மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்
தாரவாட் மாதவன் நாயர் 1868 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 நாள் பிறந்தார். இந்த சனவரியோடு மாதவன் நாயருக்கு 142 வயதுகள் முடிந்தது. தமிழக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட அந்த மகத்தான மனிதரை நினைவுகொள்வோம்.
அவர் பெயருக்கு முன் இருக்கிற ‘தராவாட்’ என்பது அவர் பிறந்தஊர். அது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குள் இருக்கிறது. அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் FA பட்டம் பெற்றார். பின் ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைகழகத்தில் பயின்று அந்தக்காலத்து மருத்து கல்விப் பட்டமான M.B.C.M. என்ற பட்டம் பெற்றார். அதன்பின் பிரைட்டன் நகரத்தில் காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையில் மருத்துவராக வேலைபார்த்தார். அதே எடின்பரோ பல்கலைகழகத்தில் M.D. பட்டம் பெற்றார். பிறகு காது-மூக்கு-தொண்டை மருத்துவதுறை மேல் படிப்பை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முடித்தார். கிரேக்க மொழியில் புலமை பெற்றவராகவும் இருந்தார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட மாதவன்நாயர், தன் அனுபவங்களின் மூலமாக Diabites; Nature and Treatment என்ற நூலை எழுதினார். Antiseptic என்ற பத்திரிகையை நடத்தினார். மருத்துவத்துறை அல்லாத Madras Standard என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
மேடை பேச்சு முறை பிரபலமாகத அந்தக் காலத்திலேயே மிக சிறப்பான மேடை பேச்சாளராக திகழ்ந்தவர் நாயர். அதுவும் ஆங்கிலத்தில். அவருடைய மேடை பேச்சின் சிறப்பைப் பற்றி பம்பாயில் இருந்து வெளிவந்த, அட்வகேட் ஆப் இந்தியா நாளிதழ், ‘மிகச் சிறந்த டாக்டர் என்ற புகழுடன் மிகச் சிறந்த பேச்சாளர் என்ற புகழையும் கொண்டவர் டாக்டர் நாயர். அவரைப் போல தர்க்கம் செய்வோர் ஒரு சிலரையே இந்தியாவில் காண முடியும்’ என்று குறிப்பிடடது. இதெல்லாம் அவரின் திறமைகள் அல்லது கல்வித் தகுதிகள். ஆனால், அவருடைய சிறப்பு இதுவல்ல. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமாக இயங்கியது.
1914 ஆம் ஆண்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்திற்கு வரிஇல்லாமல் தண்ணீர் விடவேண்டும் எனறு, தியாகராயர் (பின்னால் நாயருடன் இணைந்து நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்தான்) பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறார். சென்னை நகர மன்ற அங்கத்தினராக இருந்த நாயர் அதை கடுமையாக எதிர்க்கிறார். திருவல்லிக்கேணி கோயிலுக்கு வரிஇல்லாமல் தண்ணீர் விட்டால், அதுபோல் மற்றக்கோயில்களுக்கும் விடவேண்டிவரும். அதன் செலவை நகரசபை ஏற்கவேண்டியிருக்கும். பிறகு மக்கள் நலத்திட்டங்களுககு பணம் இல்லாமல் போகும் என்று அதை எதிர்க்கிறார் நாயர். அதனாலேயே பார்ப்பனர்கள் மாதவன் நாயரை எதிர்க்கிறார்கள். ஆனாலும் தன் நிலையில் இருந்து விலகாத நாயர், அந்தப் பதவியில் இருந்து விலகுகிறார்.
1906 ஆம் ஆண்டு பஞ்சாலை தொழிலாளர்களின் நிலைமைய அறியவேண்டும் என்று ‘லேபர் கமிஷன்’ ஒன்றை அரசு நியமித்தது. அந்தக் கமிஷனில் நாயரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். முதலாளிகளின் கையாட்களும், வெள்ளைக்காரர்களும் நிரம்பிய அந்தக் கமிஷன், 1908 ஆண்டு அறிக்கையை அரசுக்குத் தந்தது. கமிஷனின் அறிக்கையை ஒத்துக்கொள்ளாத மாதவன் நாயர், தனது கருத்துக்களை எழுதி அரசுக்கு தனியாக அனுப்பி வைத்தார்.
‘ஒரு நாளைக்கு 15 மணிநேரம் என்கிற வேலை நேரத்தை அகற்றிடவேண்டும். 12 மணிநேரமே இருக்கவேண்டும். அரை மணிநேரம் ஓய்வு கொடுக்கவேண்டும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை கொடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு 11 மணிநேரமே வேலை நேரமாக இருக்கவேண்டும். இயந்திரங்களின் மூலம் விபத்துக்கள் நடக்காதபடி பாதுகாப்பபு தரவேண்டும்’ இவைகள்தான் மாதவன் நாயர் அரசுக்கு அனுப்பி வைத்த அறிக்கை.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வைசிராய் வரை சந்தித்து விளக்கம் கொடுத்து, நான்கு ஆண்டுகள் தொடர்ந்துபோராடினார் நாயர். 1912 சூலை மாதம் மாதவன் நாயரின் கோரிக்கைகள் உள்ளடங்கிய மசோதா நிறைவேறியது.
ஒருமுறை கப்பலில் வெள்ளைக்காரர்களோடு பயணம் செய்துகொண்டிருந்த மாதவன் நாயரை ஒரு வெள்ளைக்காரன், ‘கருப்பன்’ என்று இழிவாக பேசிவிடுகிறான். துப்பாக்கி வைத்திருக்கும் பழுக்கம் உள்ள மாதவன் நாயர், அந்த வெள்ளையனின் வாயில் துப்பாக்கி வைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்.
இப்படி போர்குணத்துடன் இயங்கிய மாதவன் நாயர் 1916 ல் தியாகராயர், நடேசனுடன் சேர்ந்து பார்ப்பனரல்லதார் இயக்கத்தை துவங்கினார். 1917 ஆம் ஆண்டு சென்னை ஸ்பர்டாங் சாலையில் ஆங்கிலத்தில் அவர் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது.
பெரியார் என்கிற பெரும் நெருப்பு உருவாவதற்கு நாயரின் இந்த தீ துண்டு முன்காரணம் என்றால் அது மிகையல்ல. அவரின் அந்தப் பேச்சைகேட்டு உத்வேகம் பெற்றசிலர் பார்ப்பனர்களை தாக்கிவிட்டார்கள் என்று செய்தியும் உண்டு.
அந்த செய்தியை உறுதி செய்வதுபோல் பாரதியாரின் கோபம் அதற்கு சாட்சியாக இருக்கிறது,
“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”
“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”
“இங்ஙனம் தமிழ்ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர்.நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிட கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு ஆதரவாக…”
பார்ப்பன பாரதியின் இந்த சாபம் நாயரின் ஆளுமையின் அடையாளமாக இருக்கிறது. இன்றுகூட தீவிர இந்து மனோபாவம் கொண்ட பல பார்பபனர்கள் சும்மா ஒப்புக்காவது, பெரியார், அம்பேத்கரை பாராட்டுவார்கள். ஆனால், மாதவன் நாயரை நீதிக்கட்சியின் துவக்கக்கால தலைவர்களை பெயரளவுக்குக்கூட குறிப்பிடமாட்டார்கள்.
அவர்கள் பற்றி பேசினால், உடனே பாரதியாரைபோல் தேசப்பற்றாளராக மாறி ‘நாயர் கட்சிக்காரனுங்க, வெள்ளைக்காரனுக்கு இந்தநாட்டை காட்டிக் கொடுத்தவானுங்க’ என்று தியாகிகளைப்போல் பேசுவார்கள் வெள்ளைக்காரன்கிட்டேயே இங்கிலிஸ்சுல பேசி அவனுங்ககிட்டேயே ‘ஆட்டைய’ போட்ட சில்வர்டங் சீனிவாச சாஸ்திரியின் பேரன்கள்.
பார்ப்பனர்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, மாதவன் நாயரே பேசி இருக்கிறார்: “தியாகராயரையும், என்னையும் ஏனையத் தலைவர்களையும் காங்கிரசின் வஞ்சகப் பார்ப்பனர்கள், தேசத்துரோகிகள், வகுப்புவாதிகள், வெள்ளைக்காரனின் பூட்ஸ்காலைநக்கியவர்கள் எனறு கண்டவறெல்லாம் பிதற்றித் திரிகிறார்கள்.
பிரம்மாவின் முகத்திலிருந்து வெடித்து விழுந்த வீரர்களாச்சே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அனுமார் வாலை அவர்கள்தான் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, நாங்கள் பிடித்து தொங்குகிற அளவிற்கு வெள்ளைக்காரனுக்கு வாலே முளைக்கவில்லையே.
அப்புறம் பூட்ஸ்கால். அதனை நக்குவதாம். வெள்ளையன் பூட்ஸில் என்ன வெல்லப் பாகையா தடவி வைத்திருக்கிறான்? அதை நக்கிபார்க்க?
ராமனின் பூட்சையோ, பாதுகையையோ, செருப்பையோ 14 ஆண்டு காலம் சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு பாலாபிஷேகம், பழ அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதை நக்கி மகிழ்ந்தவர்கள்தானே இந்த பார்ப்பனரின் முன்னோர். அவர்களுக்குத் தான் பூட்ஸ் ருசியும் தெரியுமேயல்லாமல், அபிஷேகத்தில் நம்பிக்கையற்ற என்னை போன்றவர்களுக்கு பூட்ஸின் ருசி எப்படி தெரியும்?”
பார்ப்பன எதிர்ப்பு, இந்து மதஎதிர்ப்பு இரண்டும் இணைந்துதான் இருக்கவேண்டும் என்கிற சரியான புரிதல் மாதவன் நாயரின் சென்னை ஸ்பர்டாங் சாலை பேச்சில் நெருப்பாக தெரிக்கும். அவரின் 143 ஆவது பிறந்தநாள் நினைவாக இந்தப் பேச்சை தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்.
‘மலையாளிகள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள். நாயர் மலையாளி அவரைபோய் தமிழிர்களின் தலைவராக சொல்லலாமா?’ என்று சிலர் கண்டிக்கலாம்.
ஜெயமோகன் என்கிற மலையாளி தந்தை பெரியாரை பற்றி அவதூறும் கேவலமாக எழுதிவிட்டான் என்பதற்காக ஒட்டுமொத்த மலையாளிகளும் அதுபோலவே என்று குற்றம் சொல்லமுடியுமா? பெரியார் இயக்கத்திற்கும் பெரியார் பாணியிலான பகுத்தறிவிற்கும் கேரளாவில் எப்போதுமே ஒரு மரியாதையும், செல்வாக்கும் உண்டு. பெரியாரின் அன்பிற்குரிய டாக்டர் கோவுர், ஜோசப் இடமருகு போன்ற மிகச் சிறந்த பகுத்தறிவாளர்களை தந்ததுதான் கேரளம்.
ஜெயமோகனை மலையாளியாக பார்ப்பதை விட, பார்ப்பன இந்து மனோபாவம் கொண்ட ஆளாக பார்ப்பதுதான் சரியாக இருக்கும். நம்ம பச்சைத் தமிழன் ஜெயகாந்தனைபோல்.
பெரியாரை கேவலமாக எழுதுகிற ஜெயமோகனுக்கு தன் படத்தில் வசனம் எழுத வாய்பப்பளித்து விட்டு, தேசியவிருது கிடைத்தவுடன் பெரியாரின் பேரனைப்போல், கட்டபொம்மன் பாணியில், “கடவுள் என்ன நாத்துநட்டரா? களை புடுங்கினாரா? அவருக்கு எதுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்?” என்று நாத்திக வசனம் பேசும் இயக்குனர் தமிழர் பாலாவையும் வசனகர்த்தா மலையாளி ஜெயமோகனை பார்ப்பதுபோல் தான் பார்க்கவேண்டும்.
மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மானமிகு மாதவன் நாயர், தமிழகத்து பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, சுயமரியாதை இவைகளுக்கான முன்னோடி. அதற்கு சாட்சி, அவரின் சென்னை ஸ்பர்டாங் சாலை பேச்சு.
வன்னிய உணர்வு கொண்ட பெரியாரிஸ்டுகள், ‘பெரியாருக்கே முன்னோடி மாணிக்கவேல் நாயகர்’ என்கிறார்கள். முதலியார் பெரியாரிஸ்டுகள் ‘பெரியாரைவிட பெரிய அறிவாளி குத்தூசி குருசாமி’ என்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோருக்குமே முன்னோடியாக இருந்தவர் டி.எம். நாயர்.
மாதவன் நாயரை பற்றி தந்தைபெரியாரே மிக சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார். பெரியார் என்கிற மகத்தான தலைவராலேயே பாராட்டப்பட்ட அந்த மாமனிதரை நினைவுகொள்வோம்.
1917 ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு இரட்டைமலை சீனிவாசன் தலைமை தாங்கினார். தியாகராயரும் கலந்துகொண்டார். நன்றியுரை எம்.சி.ராஜா வழங்கி முடித்து வைத்தார். டி.எம். நாயரின் வரலாற்று சிறப்பு மிக்க சிறப்புரை விரைவில்.
–தொடரும்.
தொடர்புடைய கட்டுரை:
2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு
நல்லதோர் பதிவு.இதுபோல் வரலாறு மறைக்கப்பட்ட தலைவர்களின் செயல்பாடுகள் இன்றைய இளம் சமூகம் தேடி கற்றுக்கொள்ளவேண்டும்.அதுபோல் சங்கரன் நாயர் என்றும் ஒருவர் உண்டென்று கேள்விபட்டிருக்கிறேன்.அதுகுறித்து தெளிவான தகவல் இல்லை.ஒரு நூலகத்தில் படித்த நினைவு.அதையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
//பெரியார் என்கிற பெரும் நெருப்பு உருவாவதற்கு நாயரின் இந்த தீ துண்டு முன்காரணம் என்றால் அது மிகையல்ல//
அத்தகைய தலைவரை பற்றி இது நாள் வரை தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக வெட்கபடுகிறேன்.
பதிவுக்கு நன்றி. அடுத்த பகுதியை விரைவில் வெளியிடவும்.
நித்தில்
A good article. Thanks for the details on T.M Nair. As usual your hard views on Brahmanism and Hinduism. I completely subscribe to the message you convey on Brahmanism and Hinduism but no the tone you use; i do understand but for the tone, it would not pierce through some hard skins.
அருமை என்று ஒற்றை வரியில் முடித்து கொள்ளமுடியவில்லை.
ஜெயமோகனின் திராவிட எதிர்ப்பு எல்லைமீறி போய்கொண்டிருக்கிறது.
பெரியாரை வைக்கம் வீரர் என்றால் கேரளாவில் சிரிக்கிறார்கள் என்பதில் துவங்கி பெரியாருக்கு தமிழ் அறிவில்லை. சமஸ்கிருதம் தெரியாது. ஆங்கிலம் தெரியாது முரட்டுத்தனமாக எல்லாவற்றையும் எதிர்த்தார். தலித் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்பது போன்று தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார்.
ஆதாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்தால் இதெல்லாம் திகவின் வேதநூல்களை அடிப்படையாக கொண்டது. என்று மறுபடியும் மறுபடியும் பெரியார் குறித்த அவதூறுகளை தொடர்கிறார். இவர் எதையும் ஆதாரமாகக்கொண்டு எழுதாமல் பெரியார் ஒன்றும் செய்யவில்லை என்றும் திராவிட அரசியல் இயக்கங்கள் பெரியாரின் நீட்சி என்றும் அவதூறுகளை தொடர்கிறார்.
மதிமாறன் போன்றோர் தொடர்ந்து ஜெயமோகன் போன்ற பார்பன பக்தர்களை அம்பலப்படுத்த வேண்டும்.
maraikkap patta sila vishayangalin arumaiyaana pathivu.. nandri madhi ayya.
மாதவன் நாயர் என்ற மகத்தான தலைவரை அறிய தந்தமைக்கு நன்றி!
சதிஸ்
சுவிஸ்
அய்யா! எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.
Origins of the Indian Caste System, academics since the 1970s are of the opinion that it is an artificial British construct to maintain the Indian divide and rule policy.
http://www.suite101.com/reference/divide_and_rule_policy
the Dravidian concept was anti-Brahmin specific because the patrons of the movement, the British imperialist rulers, had wanted it that way.
THE Dravidian movement in Tamil Nadu can be dated to begin from December 1916 when the “Non-Brahmin Manifesto” was released. In the manifesto, the Dravidian concept was anti-Brahmin specific because the patrons of the movement, the British imperialist rulers, had wanted it that way, and for good reason as I shall expound below. The manifesto was authored principally by Dr. T.M. Nair and Rao Bahadur Theogaraya Chetty. It candidly advocated the continuance of British imperialist rule because it was contended that the British alone could “hold the scales evenly between the castes and creed” of India.
சாதாரண ஆட்களை சாதிரீதியாக இழிவு செய்கிற உங்களைபோன்றபார்ப்பனர்கள் ரஜினிகாந்த், பாஸ்வான் போன்றவர்களுக்கு தேடிபோய் பெண்தருகீறீர்களே,…..
சமூகம் – நாற்குலம் என்ற கட்டுரையில் கூறுகிறான்.
பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்பொழுதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல. குலத்தாலும், தொழிலாலும் உண்டாயின………..
எல்லாச் செய்கையும் ஈசனுடைய செய்கை. சோம்பர் ஒன்றுதான் இழிவு. அதுதான் சண்டாளத்தனம். எந்தத் தொழிலையும் நேரே செய்வோர் மேன்மக்கள்.
தொடர்ந்து இவ்வாறான வரலாற்று செய்திகளை பதிவு செய்யுங்கள்.
நன்றி தோழர் மதிமாறன்.
p.s: கொஞ்ச நாளா ஒரு மஞ்ச மாக்கான் கண்ட மேனிக்கு கமெண்ட் அடிக்குது இன்னானு ஒன்னும் புரியலை. கண்டுக்காம இருக்கருது எல்லாருக்கும் நல்லது.
சூப்பர் அப்பு……தகுந்த ஆதாரங்களை வைத்துப் பேசினால், “கண்டுக்காம இருக்கறது தான் நல்லது”
//அப்புறம் பூட்ஸ்கால். அதனை நக்குவதாம். வெள்ளையன் பூட்ஸில் என்ன வெள்ளை பாகையா தடவி வைத்திருக்கிறான்? அதை நக்கிபார்க்க?
ராமனின் பூட்சையோ, பாதுகையையோ, செருப்பையோ 14 ஆண்டு காலம் சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு பாலாபிஷேகம், பழ அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதை நக்கி மகிழ்ந்தவர்கள்தானே இந்த பார்ப்பனரின் முன்னோர். அவர்களுக்குத் தான் பூட்ஸ் ருசியும் தெரியுமேயல்லாமல், அபிஷேகத்தில் நம்பிக்கையற்ற என்னை போன்றவர்களுக்கு பூட்ஸின் ருசி எப்படி தெரியும்?”/
நன்றி மாதவ நாயருக்கு.. சிறப்பான வரலாற்று நிகழ்வை தொகுத்து வெளியிட்ட வே.மதிமாறன் அவர்களுக்கும் நன்றி..
பார்ப்பனீயத் திமிர் இன்றும் குறைந்தபாடில்லை, பெயரை மட்டும் மாற்றி பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிகள் தன்னோட குயக்கு புத்தியை தொடர்ந்து கக்கிக்கொண்டுள்ளார்கள்..
இவர்களை வீழ்த்தினால் தான் இந்த இனத்திற்கு விடிவே.. முயற்சிப்போம்
முல்லைப் பெரியாறு அநீதி காரணமாக மொத்த மலையாளிகள் மேல் ஆத்திரமும் வெறுப்பும் நிறைந்திருந்த நிலையில், டாக்டர் நாயர் அவர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை எம் முன் வைத்ததினால், மலயாளிகளிலும் இப்படிப் பட்ட உயர் சிந்தனையாளர்கள், அதுவும் தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப் பட்டவர் என்றால், அவர் சிந்தனையின் தகுதி என்னவென்று ஒரு முடிவுக்கே வந்துவிடலாம், அப்படிப் பட்ட பகுத்தறிவுவாதிகளான, இலங்கையை வாழ்விடமாகக கொண்ட டாக்டர் கோவூர், ஜோசப் இடமருகு போன்றவர்களால் மலையாளிகள் மேல் உள்ள வெறுப்பின் வீச்சு குறைந்துள்ளதென்றே சொல்லலாம், தேழர் மதிமாறனின் இந்த பதிவுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டுள்ளோம். மேலும் எதிர்பார்க்கிறோம். மிகவும் நன்றி.
காசிமேடு மன்னாரு.
///இலங்கையை வாழ்விடமாகக கொண்ட டாக்டர் கோவூர், ஜோசப் இடமருகு போன்றவர்களால் மலையாளிகள் மேல் உள்ள வெறுப்பின் வீச்சு குறைந்துள்ளதென்றே சொல்லலாம்,///
அப்படியாவது மலையாளிகள் மேல் உள்ள வெறுப்பு குறைவது வரவேற்க வேண்டியது தான்.
ஜெயமோகன் என்பவர் பெரியாரை கேரளாவில் வைக்கம் வீரர் என்று சொன்னால் சிரிக்கிறார்கள் என்று எழுதினாராமே..
அவரை எழுத்தாளர் என்று சொன்னால் நாங்க கூட தான் சிரிக்கிறோம்.
அவர் வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கு தொடர்பில்லை என்று வைக்கம் போராட்டத்தின் காரணங்களையே திசை திருப்ப பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.
—————
தொடர்புடைய சுட்டியின் இணைப்பை சரி செய்யவும்
—————
தொடர்ந்து எழுதுங்கள்
ஆதரவும்
வாழ்த்துகளும்
ஒவ்வொரு கட்டுரையிலும் கொஞ்ச குதர்க்கத்தனத்த ஏத்தாம இருக்க முடியாது போலேயே? நீங்க பாலா எதிர்க்கிறத உங்க சாதிய வெறி அப்படின்னு சொன்னா ஏத்துப்பிங்களா ?
அருமை மதிமாறன். ஒரு சின்ன திருத்தம். பூட்ஸ் காலில் ‘வெள்ளைப் பாகை’ என்பதற்குப் பதில் ‘வெல்லப் பாகை’ என எழுதியிருக்கலாம்.
////ராமனின் பூட்சையோ, பாதுகையையோ, செருப்பையோ 14 ஆண்டு காலம் சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு பாலாபிஷேகம், பழ அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதை நக்கி மகிழ்ந்தவர்கள்தானே இந்த பார்ப்பனரின் முன்னோர். அவர்களுக்குத் தான் பூட்ஸ் ருசியும் தெரியுமேயல்லாமல், அபிஷேகத்தில் நம்பிக்கையற்ற என்னை போன்றவர்களுக்கு பூட்ஸின் ருசி எப்படி தெரியும்?”////
சிறப்பான கட்டுரை தோழர்…. வரலாற்றில் மறைக்கப்பட்ட விடயங்களை வெளிக்கொண்டுவர தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பானது…. அடுத்த பதிவிர்க்காய் காத்திருக்கிறோம். …
Remember madhave may be different. but those from kerala now toatally irrelevant to tamilian in all aspect they are also behind the scene in the war crimes of Elam and the happenings in india esp. against tamil nationalities. madhave in 1% guy remains are in 99%.
ஜெயமோகன் பெரியாரைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் பெரும்பாலும் சரியானவையே.
பெரியாரிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளன. பெரியாருடைய கருத்துக்களில் காழ்ப்புணர்ச்சிக் கருத்துக்களோடு சீதிருத்தக் கருத்துக்களும் உள்ளன. சீர்திருத்தக் கருத்துக்களை வைத்து நம்மை சீர் திருத்திக் கொள்ளலாம். பெரியாருக்கு மரியாதையும் செலுத்தலாம்.
அதே நேரம் ஒருவரின் மீது நாம் மரியாதை வைத்து இருந்தால் அவரை விமரிசனத்துக்கு அப்பார் பட்டவராக வைக்க வேண்டும் என்பதோ, விமரிசிக்கவோ கூடாது என்பதோ அவசியம் இல்லை.
வள்ளுவர், கம்பர் … காந்தி இப்படி ஒருவரை விடாமல் எல்லொரையும் விமரிசித்தும், வைதும் வந்தவர் பெரியார். அவரை மட்டும் யாருமே விமரிசிக்கக் கூடாதா? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?
பகுத்தறிவுக் குத்தம் என்றால், பகுத்தறிவின் அடிப்படையில் ஜெயமோகனின் கருத்துக்களை அப்படியே மேற்கோள் காட்டி இது சரி, இது தவறு என்று எழுதலாம் அல்லவா, அதுதானே பகுத்தறிவு?
அதை விட்டு விட்டு ஜெயமோகனின் மொழி, இனம், சாதி, மதம், குலம், கோத்திரம், நாள் , நட்ச்சதிரம்…. இதை எல்லாம் தேடிப் பிடித்து, இதை பற்றி எல்லாம் இழுத்து திட்டுகிறார்கள்.
சாதிக் காழ்ப்புணர்ச்சி, மொழிக் காழ்ப்புணர்ச்சி, இனக் காழ்ப்புணர்ச்சி, மதக் காழ்ப்புணர்ச்சி இவை எல்லாம் இல்லாமல் இவர்களால் எழுதவே முடியாதா என்னும் படிக்கு எழுதுகிறார்கள்.
இதுதான் இவர்களின் சாதீயத்தை, மதங்களை, இன வேறுபாட்டை மீறிய சமத்துவ சிந்தனை
இதுதான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் தொண்டரடிப் பொடிகளின் பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சி.
மீண்டும் மீண்டும் சிரிப்பு… ஸ்பான்சர்ட் பை திருச்சிக் காரன்
First answer a few questions Mr mathimaran.then we can take the debate to the next level.
1)Why is that only dravidian tamils became periyarists and therefore caste fanatics and terrorists?
2)Whys is that a typical dravidian tamil resembles and behaves like a cooum pig?
3)Why does the cooum pig think that he is the greatest animal on earth?
4)are the genes that make a tamil look like a pig from the thamizar thaai side or from the thamizar thanthai side i.e the bearded kannadiga side?
திருச்சிக் காரர் அவர்களே,
///சாதிக் காழ்ப்புணர்ச்சி, மொழிக் காழ்ப்புணர்ச்சி, இனக் காழ்ப்புணர்ச்சி, மதக் காழ்ப்புணர்ச்சி இவை எல்லாம் இல்லாமல் இவர்களால் எழுதவே முடியாதா என்னும் படிக்கு எழுதுகிறார்கள்.
இதுதான் இவர்களின் சாதீயத்தை, மதங்களை, இன வேறுபாட்டை மீறிய சமத்துவ சிந்தனை
இதுதான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் தொண்டரடிப் பொடிகளின் பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சி.///
சரியாகச் சொன்னீர்கள் சார்.
Dear indian.It is not difficult to answer your questions.
Tamils generally lack sense,common sense,good sense in every sense of the word.Otherwise would they have fallen for the evil and treacherous dravian party villains like EVR,Annadurai,yellow towel etc when telugus,kannadigas and malyalees rejected the divisive dravidian thesis put forth by these mentally deranged individuals.
Infact, having believed these dravidian goons and their ideologies the Eelam tamils were betrayed be these very leaders and got their ass kicked by the sinhalese budhists.
The only consolation is that, into the not very distant future, the ass of tamils in TN will be kicked by kannadigas,telugus and malyaalese and the fascists and caste fanatics called periyaarists will be castrated, and boy, that will be poetic justice.Pity that it should be telugus and keralites and kannadigas who will have to liberate tamils and tamilnadu from the stranglehold of dravidian party villains.
இப்படி ஒருவர் இருந்தார் என்பதை அறியாமல் இருந்ததுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். மறைக்கபட்ட ஒரு தலைவரை எனக்கு அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி !!!!
நண்பர் வே.மதிமாறன் அவர்களே .. பெரியாருக்கு இணையான தலைவரை நீங்கள் வரிக்கு வரி நாயர் என்று குறிப்பிடுவது ஏன் ? தாரவாட் மாதவன் என்று கூறினால் என்ன? சாதியை எதிர்த்தவர்களுக்கு சாதியை குறிப்பிடலாமா ? மற்றபடி உங்கள் எழுத்தை ரசிப்பவன் மற்றும் உங்கள் வலைப்பூ பக்கம் அடிக்கடி வருபவன் .
i am with bala. other people here are not clear about their ideology, they blindly oppose ‘paarpanas’ . guys character is not inherited by caste, it is decided by one’s self. (i am not a brahmin)
i am losing faith in the genuiness of periyarists. you all became wierd characters, you insult anyone who does not follow your principles but u speak volumes about inequality etc. i tel u wat.. you guys will be like this forever and u will perish without doing anything other than a communal clash. trichy karan sir, your comment is outstanding.