‘லட்சியங்களை’ சந்தர்ப்பவாதத்தின் வழியாக அடையமுடியும்!

திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை நீங்கள் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

-மணிகண்டன்

அரசியல் பார்வையும் வரலாற்று கண்ணோட்டமும் இல்லாமல், பெரியாரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் என்று அடையாளப்படுத்தி, ‘திராவிட இயக்கம் தமிழர்களுக்கு, தமிழ் தேசியத்திற்கு எதிரானது’ ‘திராவிட இயக்கம் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டது’ என்று பஞ்ச் டயலாக் பேசுகிறவர்கள்,

இன்னொருபுறத்தில் திராவிட இயகத்தின் பெயராலேயே தலித் மக்களுக்கு தீங்கும், தமிழ்த்தேசியத்திற்கு துரோகமும் செய்த கைதேர்ந்த சந்தர்ப்பவாதிகளான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர், வைகோ போன்றவர்களை,

‘நீங்கள் இல்லை என்றால், இந்த தமிழ் சமூகத்திற்கு நாதியில்லை, தமிழர்கள் அனாதையாகி இருப்பார்கள்’ ‘ஈழ மக்களின் விடி வெள்ளி’ ‘தலித் மக்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள்’ என்றெல்லாம் கூசாமல் பேசுகிறார்கள்.

ஓட்டு அரசியலில் பங்கெடுத்த திராவிட இயக்கத் தலைவர்களின்  சாயம் முழுவதுமாக வெளுப்பதற்கு 30 ஆண்டுகள் ஆயிற்று.

அதற்கு பின் வந்தவர்களோ, கட்சி ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் தங்கள் முக்காடுகளை முழுவதுவமாக களைந்தார்கள்.

இப்போதோ தன்னை முற்றிலுமாக அம்பலப்படுத்திக் கொண்ட பிறகுதான் இயக்கம், கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

பல திராவிட இயக்க எதிர்ப்பு பேச்சாளர்கள் வாயை திறக்கும்போதே சந்தர்ப்பாவதத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள்.

திராவிட இயக்க சந்தர்ப்பவாதிகளைவிட, கைதேர்ந்த பிழைப்புவாதிகளாக இருக்கிறார்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.

திராவிட இயக்க சந்தர்ப்பவாதிகள், ஆட்சிக்கு வந்தபிறகே அதிகம் வெளுத்தார்கள். இவர்களோ  ஆசைபடும்போதே….

தொடர்புடையவை:

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

Leave a Reply

%d bloggers like this: