காத்திருக்கிறார் கலைஞர்; கையில் மலர் வளையங்களோடு…

kalதேர்தல் தோல்விக்குப் பிறகு, கலைஞரின் மரணம் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதில் விவாதிப்பவர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கிறது.
அது இப்போதைக்கு நடக்காது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நம்பியாரின் மகனாக வரும் கல்யாணகுமார் தேவிகாவை காதலிப்பார். எதிர்ப்பின் காரணமாக இருவரும் இறந்து விடுவார்கள். பிறகு அவர்கள் மறு ஜென்மம் எடுத்து வந்து மீண்டும் காதலிப்பார்கள்.

ஆனால், போன ஜென்மத்தில் கல்யாணகுமாரின் தந்தையாக இருந்த நம்பியார், இருவரின் இரண்டாவது பிறப்பிலும் அவர்களின் வருகையை எதிர்நோக்கி உயிரோடு காத்திருப்பார்.

அதுபோல் கலைஞர், கையில் மலர் வளையங்களுடன் அதே வீல் சேரில் தன் அன்பான எதிரிகளுக்காக காத்திருக்கிறார்.
இதுவரை கலைஞருக்கு மலர் வளையம் வைப்பதாக சொன்ன பலருக்கு அவர்தான் மலர் வளையம் வைத்திருக்கிறார்.

அன்பான தமிழருவி மணியனுக்கெல்லாம் கண்ணீர் மல்க மலர் வளையம் வைக்காமல் கலைஞர் பயணம் முடியாது.

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..

வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …

3 thoughts on “காத்திருக்கிறார் கலைஞர்; கையில் மலர் வளையங்களோடு…

 1. சிலருக்கு வாழ்க்கை வரம் ,சிலருக்கு வாழ்க்கை ஒரு சாபம்.
  திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பார்கள்.அவ்வகையில் செய்த பாவங்களுக்கான தண்டனைகள் தீரும்வரை திருவாரூர்காரகளுக்கு இப்பிறப்பு முடியாது.
  (நாம் வாழும் பூமியின் புவிஈர்ப்பு விதிப்படி மேலே வீசிய எந்த பொருளும் கீழே வந்தே தீரும்,அது மொட்டாக இருந்தால் மலராக நம் தலையில்(வீசியவர் தலையில்) விழும் கல்லாக இருந்தால் பாறாங்கல்லாக வந்து விழும்.இது விழும் பொருளின் உரு மாற்றத்தை குறிப்பதல்ல.வீசியவர் ஆற்றலிழந்து போய் நிற்ப்பதையும் சேர்த்தே குறிக்கிறது.வலு இழந்த அந்நிலையில் சிறு துரும்பும் பெரு மலையாகவே தெரியும்.)
  அவ்வகையில் கலைஞர் இன்னமும் பல ஆண்டுகாலம் பலருக்கான மலர்வளையங்களோடு காத்திருப்பார்.
  தமிழருவி மணியனென்ன தமிழுக்கே மலர்வளையம் வைப்பதற்கான கால அவகாசம் கலைஞருக்கு உண்டு. மேலும் பல்லாண்டு காலம் கலைஞர் இருக்கட்டும்.

 2. முன்பு – செய்த தவறுகளுக்கு தண்டனை மறுபிறவியில்
  இப்போது – செய்த தவறுகளுக்கு தண்டனை இதே பிறவியில்

  தமிழருவி மணியனென்ன தமிழுக்கே மலர்வளையம் வைப்பதற்கான கால அவகாசம் கலைஞருக்கு உண்டு. மேலும் பல்லாண்டு காலம் கலைஞர் இருக்கட்டும்.

 3. என்ன ஒரு உள்குத்தலாக பதிவு இருந்தாலும் ,அவரின் இயல்பை படம் பிடித்து விட்டீர்கள்
  ”அதுபோல் கலைஞர், கையில் மலர் வளையங்களுடன் அதே வீல் சேரில் தன் அன்பான எதிரிகளுக்காக காத்திருக்கிறார்.”
  சே என்ன வரிகள் ..?அழகு .

Leave a Reply

%d bloggers like this: