இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…

https://i0.wp.com/www.htn-news.com/news2008/march/march04/1.jpg?w=474

பெரியவர் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். உடன், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள். (பழைய படம்)

சைவ சமயத்தையும் தமிழையும் சரிவிகிதத்தில் கலந்து, சித்தரிக்கப்பட்ட அல்லது பொய்களை தன் சொந்த அனுபவம் போல் கதையாக தயாரித்து நகைச்சுவை துணுக்குகளையும் அதன் மேல்  தூவி, ஆன்மீக சொற்பொழிவு இலக்கிய சொற்பொழிவு, பட்டிமன்றம் நடத்தும்

பேராசிரியர் நமச்சிவாயம்

பேராசிரியர் சத்தியசீலன்

பேராசிரியர் ஞானசுந்தரம்

சுகி சிவம்

அறிவொளி

இந்திரா சௌந்திரராஜன்

செல்வகணபதி

இன்னும் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து தங்களை பெரிய மேதைகளாக வீரர்களாக ஜெயலலிதாவிடம் நிரூபிக்கும் பழ. கருப்பையா, நெல்லை கண்ணன் போன்ற சைவ சமய சவடால்கள்…

இவர்களைப் போன்ற பல தமிழ்க் கடல்கள், சைவ மட ஆதினஙகள், பேராசிரியர்கள், ‘நாங்கள்தான் உண்மையான சைவர்கள் பெரியபுராணம் எழுதிய சேக்கிழர் எங்க ஜாதியை சேர்ந்தவர்’ என்று வெட்டி ஜம்பம் பேசும் முதலியார் ஜாதிவெறி கும்பல்.

தேவாரம், திருவாசகம் படிக்காமா எங்களுக்கு பொழுது சாயறுதில்ல, பொழுது விடியறதில்ல. நாங்க கடும் சைவர்கள்’ என்று வெத்துப் பெருமை பேசும் பிள்ளைமார், நாட்டுக்கோட்டை செட்டியார் ஜாதி கும்பல்கள், இன்னமும் கூச்சமில்லாமல் பெரிய புராணத்தை, தேவாரம், திருவாசத்தை பட்டி மண்படங்களிலும், கருத்தரங்களிலும் பாடி, பேசி காசுப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லது புகழ் அடைந்து வருகிறார்கள்.

‘பெரிய புராணத்தில் சேக்கிழர் பெருமான் அப்படி சொன்னான்… இப்படி விட்டான்…. என்ற மயிறு பிளக்கும் விவாதமும், மாணிக்கவாசகர் திருவாசகத்தில்…ச்சு..ச்சு..  நாவுக்கரசோட தேவாரத்தில….  …ச்சு..ச்சு.. சம்பந்தர் ஒரு இடத்தில சொல்றார்…. ச்சு… ’ என்று குச்சி அய்ஸ் சாப்பிடுவது போல் சப்புக்கொட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், கொஞ்சமும் கூச்சமில்லாமல்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்  தேவாரத்தை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி நடராஜன் முன்  பாடியிருந்தால்…. தீட்சிதன், அப்படி சொல்லி… இப்படி விட்டிருப்பான். ச்சு… கொட்டி ரசிக்க வாய் இருந்திருக்காது.  சிதம்பரத்திலிருந்து நேரா புத்தூருக்குத்தான் போயிருக்கனும்.

அப்போது மட்டுமல்ல, இப்போதும் சிதம்பரம் நடராஜன் முன் தீட்சிதர் பார்ப்பனர்களை எதிர்த்து தன் உயிரை பணயம் வைத்து, பெரியவர் ஆறுமுகசாமி மட்டும்தான் தேவாரத்தைப் பாடிக்கொண்டு இருக்கிறார். தேவார திருவாசக வியாபாரிகள் ஒரு ஆளுக்கூட அத அங்கபோய் பாடக் காணோம்.

தொழிலாளர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க விரும்பாத மிகவும் கழிசடையான சில முதலாளிகளைப் பற்றி  மாமேதை  காரல் மார்க்ஸ், இப்படி சொல்லியிருப்பார்: ‘இவர்கள் முதலாளிகளாக இருக்கக் கூட லாயக்கற்றவர்கள்’ என்று.

அதுபோல், சிதம்பரம் சிற்றபல மேடையில் ஏறி துணிவோடு தேவாரம், திருவாசகம் பட துப்பில்லாத இவர்கள் தமிழறிஞர்களாக அல்ல, பக்தர்களாக இருக்கக்கூட லாயக்கற்றவர்கள்.

இனி எங்காவது இவர்கள் தேவாரம், திருவாசகத்தின் பெருமைப் பற்றி பேசினால், பக்தர்கள் இவர்களை அதே மேடையில் மடக்கி ‘சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏறி பாடி இருக்கிறாயா? அப்படியானல் அதைப் பற்றி பேசு. இல்லையேல் போய் பாடிவிட்டு வந்து பேசு’ என்று கேட்க வேண்டும்.

பக்தர்கள் கேட்பார்களா? இல்லை அதுக்கும் நாங்கதான் வரணுமா?

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

16 thoughts on “இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…”

 1. அனைவரும் கிறித்துவ மதத்துக்கு மாறுங்கள். அனைவரும் மரியாதையோடு உயிர் வாழலாம். கர்த்தர் உங்களுக்கு இளைப்பாருதல் தருவார்

 2. மாதி பார்ப்பன ஜெயலலிதாவையும் அவருக்காக ஓட்டுக்கேட்ட ஈழ ஆதரவு ஏமாளிகளையும் விமர்சிப்பது நியாயமானதுதான். ஜெயலலிதாவின் ஈழ அதரவு நாடகத்தில் எனக்கும் உடபாடில்லைதான். தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் ஓய்வெடுத்த ஜெ இதைத்தான் இப்படித்தான் செய்வார் என்பது தெரிந்ததுதான். ஆனால் நம்மில் பலர் கருணாநிதியை ஏதோ உத்தமன் போல் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறோ,.இன்றைய ஜெயலிதாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம். ஐம்பதாயிரம் மக்கள் கோர்மாக கொல்லப்பட்ட போது அங்கே கனரக அயுதங்கள் பயன்படுத்தப்பட வில்லை. மழை விட்டும் தூவானம் விட வில்லை என்று மக்கள் கொல்லப்பட்டது குறித்து பொருப்பற்ற முறையில் உளரியவந்தான் இந்த கருணாநிதி. ஏதோ ஜேவை ஒரு துரோகி பொலவும் கருணாநிதியை தமிழினத் தலைவன் போலவும் தர்போது சிலர் பேசிவருகிறார்கள். இந்த இரண்டு கழிசடைகளும் என்றைக்கு தமிழகத்தை விட்டு துரத்தப்படுகிறார்களோ அப்போதே இங்கே ஏதாவது நல்ல மாற்றங்காள் நிகழும். தவிறவும், தமிழனுக்கு சிலை வடிப்பது. சுவரில் படம் வரைந்து தமிழ் கலாசாரத்தை பரப்புவது, வருடாவருடம் நடன விழா நடத்துவது என்பது தான் திமுகவின் தமிழின சாதனையாக இருக்கிறது. இதைச் செய்ய எதற்கு ஒரு முதல்வர்.

 3. //இனி எங்காவது இவர்கள் தேவாரம், திருவாசகத்தின் பெருமைப் பற்றி பேசினால், பக்தர்கள் இவர்களை அதே மேடையில் மடக்கி ‘சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏறி பாடி இருக்கிறாயா? அப்படியானல் அதைப் பற்றி பேசு. இல்லையேல் போய் பாடிவிட்டு வந்து பேசு’ என்று கேட்க வேண்டும்.

  பக்தர்கள் கேட்பார்களா? இல்லை அதுக்கும் நாங்கதான் வரணுமா//

  உண்மைதான் நம்மைத்தவிர வேறு வழியில்லை, ஒரு விசயம் மட்டும் தெளிவாக புரிகிறது. பாப்பனுக்கும் அரசுக்கும் எங்கு பார்த்தாலும் இலவச வக்கீல்கள், எல்லோரும் வாதாடுவார்கள். தேவைப்பட்டால், சாமி விலை போகாத போது நாத்திக வேசம் கூட தயங்கமாட்டார்கள் போலி பக்தர்கள்(போலி கம்யூனிஸ்டுகள் போல) அவன் கும்பிடும் சாமிக்கு பிரச்சினை என்றால் கூட கேட்பதற்கு நாதியில்லை, நாத்திகர்கள், புரட்சியாளர்கள் தான் அதனையும் செய்ய வேண்டியதாயிருக்கிறது.

  கலகம்

 4. நண்பர் ஜோசப் அவர்களே, கிறிஸ்துவ மதத்தில் மட்டும் என்ன வாழ்கிறது. அங்கு மட்டும் என்ன ஜாதி வெறி தலைவிரித்து ஆடவில்லையா? பணத்துக்கு அலையும் போலி மத சுவிசேஷகர்கள் கிருஸ்தவத்தின் பெயரை பாழ் படுத்தவில்லையா? நானும் ஓர் கிருஸ்துவன்தான். அதனால்தான் இன்றிய நிலை பற்றி வெட்கி வேதனைப் படுகிறேன். முதலில் நம் கண்ணில் இருக்கும் தூலத்தை எடுத்து விட்டு, மற்றவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முயல வேண்டும் என்று வேதாகமம் கூறவில்லையா? நம்ம வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு மற்றவர்களை அழைப்போம். நான் சொல்வது சரியா? நண்பரே. தவறு இருந்தால் ஏழேழு தடவை மன்னிக்கவும்.

 5. தமிழகப் பார்ப்பானை சமஸ்கிருதம் காத்ததை விட தமிழ் தான் அவர்களைக் காத்தது. வடக்கத்திய புத்தமும், சமணமும் மேட்டுக்குடி ஆதரவோடு தமிழகத்தில் வீரியமாக, அவர்களின் பாலி, பிராகிருதம் மொழிவழி பரவ ஆரம்பித்தக் காலத்தில், அதற்குத் தடைபோட தமிழின் இனிமையும், இசையோடு கூடிய கவிதைத் திறனும் சைவத் தலைவர்களுக்கு நல்ல ஆயுதமாகப் பயன்பட்டது.

  தமிழின் கவிதை இசைத்திறத்தையும், அதனுடன் அரச வன்முறையும் சேர்ந்துதான் அம்மதங்களை விரட்டினர். இப்போது தமிழுக்காக சைவ புராணங்களா அல்லது கடவுளுக்காக சைவ புராணங்களா என்று கலங்கி நிற்க வேண்டியுள்ளது, பலருக்கு.

  அன்று தமிழைவைத்து மதத்தைக் கட்டினார்கள், ஏய்ப்பதற்கு.

  இன்று தமிழைவைத்து அரசியலைக் கட்டுகிறார்கள், ஏய்ப்பதற்கு.

  தமிழுக்கு நல்ல காலம் தான்! ஆனால், தமிழனுக்கு அதனால் தொடர்ந்து கெட்ட காலம் தான்.

  இனிப் பகுத்தறிவுப் பாதையில் மட்டும் தமிழைப் பயன்படுத்தினால், தமிழுக்கும், தமிழருக்குமான நல்ல காலமாக விளையும்.

 6. ஜோசப் என்ற பெயரில் எழுதியது ஜோசப் தானா அல்ல ஏதாவது தில்லாலங்கடி பாப்பானா என்பது சந்தேகத்துக்குரியது.இப்போது யேசுவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இங்கு என்ன, தேவையற்ற வார்த்தைகளை மதிமாறன் அவர்கள் நீக்குவது சிறப்பு

  ஆகவே விவாதத்தை திசை திருப்புவதற்காக காலிகளின் போக்குக்கு நித்தி செல்லம் பலியாகாது நம்முடைய விவாதத்தை தொடர வேண்டும்

  கலகம்

 7. இன்னும் எவ்வளவு எழுதினாலும், இவர்கள் மாறப்போவதில்லை. ஆனாலும், எழுதுங்கள்…மேலும் சில ரசிகர்களாவது இவர்களிடமிருந்து மீளட்டும்.

 8. அடங்கொக்கா மக்கா.. ஓ.. இவெய்ங்க தேன் தமிழறிஞர்களா..? அப்ப பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளி (அவரு தானுங்க உங்க மகஇக இசைவெழாவுக்கெல்லாம் வருவாருல்ல), அரசேந்திரனார் இவங்க எல்லாரும் யாருங்க? மொதல்ல உங்களுக்குத் தமிழறிஞர்கெள்னா யாருன்னு விளக்கணும் போல இருக்கு!
  நீங்க மேற்குறிப்பிட்ட வகெயறாக்க எல்லாம், தமிழ் எலக்கியத்துல உள்ள சைவக் கூறுகெள , அவங்களுக்குப் புடிச்ச பகுதிகள கொஞ்சம் ஊதி ஊதி மேடைகள்ள பரப்பிப் பொழைக்கும் பேச்சாளருங்கோ… இவய்ங்க தேன் அறிஞருங்களா, சரிங்க! கேட்டுக்கறோமுங்க! பின்னுறீங்க, நடத்துங்க! வேற என்னத்த சொல்றது.. உங்களெக்கு யாரயாணும் புடிக்கலன்னா கொஞ்சம் பொதுமைப் படுத்திப் போட்டு தாக்குவீங்களோ

 9. //1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலாகி கடுப்பாகி’ என்ற என்னுடைய முதல் நூலில் ‘அணிந்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
  “எனக்குத் தெரிந்த பிரபலமானவர்களிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்கு வெட்கமாக இருந்ததால் ‘அணிந்துரை’ இல்லை.“

  என்னைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து எழுதி வாங்கி, என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக் கொள்வதை மிகவும் அருவருப்பாகவும் கேவலமாகவும் கருதுவதால் ‘நான்’ இல்லை//

  இப்படி நீங்கள் உங்களை விமர்சிப்பது உங்களை நீங்களே புகழ்வது போல் தான் என் பார்வையில் படுகின்றது.

  தமிழ் அறிஞர்களை பற்றிய பதிவில் பொதுமைப் படுத்திப் ஜாதியின் பெயரால் அவர்களை வகைப்படுத்தியது ஏன் என்று புரியவில்லை…

 10. // வடக்கத்திய புத்தமும், சமணமும் மேட்டுக்குடி ஆதரவோடு தமிழகத்தில் வீரியமாக, அவர்களின் பாலி, பிராகிருதம் மொழிவழி பரவ ஆரம்பித்தக் காலத்தில், அதற்குத் தடைபோட தமிழின் இனிமையும், இசையோடு கூடிய கவிதைத் திறனும் சைவத் தலைவர்களுக்கு நல்ல ஆயுதமாகப் பயன்பட்டது. //

  தமிழகத்தில் நிகண்டுகள் எனப்படும் அகராதியை முதல் முதலில் கண்டுபிடித்தவர்கள், சமணர்கள். அப்பர் ஒரு சமணர். சமஸ்கிருதம் கோலோச்சிய போது, தமிழில் பாடி, தமிழ்தொண்டு செய்து, சமணத்தைப் பரப்பியதால், சமணர்கள், சைவர்களின் கோபத்திற்கு ஆளாகி எண்ணாயிரம் என்ற இடத்தில் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட்டார்கள். சமணர்களின் வழியினைப் பின்பற்றி, சைவத்தை மீண்டும் மீள் உருமானம் செய்ய , திருஞான சம்பந்தர் முதலானோர், தமிழை மீண்டும் ஒரு கருவியாகப் பின்பற்றி சைவத்தின் பெயரில், பார்ப்பனியத்தை மீள் உருமானம் செய்தனர் என்பதே உண்மை.
  அறிவுடைநம்பி

 11. >>சிதம்பரம் நடராஜன் முன் தீட்சிதர் பார்ப்பனர்களை எதிர்த்து தன் உயிரை பணயம் வைத்து, பெரியவர் ஆறுமுகசாமி மட்டும்தான் தேவாரத்தைப் பாடிக்கொண்டு இருக்கிறார். தேவார திருவாசக வியாபாரிகள் ஒரு ஆளுக்கூட அத அங்கபோய் பாடக் காணோம்.

  “சைவம் தமிழை வளர்த்தது” என்று ஊர் ஊராக புராணம் பாடும் “தமிழறிஞர்கள்”, தன்னுடைய சமகாலத்தில் தன்னுடைய புகழுக்காக, காசுக்காக மட்டும் தமிழ் பற்றாளர்கள் போல் காட்டி கொள்கின்றனர். பெரியவர் ஆறுமுகசாமி தான் உண்மையான தமிழ் பற்றாளர்

 12. தாய்மொழியில் வழிபாடு செய்வது மக்களின் உரிமை. நமது மக்களின் உழைப்பால் கெட்டிய கோயிலில் நாம் வெளியே பார்ப்பான் உள்ளே. பாட்டாளிகள் கட்டிய கோயிலில் தமிழ் வெளியே சமஸ்கிருதம் உள்ளே. ஆக கோவில் கட்டியவன் தெருவில் பார்ப்பான் கருவறையில். இதென்னப்ப நியாயம். இங்கு உண்மையான பக்தன், நாத்திகன் என்பது பிரச்சனையல்ல. தாய்மொழியை இழிக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டிய பிரச்சனை. அதன் ஒரு கட்டம் தான் சிதம்பரத்தில் தாய்மொழி வழிபாடு. பால்பாண்டியனின் கூற்று பார்ப்பனீயத்துக்கு வழு சேர்க்கிறது.

 13. pl c link – page NO 105 :http://oversightcommittee.gov.in/ocrep.pdf

  இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் சாதி வித்தியாசங்கள் இருப்பினும்- எல்லா சாதியினரும், மத குரு / அர்ச்சகர்கள் ஆகவும் ஆண்டவனை தொட்டு பூஜிக்கவும் / அபிஷேகம் செய்து அலங்கரிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

  ஆனால் இந்து மதத்தில் பிராமணர் தவிர பிறருக்கு அனுமதி மறக்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் பொறியாளர் ஆகலாம், மருத்துவம் படித்தவன் மருத்துவர் ஆகலாம்- ஆனால் அர்ச்சக மந்திரம் படித்தவன் அர்ச்சகராக பிராமண சாதியும் தேவை.

  இந்தக்கொடுமை உலகத்தில் எங்காவது உண்டா?

  தமிழ்த்தேசியம்:

  தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
  கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;

  என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.

  தமிழர் வாழ்வியல் நடவடிக்கைகள்/ பிரச்சினைகள் ஆகியவற்றை- வீட்டிலும், வெளியிலும், கனவிலும் /நனவிலும் தமிழ் பேசும் தமிழர்களே, நமக்காக கையாள வேண்டும்.. இல்லாவிடில் பிற மாநிலத்தவர்களிடம் இருந்து முழுதாக ஒதுக்கப்படும்/ வெறுக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாகுவோம். யாரும் நம்மை காப்பாத்த முடியாது. வீரம் வேறு- விவேகம் வேறு என்பதை உணரவும். தமிழர் முன்னேற்றம் விரும்புவோர் தயவு செய்து இவற்றை சிந்திக்கவும். வாழ்க தேசியம்.

Leave a Reply