சென்னை புத்தகக் காட்சியில்..

1459663_10201170748172890_227902526_n

முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது.
பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை.
அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ அங்குசம் வெளியீடு. (மூன்றாம் பதிப்பு)

all-book-wrappers

‘ பாரதியைப் புரிந்து கொள்வது எப்படி?’ என்று விளக்கப் படாதபாடு படுகிறார்கள் நம் அறிஞர்கள்.
‘பாரதியை எப்படிப் புரிந்து கொள்வது?’ என்பதற்குச் சுலபமான வழியை நம் அறிஞர்களுக்குப் பணிவோடு சொல்லித் தருவோம்.

பாரதியிடம், உயர்ந்த மொழி ஆங்கிலமா? தமிழா?என்றால் ‘பராசக்தி தமிழுக்கு ஒரு தீங்கா?’ என்று பொங்கி எழுவான். தமிழா? சமஸ்கிருதமா? என்று நெருக்கிப் பாருங்கள், ‘சமஸ்கிருதம் ஒன்றுதான் தேவ பாஷை’ என்று குழைவான்.

‘அல்லாவைப் பற்றி பாட்டெழுதி முசுலீம் கடையில் டீ குடித்திருக்கிறான். அதனால் அவன் முசுலீம்.’
‘ஏசுவைப் பற்றிப் பாடியிருக்கிறான். அவன் ஒரு கிறித்தவன்.’
‘பிறப்பால் அவன் இந்துவாக இருக்கிறான் இந்து மதத்தின்மீது ஈடுபாடு இருக்கிறது. அதனால் அவன் ஒர் இந்து’ என்று பாரதியின் ‘ஏசு, அல்லா பாட்டை’ தனியாகக் கழட்டிப் பார்த்து, அவரை மத நல்லிணக்கவாதியாகக் காட்டி மகிழ்ச்சியடையலாம்.

இந்து மதமா? இசுலாமா? கிறித்தவமா? இந்து மதமா? என்று நெருக்கிப் பிடித்துப் பாருங்கள்.
இசுலாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்து, மசூதிக்குச் சென்று கஞ்சி குடித்துவிட்டு மாலை பொதுக்கூட்டத்தில்,
‘இது இந்து நாடு, ராமன் பிறந்த அந்தப் புண்ணிய பூமியில் அவனுக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்று சவால் விட்டுப் பேசுகிற அத்வானி வாஜ்பாயைப் போல் நெற்றியில் நீட்டி இடப்பட்ட குங்குமத்தோடும், கையில் சூலத்தோடும் வழி மறிப்பான் மகாகவி.

பவுத்தம் குறித்து சிலாகிக்கிற பாரதியை ‘பவுத்தமா? வேதமா?’ என்று நெருக்கினால்,
‘நல்ல வேளை ஆதி சங்கரர் பவுத்தத்திடம் இருந்து வேத மதத்தைப் பாதுகாத்தார்’ என்று நிம்மதி மூச்சு விடுவான்.

பார்ப்பன எதிர்ப்பு பாடிய பாரதியை, ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று நெருக்கிப் பிடித்தால், ‘இந்த பிராமணரல்லாதார் கிளர்ச்சி காலகதியால் தானே மங்கி அழிந்து விடும்’ என்று சாபமிடுவான். அவ்வளவுதான் பாரதி.

‘பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்’ அங்குசம் வெளியீடு. (மூன்றாம் பதிப்பு)

mathimaran-wrapper

டாக்டர்அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.

ஜாதிஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.

‘நான் யாருக்கும் அடிமையில்லை
எனக்கடிமை யாருமில்லை’ அங்குசம் வெளியீடு. (நான்காம் பதிப்பு)

gandhi

‘காந்தியை சாட்சியாக வைத்தே,காந்தியின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறேன்.
இரண்டில் ஒன்று முடிவு காண வேண்டும்.
ஒன்று என் கேள்விகளுக்குரிய பதில்களைச் சொல்லி, என்னை காந்தியவாதியாக மாற்ற வேண்டும்.
முடியவில்லை என்றால், அவர்கள் காந்தியை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்து தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இவைகளோடு காந்தியத்தையும் கலந்து பேசுபவர்களில் இருந்து, கதை எழுதும் காந்திய இலக்கியவாதிகள், காங்கிரஸ்காரர்கள் உட்பட,

கதர் காந்தியவாதிகள் முதல், கார்ப்பரேட் காந்தியவாதிகள் வரை சகலவிதமான காந்தியவாதிகளுக்கும் இதை சவாலாக சொல்கிறேன்.

ஆட்டத்திற்கு நான் ரெடி. நீங்க ரெடியா?’ என்று வெளிப்படையாக எழுதியிருந்தேன். இன்றுவரை சத்தமில்லை.

‘காந்தி நண்பரா?’ அங்குசம் வெளியீடு  (இரண்டாம் பதிப்பு)

sankara-madam1

‘அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்’ என்று சொல்கிறார்கள். சரி. இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

சங்கர மடத்தில் புகுந்து ஒரு தீவிரவாத கும்பல் அங்கிருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும் அவர்களை ஸேவிக்க வந்த பார்ப்பனர்களை, சொர்ணமால்யா போன்ற பக்தர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் அல்லது காவல் துறை என்ன செய்யவேண்டும்?

தீவிரவாதிகளிடம் தந்திரமாக பேசி அல்லது கோரிக்கையை நிறைவேற்றி பிணைக்கைதிகளாக இருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும மத்தியம் ஒருமணிக்கு ஜெயேந்திரனை தரிசிக்க வந்த பார்ப்னர்களை பத்திரமாக மீட்க வேண்டும். இதுதான் முறை.

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ அங்குசம் வெளியீடு

Wrap_2

மக்களுக்கான கலையே, கலையின் உன்னதம்’ என்று போன நூற்றாண்டின் கலைஞன் சார்லி சாப்னின் நிரூபித்ததை, இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இன்னொரு மக்கள் கலைஞன் இசைஞானி இளையராஜா நிரூபித்திருக்கிறார்.
எளிய மக்களிடமிருந்தே நூற்றாண்டுக்கு ஒரு கலைஞன் உருவாகிறான்..

‘இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்’ அபசகுனம் வெளியீடு

1544970_10201259014299488_92700046_n

‘இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்’

‘டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை’ அபசகுனம் வெளியீடு.

**

சென்னை புத்தகக் காட்சியில்…
கருப்பு பிரதிகள் 287 – கீழைக்காற்று – 369, 370 பனுவல் – 605, 606 அகநாழிகை – 666, 667 கடைகளில் கிடைக்கும்.

11 thoughts on “சென்னை புத்தகக் காட்சியில்..

  1. pavamnga neenga periyaraiyum ambethkaraiyum tholil thukki semakkareenga anal inraiya thalaimuraiyitam periyariyam tholviyai thaluvikondu varukirathu Tamil thesiam uruvagamal tamilamukku viduvu illai papanai katti yematriyathu velichathukku vanthu romba nall achunga …

  2. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை

    ஒருவேலை கஞ்சா அடிச்ச மயக்கத்தில் இருந்திருப்பாரோ..? இல்லையே
    அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி/./.

  3. அபசகுனம் என்பது சிறப்பான பெயராக உள்ளது.யார் அதன் பதிப்பாளர்கள்?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading