டாடா ஊழியர் கொலை; சிக்கியது சிவப்பு சட்டை

chennaiengnrFEB250214

சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி  கொலை செய்யப்பட்ட வழக்கில்,
அவரின் A.T.M கார்டை திருடி பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்டவர்கள் என்று காவல் துறை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.

கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம் என்கிறது காவல் துறை.

சிவப்பு கலர் சட்டை மட்டுமே எப்படி கொலைக்கான அடையாளமாக இருக்க முடியும்? அப்படி இருந்தால் அந்த சட்டையை குற்றவாளிகள் அதற்குப் பிறகும் போட்டுக் கொண்டே இருப்பார்களா? பத்திரப் படுத்தி வைத்திருப்பார்களா?

இதேபோல் கடந்த ஆண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று வங்கியின் கேமராவில் பதிவான ‘கட்டம் போட்ட சட்டை’ என்று சாட்சி சொல்லி விசாரணையே இல்லாமல் 5 வட நாட்டு இளைஞர்களை சுட்டுக் கொன்று அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது போலிஸ்.

இன்றைய தினத்தந்தியில்,
கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வாக்குமூலம் விவரம் வருமாறு:

தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.
அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப் பிடித்து இழுத்தோம்.

இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.

உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13–ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.

போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச்சென்றோம்.’
என்று காவல் துறை தந்த செய்தி வந்திருக்கிறது.

இவர்கள் கொலை செய்யப்பட்டவருக்கு பழக்கமில்லாதவர்கள் போல் தான் இருக்கிறார்கள். அவர்கள் சொல்கிற சம்பவம் அப்படித்தான் அதை பதிகிறது.

ஆனால், ‘அந்தப் பெண்’ என்று சொல்லாமல் ‘உமா மகேஸ்வரி’ என்று ஒவ்வொரு முறையும் நன்கு தெரிந்தவர் பெயரை சொல்வது போல், பெயர் சொல்லியே சொல்கிறார்கள்.
அது எப்படி அவர்களுக்கு அவரின் பெயர் அந்த அளவிற்கு தெரிந்திருக்கிறது?

அது மட்டுமல்ல ‘எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13–ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.’ என்கிறார்கள்.

இந்த வாக்கியத்தில், அவர்கள் திட்டமிட்டு அவருக்காக காத்திருந்ததுபோல்தான் இருக்கிறது.

ஆனால், உமா மகேஸ்வரியோ கொலை நடந்த அன்று வழக்கத்தை விட முன்பாகவே வேலையிலிருந்து அனுமதி கேட்டு சென்றார் என்று இரண்டு நாட்களுக்கு முன் காவல் துறையே சொல்லி உள்ளது.

அவர்கள் குற்றவாளிகள் என்றால் காவல் துறை இன்னும் கூடுதல் ஆதாரங்களை தர வேண்டும். அவர்களின் முகத்தை மூடி வைத்திருப்பது ஏன்? எல்லா வழக்கிலும் இதுபோல்தான் காவல் துறை குற்றவாளிகள் முகத்தை மூடி வைத்ததா?

முகத்தை முற்றிலுமாக மூடி உள்ளே இருப்பது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கொண்டு வந்து அவர்களை பத்திரிகையாளர்களுக்கு முன்னால் எதற்கு நிற்க வைக்க வேண்டும்?
அதன் மூலமாக மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது காவல் துறை?
நாளை நீதி மன்றத்தில் நிறுத்தும்போது இவர்கள்தான் அவர்கள் என்பதை மக்கள் எப்படி அடையாளம் காண முடியும்?

இது போன்ற சந்தேகங்கள் இல்லாத அளவிற்கு பொது மக்களுககு அதை விளக்க வேண்டும். ஒருபோதும் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது.

*

இன்ற மதியம் face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

.சோ சொன்னது தவறு; ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ.. என்கவுன்டர் கூடாது

2 thoughts on “டாடா ஊழியர் கொலை; சிக்கியது சிவப்பு சட்டை

  1. காஷ்மீரம் தூரம் என்று
    கழுதைக்கு தெரியாது
    கற்பூரம் ஈரம் என்று
    கட்டெறும்பு அறியாது
    பாரம் இல்லை சுமை
    எங்கிருக்கு சொல்லுங்க

    அண்ணே கவிதை நல்லாருக்கா …….

  2. டீ கடை ,கட்டடம் கட்ட ,செங்கல் சூள , ….. குறைஞ்ச கூலினு கூட்டீட்டு வந்து எவ்வளவு தூரம் சுரண்ட முடியுமோ சுரண்டி ,வேல செய்யற இடத்தவிட்டு வெளிய கூட விடாம அடைச்சுவெச்சு ,கேட்டபார் இல்லனு எவ்வளவு அடக்குமுறைய முடியுமோ அவ்வளவு ஏவிட்டு(ஊர் புறங்க பக்கம் உள்ள ஆலைகளில் அடிமை தான்).குடும்பத்துக்கு ,பேரப்பிள்ளங்களுக்கு சேத்து வெச்சிட்டா எல்லாம் முடிஞ்சதுனு இருந்தா ,வடவன் தானனு மத்தவங்களும் வேடிக்க பாத்த .உறுதியா சொல்லலாம் . தமிழன் அடிமையாவான்.

    இளசெ(இ.ஜெயக்குமார்)

Leave a Reply

%d bloggers like this: