இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

இன்று நிறைய நேரம் இருந்தது. அதனால் காலைக் காட்சி வீட்லயே சாப்ளினின் ‘LIME LIGHT’ பார்த்தேன். ‘24 frames per sec’ என்ற இயல்பான சினிமா பாணிக்கு சாப்ளின் மாறிய பின் வந்த படம். அவரின் 65 வயதில்.

எப்போதும் சாப்ளின் படங்களில் பேரன்பு பொங்கி வழியும். உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக் கொடுக்கும். இந்தப் படமும் அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
ஆனால், இதுவரை அவரின் எந்தப் படமும் தராத, மீள முடியாத சோகத்தை இந்தப் படம் தந்துவிட்டது.
31 March at 17:55 ·

இளம் பெண் தெரசா (Terry). சிறந்த நடனக் கலைஞர். தன் வாழ்க்கையின் துயரங்களைத் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்து, படுத்த படுக்கையாக இருந்தபோது பக்கத்து அறையிலிருந்த 65 வயதான Calvero (சாப்ளின்) அவளைக் காப்பாற்றி, தன் பேரன்பால் மிகச் சிறந்த நடனக் கலைஞராக மீட்டு விடுகிறார்.

Calvero வின் பேரன்பால் திக்குமுக்காடிய தெரசா. Calvero வை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொண்டால், உங்களைதான் செய்து கொள்வேன் என்று தன் கண்ணீரில் காதல் சொல்கிறாள்.

வயது வித்தியாசம் பொருந்தாது என்று பக்குமாகவும் கோபமாகவும் சொல்லியும் கேட்காததால், Calvero தலைமறைவாகி விடுகிறார்.
Calvero வும் ஒரு கலைஞன் தான். மேடைகளி்ல் கோமாளி வேடம் போடுகிறவர். அதைவிட அதிகமாகக் குடிக்கிறவர். தன் கலைக்கு வரவேற்பு குறைந்து விட்டதால் துயரம் அவருக்கும்.

ஒரு Bar ல் பாட்டுப் பாடி பிழைத்துக் கொண்டிருக்கும் Calvero தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் தன் காதலை உறுதி செய்கிறாள் தெரசா. புகழின் உச்சியில் இருக்கும் அவள், தன் குழுவிலே Calvero வின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை மீண்டும் மேடை ஏற்றுகிறாள்.

‘Calvero… Calvero… Calvero…’ என்று அவள் ஒவ்வொரு முறையும் துடிக்கிற துடிப்பில், ‘இந்த உலகம் அன்பால் மட்டுமே இயங்குகிறது. மனிதர்கள் மகத்தானவர்கள்’ என்று அறிவித்துக் கொண்டே இருக்கிறது.

Calvero மேடை நிகழ்ச்சியின் போது காயம் பட்டுவிடுகிறார். அதோடு அவருக்கு ஹார்ட் அட்டாக்கும். தெரசா துடிப்பும், பதட்டமுமாய்த் துவண்டு போகிறாள். ஆனால், அடுத்து அவள் நிகழ்ச்சி. ஆடித்தான் ஆக வேண்டும்.

தெரசா ஆடிக் கொண்டிருக்கும்போது, Calvero (சாப்ளின்) அவள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இறந்து விடுகிறார். அது அறியாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள் தெரசா. படம் முடிகிறது.
*
Calvero வின் மரணத்தை என்னாலேயே தாங்க முடியவில்லையே? எப்படித் தாங்கப் போகிறாள் தெரசா? Calvero வைத் தவிர அவளுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்? இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

மதியத்திலிருந்து தெரசா வை நினைத்து என் மனம் படபடத்துக் கொண்டே இருக்கிறது.
31 March at 22:41

2 thoughts on “இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

  1. Shahul Umer · Friends with Dhalapathi Raj and 62 others
    இதுவும் கடந்து போகும் !
    நன்றி சாப்ளின்
    Unlike · Reply · 1 · 31 March at 18:09
    Chandru Mayas
    Chandru Mayas ஏன்? எதுக்கு? எப்படி?
    Unlike · Reply · 1 · 31 March at 18:10
    முருகன் தமிழன்
    முருகன் தமிழன் அதையும் விமர்சனமா எழுதுங்க தோழர்!
    Unlike · Reply · 1 · 31 March at 18:14
    Sushilavenkatesan Susi
    Sushilavenkatesan Susi · 2 mutual friends
    Neegal adaipaarthalum megakurmaithan ugal valarchiku karanam vazthukal
    Unlike · Reply · 1 · 31 March at 18:14
    ஞாநி சங்கரன்
    ஞாநி சங்கரன் · 39 mutual friends
    எனக்கு மிகவும் பிடித்த சாப்ளின் படங்களில் இது முதன்மையானது.
    Unlike · Reply · 4 · 31 March at 18:26
    Lenin Periyar
    Lenin Periyar · Friends with Surya Kumar and 1 other
    மதி அண்ணா அப்படி என்ன ஆச்சு?
    Unlike · Reply · 1 · 31 March at 18:46
    Syed Basheerudeen
    Syed Basheerudeen · 4 mutual friends
    உங்கள் மேடைப்பேச்சுக்களில் அதிகம் சினிமா தாக்கம் இருக்கிறது.
    Unlike · Reply · 1 · 31 March at 20:21
    Syed Basheerudeen
    Syed Basheerudeen · 4 mutual friends
    சூரியனின் ஏழாவது குதிரை என்ற பெயரில் ஒரு பெங்காளி படம் முன்பு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அருமையான திரைப்படம். வேலையில்லாத பட்டதாரி தன் அண்ணன் வீட்டில் தங்கி வேலைத்தேடும் நிலமை. படத்தின் பெயர் தெரியவில்லையாதலால் தேடியெடுக்க முடியவில்லை. நன்பர்களுக்கு ஏதும் ஐடியா இருந்தால் தாருங்கள்.
    Like · Reply · 31 March at 22:06
    Mathimaran V Mathi

    Write a comment…

  2. Vivek Anand · 2 mutual friends
    Chaplin the great actor..
    Unlike · Reply · 1 · 31 March at 22:50
    Syed Basheerudeen
    Syed Basheerudeen · 4 mutual friends
    படத்தை நாளையே நான் எப்படியாவது பார்த்துவிடுவேன்.
    Unlike · Reply · 1 · 31 March at 23:17
    Chandru Mayas
    Chandru Mayas நீங்க சொன்னதிலிருந்து நானும் தான்
    Unlike · Reply · 1 · 31 March at 23:23
    Selvaraj Singaram
    Selvaraj Singaram · Friends with தகடூர் சம்பத்
    ஐயா,இது எந்த திரைப்படம்.
    Like · Reply · 31 March at 23:54
    Kandasamy Subr
    Kandasamy Subr LIMELIGHT- Charlie Chaplin
    Unlike · Reply · 1 · 1 April at 08:09
    சூ.ம. ஆரோக்கியராசு
    சூ.ம. ஆரோக்கியராசு தோழர் வாய்ப்பு இருந்தால் இந்த படங்களையும் பாருங்கள் பதிவிடுங்கள்.
    V for Vendetta,
    Django,12year slave.
    Unlike · Reply · 3 · 1 April at 09:53
    Selva Ji
    Selva Ji · Friends with Annamalai and 32 others
    ஜங்கோ பர்த்துறுக்கேன் வீ கதை சரியா நினைவில்லை
    Like · Reply · 1 April at 13:38
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    தாம்பரம் மோகன்
    தாம்பரம் மோகன் · 40 mutual friends
    அருமையான காதல் கதை நன்றி தோழர்
    Unlike · Reply · 1 · Yesterday at 06:36

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading