‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம்

daily_crazyfpsகாலச்சுவடு இதழ், ‘பெரியார்: ஒரு பார்வை’ என்ற தலைப்பில், பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன் என்பவர் 8 ஜனவரி 2012 அன்று சென்னையில் ‘சங்கம் 4’ – விழாவில் பேசியதன் ‘திருத்தப்பட்ட’ முழுவடிவத்தை வெளியிட்டிருக்கிறது.

அதில் பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன், அவரே தன் ஜாதியை குறிப்பிட்டு ‘நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த பெரியார். நான் படித்த அளவில் பிராமணர்களால் பார்க்கப்பட்ட பெரியார். நானும் பிராமணன் என மற்றவர்களால் அடையாளம் காணப்படுவதால் என் பார்வையில் பெரியார்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால் நானும் அவரை பெரியார் பாணியில் ‘பார்ப்பனர்’ என்று ஜாதி பெயருடன் குறிப்பிட்டிருக்கிறேன்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாள்’, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதன் தொகுப்பிலிந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன்.

காந்தி பற்றிய பெரியாரின் பார்வை என்ன என்ற என் விளக்கத்தை சுட்டிக் காட்டி, பிறகு என் விளக்கத்திற்கும் பெரியாருக்கும் நேர் மாறாக கிருஷ்ணனுக்கும் காலச்சுவடுக்கும் தோதான ‘வேறு ஒரு’ வகையில் மடை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

காலச்சுவடின் இந்த சில்லரைத் தனம், 2007 பிப்பரவி மாதம் நண்பன் கு. காமராஜ் நடத்திய விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதிலை நினைவுப்படுத்தியது.

அந்த நினைவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

*

காலச்சுவடு உலகத் தமிழ் இதழின்பாரதி 125’ எப்படி?
பத்ம விஸ்நாதன், மைலப்பூர்.

சிறப்பு. மிக சிறப்பு. ஒரு ஆளு நம்மளவர். ஆனா ஊதாரி என்று தெரிந்தால் கூட ஊதி, ஊதி அவனை எப்படி உலகத் தரத்துக்கு உயர்த்துவது என்பதை தெளிவாக ‘போட்டோ’ (எழுத்தில் கிராபிக்ஸ்) பிடித்து காட்டுயிருக்கிறார்கள், ‘பாரதி 125’ல்.

ஒருத்தர் நேர்மையளார், கொள்கையில் உறுதியானவர், பெரிய சிந்தனையாளர் ஆனால் ‘நம்பளாவாவுக்கு வேட்டு வைக்கிறவர்’ என்ற தெரிந்தால், உடனே ‘ஆய்வு, நடுநிலை, அறிவுப்பூர்வமான விவாதம், நிறை, குறை என்ற அலசல்’ என்று தங்களது ‘அறிவு நாணய’த்தைப் பயன்படுத்தி பொய், புரட்டுகளை கொண்டு எப்படி ஆப்படிப்பது?’ என்பதற்கு 2004 செப்டம்பர் காலச்சுவடு வெளியிட்ட ‘பெரியார் 125’ மிகச் சிறந்த உதாரணம்.

ஆம், பாரதியின் பார்ப்பன இந்து மனதை நாம் நிருபித்தபோதும், கஞ்சா புகையில் கலைந்து போன அவரின் தேசப்பற்றை சுட்டிக்காட்டிய பிறகும் (மருதையனின் ‘பாரதி அவலம்’, வாலாசா வல்லவனின் ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதி’, – ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி.) அறிவு நாணயத்தோடு அதை ஒத்துக் கொள்ளவோ, இல்லை அதற்கு மறுப்பு சொல்லவோ வக்கற்றவர்கள், எந்தக் ‘கீறலும்’ இல்லாமல், ‘பாரதி 125’ என்று பாரதியை சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில், ‘இந்து மக்கள் கட்சி’யை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது போல், 2004 செப்டம்பர் காலச்சுவடு இதழ் பெரியாரின் நேர்மையை சேதப்படுத்தியது. இந்து மக்கள் கட்யின் ஈனச் செயலுக்கு மிகச் சிறந்த எதிர்வினை இருந்தது.

ஆனால் காலச்சுவடுக்கு?

*

வே. மதிமாறன் பதில்கள் நூலிலிருந்து..

mathi1

தொடர்புடையவை:

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

One thought on “‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம்

  1. மொத்த கட்டுரைக்கும் பதில் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Leave a Reply

%d bloggers like this: