நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை
“தென்னை மரத்தோப்பினிலே
தேங்காயை பறிச்சிக்கிட்டு..
பக்தியுடன் நாங்கள் வந்தோம்..
மாரியாத்தா ஆ…
நீ.. எளநீர எடுத்துக்கிட்டு….’ (செல்லாத்தா..)
பழையப் பாட்டுதான். பலமுறை கோயில் ஒலிபெருக்கி மூலம் கேட்டது தான். இதன் தாளம் எவ்வளவு தூரத்திலிருந்து கேட்டாலும் என்னை வசீகரிக்கும். இன்று (ஜனவரி 9) காலையிலும் அதுபோலவே ஒலிபெருக்கியில் கேட்டேன்.
இந்தப் பாடலின் சிறப்பு, எல்.ஆர். ஈஸ்வரி.
திரை இசையில் அதிகமாக துள்ளலான பாடல்களை பாடியிருக்கிறார். தனது அழுத்தமான உச்சரிப்பாலும் நுட்பான சங்கதிகளோடும் ‘இனி இதை இதுபோல் வேறு யாரும் பாட முடியாது’ என்கிற முடிவோடும் இருக்கும் அவர் குரல்.
திரையில் அவர் பாடிய பாடல்கள், பெரும்பாலும் பெண்ணின் ‘Sexy Dance‘ க்காவே பயன்படுத்தப்பட்டது. அவர் குரல் பெண்ணின் விரகதாப உணர்வுக்கும் வேகமான பாடல்களுக்கும் மட்டுமே என்று முத்திரை குத்தப்பட்டு, ஆண்களின் ரசனைக்காக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டது.
ஆனால், திரைக்கு வெளியே அவருடைய தனிப்பாடல்கள், அதற்கு நேர் எதிராக ‘பக்தி’ சார்ந்து, பெண்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.
‘அம்மன் பாடல் என்றால் அது எல்.ஆர். ஈஸ்வரிதான்’ என்று பெண்களும் அவரின் விரகதாப பாடல்களை ரசித்த ஆண்களும் பக்தியோடு கேட்கிறார்கள் என்று அதை சாதரணமாக சொல்லிவிட முடியாது.
அவர் குரலை கேட்ட மாத்திரத்தில், அந்த அம்மனே தங்கள் மீது இறங்கி விட்டதாக கருதி ‘அருள்’ பெற்று தன்னிலை மறந்து ஆடத் துவங்குகிறார்கள்.
திரையில் அவர் பாடலுக்கு ஒரு நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடியதும், நிஜத்தில் அவர் பாடிய பாடலுக்கு பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; இது சாதாரண விசயமல்ல; சாதனை.
வேறு எந்தப் பாடகராலும் இப்படி இரண்டு எதிர் எதிர் உணர்வுகளோடு மக்களுடன் பயணிக்க முடியாது. ஆண்-பெண் இருபாலரிலும் எல்.ஆர். ஈஸ்வரிக்கு இணையாக இதுவரை இல்லை. இதில் இன்னும் கூடுதல் சிறப்பு, அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர் என்பது.
கத்தோலிக்க கிறிஸ்துவரான ஜேசுதாஸ், திரைக்கு வெளியே தன் கர்நாடக இசையின் திறமையை நிரூபித்துக் கொள்ள, பயன்படுத்த, அங்கீகாரத்திற்காகவும் தன் பார்ப்பன ‘பக்தி’யின் மூலம், ‘இந்து’ ஆதிக்க ஜாதிக்கார்களின் மனதில் இடம் பிடித்தார்.
எல்.ஆர். ஈஸ்வரியோ அதற்கு நேர் எதிராக தாழ்த்தப்பட்டவர்கள், மிக பிற்படுத்தப்பட்ட வண்ணார், குயவர், வன்னியர், கள்ளர், மீனவர் மற்றும் நாடார் போன்ற எளிய மக்களின் இறை உணர்வோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
இன்றைய சூழலில் ‘தமிழ் உணர்வு’ கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பேசுகிற இந்து ஜாதி தமிழத் தேசியத்தை விட, கத்தோலிக்க கிறிஸ்துவரான எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இந்து’ பக்திப் பாடல்களே முற்போக்கானதாக இருக்கிறது.
**
“தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு..”
தென்னை மரத்துலதான் தேங்காயை பறிக்க முடியும். மாமரத்துலய பறிக்க முடியும்?
“பக்தியுடன் நாங்கள் வந்தோம்.. மாரியாத்தா ஆ…”
இதுக்கு எதுக்கு பக்தி?
‘கடவுள் இல்லை’ என்று சொல்லிவிட்டு பறித்தால்கூட தென்னை மரத்திலிருந்து தேங்கா பறிக்கலாம்.
மாந்தோப்புல, மாமரத்துல தேங்காயை பறிச்சதான் பக்தி.
அப்பதான் ‘பக்தியுடன் நாங்கள் வந்தோம்.. மாரியாத்தா ஆ…’ என்று பாடினால் பொருத்தமாக இருக்கும்.
மற்றபடி, தென்னை மரத்துல தேங்காயை பறிக்கிறது பக்தியல்ல, தொழில்.
*
ஜனவரி 9 அன்று face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்
அருமை.
இதே எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி திராவிடர் கழகம் தயாரித்த இசைத்தட்டு ஒலிப்பேழையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.அதாவது செல்லாத்தா…பாடிய அதே காலகட்டம்.
1978 ல் டி.ஆர்.பாப்பா அவர்களின் இசையில் பாடிய அந்தப் பாடலின் பல்லவி இது:
“ பாருலகில் ஒரு பகுத்தறிவுச் சுடர்
காரிருள் நீக்கியது-பொய்க்
களங்கத்தை போக்கியது…”
அந்தச் சுடர்தான் தந்தை பெரியார்
இந்த உலகில் ஈடு இணை யார்…?
இந்தப்பாடலில்` கடவுள் இல்லவே… இல்லையென்றார்…”என்ற வரியும் உண்டு.
இந்த வரியை அவர் அழுத்தம் திருத்தமாகப் பாடுவார்.
தனது தொழிலை நேர்மையாகச் செய்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
திரை இசைப் பாடல் மட்டுமல்ல,தனிப் பாடல்களிலும் இசை அமைப்பாளர் சொன்னபடி,வார்த்தைக்கு அர்த்தம் விளங்கும்படி,
தமிழ் உச்சரிப்பில் அல்லது ஆங்கில உச்சரிப்பில் சரியாகவே பாடியிருக்கிறார்.
எவரும் பாடிட முடியாத பல பாடல்களை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது
அவரது பெயரை காலத்திற்கும் பேசவைக்கும்.
– மணிமகன்
கடவுள் இல்லை புகழ் எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க… போதுமா
இது மூலம் நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? ஈஸ்வரிய புகழ்ரீங்கன்னா அது சரி.ஆனா யேசுதாச ஏன் வம்பிழுக்கணும்.ஜாதி வேற்றுமையில்லாம கேரளத்தவர் யேசுதாச கொண்டாடுவது உங்களுக்கு தெரியுமா ?
This fellow must have gone through a hell of a time during his childhood and during adolescent period. That frustration shows all in his writings. What a life his relatives must be enduring I pity them
I concur with Abraham.
The author must have undergone severe childhood problems.
I am sure that led to this disease.
Mathi, please consult a doctor.
சிறு தெய்வ வழிபாடுல மிகுந்த ஈடுபாடு கொண்டவர் போல எல் ஆர் ஈஸ்வரி