இன்று முதல் தெனாலிராமன்.. ஆவலோடு!

Vadivelu

இன்று வடிவேலுவின் தெனாலிராமன் வெளியாகிறது. அவர் காமெடியில் வசனத்திற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசனம், நகைச்சுவை உணர்வே இல்லாமல் செயற்கையான சென்டிமெண்ட் வசனங்களை எழுதி குவித்த ஆரூர் தாஸ். (பாசமலர்)
அவர் எந்த அளவிற்கு காமெடி வசனங்களை எழுதியிருப்பார்?

இருந்தாலும் வடிவேலு பேசுகிற ‘பாவனை’ க்கு எந்த வசனத்தையும் தூக்கி நிறுத்தி விடும் ஆற்றல் இருக்கிறது.
மிக அதிகமாக தனக்கு தானே பேசிக் கொள்வதிலும், mind voice க்கு ஏற்ப முக பாவனைகளோடு வசன உச்சரிப்புகளை அவர் மாற்றுகிற முறையும் அலாதியானது.

சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, எகத்தாளமோ வசனம் பேசுகிறபோது, அந்த வசனத்திற்குள்ளேயே உணர்வும் பாவமும் இருக்கும். அந்த இரண்டுமே பாதி நடிப்பை கொண்டு வந்து விடும்.

ஆனால், ஒருவர் வசனம் பேசும்போது உடன் நடிக்கிறவர் அதற்கேற்ப reaction செய்வது தான் கடினம். அதை விட கடினம் mind voice க்கு ஏற்ப உதடு அசையாமல் முகபாவனைகளால் உணர்வுகளை சொல்வது. அதிலும் காமெடி செய்வது மிகக் கடினம்.

இவை இரண்டிலும் கில்லாடி வடிவேல். அவரின் சிறப்பே இதுதான். இந்தியாவில் இந்த பாணியில் நடிப்பதற்கு வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.

இப்படியானவர்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இந்தப் படத்தை இன்று ஆவலோடு பார்க்கச் செல்கிறேன்.
நிச்சயம் ‘இந்திர லோகத்தில் நா. அழகப்பன்’ படம்போல் இருக்காது என்ற நம்பிக்கையிலும்.

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

4 thoughts on “இன்று முதல் தெனாலிராமன்.. ஆவலோடு!

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 2. படம் பப்படம் ஆயிடுச்சாமே. ஒரு வேளை நீங்க வடிவேலை திட்டி இருந்தா படம் உருப்பட்டு இருக்குமோ. நீங்க பாராட்டின எதுதான் உருப்பட்டு இருக்கு.

 3. அந்நிய முதலிடு எதிர்ப்பு. எளிய மக்களுக்கு அமைச்சர் பதவி போன்ற விசயங்கள் இருக்கிறது. தன்னுடன் நடித்த எல்லா நடிகர்களுக்கும் வாய்ப்பு தந்திருக்கிறார். இமானின் எளிய மெட்டும் இசையும் இனிமை சேர்க்கிறது.
  இவை எல்லாவற்றையும் விட கதாநாயகத்தனம் அதிகமாக இருப்பதால், காமெடி பாதிக்கப்பட்டிருக்கிறது.

  ரஜினி-கமல் படங்களுக்கு சவால் விடும் பிரம்மாண்டமும் ஈர்க்கிறது.
  வசனங்களின் நீளத்தை குறைத்து, திரைக்கதையில் கூடுதலாக காமெடி சேர்த்திருந்தால்… சூப்பர் ஹிட்டாகி இருக்கும் ‘தெனாலிராமன்’

 4. நிச்சயமாக இந்த பட தோல்விக்கு காரணம் ,
  கதாபாத்திரங்களின் கதானாயகத்தன்மை தான் .
  நக்சல்பாரிகளின் பிரச்சாரபடத்தில் வடிவேலுவை நடிக்க வைத்த அந்த முட்டாள் இயக்குனரை செருப்பால் தான் அடிக்க வேண்டும் .

  அது சரி என்ன காரணத்துக்காக தெலுங்கு அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள் … ?

Leave a Reply

%d bloggers like this: