WHOLESALE – ஏ.ஆர். ரஹ்மான்; ‘Sound வாங்கலியோ.. Sound’

எல்லாக் காட்சி ஊடகங்களுக்கும் ஒரே நாளில் சிறப்புப் பேட்டி. தன் தயாரிப்பை விற்பதற்கான விளம்பரம்.

ரஹ்மான் இசையை அல்ல, சப்தத்தை (Sound) ரிதமாகத் தயாரிக்கிறார். அதை இசை என்ற பெயரில் சந்தை படுத்துகிறார். சத்தத்தோடு கூவி, கூவி விற்றால்தான் பொருட்களை விற்க முடியும். அது பாடலாகாது.

அதுபோல் விளம்பரங்களுக்குச் சேர்க்கப்படும் பாடல்கள் அல்லது சத்தம் இசையாகாது. அதன் நோக்கம் பொருட்களை விற்பது.
அதன் தரத்தை மக்களின் ரசனை தீர்மானிப்பத்தில்லை. சந்தைதான் தீர்மானிக்கிறது.

அதனால் எப்படியாவது திட்டமிட்டு மக்கள் மீது திணிக்க வேண்டிய கட்டாயம் அவற்றிற்கு இருக்கிறது. இப்படித் திணிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் சந்தை சர்வதேச அளவில்.

ரஹ்மான் சந்ததைக்காகச் சப்தத்தைத் தயாரித்து இசை என்ற பெயரில் wholesale லுக்கு விற்கிறார். அதை வாங்குகிற சில்லரை விற்பனையாளர்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த பொருள் என்று கூவி கூவி விளம்பரப்படுத்துகிறார்கள்.

ஹாலிவுட் படங்களுக்கு இன்று இந்தியா பெரிய சந்தை. அதன் பொருட்டுதான் ‘இந்தி’ய திரையில் பிரபலமானவர்களின் பங்களிப்பை ஹாலிவுட் படங்களில் தொட்டுக் கொள்கிறார்கள். இந்தியில் பிரபலமான பிறகு ரஹ்மான் சர்வதேச சரக்காக மாறியதின் ரகசியமும் இதுதான்.

கோ க கோலா, பெப்சியும் இன்னும் சர்வதேச cosmetics கம்பெனிகளும் எப்படி ஜஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் இவர்களை உலக அழகிகளாகத் தேர்தெடுக்க வைத்து இந்திய சந்தையைப் பிடித்ததோ, அதுபோல் ரஹ்மானுக்கான இந்திய பின்னணி கொண்ட slumdog millionaire என்ற ஹாலிவுட் படத்தில் வாய்ப்பும் அதை ஒட்டி ஆஸ்கர் விருதும்.

அதனால் அவருக்கு எப்போதும் சந்தையில் பொருட்கள் விற்க வேண்டிய நெருக்கடி. ஆக, வியாபரிகள் மக்கள் எப்படி வாழ்கிறா்கள் என்று கவனிக்க மாட்டா்கள். அலட்சிப்படுத்துவார்கள்.

உயிரினங்களின் இயற்கையின் ஓசையும் மக்களின் வாழ்வியல் ஒலியையும் கேட்காதவர்களிடம் கற்பனையோ, உணர்வுகளோ இருக்காது. இவை இரண்டும் இல்லாதவர் இசையை ஒருபோதும் உருவாக்க முடியாது.
மற்றவர்களின் பாடல்களை, இசையை கேட்டு அதை தழுவுகிற டெக்னிக்கில்தான் கில்லாடியாக இருப்பார்கள். கலைக்கு டெக்னாலஜி தேவைப்படலாம். டெக்னாலஜி கலையாகாது.

தமிழ் திரைஇசையைத் தமிழர்களுக்கான இசையகாவே உயர்த்தி உன்னதமாக்கியவர் எம்.எஸ். விஸ்வநாதன். அதை உலக உன்னதமாக உயர்த்தியவர் இளையராஜா.

அதனால்தான் ‘நவீன’ ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களைக் கேட்பதைவிடவும் மிகப் பழைய எம்.எஸ்.வி. பாடல்களை அவர் காலத்தை விடவும் இப்போதுதான் அதிகம் கேட்கிறார்கள் தமிழர்கள். காரணம் அதில்தான் இசை இருக்கிறது.

திரை இசையின் உன்னதமோ இளையராஜாவோடு முடிந்துவிட்டது.
8 september

10 thoughts on “WHOLESALE – ஏ.ஆர். ரஹ்மான்; ‘Sound வாங்கலியோ.. Sound’

 1. // அதனால்தான் ‘நவீன’ ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களைக் கேட்பதைவிடவும் மிகப் பழைய எம்.எஸ்.வி. பாடல்களை அவர் காலத்தை விடவும் இப்போதுதான் அதிகம் கேட்கிறார்கள் தமிழர்கள். காரணம் அதில்தான் இசை இருக்கிறது. //
  ————-

  ஏ.ஆர். ரஹ்மானின் ஒரு பாடல் கூட மனதில் பதியவில்லை. இவரை எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, இளையராஜா ஆகியோருடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுள்ளது. இவரை ரஹ்மான் என அழைப்பதை விட சவுன்டு ராஜா என அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.

 2. அய்யாக்கண்ணு தலைமையில் போலி விவசாயிகள் தங்கள் மலத்தை தாங்களே தின்று போராட்டம் தமிழக விவசாயிகளை அவமதிக்கிறார்கள்

 3. ஒரு வேளை அனிதா தற்கொலை செய்யாமலிருந்திருந்தால்…

  நோய் நாடி நோய் முதல் நாடி என்பர்.. அனிதாவின் தற்கொலைக்கு காரணம் நீதி மறுப்பு, உரிமை மறுப்பு.. சிறு வயது முதலே டாக்டராக அவள் கண்ட கனவு கானல் நீரானது. 97 சதவீதம் பெற்றால் எனக்கு டாக்டர் சீட் நிச்சயமென நம்பி இரவு பகலாக அந்த அப்பாவி பிஞ்சு உள்ளம் உழைத்தது. தமிழக அரசாங்கம் தந்த பாட புத்தகங்களை வேத புத்தகமாக எண்ணி ஒவ்வொரு வரியையும் அடிப்பிறழாமல் மனனம் செய்தாள். 2000க்கு 1176 மதிப்பெண் பெற்றாள். அவளுக்கு பயிற்சி தந்த பள்ளி ஆசிரியர்கள் “உனக்கு டாக்டர் சீட் நிச்சயம்.. வாழ்த்துக்கள்” என பெருமிதம் கொண்டனர்.

  கடைசியில் “நீ பெற்ற மதிப்பெண் செல்லாது… நீட் தேர்வில் வெற்றி பெற் வேண்டும்” என அவள் தெய்வமாக நம்பிய அரசாங்கம் சொன்னது. அங்கேதான் அந்த தெய்வத்தின் மீது அவளுடைய நம்பிக்கை சுக்கு நூறாக சிதறியது. “எனது தெய்வமே என்னை ஏமாற்றிவிட்டால், இனி யாரை நம்புவது” என நொறுங்கி போனாள். அவள் நம்பியது பொய் தெய்வங்களை எனும் உண்மையை அவளுக்கு யாரும் சொல்லவில்லை. அவளுக்கு மட்டும் திருக்குரானை கொடுத்து ஏக இறைவன் அல்லாஹ்வின் பாதையை காட்டியிருந்தால், நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள். இந்நேரம் நீதியை மறுத்த அயோக்கியர் மீது ஜிஹாத் செய்திருப்பாள்.

  இனிமேல் அனிதாக்கள் தற்கொலை செய்யமாட்டர். தர்மயுத்தம் செய்வர். கண்ணனுக்கு தர்மயுத்தம் சொல்லித்தருவர். விணை விதைத்தவன் விணையறுப்பான், திணை விதைத்தவன் திணையறுப்பான் எனும் நீதியை நிலைநாட்டுவர். ஜிஹாத் செய்வர். அல்லாஹு அக்பர்.

 4. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரம் மிகவும் மட்டம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. CBSE பள்ளிகளின் தரம் தமிழக அரசு பள்ளிகளை விட பன்மடங்கு உயர்ந்தது என்பது கண்கூடு. கல்வி தரத்தை உயர்த்தாமல் நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது மடத்தனம். நீட் தேர்வை விட கடினமான தேர்வில் வெற்றி பெறுமளவுக்கு தமிழக அரசின் கல்வி தரத்தை உயர்த்துவதே அறிவுடைமை.

  வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்தனைய துயர்வு.

 5. அனிதாவின் ஆவி oruvelai திருப்ப்பி அடிச்சா தி மூ க வை தான் அடிக்கும்
  மாட்டுக்கறி தின்னாதே என்று எவ்வளொமுறை சொன்னபிறகும் மாட்டுக்கறி கொண்டுபோனானான் அக்லக் அவண் சாவு துரதிஸ்டவசமானது தமிழ்நாடு கல்வித்தரத்தை CBSE திட்டத்தை விட சிறப்பாக உயர்த்தவேண்டும் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி கட்டாயப்பாடம் விருப்பமொழி ஒன்று தொழில் கல்விக்கு ஏற்றாற்போல் பள்ளிக்கூடத்திலேயே கொண்டுவரவேண்டும் அரசாங்க கிளெர்க் வேலையை நம்பாமல் சுயமாக சொந்த கால்களில் நிற்கும் அளவுக்கு பசங்களை தயார் செய்யவேண்டும் இடஒதுகீடு வீடுக்கு ஒருவர் தலைமுறைக்கு ஒருவர் என்சரு கொண்டுவந்த 10 வருத்தத்தில் இடஒதுக்கீட்டாய் ஒழிக்கவேண்டும் தன்னம்ப்பிக்கை பயிர்ச்சி தரவேண்டும் தரமான ஆசிரியர் பயிர்ச்சி வெண்டும் லஞ்சம் ஒழித்தால் சாத்தியம் திராவிடம் ஒழிந்தால் லஞ்சம் பெருமளவு குறையும

 6. ஈ.வெ.ராமசாமியைப் பற்றி யாராவது விமர்சித்துப் பேசினால் உடனே அதை எதிர்த்து, சுய சிந்தனையற்ற ஒரு ஆட்டு மந்தைக்கூட்டம் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா?

  “தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது.

  உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து உரிமைகளும் அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்”

  – என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டுகிறார்கள்..

  ஆனால் உண்மை என்ன தெரியுமா?

  பெரியார் ஈவெரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரது வாழ்நாளில் ஒரு போராட்டம் கூட செய்ததில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.

  (1924 இல் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் என்பது பெரியாரின் போராட்டம் அல்ல .அது காங்கிரஸ்-காந்தி நடத்திய போராட்டம்.

  அதில் கலந்துகொண்டார் என்பதை தாழ்த்தப்பட்டோருக்காக போராடினார் என்று மிகைப் படுத்தினார்கள் .

  மேலும் வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப்பட்டோருக்கான போராட்டம் அல்ல.ஈழவர்-சானார்-புலையர் இடையிலான போராட்டம்….

  அப்படி அவர் தலைமையேற்று போராட்டம் நடத்தியது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் வைக்கம் போன்ற ஒரு போராட்டம் நடத்தவில்லை?

  தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெரியார் ஏன் தமிழ்நாட்டில் ஒரு போராட்டமும் நடத்தவில்லை?…..என்ற உண்மையை சிந்தித்துப்பாருங்கள் நண்பர்களே! .

  ..(இதே கேள்வியை தந்திடிவி பேட்டியில் வீரமணியிடம் பாண்டே கேட்டபோது அவரால் சரியான பதில் சொல்ல இயலவில்லை என்பதை பேட்டியை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். )..

  .நண்பர்களே! உண்மையான வரலாறு சொல்வது என்ன தெரியுமா?

  தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன .அவர்களில் சிலர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

  (இவர்கள் பெரியாரின் திராவிடர் கழகத்தினரால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட தலைவர்கள்.தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்த “தலித்”தலைவர்கள்)

  1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914)
  2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)
  3. எம்.சி.ராஜா (1883-1945)
  4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964)
  5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913)
  6. டி.ஜான்ரத்தினம் (1846-1942)
  7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936)
  8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938)
  9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944)
  10.ம.பழனிச்சாமி (1870-1941)
  11.சுவாமி தேசிகானந்தா (1877-1949)
  12.ஆர்.வீரையன் (1886-1938)
  13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955)
  14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935)
  15.ஜி.அப்பாதுரையார் (1890-1962)
  16.சுவாமி சகஜானந்தர் (1891-1958)
  17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962)
  18. பி.பரமேஸ்வரன் (1909-1957)
  19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973)
  20. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பணி அளவிட முடியாதது
  .
  – இதுபோன்ற தாழ்த்தப்பட்ட தலைவர்களின் அயராத உழைப்பினாலும் போராட்டங்களாலும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று முன்னேறியிருக்கின்றார்கள்.

  இதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் நடத்திய பத்திரிகைகள் :

  சூரியோதயம் (1869)
  பஞ்சமன் (1871)
  சுகிர்தவசனி (1877)
  திராவிடமித்திரன் (1885)
  திராவிட பாண்டியன் (1885)
  பூலோக வியாசன் (1900)
  தமிழன் (1907)
  ஆதிதிராவிட மித்திரன் (1907)
  ஆன்றோர்மித்திரன் (1910)
  மகாவிகட தூதன் (1886)
  பறையன் (1893)
  விகடதூதன் (1897)
  இல்லற ஒழுக்கம் (1899)
  மதராஸ் டெம்ப்ரன்ஸ்
  ஹெரால்ட் (1899)
  தமிழன் (கோலார்) (1926)
  சாம்பவகுலமித்திரன் (1930)
  ஆதிதிராவிட மித்திரன் (சென்னை) (1939)
  புத்துயிர் (1940)

  இதுபோன்ற எண்ணற்ற பத்திரிகைகள், மாநாடுகள், போராட்டங்கள், கூட்டங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்டோர் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத் தந்தனர்.

  ஆனால் இன்று #திராவிடர்_கழகம், தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் பெரியார் பெற்றுத் தந்ததுபோல பேசுவது, எழுதுவது யாரை ஏமாற்ற?

  தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இருட்டடிப்பு செய்யும் திராவிடர் கழகத்தினர்

  தாழ்த்தப்பட்டவர்களுக்கு #பெரியார் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் என்ற கேள்விக்கு பதில் கூறமாட்டார்கள் ஏன் தெரியுமா?

  அவர் அப்படி ஒரு போராட்டமும் செய்ததில்லை என்பதே உண்மை.

  பெரியார் வேசிகளின் வீட்டில் சல்லாபம் செய்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடியவர்கள் மேலே கூறப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்கள்தான் என்பதே உண்மையான வரலாறு..

  தமிழகத்தின் சாபக்கேடாக விளங்கும்
  திராவிட இயக்கத்தை ஆரம்பித்து, தமிழகத்தை வீழ்த்தியதே இவரது ஒரே சாதனை!

 7. Eligibility criteria for 85% MBBS and BDS state quota (by NEET merit list) in Tamil Nadu, 2017:

  1. Citizenship
  The applicant must be Indian National

  2. Overseas citizen
  Overseas Citizens of India who are registered under Section 7A of the Citizenship Act, 1955 (Central Act 57 of 1955) are also eligible. However, such candidates will need to produce the relevant certificate validating the fact

  3. Age
  The applicant must have completed the age of 17 years by the time of admission.

  **********************************
  4. Nativity — பூர்வகுடி சான்றிதழ்:
  The candidate should be the resident of Tamil Nadu

  Such candidate who studied VIII to XII standards in schools of Tamil Nadu do not have to attach the “Nativity Certificate”
  8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் படித்த இந்திய பிரஜைக்கு பூர்வகுடி சான்றிதழ் தேவையில்லை.

  Candidates belonging to Tamil Nadu but studied VIII to XII Std either partly or completely in schools situated outside Tamil Nadu will need to produce the nativity certificate.
  8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் தொடர்ச்சியாக படிக்காத தமிழர்கள் பூர்வகுடி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

  The certificate of the nativity must be issued by the competent authority in the prescribed format. Also, it must be supported by a copy of passport/ration card/birth certificate, if these copy are not produced the application form will be rejected.

  Without nativity certificate the application form will be rejected.

  Permanent residence certificate will not be considered.

  Also producing the false nativity certificate will lead to the initiation of criminal proceedings against the candidate as well as the parents as per provision of law.
  **********************************

  5.Educational Qualification
  The candidate should have passed the 10+2 with the following subjects Physics, Chemistry, Biology or Physics, Chemistry, Biology with any other subject

  https://www.entrancecorner.com/medical/articles/tamil-nadu-mbbs-2017-eligibility-criteria/

  நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உரிமையை பறிக்கவில்லை எனும் உண்மை இருட்டடிப்பு செய்யப்ப்டுகிறது. 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலத்தின் கோட்டாவில் அப்படியே இருக்கிறது. 15 சதவீத இடங்கள் மட்டுமே அகில இந்திய பொது கோட்டாவில் வருகிறது.

  தமிழக கோட்டாவில் இடம் கிடைக்க வேண்டுமானால், 8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் படித்திருக்க வேண்டும். இதற்கு தமிழராய் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழத்தில் 8-12 வரை 5 வருடங்கள் படித்த அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் தகுதியுண்டு.

  8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 வருடம் படித்த இந்திய பிரஜைக்கு பூர்வகுடி சான்றிதழ் தேவையில்லை.

  8 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் 5 வருடம் தொடர்ச்சியாக படிக்காத தமிழர்கள் பூர்வகுடி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
  ********************

  தந்தையின் பூர்வீக சான்றிதழை கொடுத்தாலும், தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பூர்வகுடி சான்றிதழ் வழங்கப்படுமென தாசில்தார் சொல்கிறார்.

  துபாயில் பிறந்து, வளர்ந்து, துபாய் CBSE பள்ளியில் படித்த எனது நன்பரின் பெண் பெற்ற மதிப்பெண்கள்.

  Maths: 100%
  Physics: 100%
  Chemistry: 98%
  Biology: 99%

  ஆனால் அவருடைய பெண் தமிழகத்தில் பிறக்கவில்லை, ஆகையால் பூர்வகுடி சான்றிதழ் தரமுடியாது என அந்த வட்டார தாசில்தார் மறுத்துவிட்டார். அதே சமயம், அந்த பெண்ணை போலவே துபாயில் பிறந்து வளர்ந்த மற்றொரு தமிழ் பெண்ணுக்கு பூர்வகுடி சான்றிதழ் எந்த பிரச்னையுமில்லாமல் கிடைத்து விட்டது. விசாரித்த போது, இது போன்ற சட்டமே இல்லை. தந்தையின் பூர்வகுடியை வைத்து, கோர்ட் மூலம் பூர்வகுடி சான்றிதழ் வாங்க முடியுமென சொல்லப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த அடிப்படையில்தான் பூர்வகுடி சான்றிதழ் காலங்காலமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  அந்த பெண்ணின் தந்தை நல்ல வசதி படைத்தவர். ஒரு கட்டத்தில் ஆஸ்த்ரேலியாவில் படிக்க வைக்கவும் முடிவு செய்துவிட்டார். அதற்குள் அந்த பெண்ணுக்கு நீட் தேர்வு மூலம் மனிப்பால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. “நீட் மட்டும் இல்லாவிட்டால், நான் தற்கொலை செய்திருப்பேன்” என அந்த பெண் சொன்னார். அப்பாவி தமிழரின் உரிமையை நசுக்குவது மத்திய அரசல்ல, தமிழக அரசை நடத்தும் மானங்கெட்ட அடிமை நாய்கள் என்பதை யாரிடம் சொல்லி அழுவது?…

 8. அதில் எனது மனத்தில் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டிய பகுதி இதோ —->>

  உயிரினங்களின் இயற்கையின் ஓசையும் மக்களின் வாழ்வியல் ஒலியையும் கேட்காதவர்களிடம் கற்பனையோ, உணர்வுகளோ இருக்காது. இவை இரண்டும் இல்லாதவர் இசையை ஒருபோதும் உருவாக்க முடியாது.
  மற்றவர்களின் பாடல்களை, இசையை கேட்டு அதை தழுவுகிற டெக்னிக்கில்தான் கில்லாடியாக இருப்பார்கள். கலைக்கு டெக்னாலஜி தேவைப்படலாம். டெக்னாலஜி கலையாகாது.

  —>> இந்த பொருள் நயம் கொண்ட கட்டுரையில், குறிப்பாக
  மேற்கண்ட வரிகள் என்னை மிகவும் ஆழ்ந்து சிந்திக்கத் செய்தன.

Leave a Reply

%d bloggers like this: