‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்

Bairavar

காதலர் தினத்தை கொண்டாடிய இந்து அமைப்புகளுக்கு நன்றி!
*
சிவனின் அவதாரங்களில் ஒன்றான பைரவரின் வாகனமான நாய்க்கும் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான பன்றிக்கும், காதலர் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் இன்று திருமணம் செய்து வைத்தார்கள்.

February 14

1001263_10201554151237727_1016166788_n

மோடி அலை வீசுவதாக தனது செய்திகளில் கூட ‘கருத்தை’ சொறுகி அடிக்கடி எழுதிகிற தினகரன், வண்டலூரில் மோடி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்திற்‘கே’ முதல் பக்கத்தில் படமும் 8 காலத்திற்கு தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டு, உள்ளே இரண்டு பக்கங்கள் வரை நீட்டி மொத்தம் 3 பக்கங்கள் கொண்டாடியது.

நேற்றைய திருச்சி திமுக மாநாட்டு செய்தியை‘யே’ முதல் பக்கத்தில் 1 படமும் 5 காலத்திற்கு செய்தியாகவும் உள்ளே ஒரே பக்கத்திற்குள் முடித்துக் கொண்டது.

தினகரன் திமுக ஆதரவு பத்திரிகை மட்டுமல்ல கலைஞரின் குடும்ப பத்திரிகை என்கிறார்கள் உண்மையா?

February 16

1622654_10201557314236800_999590896_n

‘இந்து முன்னணி அரசியல் கட்சியல்ல. தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பின்புதான் முடிவு செய்வோம்’ – என்று இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் யாருகூட கூட்டணி என்பதைகூட கண்டுபுடிச்சிடலாம்..
ராம கோபாலன் யாரை ஆதரிப்பாரு? கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒருவேளை முஸ்லீம் லீக்கை ஆதாரிப்பாரோ?

February 17

vijayakanth_076

 ஜோதிடர்களுக்கு ஓர் சவால்!
*
ஜோதிடத் திறமையால் தனிநபர் வாழ்க்கையிலிருந்து அரசியல் வரை, நடக்கப்போறத முன் கூட்டியே சொல்றீ்ங்க..
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் அடுத்த பிரதமர்.. என்றெல்லாம் சொல்வது இருக்கட்டும்..

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பாரு? இத உங்களால சொல்ல முடியுமா?

February 17

2 thoughts on “‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்

  1. ராம கோபாலன் சொல்வதுதான் சூப்பர் ஜோக் ,பிஜேபி யை தவிர வேறேதும் கட்சி அவர் கண்களில் படுமா ?

Leave a Reply

%d bloggers like this: