முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற கழிசடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவாகவும் எதிராகவும் எழுதுகிற பலர் அந்த இரு கழிசடைகளையும் விரும்பி படிக்கிற அல்லது தீவிரமாக  படிக்கிற அளவிற்குக்கூட அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் படிப்பதில்லை.

இன்னும் பலர் பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும்  படிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இருவரையும் பொதுப்புத்தியளவில் மட்டுமே புரிந்து கொண்டு அவர்களை கடுமையாக விமர்சிக்கிற ஆபத்து நிறைந்த மூடர்களாகவும் இருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவம் பெறாதது பெரிய சோகம்.

டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவமான பிறகும் அதை வாங்குவதற்கு ஆளில்லையே என்பது அதைவிட பெரிய சோகம்.

பிரபல எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, முற்போக்காளர்களாக இருக்கிற பலபேரிடம் அண்ணல் அம்பேத்கரை படித்ததற்கான அறிகுறிகள் சுத்தமாக இல்லை அல்லது மிக மிக சொற்ப அளவில் அற்பத்தனமான புரிதலோடு இருக்கிறது.

சில எழுத்தாளார்கள், பேச்சாளர்கள், பத்திரிகையாளர்களிடம் ‘டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களை, பேச்சுக்களை ஏன் படிக்கவேண்டும்? இந்து சமூக அமைப்பை அம்பேத்கர் எப்படி துல்லியமாக, நேர்மையாக அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறார் என்று விவரித்து, அவசியம் அம்பேத்கரை நீங்கள் படிக்க வேண்டும், அவரை பற்றி எழுத வேண்டும், பேச வேண்டும் என்று நான் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு சிலருக்கு புத்தகமும் வாங்கித் தந்திருக்கிறேன். என்னிடம் ‘சரி, சரி’ என்று மண்டையை ஆட்டிவிட்டு,  மீண்டும் பழைய மாதிரியே ஒரே இடத்தில் சுத்தி சுத்தி வந்து செக்காட்டுகிறார்கள்.

அதிக வார்த்தை விரயங்களோடு, அலுப்பூட்டும் நடையில் எழுதும் ‘நவீன’ எழுத்தாளர்கள்,  ஊர் பேர் தெரியாத புதுசா எவனையாவது ஒரு வெளிநாட்டுக்காரன கண்டுபுடுச்சி சிலாகித்து எழுதுவதன் மூலம் தன்னை பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்கிறவர்கள், உலக அறிவாளிகளில் முக்கியமானவராக திகழ்கிற டாக்டர் அம்பேத்கரை பற்றி ஒருவார்த்தைக் கூட குறிப்பிடுவதில்லை. அவரை குறிப்பிட்டால் இவர்களின் நவீன தன்மை, தரமிழந்து தீட்டாயிடும்போல.

பத்து பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலைசெய்தவனை கருணாமூர்த்தி என்று சொல்வதுபோல், ஆயிரம் ஆண்டுகால  தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கிறவர்களுக்கு பேரு நவீன எழுத்தளார்களாம்!

உலக நியாயம் எல்லாம் பேசுகிற ‘ஞாநி’ போன்ற பிற்போக்காளர்கள் சும்மா பொய்யாக நடிப்பதற்குக் கூட அண்ணல் அம்பேத்கரை குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்படுவதில்லை. ‘அம்பேத்கரை எனக்கு பிடிக்காது’ என்று எழுதினால்கூட ‘அம்பேத்கர்’ பெயரை குறிப்பிட வேண்டி வருமே என்பதற்காகவே அதை தவிர்க்கிறார் போலும்.

ஜாதி ஆதிகத்திற்கு எதிராக எழுதுகிற, பேசுகிற எவரும் அண்ணல் அம்பேத்கரை படிக்காமல் செயல்படுவது முறையற்றது என்பது மட்டுமல்ல, அது அறிவற்றதும், அயோக்கியத்தனமானதும்கூட.

அண்ணல் அம்பேத்கரை ‘அவர்தானே’ என்று முன்முடிவோடு, அலட்சியமாக தவிர்க்கிற ‘முற்போக்காளர்’களிடமும், ‘அம்பேத்கரா? அட அவரு எதுக்குங்க நமக்கு?’ என்று  புறக்கணிக்கிற ஜாதி வெறியர்களிடமும், மாபெரும் ஆய்வாளரும், மாமேதையுமான அம்பேத்கரை தீவிரமாக கொண்டு சேர்க்க வேண்டும். அண்ணலின் சிந்தனைகள் அவர்களின் ஜாதி வெறி உள்ளத்திற்கு மாற்றாக அமையும் அல்லது அவர்களின் ஜாதிவெறியை அம்பலப்படுத்தும்.

அண்ணல் அம்பேத்கரின் 119 பிறந்த நாளில் முற்போக்காளர்களிடமும் ‘நுட்பமான’ வடிவில் மறைந்திருக்கும் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

அம்பேத்கர் என்னும் ஆபத்து
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
 
 
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
 
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

30 thoughts on “முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

 1. \\தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவம் பெறாதது பெரிய சோகம்.

  டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவமான பிறகும் அதை வாங்குவதற்கு ஆளில்லையே என்பது அதைவிட பெரிய சோகம்\\

  வார்த்தைகளில் ஆதங்கம் தெரிகிறது தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கார் அவர்க்ளின் புத்தகம் இனையத்தில் கிடைக்குமா இருந்தால் அதன் லிங்க் கொடுங்களே

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

 2. vanakkam. nalam nalamariya aasai. sariyaaga sonneenga thozarey. thodarnthu elutha vendukiren. nandri vanakkam

 3. ==
  உலக நியாயம் எல்லாம் பேசுகிற ‘ஞாநி’ போன்ற பிற்போக்காளர்கள் சும்மா பொய்யாக நடிப்பதற்குக் கூட அண்ணல் அம்பேத்கரை குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்படுவதில்லை. ‘அம்பேத்கரை எனக்கு பிடிக்காது’ என்று எழுதினால்கூட ‘அம்பேத்கர்’ பெயரை குறிப்பிட வேண்டி வருமே என்பதற்காகவே அதை தவிர்க்கிறார் போலும்.
  ==

  நான் அப்படி நினைக்க வில்லை, அம்பேத்கரை குறிப்பிடவேண்டிய நேரம் வரவேன்டும் அல்லவா??? ஏதாவது ஒரு கட்டுரை எழுதும் போது, அம்பேத்கரை எப்படி இழுக்க முடியும்? இந்தியாவின் சட்ட திட்டங்களை எழுதும் போது அண்ணல் அம்பேத்கரின் கண்டிப்பாக குறிப்பிடலாம். வேறு இடங்களில்??? ஞாநி மற்றபடி நன்றாகவே எழுதுகிறார்.

 4. ”தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவம் பெறாதது பெரிய சோகம்.

  டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவமான பிறகும் அதை வாங்குவதற்கு ஆளில்லையே என்பது அதைவிட பெரிய சோகம்.”’

  தோழர் மதி அவர்களின் எழுத்தில் நான் மிகவும் இரசித்த வரிகளை உங்களுடன் இவ்விடத்தில் பகிர்கிறேன்….

  காந்தியும் இராசாசியும் வெகு மக்களின் நம்பிக்கைக்கு ஆதரவாகவும் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள்

  பெரியாரும் அம்பேத்கரும் வெகு மக்களின் நம்பிக்கைக்கு எதிராகவும் நலனுக்காகவும் செயல்பட்டவர்கள்

  பல புத்தகங்களில் சொல்ல வேண்டியதை 4 வரிகளில் முடித்துள்ளார் மதி, முதலில் இதன் சாரத்தை மக்களுக்கு புரிய வைத்தால் எல்லாம் சரியாகி விடும்

 5. அண்ணல் அம்பேத்கரின் 119 பிறந்த நாளில் முற்போக்காளர்களிடமும் ‘நுட்பமான’ வடிவில் மறைந்திருக்கும் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.

 6. Enaku annal avargalai arumugam seithathu Mathi anne dhan.. Ivar annal pathy pesiyathu dhan enaku avar pathy therinjukka Mudinjathu…. thx to sasi and mathi anne…

  Ungal kelvi kku pathil iali….

  Ini saathi unarvu nanbargalai thirutha oruthi yeduppom..

  -Nithi

 7. தோழர் …பெரியார் நூல்கள் முழுமையாக வெளிவரவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன் ?
  இதுவரை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள 32 தொகுதிகளை (கடவுள்,மதம்,பெண்ணுரிமை,ஜாதி-தீண்டாமை) வாங்கிப்படித்த பெரியாரிஸ்ட்டுகள் எத்தனை பேர்? இந்த நூல்கள் தொடர்ந்து விற்பனையில் உள்ளது என்பதை உங்களைப் போன்றவர்கள் என்றாவது இணையத்தில் விளம்பரம் செய்ததுண்டா? தற்போது 1925 முதல் 1930 வரை வெளியிடப்பட்டுள்ள பெரியார் களஞ்சியம் – குடியரசு (11 தொகுப்புகள்) பற்றி விளம்பரம் செய்தீர்களா?
  சக பெரியார் தொண்டர்களுக்கே இச்செய்திகளை விளம்பரம் செய்யாத நிலை சரிதானா? உண்மையிலேயே பெரியார் நூல்களை பரப்பவேண்டுமென்றால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்கள் பட்டியலை விளம்பரம் செய்யுங்கள்
  .தங்கள் இணையத்தை பார்க்கும் தோழர்கள் பயன் பெறுவார்கள்.

 8. ////உண்மையிலேயே பெரியார் நூல்களை பரப்பவேண்டுமென்றால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்கள் பட்டியலை விளம்பரம் செய்யுங்கள்
  .தங்கள் இணையத்தை பார்க்கும் தோழர்கள் பயன் பெறுவார்கள்.///

  சரியாக சொன்னீர்கள் manimagan பெரியார் நூல்களை மக்களிடம் கொண்டுபோய் நாம்தான் சேர்க்க வேண்டும். இத்தனை ஆண்களில் ஏதோ கடனுக்கு என்று வெறும் 38 நூல்களை மட்டும் வீரமணி வெளியிட்டு இருக்கிறார். அந்த நூல்களை கூட யாரும் முறையாக வாங்கி வாசித்ததாக தெரியவில்லை. வீரமணியும் அந்த நூல்களை முறையாக விளம்பரம் படுத்துவதில்லை.

  வீரமணி தன்னுடை வாழ்வியல் சிந்தனைகளை விளம்பர படுத்திக்கொள்கிற அளவிற்கு பெரியார் நூல்களை விளம்பரபடுத்துவதில்லை.

  அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பதைவிட, உண்மையான பெரியார் தொண்டர்கள் பெரியார் நூல்களை யார் வெளியிட்டாலும் அதை ஆதரித்து விளம்பரம் படுத்தவேண்டும். manimagan அவர்களின் கருத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
  தோழர் நீங்கள் உங்கள் தளத்தில் பெரியார் நூல்களுக்கு விளம்பரம் செய்யவேண்டும்.

 9. அனைவருக்கும் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

 10. பகுத்தறிவு பிரச்சாரம், இன இழிவு ஒழிப்புப் போராட்டமும் தனக்குப் பின்பும் தொடர……தந்தை பெரியார் அவர்களாலே, திட்டமிட்டு தொடங்கப்பட்ட பெரியார் நிறுவனங்கள் வீரமணி & son – வணிக வளாகமாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

  வீரமணி பெரியார் நூல்களை வெளியிடவேண்டாம். வெளிவரும் பெரியார் நூல்களை தடை செய்யாது இருந்தாலே போதும்.

  1925 முதல் 1938 வரையான குடிஅரசு தொகுப்புகள்(பெரியார் தி.க வெளியிடு) முழுமையாக அச்சிடப்பட்டு, வீரமணியின் பொறாமைகுணத்தால் வெளிவர முடியவில்லையே!

  தனது அரசியல்/வியாபார யூக்திகளுக்கெல்லாம்,veeramoney பெரியார் பெயரை சொல்லாமல் இருந்தாலே போதும்.

  கோபாலபுரத்திற்கும்,போயஸ்தோட்டத்திற்கும் காவடி தூக்கும் வீரமணி, இளைய தலைமுறைக்கு பெரியாரை அறிமுகப்படுத்தினால்,
  பெரியாரின் ஆளுமையை சிதைப்பதற்கு ஒப்பானதே!

 11. உங்களுடைய கட்டுரைகளில் அப்பட்டமான பொறாமையைத் தவிர வேறு ஒண்ணும் காண இயலவில்லை.

 12. ///பெரியார் நூல்களை யார் வெளியிட்டாலும் அதை ஆதரித்து விளம்பரம் படுத்தவேண்டும். manimagan அவர்களின் கருத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.///

  தோழர் மகேசுக்கு நன்றி.உங்களின் உணர்வுக்கு பாராட்டுக்கள்.

  பெரியார் நூல்களை வெளியிடுவது பெரியார் நிறுவனத்தின் பணி.அதை கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.தோழர் ஈரோட்டுக்கண்ணாடி போன்றவர்கள்தான் இத்தனை நாட்களாக ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் .இப்போது ///வீரமணி பெரியார் நூல்களை வெளியிடவேண்டாம்./// என்கிறார்கள்.இது தான் பெரியார் தொண்டா?தி.க தலைவர் கி.வீரமணி முறையாக விளம்பரம் செய்துகொண்டுதான் இருக்கிறார் .
  ஈரோட்டுக்கண்ணாடி போன்றவர்கள் கண்கூடு போட்டுக்கொண்டிருந்தால் அவர் என்ன செய்யமுடியும்? தமிழ்நாடு முழுக்க புத்தக சந்தைகள் மூலம் பெரியார் நூல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.பெரியார் நிறுவனம் நாளும் மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இணையத்தில் லாவணி பாடிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? தற்போதுகூட தமிழகம் முழுதும் புத்தகச் சந்தைகள் நடந்துவருகின்றன.மனமிருந்தால் விடுதலையில் சுற்றுப்பயண பட்டியலைப் பார்த்து புத்தகச் சந்தையில் நூல்களை வாங்கிக்கொள்ளலாம் . முதலில் பெரியாரைப் பரப்புங்கள் .அதற்கு ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்.குற்றம் சாற்றுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை தோழர்களே..இன்றைக்கு பெரியார் நூல்களை வெளியிட யார் யாரெல்லாமோ வரலாம்.ஏனென்றால் பெரியாரின் தேவை அதிகரித்திருக்கும் காலம் இது.அதனால் பலர் பெரியார் நூல்களை வெளியிடுகிறார்கள்.ஆனால், இவர்கள் தொடர்ந்து பெரியார் நூல்களை வெளியிடப்போவதில்லை.
  ஆனால் ,பெரியார் நிறுவனம் மட்டும்தான் நேற்றும் வெளியிட்டது,இன்றும் வெளியிடுகிறது,நாளையும் வெளியிடும் .ஆகவே,உண்மையான பெரியார் தொண்டர்கள் என்று தம்மை கருதுவோர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு பலம் சேர்க்கவேண்டும் .அதுதான் பெரியாருக்கு செய்யும் நன்றி.
  அப்புறம் ,இன்னொரு செய்தி தோழர்களே ..நாளை 16-04-2010 பெரியார்களஞ்சியம் குடியரசு 1929,1930 ஆகிய தொகுதிகளை பெரியார் நிறுவனம் வெளியிடுகிறது…அவசியம் வாருங்கள்…வாங்குங்கள்…
  .

 13. Vanakkam Thozhar,

  Katturai miga arumai & unmai.thodaruttum ungal pani.Saathi Olippirkku kural kodukkathavan manithaneyam pesa thaguthi ellavathavan.

  Mikka Nentri.

  Anbudan P.Selvaraj,Neelangai,Chennai-600 041.

 14. வரலாற்றின் மாபெரும் பன்முக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்காருக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்..

  //பலர் பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும் படிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இருவரையும் பொதுப்புத்தியளவில் மட்டுமே புரிந்து கொண்டு அவர்களை கடுமையாக விமர்சிக்கிற ஆபத்து நிறைந்த மூடர்களாகவும் இருக்கிறார்கள்//

  அப்பட்டமான உண்மைங்க..

  //அண்ணல் அம்பேத்கரை ‘அவர்தானே’ என்று முன்முடிவோடு, அலட்சியமாக தவிர்க்கிற ‘முற்போக்காளர்’களிடமும், ‘அம்பேத்கரா? அட அவரு எதுக்குங்க நமக்கு?’ என்று புறக்கணிக்கிற ஜாதி வெறியர்களிடமும், மாபெரும் ஆய்வாளரும், மாமேதையுமான அம்பேத்கரை தீவிரமாக கொண்டு சேர்க்க வேண்டும்.//

  கண்டிப்பாக தோழர்…

  பகிர்தலுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்..

 15. மன்னிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்..

 16. உயிர் காக்கும் மருந்து தொடங்கி, ஊரை ஏமாற்றும் சாமியார் வரை ஊடுருவிய போலித்தனம்…. பெரியாரின் அறிவு வழிவிலும் புகுந்துவிட்டதற்கான வாழும் உதாரணமே வீரமணி.

  அய்யா காலத்திலிருந்தே வெளிவரும் சிறு வெளியிடுகள் தான் விலை அதிகரிப்புடன் வெளிவர செய்தது தான் வீரமணியின் வேலை.

  1978 தொடங்கி பெரியார் தி.க குடிஅரசு வெளியிடும் வரை வெளியான பெரியார் களஞ்சியங்களின் எண்ணிக்கை ஆறு மட்டுமே. 25 ஆண்டுகளில் 6 தொகுப்புகளை வெளியிட்ட செயல்புயல் -கடலூராரே!

  பெரியார் எழுத்துகளை தலைப்புவாரியாக தொகுக்க, 1 தொகுப்புக்கு 4 ஆண்டுகள். அவரது அரசியல் பணி, ஆலவட்ட பணிகளுக்கு நடுவே பெரியாருக்கும் நேரம் ஒதுக்கிய பெருந்தகையாளர் வீரமணி.

  2003 தொடங்கி, ஆண்டுதோறும் ஒரு குடிஅரசு தொகுப்பை வெளியிட்ட போது, தூங்கிக் கொண்டு இருந்த வீரமணி, பெரியார் தி.க 27 தொகுதியை வெளியிட இருந்த போது வாரி சுருட்டி எழுந்து வழக்கு போட்டது எந்த எண்ணத்தில்?

  இவரைத் தவிர வேறு எவர் வெளியிட்டாலும் பெரியார் எழுத்துக்களை திரித்து விடுவார்களாம்! இந்த திரிபுவாத திம்மன் பெரியாரியலை சிதைப்பதை பெரியார் முழக்கம் ஆதாரத்தோடு பட்டியலிட்ட போது இவர் எந்த முதலமைச்சர் வீட்டில் ஜால்ரா தட்டிக் கொண்டிருந்தார்?

  பெரியார் தி.க குடிஅரசு வெளியிட தடைக்காக வழக்கு போட்ட வீரமணி, 15 லட்சம் இவரிடம் கொடுத்தால் வெளியிடலாம் என்றாரே!

  இது பெரியார் எழுத்தா? கடலூர் கிருஸ்ணமூர்த்தியின் தோட்டமா? இந்த சாரங்கபாணி விலை பேச?

  பாப்பாத்தியிடம் 5 லட்சம் வாங்கிய பின் பாதை மாறிய ஞாபகமா?

  ஊரில் யாராவது கருப்புச்சட்டை போட்டால், எனது மகன் அன்புராஜிடம் 15 ரூபாய் தரவேண்டும் என்றால் வீரமணியின் ரசிகபட்டாளம் கொடுத்து விட்டு விசிலடிக்கலாம்.

  உண்மையான பெரியார் தொண்டனால் அது முடியாது.

  2001 -ல் கருணாநிதி நள்ளிரவில் போலிசாரால் கைது செய்யப்பட்டபோது, கைது செய்யபட்ட முறை பற்றி அரசியலுக்கு அப்பாற்பட்ட நடுநிலையாளர்கள் கூட கண்டித்தபோது, கலைஞர் சண்டித்தனம் செய்தார் என பார்ப்பன ஜெ விற்காக பகல் வேடம் போட்டவர் தான் இந்தவீரமணி.

  ஆனால், இன்று அழகிரி- ஸ்டாலினும் பதவிக்காக அடித்துக் கொள்ள…கருணாநிதி வீட்டு குடும்பசண்டையில், சொத்துச் சண்டையில் கருணாநிதி மனம் புண்பட்டுவிட கூடாதாம். குடம், குடமாக கண்ணீர் வடிக்கிறார் வீரமணி.

  2001 -ல் ஜெ முதல்வர்.
  2010 -ல் கருணாநிதி முதல்வர்.

  இதுதான் வீரமணியின் கொள்கை பார்வை; அறிவு நாணயம்; வெங்காயமெல்லாம்.

  பணத்திற்கும், பதவிக்கும் அடித்துக் கொள்ளும் அண்ணன் – தம்பி சண்டைக்காக 87 வயது முதியவருக்கு வக்காலத்து அறிக்கை விடும்
  வீரமணிக்கு நளினி என்ற இளம்பெண் 19 ஆண்டுகளை சிறையில் வாடி வதங்குவது கண்ணுக்கு தெரியவில்லையா?
  அறிக்கை விட்டால் ஆப்பு வைத்துவிடுவார்களே அச்சமா?

  இந்த வீரமணி தான் இனமானம் பற்றி மேடையிலே நீட்டி முழக்குகிறார்.

  இந்த கடலூராருக்கு கருப்புச்சட்டை ஒரு கேடு!
  அப்படியே “பகுத்தறிவு பார்வையோடு” இவருக்கு கொடி பிடிக்க ஒரு கூட்டம்!!

 17. பட்டுக்கோட்டைக்கு வழி சொன்னால் ,கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லவேண்டாம்

 18. ////1978 தொடங்கி பெரியார் தி.க குடிஅரசு வெளியிடும் வரை வெளியான பெரியார் களஞ்சியங்களின் எண்ணிக்கை ஆறு மட்டுமே. 25ஆண்டுகளில் 6 தொகுப்புகளை வெளியிட்ட செயல்புயல் -கடலூராரே!

  பெரியார் எழுத்துகளை தலைப்புவாரியாக தொகுக்க, 1 தொகுப்புக்கு 4 ஆண்டுகள். அவரது அரசியல் பணி, ஆலவட்ட பணிகளுக்கு நடுவே பெரியாருக்கும் நேரம் ஒதுக்கிய பெருந்தகையாளர் வீரமணி.

  2003 தொடங்கி, ஆண்டுதோறும் ஒரு குடிஅரசு தொகுப்பை வெளியிட்ட போது, தூங்கிக் கொண்டு இருந்த வீரமணி, பெரியார் தி.க 27 தொகுதியை வெளியிட இருந்த போது வாரி சுருட்டி எழுந்து வழக்கு போட்டது எந்த எண்ணத்தில்?/////

  தோழர் manimagan ஈரோட்டுக் கண்ணாடியின் இந்த கேள்விக்குரிய விளக்கத்தை கொடுங்கள்.

 19. மீண்டும் \\பட்டுக்கோட்டைக்கு வழி சொன்னால் ,கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லவேண்டாம்\\\ என்றே சொல்லவிரும்புகிறேன். மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டிருப்பதால் பயன் இல்லை . லாவணிபாட நான் விரும்பவில்லை.பெரியார் பற்றாளர்களின் பணி இன்னும் பெரியாரை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான்.அதனால்தான் பெரியார் பற்றாளர்கள் பங்குபெறும் இந்த தளத்தில் எனது கருத்துகளை பதிவு செய்தேன்.
  ஆக்கபூர்வமான கருத்தாக எனது கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தோழர்களே…முதலில் பெரியாரைப் பரப்பும் பணியைச் செய்வோம்.

 20. மணிமகன், ஈரோட்டுக்கண்ணாடி சரியாகத்தான் சொல்கிறார். இருபத்தி ஏழு தொகுப்புகளும் வெளியாகத் தயாராக இருக்கும்போது அதை வழக்குப் போட்டுத் தடுக்க நினைக்கிறவர்களுக்குத்தான் நீங்கள் சொல்லுகிற இந்த அறிவுரைகள் பொருந்தும்.

 21. \\அண்ணல் அம்பேத்கரை ‘அவர்தானே’ என்று முன்முடிவோடு, அலட்சியமாக தவிர்க்கிற ‘முற்போக்காளர்’களிடமும், ‘அம்பேத்கரா? அட அவரு எதுக்குங்க நமக்கு?’ என்று புறக்கணிக்கிற ஜாதி வெறியர்களிடமும், \\\\

  தோழர் சரியா சொன்னீங்க… படிச்ச பல பன்னாடைகளிடமும் இந்த எண்ணம் இருக்கிறது…. அம்பேத்கர் பிறந்தநாள் என்று சொன்னபோது… அத ஏன் நாம் கொண்டாடனும், அவரு அவங்களுக்கான தலைவர் என்று சொன்னபோது காரி உமிழ தோன்றுகிறது சொன்னவர்கள் முகத்தில்

 22. pona maasa vikatanla (date maranthu poachu) idam petra palveru paguthailil idam petravargalil 10 per thevar jaathiyai sernthavargal. ithu eppadi iruku?

Leave a Reply

%d bloggers like this: