சூத்திரனா? பஞ்சமனா? சுயமரியாதை வீரனா?

shudra

//ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் யுத்தமே தவிர ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்பது கண்கட்டி வித்தை.//

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதற்கு எதிராகா மாறிவிடுகிறார்கள்.

‘பிராமணர் சங்கத்தோடு இணைந்து அதிமுக வை ஆதரிப்போம்’ (கண்கட்டாத வித்தை)

இதை பச்சை சந்தர்ப்பவாதம் என்றால்.. நீங்கள் தமிழன துரோகி. ‘இதுதான் பச்சைத் தமிழனின் கொள்கை’ அப்போ நீங்களும் அதேதான். அதாங்க.. பச்சை.

*

ஆரியத்திற்கு முன் தமிழன் தெலுங்கன் மலையாளி மராட்டியன் இந்திக்க்காரன்என்ற வேறுபாடுகள் கிடையாது… எல்லோரும் அவர்களுக்கு சூத்திரன், பஞ்சமர்கள்தான்.
ஒவ்வொரு தமிழன் தெலுங்கன் மலையாளி இவர்கள் உள்ளும் இருப்பது இதுவே. அதையே ஆரியர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

ஆரியர்கள் தனக்கு எதிராக நினைப்பது திராவிடத்தைதான். திராவிடம் என்கிற வாரத்தை சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் அதை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை. விரும்புவதுமில்லை.

*

சூத்திரனா, பஞ்சமனா இருக்க வேண்டுமானால் பெரியாரை எதிர்க்கிற தமிழனா இரு.
சுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு.

*

30.02.2014 அன்று face book ல் எழுதியது.

புலித் தோல் போர்த்திய பசு

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

3 thoughts on “சூத்திரனா? பஞ்சமனா? சுயமரியாதை வீரனா?

  1. //சுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு.///

    பெரியாரை ஆதரிக்கிற தமிழனாக மட்டும் இருக்க முடியாதா அல்லது பெரியார் தமிழனல்ல என்ற காரணத்தால், தமிழர்கள், தமது தமிழ்த்துவத்தை (Tamilness) இழந்து, திராவிடர்களாகிக் கும்பலில் கோவிந்தா போட்டால் மட்டும் தான் பெரியாரை ஆதரிக்க முடியுமா? பெரியார் மீது பல தமிழர்களுக்கு மரியாதையும், நல்லெண்ணமும் உண்டு, அதற்காக திராவிடத்தையும் கட்டியழ வேண்டுமா? தமிழர்கள் திராவிடனாகினாலும், சூத்திரர்கள் தான் திராவிடர் ஆகாது விட்டாலும் சூத்திரர்கள் தான். பார்ப்பனர்கள் மீது மட்டும் பழியைப் போடும் இந்த திராவிட வீரர்கள், திராவிடர்களாகிய மலையாளிகள் தமிழர்களின் முதுகில் குத்துவதை மட்டும் பேசத் தயங்குகிறார்கள். உதாரணமாக ஈழத்தமிழர் படுகொலையில் மலையாளிகளின் பங்களிப்பும், இன்று மலையாளிகள் இந்திய அரசை சிங்களவர்களுக்கு ஆதரவாகத் திருப்புவதில் மேற்கொள்ளும் முயற்சிகளையும் எந்த திராவிட வீரர்களும் பேசுவதில்லை. அவர்களின் காழ்ப்புணர்வெல்லாம் பார்ப்பனர்களின் மீது தான். ஏனெறால் திராவிடம் பேசுகிறவர்களில் பெரும்பான்மையினர், தமிழரல்லாத திராவிடர்களின் வழிவந்தவர்கள். தமிழ்நாட்டில் அவர்களின் பிழைப்பு வாதத்துக்கு திராவிடம் மிகவும் அவசியம்.

  2. அண்ணே நான் தெரியாமத்தான் கேக்கறேன்.. உங்கள மாதிரி ஆர்யம் வீர்யம்னு பேசியதால தமிழ்நாடு என்ன ரொம்ப முன்னுக்கு வந்துடுச்சா.. அத பேசாததால கர்நாடகா ஆந்திரா கேரளா போன்ற socalled திராவிட நாடுங்க பின்னோக்கி போயிருச்சா… உண்மையில திராவிட கட்சி ஆண்டதால தமிழ்நாடு நம்பர் ஒன் ஆகியிருக்கவேணாமா.. டாஸ்மாக்ல தான் நம்பர் ஒன் னா நாம இருக்கோம்.. வளர்ச்சி பெற்ற மாநிலத்துல டாப்புல இருக்கிற மாநிலம் கேரளா.. எனக்கு என்ன தோணுதுன்ன உம்ம மாதிரி திராவிட ஆர்யம்னு பேசாததாலதான் அவங்க முன்னுக்கு வந்துருக்கானுகன்னு சொல்றேன்.. நம்ம socalled ஆர்ய எதிர்ப்பு டமில்தேசம் ரொம்ப கீழ இருக்குங்க.. அதனால உம்ம கொள்கை பைசா பிரயோசனம் கிடையாதுங்கேற்ன்….உம்ம திராவிட சக உதரன் கர்நாடககாரன் தமிழ்சகே உதரனுக்கு தண்ணியே கிடையாது பேப்பே ங்கறான்.. கன்னடர்னு ஒண்ணு நிக்கான்… போய் அங்க திராவிட பேசிப் பாக்கறதுதானே.,, எல்லாத்துக்கும் இளிச்சவாயன் தமிழன்தானே….

  3. சந்திரசேகர் மற்றும் வியாஸ் ,
    ஆர்யம் என்ற நஞ்சின் வீரியத்தை விளக்கி சொல்லும் திராவிடத்தை தற்போதைய மொழிவாரி மாநிலங்களில் புரிந்துகொள்ள முயற்ச்சிப்பது எவ்வகையான முற்போக்கு . போகிற போக்கில்தமிழ் மொழியை திராவிதா என்று சமஸ்கிருத நூல்கள் மட்டுமே அழைத்து இந்த ஆர்ய சொல்லை இங்கே அறிமுக செய்ததன் வரலாறு உங்களுக்கு தெரியவேண்டாமா ?.. தங்கள் வேதங்ளை கொண்டு இன்று வரை எளிய மக்களையும் இடைசாதிமக்களையும் சண்டையிட செய்து தங்கள் வயிறு வளர்க்கும் கூட்டங்களை பற்றி தெரிய வேண்டாமா? அல்லது நீங்களும் அதில் ஒருவரா ?
    பார்பணர் அல்லாதவர் நலச்சங்கம் என்று ஆரம்பகால பெயர் உங்களுக்கு சரியாக பட்டால் அதையே சொல்லி திராவிடர் போராட்டங்களை அடையாளம் கொள்ளுங்கள் …தமிழர் என்று சொல்லிக்கொண்டு அனேக துரோகி கூட்டங்கள் தமிழகத்தில் உண்டு அந்த வரலாற்றை ஈரோட்டில் தயார் செய்த பகுத்தறிவு கண்ணாடி போட்டு இனங்காண எங்களுக்கு தெரியும்

Leave a Reply

%d bloggers like this: