இந்திக்காரரின் இந்தி திணிப்பு எதிர்ப்பு

UPயை சேர்ந்த இந்திக்காரர். தீவிர திமுக உறுப்பினரான திககாரர். அவர் வீட்டின் டேபிளை முரசொலி விடுதலை தினகரன் நாளிதழ்கள் அலங்கரிக்கின்றன. இது 40 ஆண்டுக்கால வழக்கம் என்கிறார்.

ஆசிரியர் கி. வீரமணி அவர்களைப் புரவலராகக் கொண்ட பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக 1973 முதல் 2022 வரை வியாழக்கிழமை தோறும் விடாமல் 2400 கருத்தரங்குகளை நடத்தியவர்.

2014 ஆண்டு அவர் நடத்திய கருத்தரங்குகளில் நான் பேசியதுதான் என்னை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுபோனது.

பெரியார் திடலில் நானும் பேசுவதற்கு காரணமானவர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அடுத்த ஆண்டே எனக்குப் பெரியார் விருது தருவதற்கும் அவர் நடத்திய நிகழ்ச்சிகளே காரணம்.

அப்போதெல்லாம் அண்ணாவை மேடையில் அண்ணாதுரை என்றுதான் குறிப்பிடுவேன். ‘அண்ணா’ என்றுதான் சொல்லவேண்டும் என்றவரும் இவர்தான்.

1. பெரியாரும் தமிழ்த்தேசியமும் 2. பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர் அம்பேத்கரியல் பார்வை 3. காந்தி கொலையும், கோட்சே சிலையும் 4. பெரியாரும் பெண்ணியமும்

1 மணிநேரம் பேசுவதற்காக ஒவ்வொரு தலைப்பிற்காகவும் ஒரு மாதத்திற்கும் மேல் உழைத்திருக்கிறேன். அன்று தயாரித்த அந்த ஆய்வுரைகள்தான் இன்றுவரை பல தலைப்புகளில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எழுதுவதற்கும் ஒரு நூலகம்போல் என் நினைவு சேமிப்பில் குவிந்துக் கிடக்கிறது.

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளால் 3 ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வெடுப்பதால் அவர் நிகழ்ச்சிகள் நடத்துவதுமில்லை. வருவதுமில்லை.

இன்று அவரை பார்க்க வேண்டும் போல் இருந்தது. நண்பர் சாரதியுடன் சந்தித்தேன்.

இன்றுதான் ஐயா சத்தியநாராயணசிங் இந்திக்காரர் என்பதையும் தி.ககாரர் அல்ல தி.மு.ககாரர் என்பதையும் அறிந்து கொண்டேன்-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading