பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..
பார்ப்பன பத்திரிகைகளில் தனது ஜனநாயக கடமையை ‘சிறப்பாக’ செய்து கொண்டே; தமிழ்த் தேசிய, பெரியாரிய, மார்க்சிய, பிரபாகரனிய, தலித்திய, புரட்சிகர அரசியல் கண்ணோட்டத்தோடு கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்நது தனது இணையப் பக்கங்களிலும் Facebook லிம் சிற்றிதழ்களிலும், பத்திரிகை நண்பர்கள் எழுதி வருவது நாம் அறிந்ததே.
‘ஈழப் பிரச்சினை, ஜாதியப் பிரச்சினை இவைகளுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் மட்டுமல்ல, பெரியார் கூட காரணம்.’ ‘பிரபாகரன் ஒருவர் தான் தலைவர்’ ‘இனி மார்க்சியம் எல்லாம் எடுபடாது’, ‘ஸ்டாலின் மனித குல விரோதி’ ‘பெரியார், அம்பேத்கர் அரசியல் சந்தர்ப்பவாதம். ஜாதி ஒழிப்புக்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.’ ‘புரட்சி ஒன்றுதான் தீர்வு’
‘பெரியார் தலித் விரோதி’ ‘பெரியாரை தவிர்த்து விட்டு தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது’ ‘பகுத்தறிவு’ ‘இனஉணர்வு’ ‘இந்துத்துவாவை வேரறுக்க மோடியை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ –
என்றெல்லாமும் இதுபோல் பொருள்படும்படியாகவும் ஆவேசத்தோடு எழுதிய நண்பர்கள்;
இன்று ஆப்ட்ரால், ஜெயேந்திரனுக்கு எதிராக ஒரு வார்த்தையை தங்களின் ‘டைரி’யில் கூட எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
Facebook ல் ஜெயேந்திரன் விடுதலையை எதிர்த்து அடுத்தவர்கள் எழுதியதை Like செய்தால்கூட அவர்களின் வேலைக்கோ உயிருக்கோ ஆபத்து நேரிடுமோ என்னமோ? இது மிகவும் கவலையளிக்கிறது.
அவர்களின் பரிதாப நிலைக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம். அதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக சமரசமற்று தொடர்ந்து இயங்கிய, அவர்களின் கருத்தை கைது செய்து வைத்திருக்கிற பார்ப்பனப் பத்திரிகைகளின் நிர்வாகத்தை அம்பலப்படுத்தவோம்.
தங்கள் உயிரை துச்சமாக மதித்து, பார்ப்பனப் பத்திரிகைகளில் துணிச்சலோடு பணியாற்றும் முற்போக்காளர்களுக்கு நமது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.
நவம்பர்27, 2013 எழுதியது
தொடர்புடயவை:
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!
இதெல்லாம் ஆவுற கதையா…
பெரியார..இல்லை ஸ்சுடாலினா வந்து 1ம் தேதி சம்பளம் கொடுக்கபோறார்…
லைக்கு போட்ட.. பின்னால கோடுபோட்டுடுவாங்கன்னு தெரியும்போது அதை செய்ய்யுமளவு கேனையர்களாக்வா பத்திரிக்கையாளர்கள் இருப்பர்..
சன்டீவி அதுவும் தலித் தலைமயில் உள்ள சன் டிவியில்…
அகிலாவுக்காக ராஜவுக்கு எதிராக ஒரு சொல்கூட பேசாத வீரர்களை …
முதலாளி சொல்வதை செய்து பழக்கபட்டவர்களை…
லோக குருவுக்கு எதிராக பேச சொல்லும் உங்கள் கொடுர மனம் புரிகிறது..
உங்கள் சூழ்சிக்கு எல்லாம் அடிமையாகி.. வேலைதுறந்து நடு ரோட்டுக்கு வரமாட்டர்கள்..
பார்ப்பனியத்திற்கு எதிரான இவர்களது பதில் மெளனமே.
IF SHARIYATH LAW IS IMPLEMENTED, THESE TYPE OF JUDGEMENTS WILL NOT COME.
THE REMEDY IS ONLY SHARIYATH LAW.
மேல இருக்குற கோபால்சாமி நான் கிடையாது. குல்லா கவுத்த பாய் யாரா இருந்தாலும் அவுங்க கருத்த நேரடியா சொல்லலாம். இப்படி இந்து முக்காடு போட்டுக்கிட்டு சொல்லத் தேவையில்லை.