தீவிரவாதத்தை விட ஆப்பத்தனாது ‘முற்போக்கு’
இந்து மதத்தை மற்ற மதங்களோடு ஒப்பிட்டு ஒரே அடியாக, ‘எல்லா மதங்களைப்போலும் மோசமானது தான் இந்து மதமும்’ என்று ஆணியடிப்பதே, முற்போக்கு வேடமிட்ட இந்து மனோபாவம் தான்.
‘இந்து மதம்’ என்று ஒன்று கிடையாது. மற்ற மதங்களைப் பார்ப்பதைப்போல் அதைப் பார்க்க முடியாது. மதமாக இருப்பதற்குக் கூட லாயக்கற்றது ‘இந்து மதம்’
புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்
புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்
ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி
“‘இந்து மதம்’ என்று ஒன்று கிடையாது”.
இது இந்து மதத்திற்கு மட்டும் என்றில்லை.எல்லா மதங்களுக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.
இன்றைய மதங்கள் வெறும் சடங்குகளை மட்டுமே கொண்டவையாக உள்ளன.
சடங்குகளை பிரித்துவிட்டால் ஒரு மதத்தை தனியாக அடையாளம் காண்பதென்பது முற்றிலும் இயலாத காரியம்.
அடிப்படை மனிதகுல வாழ்விற்கு என்பதிலிருந்து சற்றும் பொருந்தாத மார்கத்தில் தான் அனைத்து மதங்களும் பயனித்துகொண்டிருக்கின்றன.
உயிர்களிடத்தில் அன்பு,சக மனிதனின் வாழ்வில் காட்டவேண்டிய அக்கறை,ஆசைக்கு அடிமையாகி அளவற்ற சுகங்களை முறையற்ற வழிகளில் அடைய முனையாது தடுத்து,அறத்தோடும் அளவோடும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைத்தல்,பொய் சொல்லாமை,புரங்கூராமை,கொலை செய்யாமை என அடிப்படை மனிதகுல வாழ்வியலுக்கான நியதிகளை சொல்லவதில் அனைத்துமதங்களும் ஒன்றுபட்டே நிற்கின்றன.
அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் தான் இவை அனைத்தும் வேறுபட்டு நிற்கின்றன.
ஏசுவின் அனுபத்தை நபிகலோடும் சிவனொடும் ஒப்பிட்டு ஒற்றுமை காண முடியாது.
நிச்சயம் அவை ஒன்றாக இருக்க முடியாது,
ஆனால் இதில் ஒற்றுமை காண முயன்று, தோற்று கிடைத்த வேற்றுமைகளை பெருதுபடுத்தி ஒவ்வொரு மதமும் தமது முன்னவர்களது அனுபவங்களை மட்டுமே மெய்யென உணர்த்த முயன்று மற்ற மதத்தினரது அனுபவங்களை மிதிக்க தொடங்கினர்.
இன்றளவும் மதங்களின் வேறுபாடு என்பது இந்த அனுபவ வேறுபாட்டினால் மட்டுமே.
நிச்சயம் ஒன்றின் அனுபவம் மற்றொன்றோடு ஒத்துபோக முடியாது.
ஒரே மதத்தில் கூட ஒரு அடியாரது,தொண்டரது அனுபவம் மற்றவரின் அனுபவத்தோடு ஒத்துபோக வாய்ப்பில்லை.
எனவே சடங்குகளை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்டுவரும் இன்றைய அனைத்து மதங்களுமே தங்கள் நோக்கத்திலிருந்து முற்றிலும் விலகியே உள்ளன.
ஆதலால் இன்றிருப்பவை எதுவுமே உண்மையான மதம் கிடையாது.