சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

Dec-28-gஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துவக்கி வைத்த சங்கர ராமன் கொலை வழக்கை, அதற்குப் பிறகு முதல்வரான கருணாநிதி நினைத்திருந்தால் அப்போதே முடிந்து வைத்திருக்கலாம். நீதி வென்றிருக்கும்.

மாறாக, கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசு ஆட்சியலிருக்கும் போதுதான், சங்கர ராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞம், சாட்சிகளும் ஜெயேந்திரனுக்கு ‘அப்ருவராக’ மாறினார்கள்.

ஜெமினி சர்க்கஸ், ஜம்போ சர்க்கஸ்களுக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு அரசு தரப்பு சாட்சிகள் ‘பல்டி’ அடித்தார்கள்.
அதன் காரணத்தினாலேயே ‘ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ கொலை குற்றத்திலிருந்து இன்று விடுதலை ஆகியிருக்கிறார்.

இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு திமுகவின் ‘சூத்திர’ ஆட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம்.

இப்போதும் கருணாநிதி ஒரு எதிர்கட்சியாககூட தமிழக அரசுக்கு எதிராக, ‘இந்த வழக்கில் ஜெயலலிதா அரசு மந்தமாக நடந்துகொண்டது. இந்த வழக்கை தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்ல மறுக்கிறாரே அதற்குப் பின் இருக்கிறது, அவர் ஆட்சி காலத்தில் அவர் எப்படி இந்த வழக்கில நடந்து கொண்டார் என்பதற்கு சாட்சி.

‘கருணாநிதி இலங்கை பிரச்சினையில் துரோகம் செய்து விட்டார்’ என்று இன்றும் பேசுகிற தமிழ்த் தேசியவாதிகள், கருணாநிதியின் இந்த ஜெயேந்திர ஆதரவை பற்றி இப்போதுகூட வாய் திறக்கவில்லை.

தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால், ‘பெரியார் பிறந்த மண்ணில் நடக்கிறது.’ ‘இது தான் திராவிட இயக்கங்களின் யோக்கியதையா?’ என்று தலித் விரோத்தை ‘தந்திரமாக’ பெரியாரோடு கோர்த்து கடுமையாக விமர்சிக்கிற, பார்ப்பன அறிவாளிகள், பார்ப்பன மார்க்சிஸ்ட்டுகள்;

‘பெரியார் பிறந்த மண்ணில் சங்கராச்சாரியருக்கு ஆதரவாக நடந்து கொண்டது திமுக. மற்றும் திராவிட இயக்க அரசுகள். இதுதான் திராவிட இயக்கதின் யோக்கியதையா?’ என்று கண்டிக்காமல் இருக்கிறார்களே ஏன்?ஏனென்றால் கண்டிப்பதில் பார்ப்பன எதிர்ப்பு இருக்கிறது.

ஒரு பார்ப்பனரின் கள்ள மவுனத்திற்குப் பின் பார்ப்பன சிந்தனையும் பார்ப்பனரல்லாத தலைவர், அறிவிஜீவிகளின் அமைதிக்கு பின் பார்ப்பன ஆதரவும் அந்த மவுனத்திற்குப் பரிசாக கிடைக்கிற லாபமும் ஒளிந்திருக்கிறது.

*

நவம்பர் 28 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

Bharatiya Janata Party மீது..?

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

19 thoughts on “சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

  1. சங்கர் ஆச்சாரிகள் இருவரும் விடுதலை ஆனதில் கலைஞர் ஆட்சி பங்கு பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. எழுதியதில் மகிழ்ச்சி. கலைஞர் இப்படி ஒரு வரலாற்று துரோகம் செய்ததன் காரணம் என்ன? சோழியன் குடுமி சும்மா ஆடாதே!

  2. 100% right statement. THAKI, anna nagar Ramesh, sanakaranarayanan, Sadhik, ramajayam, One has put the road and other using that road to escape. – Arvind

  3. Ithukkum karunanaithiyaaa karanam.thamil natilai ennaa pilai nadanathalum karunanaithyaaa karanam pongadaa pongadaaaa

  4. அய்யா.. தன்னளவில் யோக்யனாக வாழ்ந்து தன் உலகில் சுற்றியுள்ள அசிங்கங்களைத் தட்டிக் கேட்டு தான் நம்பும் நம்பிக்கைகளை (அது சரியா இல்லையா என்பது வேறு விசயம்) விசுவாசமாக இருக்கும் அப்பாவியை ரத்தக் குளத்தில் மிதக்கவிட்டார்கள்.. ஆனால் உங்கள் முந்தய பதிவில் அவரிடம் மார்க்ஸ்ஈய லெனிஈய மாவோவிஈய கண்ணோட்டம் உண்டா என்றகிற ரீதியில் உங்களைப் போன்ற மதிகள் கேட்கிறார்கள்… இந்த அழகில் கலைஞர் மட்டும் துரோகியாம்.. அட சங்கரா… பணம் அதிகாரம் அரசியல் என்னும் போது அண்ணன் என்னடா தம்பி என்னடா,,, திராவிடம் என்னடா ஆரியம் என்னடா கதைதான்…சரி.. நாம் ஈய சண்டையை தொடர்வோம்.. நான் ஈயம்.. நீங்கள் பித்தளை

  5. உங்களின் நேர்மையான தைரியமான இந்த விமர்சனம் பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்

Leave a Reply

%d bloggers like this: