பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

தங்கம் இதழில் வாசகர்கள் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்களின் முழு தொகுப்பு

நடிகர் கமலஹாசன் உண்மையில் நாத்திகரா? இல்லை நாத்திகர் போல் நடிக்கீறாரா?

-மதன், சென்னை

ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஒரு முற்போக்காளன் நாத்திகனாக இருக்க வேண்டியது கட்டாயம்; ஆனால் நாத்திகனாக இருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாகவோ, முற்போக்காளராகவோதான் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.

தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற பெரிய நிறுவனத்தின் முதலாளி, நாத்திகனாக இருக்கலாம். ஆனால், அவர் முற்போக்காளன் கிடையாது. ‘கடவுள் இல்லை’ என்பது ஒரு அறிவியல். அந்த அறிவியலை புரிந்தவர்கள். புரியாதவர்கள். அவ்வளவுதான்.

‘கமலஹாசன் நாத்திகரா?’ என்று கேட்டு இருக்கிறீர்கள்.

‘கமஹாசன்’ அல்ல; ‘கமல்ஹாசன்’ என்பதுதான் சரியானது. 90களுக்கு முன்புவரைதான் அவர் கமஹாசன் (KAMLAHASAN). அதன் பிறகு அவர் கமல்ஹாசன் (KAMALHASAN). எந்த எண் ஜோதிடனை கேட்டு இந்த ‘நாத்திகர்’ தன் பெயரில் இருந்த A வை நீக்கினாரோ தெரியாது.

‘கமலஹாசன் உண்மையில் நாத்திகரா?’இந்தக் கேள்வியை நீங்கள் கமலிடமே கேட்டிருந்தால், அவர் நாயகன் திரைப்படத்தில்,“தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று கேட்ட பேரனை பார்த்து, “தெரியலையேப்பா…” என்று ‘தெளிவாக’ பதில் சொன்னாரே…அதுபோன்ற வசனத்தைதான் பதிலாக அளிப்பார்.

அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கண்டிப்பாக இந்து மதத்தின் ஒரு பிரிவான அய்யங்கார்கள் கடைப்பிடிக்கும் வைணவத்தின் மீதும் அதன் சடங்குகள், வழக்கங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. அதை அவருடைய படங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். அவர் விஸ்பரூபமாக எடுத்து நின்ற ‘தசவதாரம்’ அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது.

சரி, இப்ப நீங்களே சொல்லுங்கள், கமல்ஹாசன் நாத்திகரா? ஆத்திகரா?

சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இசுலாமிய இன மக்களையே காட்டுகிறார்களே?

– அப்துல் காதர், பாளையங்கோட்டை

இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே.

‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள். ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.

அதற்குப் பின்னர் வந்த பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.

80களில் வந்த இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), இயக்குநர் ராஜசேகரின் படிக்காதவன் (நாகேஷ்) வாழ்க்கை (வி.கே. ராமசாமி) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன. அப்படி படம் எடுக்க வேண்டிய  கட்டயாத்தை திராவிட இயக்க அரசியல் சூழல் அல்லது சினிமாவில் இருந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள்.

மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும்,  காபரே நடனம் ஆடும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

“பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டுவதற்கு, இஸ்லாமிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது” என்று காரணம் இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், அதுவல்ல உண்மை. இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இதுபோன்ற படங்கள் வருவதற்கு காரணம். இப்போதாவது பாகிஸ்தானோடு எல்லைப் பிரச்சினைதான். ஆனால் பாகிஸ்தானோடு போர் நடந்தபோதேகூட, தமிழில் இஸ்லாமிய எதிர்ப்பு படங்கள் வந்தது கிடையாது; அதற்கு மாறாக இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தன் உயிரையே தியாகம் செய்கிற ராணுவ வீரனை ஒரு இஸ்லாமியராகத்தான் காட்டியிருந்தார்.

அழகி போட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதா?

-விஜயராகவன், திருச்சி

அழகிபோட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதுதான்; நமக்கல்ல. வர்த்தக நிறுவனங்களுக்கு.

ஒரு காலத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொக்கோ கோலா, மீண்டும் இந்தியாவில் வர்த்தகம் நடத்த அனுமதிக்கப்பட்டபோது, இந்தியாவின் முதல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென்னின் கையில் கொக்கோ கோலா பாட்டிலை கொடுத்து அனுப்பியது அந்த நிறுவனம். அவர்தான் அதற்கான மாடல்.

கோக்கின் போட்டி நிறுவனமான ‘பெப்சி’ பார்த்தது, ‘ இந்தியாவில உனக்குதான் அழகி கிடைப்பாளா? எனக்கு கிடைக்க மாட்டாளா?’ என்று அது ஒரு அழகி போட்டிய நடத்தி, ஐஸ்வரியாராயை உலக அழகியாக தேர்ந்தேடுத்து, அவர் கையில பெப்சி பாட்டில கொடுத்து அனுப்பியது. அவர்தான் அதற்கான மாடல்.

அதுல இருந்து புடுச்சுது இந்தியாவ ‘அழகிகள் பிசாசு’.

நம் மக்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் என்கிற மந்திரவாதிகள் ஏவி விட்டு இருக்கிற இந்த பிசாசுகளை அடித்து ஓட்டுவதற்கும், மந்திரவாதிகளை ஓட ஓட விரட்டுவதற்கும் தலைவர் லெனினை போல் ஒரு பூசாரி வேண்டும். ஆனால், நமக்கு கிடைச்ச தலைவர்களோ மந்திரவாதிகளுக்கு கூட்டாளிகளான ஜார் மன்னர்கள்தான்.

உங்கள் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி அதிகம். ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே அது உங்களைப் பொறுத்தவரை சரிதான்.

-பெயர் குறிப்பிடவில்லை.

ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் மட்டும்தான் நக்கி குடிக்கும்; சிங்கம் என்ன ‘சொம்புல‘ மொண்டா குடிக்கும்? அதுவும் நக்கித்தான் குடிக்கும்.

இதுபோன்ற பழமொழிகள் – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கவே பயன்படுகிறது. ஆதிகாரத்திற்கு வந்த யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுகளை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தின் மீதே சுமத்தி, அவர்களை இழிவாக சுட்டிக் காட்ட ஆதிக்க ஜாதிக்காரர்களால் காழ்ப்புணர்ச்சியோடு பயன்படுத்தப்படுகிறது. அதே தவறை ஆதிக்க ஜாதிக்காரர்கள் செய்யும்போது, அதை அவர்கள் சார்ந்த ஜாதியோடு தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை. இது தான்ஆதிக்க ஜாதி மனோபாவம்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பயப்படுகிற விலங்குகளை மட்டமாகவும், தான் பயப்படுக்கிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற மனோபாவமும் இத்துடன் சேர்ந்து கொள்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

அவைகளை ஆதிக்கத்திற்கான குறியீடாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். எளிய ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தையும், அப்பாவி ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை கொன்ற அமெரிக்க ராணுவத்தையும் குறிப்பிடுவதற்கு சிங்கம், புலி, சிறுத்தை குறியீட்டை  பயன்படுத்தலாம்.

தன்னைவிட பலமான கழுகோடு சண்டையிட்டு அதை விரட்டியடித்து, தன் குஞ்சுகளை காக்கிறதே கோழி, அதுதான் வீரம். அமெரிக்கா என்கிற ஆதிக்க் கழுகை விரட்டியடித்து,  வெற்றிக் கண்டு தன் நாட்டை பாதுகாத்த எளிய வியட்நாம் மக்களைப் போல்.

‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.

கட்சி அரசியல் சார்பற்றவர்களில் தமிழ் திரைப்பட உலகில் செறிவான ஆற்றல் உள்ளவர் என்றால் யாரை குறிப்பிடுவீர்கள்?

-என். சுகுமார், மதுரை.

ஏ.பி. நாகராஜனை. இன்றைய சமூக படங்கள் தீவிரமான இந்து பிரச்சார படமாகவும், இஸ்லாமிய எதிர்ப்பு படமாகவும் இருக்கிறது. ஆனால், ஏ.பி. நாகராஜன் எடுத்த இந்து புராண பக்தி படங்கள் சிறந்த சமூக படங்களாக, பொழுதுபோக்கு படங்களாக இருந்திருக்கிறது. புராணக் கதை அடிப்படையில் அவர் எடுத்த ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதையால், இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கூட விரும்பி பார்த்தார்கள். அந்தப் படத்தின் வசனங்கள் எல்லா மதக்காரர்களுக்கும் மனப்பாடம்.

கொத்தமங்கலம் சுப்புவின் கதையை சிறந்த திரைக்கதையாக்கி ‘தில்லான மோகனாம்பாள்’ என்று அவர் எடுத்த திரைப்படத்திற்கு இணையாக இதுவரை தமிழில் பொழுது போக்கு படம் வந்ததில்லை.

தில்லான மோகனாம்பாளை தழுவி எடுத்த கரகாட்டக்காரனும் பெரிய வெற்றி பெற்றது. தில்லான மோகனாம்பாளையும்-கரகாட்டக்காரனையும் கலந்து அடித்த, சங்கமமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்லாம் ஏ.பி. நாகராஜனைத்தான் சாரும்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழில் படிக்க கீழ் உள்ள சுட்டியை சொடுக்கவும்

http://ebook.thangamonline.com/dec10/index.php?page=50

***

///மத நல்லிணக்கம் குறித்து தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.அதில் வெளியாகியுள்ள செய்தியில் ஒரு திருத்தம்
கர்ணன் திரைப்படத்தை இயக்கியவர் B R பந்துலு .ஏ பி நாகராஜன் அல்ல///

என்று திரு. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

அர்த்தமற்று ஊதாரித்தனத்துடன் பிரம்மாண்டமாக படம் எடுதக்கும் இயக்குநர்கள் மத்தியில் கதைக்கு தேவையான முறையில் மிக பிரம்மாண்டமான கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த B R பந்துலுதான் கர்ணன் படத்தின் இயக்குநர். தயாரிப்பாளர். அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு.

கர்ணன் படத்தின் வசனத்தை எழுதியவரும் ஏ பி நாகராஜன் அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மிக சிறப்பாக வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி தான் கர்ணன் படத்திற்கும் வசனம்.

தவறுககு வருத்தம் தெரிவித்து ஏ.பி. நாகராஜன் பற்றிய பதிலில் உள்ள கர்ணன் படம் பற்றிய தகவலை நீக்கிவிடுகிறேன்.
திரு. ராமகிருஷ்ணனுக்கு நன்றி.

-வே.மதிமாறன்

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

10 thoughts on “பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

 1. கமலின் பக்திமான் ஞாநி தன் மகனுக்கு கமலிடம் கேமராமேன் வாய்ப்பு வாங்கி தந்துவிட்டார்.
  சமீபத்தில் வெளியாகிய மன்மதன் அம்பு படத்தின் கேமரா மேன் மனுஷ் நந்தன் ஞாநியின் மகன்.

  வாழ்க பார்ப்பன பகுத்தறிவு.
  வாழ்க பார்ப்பன முற்போக்கு.

  கருணாநிதி குடும்பம் சினிமாவுக்கு வந்தது பற்றி இன்நேரம் கடுமையான கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருப்பார் ஏதாவது ஒரு பார்ப்பன பத்திரிகையில்.

 2. கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்தான் மன்மத அம்பு படத்தின் தயாரிப்பாளர்.
  அவர்தான் ஞாநியின் மகனுக்கு பணம் தந்திருப்பார்.

  இதுதான் பார்ப்பன திறமை.

 3. உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறதாமே உங்களிடம்..உங்கள் பதில்களை உலகம் கடைபிடித்தால் உலகத்தில் பிரச்சினையே இருக்காதே……குறை கண்டுபிடிக்கும் நோக்கமும் வேகமும்தான் உங்களிடம் தெரிகிறதே தவிர உண்மையான சிந்தனை தெரியவில்லை.
  ஒருமையில் சிந்திக்காதீர்கள்.. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் பல முகங்கள் இருக்கின்றன.

 4. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் – இல் இணைக்கவும்.

 5. கமலின் படங்களில் ஐயர்கள் கொண்டாடப்படுவது உண்மை. ஆனால் கடவுள்கள் இகழப்படுகின்றன என்பதை கருத்தில் கொள்க!,..

  அவர் கடவுளை வெறுக்கும் நாத்திகவாதி. ஐயர்களை கொண்டாடும் ஆன்மீகவாதி@..

 6. கமல் நிச்சயம் ஒரு முற்போக்கான கலைஞன்…பாரதியார் கூட உங்களுக்கீ பாரதீய ஜனதா வாக தெரிந்தார் அல்லவா? அத்வானியின் ரதயாத்திரையை கடுமையாக விமர்சனம் செய்த ஓரே சினீமா கலைஞன் கமல்தான்

 7. udansu mannan vengayam madhimaaRan,
  alibabavum naaRpathu thirudargaLum came in 1957. Even 7 years before Laila Majnu came with T R mahalingam in lead. Then Anarkali came in 1954. Neither of them is from dravida saakkadai. Check facts before penaththals.

Leave a Reply

%d bloggers like this: