‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ
பெரியாரை பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்கும், விமர்சிப்பதற்கும் காரணம் உண்டு. ஆனால், அவரால் பயனடைந்த பார்ப்பனரல்லாதவர்களும் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்களே ஏன்?
– திராவிடன்
பெரியார் எதிர்ப்பு என்பது பார்ப்பன ஆதரவின் தொடர்ச்சி.
தமிழ் நாட்டை பொறுத்தவரை, பார்ப்பனர்கள் மூலம் கிடைக்கிற லாபத்திற்கு, அங்கிகாரத்திற்கு, ‘தோழமை’ க்கு பார்ப்பனியத்தை, பார்ப்பன மேன்மையை ஒருவர் ஒத்துக்கொண்டால் மட்டும் போதாது; அவர் கண்டிப்பாக பெரியார் எதிர்ப்பாளர் அல்லது திராவிட எதிர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
‘பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்’ என்று உளவு துறை பாணியில், படு பச்சையாக பார்ப்பன ஆதரவுகூட இல்லாமல் இருக்கலாம்; ஆனால் கண்டிப்பாக பெரியார், திராவிட எதிர்ப்பு என்பது மிக முக்கியம்.
இது அந்த காலத்து ப. ஜீவானந்தம் தொடக்கம், அதுவே இன்றைய சில அறிவாளிகளின் வழக்கம்; அதற்கு மகாகவி பாரதியே இவர்களுக்கு பார்ப்பன நட்பின் பாலம்.
பெரியார் எதிர்ப்பும் பாரதி ஆதரவும் பார்ப்பன உறவின் முற்போக்கு வடிவம்.
இன்று கூட பார்ப்பன பத்திரிகைகளில் வேலை செய்கிற பெரியார் ஆர்வலர்களில் பலர் பாரதி, காந்தி, தமிழ் உணர்வு, ஈழ ஆதரவு, திமுக எதிர்ப்பு என்ற பெயரில் திராவிட எதிர்ப்பு என்றுதான் புழங்குகிறார்கள்.
முற்போக்காளர்கள், பார்ப்பன பத்திரிகைகளில் எழுதுகிற எழுத்தாளர்கள் பெரியார் எதிர்ப்பு, அம்பேத்கர் புறக்கணிப்பு அல்லது பெரியார், அம்பேத்கர் புறக்கணிப்பு என்கிற இந்த ‘டெக்னிக்’ கைதான் கையாளுகிறார்கள்.
இவர்களும் காந்தி, பாரதி ஆதரவு நிலையிலிந்து அங்கெங்கே தமிழ் உணர்வு, ஈழம் என்று தூவி, பார்ப்பன சார்பு கொண்ட தீவிர திராவிட எதிர்ப்பைதான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
தோழர் திராவிடன், நீங்கள் என்னிடம் கேட்ட இதே கேள்வியை பெரியாரிடமும் கேட்டார்கள் அதற்கு அவர் தந்த பதில்,
“பார்ப்பனரல்லாதவர்கள் என் மேல் கொண்ட கோபத்தினால்தான் என்னை விமர்சிக்கிறார்கள் என்பதல்ல, என்னை திட்டுவதின் மூலம் பார்ப்பானிடம் பொறுக்கி திங்கலாம் என்பதினால்தான்..” என்றார் பெரியார்.
பெரியார் எதிர்ப்பாளர்கள் யார்?
பார்ப்பன ஆதிக்கம் குறித்து அவர்களின் கருத்து என்ன?
இப்போது அரசியல் ரீதியாக யாரோடு சேர்ந்து புழங்குகிறார்கள்.. என்பதை எல்லாம் ஒப்பிட்டு பாருங்கள்;
பெரியார் ஒரு மாபெரும் சிந்தனையாளர் மட்டுமல்ல, தீர்க்கதரிசியாகவும் தெரிவார்.
**
‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. பேஷ்.. தலைப்பு ரொம்ப நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ.. அப்படியே வாசல்லேயே… நில்லுங்கோ..தோ.. சாதத்தோடு வந்துடுறேன்..
தட்டு வைச்சிருக்கேளா..கையிலியே ஏந்திக்கிறேளா..
தொடர்புடையவை:
பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!
பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்
‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு? ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும் பெரியாரின் ஊழல்‘ பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல் பெரியார்; தலித் விரோதியா? ‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு… தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும் ‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்கபோல’ என்ன செய்து கிழித்தார் பெரியார்? காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்
“பார்ப்பனரல்லாதவர்கள் என் மேல் கொண்ட கோபத்தினால்தான் என்னை விமர்சிக்கிறார்கள் என்பதல்ல, என்னை திட்டுவதின் மூலம் பார்ப்பானிடம் பொறுக்கி திங்கலாம் என்பதினால்தான்..” என்றார் பெரியார். unmai
இது தொடர்பாக நிறைய எழுதுங்கள்..அவசியம்..
மிகச் சரியானது. அவர்கள் கை தான் ஓங்கும் . நீங்கள் ஆதரிக்கும் தமிழன் அறிவற்ற அறிவாளிகள் ,அனைத்தும் பேசிவிட்டு அடிமை வாழ்வை தேடிகொள்வார்கள் .எடுத்துக்காட்டு அ தி மு க வெற்றி
இவர்களை ஒடுக்க அறிவாயுதம் ஏஇந்தி என்ன பயன் நாங்கள் கண்டிப்பாக ஏந்துவோம் …………………………………