

.சிதம்பரம், நாராயணசாமி இவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர்களாமே?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

8 thoughts on “?!?!…தமிழர்களாமே…?!?!

 1. பெரியார் தமிழரில்லை, திராவிடர்.
  அம்பேத்கர் தமிழருமில்லை, மராட்டியருமில்லை.. எல்லா அடையாளங்களையும் கடந்த “மனிதர்”.

 2. பகுத்தறிவுத் தமிழன்!!!

  திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல், சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் மக்களும்- தமிழர்கள் அல்லர்…

  தமிழ் நண்பர்களே!!!கொஞ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று ??? தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் போக அனுமதிக்குமாம்.ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.

  நாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்ன???முதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.

  ஆகையால் சாதி, மத, இன பேதமில்லா அணைத்து தமிழ் மக்களும்- நாம் தமிழர் என்று ஒன்றுபடுதல் -காலத்தின் அவசியம்.

  ஹி..ஹி..ஹி ..நம்ம தான் காது குத்து/மஞ்சள் நீர்/ வளைய காப்பு/ பத்திரிகையில் நம்ம பெயர் இடம் மாறியிருந்தாலோ / அல்லது விடுபட்டிருந்தாலோ – திராவிட பகுத்தறிவை பயன் படுத்தி உபயோகமுள்ள உறவுகளை எதிரிகளாக்கும் கலையை வளர்த்து வருகிறோமே???

  ஏன் நம்மை பத்து பதினைந்து சதவிகிதம் கூட இல்லாத மக்கள் தொடர்ந்து ஆள முடிந்தது / எதிர்கட்சியாக உட்கார முடிகிறது???

 3. “மொழியைக் காக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.”

  “இலக்கணம் என்று ஒரு படம் எடுத்தேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் முழுமையும் தமிழ் வசனங்களாகவே இடம்பெற்ற திரைப்படம் அது. ஆனால் அது 5 நாள்கள் கூட ஓடவில்லை. அந்தப் படத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை அழைத்துக் காண்பித்தேன். படம் குறித்து அவர் சொன்ன கருத்து “சிம்பிள் அண்ட் பெஸ்ட்’ என்பதாகும். தமிழின் நிலை அப்படி இருக்கிறது. தமிழை இங்கிருப்பவர்கள்தான் அழிக்கப் பார்க்கின்றனர்.

  “ஹி..ஹி..ஹி…மகன் செத்தாலும் பரவாயில்லை- மருமகள்(தமிழ்மகள்)தாலி அறுத்தால் போதும் எனும் நிலையில் திராவிடத் தமிழர்கள்.

  அவர்களை தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு புத்திசாலிக் கூட்டம்.

  அதை கண்டும்/காணாத தனக்குளே அடித்துக்கொள்ளும் தமிழினம்.

 4. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

  திருவள்ளுவரும் எதிர்கட்சியை சேர்ந்தவரா??? ஹி..ஹி..ஹி .. அவர் காலத்து ஒளவையார் அவர்களை சேர்த்துள்ளது தெரிய
  வில்லையா??? குதர்க்கம் பேசுவது சரியில்லை.

  Ref: http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=579821&SectionID=164&MainSectionID

 5. // “தமிழக அரசின் ஒளவையார் விருதைப் பெற உள்ள திருமதி ஒய்.ஜி.பி. புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார். பத்மா சேஷாத்ரி பால பவன் கல்வி குழுமத்தை நிறுவி, அதன் இயக்குநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்.
  சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்காக இவருக்கு 2010-ல் “பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப் பட்டது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இவரது மகன் ஆவார்”-தினமணி//

  தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை உல்டாவாக கடைபிடித்ததினால் சிறந்த கல்வியாளர் விருது பெறுகிறாரோ??? அரசு படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா?

  அனைத்து சாதி மக்களை சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்!

  ஹி..ஹி..ஹி.. நினைவில் கொள்ளவும் அவர்கள் ஊருடன் கூடி வீட்டில் வாழ்கிறார்கள். மேலும் இதை சமன் செய்யத் தானே தானே ராமர் பாலத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கிறோம்???

 6. “நல்ல வடிவேலு காமெடி”.

  ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

  நீ யாருடா கோமாளி?
  நானும் ரவுடி தான்.
  நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
  ஈக்குவலா பேசறேன் இல்லே?
  எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.
  உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?
  நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

  நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.
  நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.

  வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

  தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

  ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

 7. இவர்கள் எல்லாம் காந்திய வாதிகள்/.. அட காங்கிரஸ் காரங்க பா [ காந்தி கு இது தெரியுமா? ] தெரிஞ்சாலும் பரவா இல்லை .. அவரும் உண்டியல் குலுக்கினவரு தான … ஊழல் தேசிய குற்றம், கட்சிகள் அதன் ஆணையாளர்கள் . இதற்கு காங்கிரஸ் ஒரு வழிகாட்டி (தேசிய கட்சி அல்லவா)……. நிச்சயம் காந்தி வருத்த படுவார் நாட்டின் இன்றைய நிலை பார்த்து

 8. //பெரியார் தமிழரில்லை, திராவிடர்-வைசூரி அய்யர் (13:01:23) :அம்பேத்கர் தமிழருமில்லை, மராட்டியருமில்லை.. எல்லா அடையாளங்களையும் கடந்த “மனிதர்”.//

  வைசூரி அய்யர் சொல்வதை முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை. எடுத்துக்காட்டாக :

  (1) டாஸ்மாக் கடைகளில் குவியும்/ அழியும் பிராமணரல்லாத மக்கள்.

  (2)மூடப் பழக்கங்களுக்கு/ விசேஷங்களுக்கு/காரியங்களுக்கு காசை பாழாக்கும் பிராமணரல்லாத மக்கள்.

  (3) இன்னும் பல பலான காரியங்களில் மயங்கி அரியணையையும்; அண்டர் வேரையும் இழந்த பிராமணரல்லாத மக்கள்.

  இவற்றை கொழுப்பு என்று சொல்வதா/ அறியாமை என்பதா???

  ஹி..ஹி..ஹி… பகுத்தறிவூட்டிய திராவிடத்தந்தை பெரியாரைக் கேளுங்களேன்.- பிராமணர்கள்.

  ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்.. ஏமாற்றுகிறவனை விட்டு
  விடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: