‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா

 brahmin1
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய கிராமங்கள் முழுக்கவே அன்றும் இன்றும் தலித் மக்கள் தான் பல பகுதிகளில் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள். தொடர்ந்து கொடூரமான முறையில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால், கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் கூட அல்ல, காரணமே இல்லாமல் வெறும் ஜாதி காழ்ப்புணர்ச்சியால் படுகொலைச் செய்யப்படுகிறார்கள்.

பார்ப்பன அடிமைகளான பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதி வெறியர்கள் + பிற்படுத்தப்பட்டவர்கள் தன்னை ‘சூத்திரன்’ ‘பார்ப்பானின் வேசி மகன்’ என்று இழிவு செய்கிற பார்ப்பனியத்திற்கு எதிராக இதுவரை எந்த வன்முறையையும் நிகழ்த்தியதே இல்லை.

ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களை எந்த வகையிலும் இழிவாக நினைக்காத, மரியாதையாக நடத்துகிற, பார்ப்பனியத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்கிற தலித் மக்கள் மீதே, தொடர்ந்து வன்முறை நிகழ்த்துகிறார்கள்;
அது மட்டுமல்ல, சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் பிறப்பு முதல் இறப்பு வரை குழந்தை பிறக்கும் நேரம் தொடங்கிக் கல்யாணம், கருமாதி, தேவசம், திதி, என்று தன் வாழ்வின் எல்லா முக்கியமானவற்றையும் பார்ப்பனியத்தின் காலடியில் சமர்ப்பித்தே முடிவெடுக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக இன்றுவரை பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் ஜாதி ஆதிக்கத்தையும் சொகுசுடன் வாழ வைக்கிறார்கள்.

அதனால் தான் தலைவர் பெரியார் இடைநிலை ஜாதியின் பார்ப்பனிய அடிமைத்தனத்தின் மீது காறி உமிழ்ந்தார். இந்தியாவிலேயே அவர் ஒருவர் தான் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பார்ப்பனியத்திற்கான அடியாள் வேலையை மிக இழிவான வார்த்தைகளால் தொடர்ந்து கண்டித்தார்.

அப்போதும் கூடப் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறை வடிவமாக ஒருபோதும் அது மாறவில்லை. ஒரு பார்ப்பனர் கூடப் பெரியார் இயக்கத்தவரால் கொலை செய்யப்படவில்லை. தாக்கப்படவில்லை.

மாறாக பார்ப்பனர்கள், பார்ப்பன அடியாட்களான பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பெரியாரை தாக்கினார்கள், செருப்பால் அடித்தார்கள். தலித் மக்களோ பெரியாரை ஒருபோதும் தாக்கியதில்லை.

‘புனிதப் பார்ப்பனியமும் அடியாள் பிற்படுத்தப்பட்டவர்களும்’ இணைந்து, தலித் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை இப்போதும் தொடர்ந்து நடத்தியும் நியாயப்படுத்தியும் வருகிறார்கள். எப்போதுமே தலித் மக்கள் தான் பல பகுதிகளில் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்க, பிரச்சினையைத் தலைகீழாக்கி, தலித் மக்களின் நிலையில் பார்ப்பனர்கள் வாழ்வதுப்போல் ‘பிராமணர்கள் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள்’ என்று ஒருவர் சொன்னால், அவர் எவ்வளவு மோசமான தலித் விரோதப் பார்ப்பன ஜாதி வெறியராக இருப்பார்.

அப்படிச் சொன்னதை இன்னொருவர் நியாயப்படுத்தி, ‘ஆமாம், பிராமணர்கள் உண்மையில் தமிழ்நாட்டில் பயந்து கொண்டுதான் வாழ்கிறார்கள்’ என்று எழுதினால்… அவர் எப்படிப்பட்ட ‘எச்சக்கல’யாக இருப்பார்?

இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் எப்போதுமே, தலித் மக்கள் மீது வன்முறை நிகழ்த்துகிற பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்களைக் குறித்தும் ஜாதிகளைக் குறித்தும் ஒரு வார்த்தைக்கூடக் கண்டிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தானே பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் வாழவைக்கிறவர்கள்.

அவர்களைப் போலவே, இப்போது பலரால் பேசப்படுகிற ‘தமிழ்த்தேசியம்’ பிற்படுத்தப்பட்ட + பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதி உணர்வாளர்களின் தலித் புறக்கணிப்பு + பார்ப்பனிய ஆதரவு தமிழ்த்தேசியமாகத்தான் இருக்கிறது. தலித் மக்கள் மீது வன்முறை நிகழும்போது இவர்களின் கள்ளமவுனமே அதற்குச் சாட்சியாகிறது.

இது குறித்தும் ‘திராவிட – பெரியார்’ எதிர்ப்புப் பார்ப்பனர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களை ஆதரிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்கள், இவர்களைப் பச்சைத் தமிழர்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் விரும்புவதைத் தானே செய்கிறார்கள்?

அதேப்போல் முற்போக்குப் பார்ப்பனர்கள், தன்னைத் தலித் ஆதரவாளனைப்போல் சித்தரித்துக்கொண்டு, அதன் மூலமாக அவர்கள் பெரியாரை தான் அவதூறாக, பொய்யாகப் பிரச்சாரம் செய்வார்கள். காரணம், பெரியார் தானே பார்ப்பனியத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரானவர்.

பெரியாரை இழிவாகக் காட்டுவதின் மூலம் எழுகிற எதிர்ப்பை சமாளிக்க, தலித் அரசியல் பேசுகிறவர்களைத் தனக்கு அடியாட்களாகப் பயன்படுத்தித் தனக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாம்;
தலித் அரசியலை ‘இந்து+பார்ப்பனிய’ ஆதரவாக அல்லது பார்ப்பனியத்தை இந்து மத்ததை விமரிசிக்காத முறையாக மாற்றி விடலாம் என்கிற பெரிய திட்டத்தோடும்.
அப்படியே இந்து மதத்தின் தீவிர எதிர்ப்பாளரான பெரியாரை ஒழித்துக் கட்டலாம் என்கிற இன்னொரு முக்கியத் திட்டமும்.

ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா.

இப்படிப் பெரியார் எதிர்ப்புப் பார்ப்பனியத்தைச் செய்கிறவர்கள், வைதிகப் பார்ப்பனர்கள் அல்ல, ‘பார்ப்பன உணர்வே எனக்கில்லை’ என்று சொல்லுகிற முற்போக்குப் பார்ப்பனர்களே இந்த மோசடிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பெரியாரிஸ்டாகவும் தெரிவார்கள், நக்சலைட் போலவும் பேசுகிறார்கள்.

தலித் மக்கள்; இந்து மதத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும்போது, பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியலைச் செய்வார்கள். அவர்களின் தலித் விரோத செயலுக்குத் துணை நிற்பார்கள். ஈடுபடுவார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து இந்து+பார்ப்பனிய+ஜாதி x எதிர்ப்பாளர்கள் உருவானால், அவர்களை எதிர்கொள்ளப் பார்ப்பனர்கள், தலித் மக்களின் தோழன் போல் செயல்படுவார்கள். இம்முறை அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டர்கள். முற்போக்களார்களைத் தலித் விரோதிகளாகச் சித்தரிப்பார்கள்.

பாரதியார் போன்ற முற்போக்குப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, வரலாறு நெடுக இந்தச் சாணக்கிய தந்திரம் தான் பார்ப்பனியத்தைத் தொடர்ந்து உயிர்ப்போடு வாழ வைக்கிறது. இப்போதும் அதுவே நடக்கிறது.

‘பாவம் அவர்கள் பிராமணர்கள் – அதுவும் கலை, இலக்கிய முற்போக்குப் பிராமணர்கள்’ – ‘ஒரு பாவமும் அறியாதவர்கள்’
‘இந்த நாட்டில் ஜாதி வெறியிலிருந்து… எல்லா மோசடிகளையும் பிராமணரல்லாதவர் மட்டும்தான் செய்வார்கள். பிராமணர்களோ எப்போதும் போல் எறுப்புக்கு உணவளித்துக்கொண்டு இருப்பார்கள்’

December at 07:06

தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு

உயிரைப் பணயம் வைத்து வாழும்..

7 thoughts on “‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா

 1. தோழர் மதிமாறன் அவர்களே,
  சற்று காலம் கடந்ததுதான் என்றாலும் நல்ல, அவசியமான பதிவு!
  ஆனால்… நேரடியாகவே ஜெயமோகன் (http://www.jeyamohan.in/67150), (http://www.jeyamohan.in/67150), பத்ரி சேஷாத்ரி (http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/45408151.cms), பிறர் (வேறு யாரைச் சொல்கிறீர்கள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.) என்று நேரடியாகவே குறிப்பிட்டிருக்கலாமே? அதுதானே மதிமாறனின் சிறப்பு! பிறர் நேரடியாகப் பேசாமல் இருக்கும்போதுகூட நீங்கள் நேரடியாகவே பெயர் குறிப்பிட்டும் ஆணி அடித்தார் போலும் கருத்துச் சொல்லும் வழக்கமுடையவர். ஆனால்…

 2. வேந்தன். இல அதனால் தான் தலைவர் பெரியார் இடைநிலை ஜாதியின் பார்ப்பனிய அடிமைத்தனத்தின் மீது
  காறி உமிழ்ந்தார். இந்தியாவிலேயே அவர் ஒருவர் தான் பிற்படுத்தப்பட்ட
  ஜாதிகளின் பார்ப்பனியத்திற்கான அடியாள் வேலையை மிக இழிவான வார்த்தைகளால்
  தொடர்ந்து கண்டித்தார். அப்போதும் கூடப் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறை
  வடிவமாக ஒருபோதும் அது மாறவில்லை. ஒரு பார்ப்பனர்கள் கூடப் பெரியார்
  இயக்கத்தவரால் கொலை செய்யப்படவில்லை. தாக்கப்படவில்லை.
  மாறாக,
  பார்ப்பனர்கள், பார்ப்பன அடியாட்களான பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பெரியாரை
  தாக்கினார்கள், செருப்பால் அடித்தார்கள். தலித் மக்களோ பெரியாரை ஒருபோதும்
  தாக்கியதில்லை. // வரலாற்றை திரிப்பவர்கள் பெரியார் தலித் மக்களுக்கு எதிரானவர் என்ற கட்டுக்கதையை இப்போது கூறுகிறார்கள்.

  என்ன தான் வரலாற்றை திரித்தாலும், வரலாற்றில் நிகழ்ந்த உண்மை சம்பவங்கள் என்றும் மாறாது
  1 January at 04:17 · Unlike · 4

  வேந்தன். இல இந்தியாவிலேயே அவர் ஒருவர் தான் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பார்ப்பனியத்திற்கான அடியாள் வேலையை மிக இழிவான வார்த்தைகளால்
  தொடர்ந்து கண்டித்தார். அப்போதும் கூடப் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறை வடிவமாக ஒருபோதும் அது மாறவில்லை. ஒரு பார்ப்பனர்கள் கூடப் பெரியார் இயக்கத்தவரால் கொலை செய்யப்படவில்லை. தாக்கப்படவில்லை. மாறாக,
  பார்ப்பனர்கள், பார்ப்பன அடியாட்களான பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பெரியாரை தாக்கினார்கள், செருப்பால் அடித்தார்கள். தலித் மக்களோ பெரியாரை ஒருபோதும்
  தாக்கியதில்லை. – நாம் சிந்திக்க வேண்டியவை ..
  1 January at 04:21 · Edited · Unlike · 6

  Parimalan Manickam Super super superb article
  1 January at 04:52 · Unlike · 3

  திராவிடன் சுபவீ நேசன் · 82 mutual friends
  Great Article.. Excellent thought !!!
  1 January at 06:55 · Unlike · 2

  வே மதிமாறன் நன்றி.
  1 January at 06:57 · Like

  Sen Mun · Friends with Parimalan Manickam
  Excellent article
  1 January at 06:58 · Unlike · 2

  வே மதிமாறன் நன்றி.
  1 January at 06:59 · Like · 1

  Paruthi Ilamvaluthi · Friends with இளையராஜா சே
  Sir! I dont able to understand bramnasim.. Maximum They all now settle in us….then why u still scolding bramanism
  1 January at 08:31 · Like

  தமிழ் Kathalan அருமையான பதிவு தோழர் ….வழக்கமான வீரியம் ….வழக்கத்தை விட அதிகமான கோபம் …..வாழ்த்துகள் …தொடரட்டும் உங்கள் சமுக பணி….தொய்வு இன்றி அமைய என்றும் துணையாய் இருப்போம்…..
  1 January at 11:14 · Edited · Unlike · 3

  வே மதிமாறன் நன்றி.
  1 January at 18:56 · Like · 1

  Simbu Shankaran · Friends with பிரபா அழகர் and 5 others
  பிற்படுத்தபட்டவர்களின் ஒரூ சில சாதிகள் தங்களை நாங்களூம் பிராமனர்கள் தான் என்றே கரூதுகறார்கள்.அவர்களின் போக்கை உடையுங்கள்.பகிர காத்திருக்கிறோம்.
  1 January at 19:03 · Unlike · 1

  Simbu Shankaran · Friends with பிரபா அழகர் and 5 others
  பிற்படுத்தபட்டவர்களின் ஒரூ சில சாதிகள் தங்களை நாங்களூம் பிராமனர்கள் தான் என்றே கரூதுகறார்கள்.அவர்களின் போக்கை உடையுங்கள்.பகிர காத்திருக்கிறோம்.
  1 January at 19:04 · Like

  ச. கதிரவன் மிகச் சிறப்பான கட்டுரை தோழர், பார்ப்பனர்கள் , பார்ப்பனிய உணர்வாளர்கள் என்பர் எப்படி பட்டவர்களாக இருப்பர் எத்தகைய பார்வை இச்சமூகம் அவர்கள் மீது கொண்டுள்ளது. என்பதும் ஒப்பிடலிலும் சாதிபார்வை உள்ளது அதுதான் பார்ப்பான், பார்ப்பனிய புத்தி என்பது, எல்லா அக்கிரமங்களின் சூத்திரதாரியாக இருந்துக்கொண்டு எதுவும் தான் செய்யவில்லை மற்றவன் மீது பழிப்போட்டு தப்பிக்கொள்ளும் தந்திரத்தை பார்ப்பனர் அல்லதோரை பார்ப்பனிய போர்வையில் பகடைகாயாய் பயன்படுத்தும் பாங்கையும் அவர்களும் அதை பொறுட்படுத்தாமல் சாதிய படிநிலையில் தனக்கு கீழான மக்களை அச்சுறுத்தும் அவலத்தையும் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை தோழர்
  1 January at 21:57 · Edited · Like · 1

  வே மதிமாறன் நன்றி.
  1 January at 23:05 · Like

  Mnalla Sivam · Friends with பிரபா அழகர் and 33 others
  innum theavai ungal varaivu
  1 January at 23:13 · Like

  Sivakumar Shanmugam · 36 mutual friends
  வெள்ளைக்காரனுக்கு பிரித்தாளும் சூழ்ச்சியை சொல்லிக்கொடுத்த தந்திரம் வாய்ந்த நரிகளே இவர்கள்தான …உங்களைப்பற்றிய உண்மையான சொரூபம் தெரியாமல் பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் அடித்துக் கொண்டு செத்து மடிகின்றனர்
  1 January at 23:32 · Unlike · 1

  ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து அருமையான கருத்து ..

  ஜாதிய ஏனியில் மேல இருக்கிறவன், கீழ இருக்க ரெண்டு பேரயும் முட்டிக்கறத சந்தோசமா பாக்கறான் ..

  நடுவில இருக்கறவன், அடியில இருக்கிறவன விட மேல இருக்கோமேன்னு இருமாப்பு கொள்ளறான் ..
  2 January at 02:17 · Unlike · 3

  Sakthivelu Govindaraj · 36 mutual friends
  மிகச்சிறந்த பதிவு-நன்றி தோழர் மதிமாறன்
  2 January at 03:32 · Unlike · 1

  Anandan Atp இன்றைக்கும தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் நுழைவு போராட்டம் செய்கின்றனர் ஆனால் ் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்றைக்கும் கோவில் கருவறைக்குள் நுழைவு போராட்டம் செய்தது கிடையாது இன்றைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பொது புத்தியில் இடஒதுக்கீடு என்றால் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்கின்ற எண்ணமே உள்ளது
  2 January at 05:43 · Unlike · 6

  Periyarin Vediyalai Noki · 55 mutual friends
  Very good articles
  2 January at 06:37 · Unlike · 1

  வே மதிமாறன் தோழர் Anandan Atp சிறப்பானப் பார்வை. வாழ்த்துகள்.
  2 January at 08:35 · Like

  Shanmugam Vimala · Friends with Srinivasan Yazhini
  thanks good messages to v.mathimarran and srinivas all
  Yesterday at 10:09 · Like

  Vijay Baskar · Friends with தமிழன் வேலு and 14 others
  Marukkamudiyaatha unmai
  14 hrs · Like

  நீசிவா ஆதித்தமிழர் பேரவை தேனி · 11 mutual friends
  பதிவுகள் தொடருட்டும் நன்றி
  16 mins · Like

Leave a Reply

%d bloggers like this: