ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு

க மனிதனின் உரிமையை மதிக்கும் அன்புள்ள நண்பர்களே!

சமத்துவ சமூகம் விரும்பும் பேரன்புள்ள தோழர்களே!

சமூகத்தின் மீது நமக்குள்ள காதலையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக, தலைவர்கள்/புரட்சியாளர்கள் படம் பொறித்த பின்னலாடைகளை (T.Shirt) அணிகின்றோம். ஆனால், இது போன்ற எளிய முற்போக்கு நடவடிக்கைகள்கூட, நம் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும், சாதியத்தைச் சாடுவதாக ஒருபோதும் இருந்ததில்லை.

பெரியார் பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே பகுத்தறிவாளராகவும்,

பிரபாகரன் பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே ஈழ ஆதரவாளராகவும்,

சே குவேரா பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், இருந்துவிடுகின்றனர்.

தந்தை பெரியார், மேதகு பிரபாகரன், சே குவேரா ஆகியோரின் கருத்துக்களின் சாராம்சத்தில் சாதிய எதிர்ப்பு இருந்தாலும், அதுவே அவர்களின் அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தத் தலைவர்கள்/புரட்சியாளர்களின் படங்களைப் பயன்படுத்துவதற்கு சுயசாதி உணர்வு தடையாக இருப்பதில்லை.

உளவியளாகப் புரையோடிப்போயுள்ள சாதியம் எனும் கடும் விஷம் முறிக்கப்படுவதற்கு, சுற்றி வளைத்துக் காதைத் தொடும் கருத்துக்கள் ஒருபோதும் உதவிவிடாது. சுயசாதி உணர்விற்கே பங்கம் வராத எந்த ஒரு முற்போக்கு நடவடிக்கையும் சாதியத்திற்கு எதிரானதாக இருக்க முடியாது.

சாதியத்திற்கு எதிரான அடையாளம் அதன் ஆணிவேரை அறுப்பதாக இருக்க வேண்டும், சுயசாதி உணர்வைச் சுடுவதாக இருக்க வேண்டும். அந்த அடையாளம் “அம்பேத்கர்” என்பதுதான். அதானால்தான், முற்போக்காளர்கள்கூட ஒடுக்கப்பட்டவர்களாக இல்லையென்றால், அம்பேத்கரின் படங்களை தன் வீட்டிலோ வேறு எங்குமோ பயன்படுத்துவதில்லை. சுயசாதி உணர்வைத் தூக்கிப்பிடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும்கூட “அம்பேத்கர்” புறக்கணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

ஆக, சாதியத்தின் ஆதாரத்திலேயே ஆப்பை இறக்குவது “அம்பேத்கர்” எனும் அடையாளம்தான். அம்பேத்கர் அடையாளங்களை அனைத்து மக்களிடமும் கொண்டுசெல்லும் விதத்தில், அம்பேத்கர் பின்னலாடையை தயார் செய்து வருகின்றோம். அம்பேத்கர் பின்னலாடை, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரும் பயன்படுத்தும்போது, அது சாதியத்திற்கு எதிரான சரியான உளவியல் கலகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

அம்பேத்கர் பின்னலாடையை அணிய, மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவோர் தொடர்புகொள்ளவும்.

உங்களுக்கு எத்தனை பின்னலாடைகள் வேண்டும், என்ற விவரமும் அதற்குரிய முன்பணத்தோடும். இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் பின்னலாடை தயாராகிவிடும்.

ஒரு பின்னலாடையின் விலை ரூ.130.

சரியான முற்போக்காளர்களை எதிர்பார்த்து……

தோழமையுடன்

 மதியவன்

அம்பேத்கர் பின்னலாடை பரப்புரைக்குழுவிற்காக

mathiyavan@yahoo.co.in

கோவை – 9894230138 (வழக்குரைஞர் பாலா)

தேனி – 9600039031 (மதியவன்)

கோவை – 9944952893  (ஞாட்பன்)

சென்னை – 9629982304 (தமிழ்மணி)

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
 ‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி

22 thoughts on “ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு

 1. மதி மாறன் அண்ணாவுக்கு வணக்கம்.

  என் பெயர் மீ.அப்துல் காதர் முகைதீன். நான் கொல்கட்டாவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
  எனக்கு தங்களின் பின்னலாடைகள் தேவை. எனக்கு சில சந்தேகங்களும் இருக்கின்றன.
  1.என்ன அளவுகளில் கிடைக்கும்?
  சிறுவர்கள் அணிவதற்குமான அளவுகளிலும் கிடைத்தால் நலம்.
  2.என்னென்ன நிறங்களில் கிடைக்கும்?
  காரணம் என்னவென்றால் இந்த பின்னலாடைகளை எப்பொழுதாவது ஒரு நாள் மட்டும் அணிந்தால் உதாரணத்திற்கு திரு.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளுக்கோ அல்லது வேறு ஒரு பொது கூட்டம் சார்ந்த விசயங்களுக்காக மட்டும் அணிந்தால் இது சீருடை போன்று ஆகி விடும்.
  எனவே பல நிறங்களிலும் பல வாசகங்களிலும் கிடைத்தால் அடிக்கடி உபயோகப் படுத்த முடியும்.
  3.எப்படி பெறுவது? கொரியரில் அனுப்ப இயலுமா?

 2. நன்றி தோழர். உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  கூடுதல் தகவல் பெற.நீங்கள் இந்த தோழர் மதியவனை தொடர்பு கொள்ளுங்கள். – 9600039031 (மதியவன்). mathiyavan@yahoo.co.in

 3. மகிழ்ச்சி தோழர் மீ.அப்துல் காதர் முகைதீன்.
  பள்ளி சிறுவர்களும் ஆர்வமாகக் கேட்கின்றனர், சிறுவர்களுக்கான அளவிலும் தயார் செய்வதாகத்தான் உள்ளோம். கருப்பு , மற்றும் ஏதாவது இரண்டு நல்ல நிறங்களில் என்று திட்டமிட்டுள்ளோம். உங்களுக்கு எத்தனை தேவைப்படும் என்பதை விரைவில் தெரியப்படுத்துங்கள். நன்றி தோழர்.

 4. வங்கியில் பணம் செலுத்துபவர்கள், 9600039031க்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பிறகு பணத்தை செலுத்தவும்.

  வங்கிக் கணக்கு விவரம்.

  ACC.NO -0098001100000199
  NAME -M.BALACHANDAR
  BANK -PUNJAB NATIONAL BANK.
  …BRANCH -OPPANAKARA VEETHI BRANCH.

  அல்லது
  ACC.NO – 30064072999
  NAME – KATHIRAVAN.G
  BANK – SBI
  BRANCH – CTO CPMPLEX (COIMBATORE)

 5. தேனி பிரபாகரன் & குட்டி 10 க்கு – 1300
  விழுப்புரம் ராசா 4 க்கு – 520
  கொடுத்துள்ளனர்….

  தஞ்சை – புரட்சிகர இளைஞர் முன்னணி 30 எண்ணிக்கை கேட்டுள்ளனர்.

  தோழர் பேய்காமன் – 100 பின்னலாடைகள் கேட்டுள்ளார்
  கார்த்திகேயன் -3
  பாமசிவம் அசோக் – 4

  மகிழ்ச்சி….

 6. நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.
  அண்ணல் அம்பேத்கர் T.Shirt கொண்டு வருவதற்காக என்னுடைய சேமிப்பு பணம் ரூ.1000 நன்கொடையாக தருகிறேன்.

 7. மிகச்சிறந்த முயற்சினை மேற்கொண்டிருக்கும் தோழருக்கு நன்றி; தங்களுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றோம். எங்கள் பகுதி தோழர்களின் சார்பில் 300 தளர் சட்டைகளை பெறத் திட்டமிட்டுள்ளோம். தங்களின் முயற்சி வெல்க!
  வாழ்க அண்ணல் அம்பேத்கர்!

 8. மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தோடில்லாமல் அந்த மாட்டினும் கீழாக நடத்தப்பட்டவர்களையெல்லாம் மனிதாரக்கிய மாபெரும் மகத்தான தலைவர் நம் தலைவர். அவருடைய பின்னலாடையை அணிந்தால்தான் அது ஒரு முழுமையான சம்ததுவ சாகோதரத்துவ உணர்வாகவும் சாதிய தீண்டாமை எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கமுடியும்.

  மேலூம் எந்த அளவுகளில் நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரியப்படுத்தவும்.

  காஞ்சிபுரம், மதுராந்தகம் பகுதிகளுக்கு ஒரு வரை நியமித்தால் நன்றாக இருக்கும்.

 9. நன்றி தம்பி கவின்.
  பள்ளிப்பருவத்திலேயே அம்பேத்கர் மீதான உங்களுடைய ஆர்வம், நம் பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையைத்தந்திருக்கிறது…. மிக்க மகிழ்ச்சி….

 10. நன்றி தம்பி கவின்.
  பள்ளிப்பருவத்திலேயே அம்பேத்கர் மீதான உங்களுடைய ஆர்வம், நம் பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையைத்தந்திருக்கிறது…. மிக்க மகிழ்ச்சி….

 11. //முழுமையான ஒத்துழைப்பு//
  மிக்க மகிழ்ச்சி தோழர் மா.தமிழ்ப்பரிதி. மற்றும் மு.க.கலைமணி
  தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் தோழர் …

 12. தோழர் சௌந்தர் (திருவண்ணாமலை) 8 பின்னலாடைகளுக்கு 1075 ரூபாய்

  தோழர் மோகன் திண்டிவனம் – 10 க்கு 1300 ரூபாய்
  கொடுத்துள்ளனர். நன்றிகள்

 13. தோழர்களுக்கு ……

  ஒரு பின்னலாடையின் விலை 130 க்குள் அடக்கிவிடலாம் என்று முயன்றுபார்த்தோம். ஆனால், நூல் விலையேற்றம் காரணமாகவும், ஆடையின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாததாலும், ஒரு பின்னலாடையின் அடக்கவிலை 150 ஆக உயர்ந்துள்ளது. தோழர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  25ம் தேதிக்குள் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை தெரியப்படுத்தியும், அதற்கான முன்பணத்தையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம்.

  அடக்கவிலை நிர்ணயத்தில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டதால் , தோழர்கள் இம்மாத இறுதிவரை காலம் எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

 14. சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த தோழர்கள் ரூ. 2000 கொடுத்துள்ளார்கள்.
  கோவை வழக்கறிஞர் பாலா, ரூ. 7000 கொடுத்துள்ளார்.

 15. விழுப்புரம் ராசா -1050
  தேனி தமிழ்மணி-750
  மோகன் திண்டிவனம் – 200
  பேராசிரியர் தமிழ்பரிதி -5000
  தோழர் ராஜசிங்கம் -5000
  கொடுத்துள்ளனர். நன்றி

 16. “அம்பேத்கர் பின்னலாடை” ஒருவழியாக விநியோகம் செய்தாகவிட்டது. முன்பணம் கொடுத்தவர்களுக்கே 500 பின்னலாடைகளும் போதுமானதாக இருந்ததால், விருப்பம் தெரிவித்த எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. இன்னும் நிறைய தோழர்கள் ஆர்வமாகக் கேட்கிறார்கள். வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை “அம்பேத்கர் பின்னலாடை” கொண்டுவர முயற்சி செய்வோம். ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும், அம்பேத்கர் பின்னலாடை பரப்புரைக்குழு சார்பாக, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

%d bloggers like this: