குடும்பம் ‘அ’திமுக வெற்றிக்கு துணையாக ..

karunanidhi_family
கலைஞரின் குடும்ப அரசியலை திமுகக் காரர்கள் மட்டுமல்ல, மக்கள்கூட ‘கலைஞர் குடும்பம் தானே இருக்கட்டும்’ என்று ஒத்துக் கொள்கிறார்கள். தொண்டர்களும் ‘அடுத்தவர் இவர் தான்’ என்று முடிவு செய்து கலைஞரின் வாரிசுகளில் ஒருவரை தான், தன் வழிகாட்டியாக ஏற்றுச் செயல்படுகிறார்கள்.

மாறாக, கலைஞருக்கு மாற்றாகக் குடும்பத்திற்கு வெளியே ஒரு நபரைக் கூடத் தொண்டர்கள் ‘தலைமை’ யாகப் பார்க்கவில்லை. கோஷ்டியாகப் பிரியவும் இல்லை.

ஆனால், கலைஞரின் குடும்ப அரசியலை அவரின் குடும்பம் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அழகிரிக்கு பிடிக்கல. அழகிரி முதன்மை என்றால் ஸ்டாலினுக்கு வருத்தம். ரெண்டு பேருக்கு நடுவுல கனிமொழி வேற.

தந்தையின் சொத்தை சரிபாதியாக வாரிசுகளுக்குக் கொடுப்பதுதானே முறை. அதில் பிரச்சினை என்றால் சகோதர சண்டைகள் சகஜம் தானே. இது சொத்துக்குச் சரி. ஆனால்,கட்சியையும் தந்தையின் சொத்துப்போல் கருதுவதால் தான் வருகிற பிரச்சினை இது.

குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறது. தேர்தலில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. குடும்பத்திற்குள் ஒற்றுமை இல்லை என்றால், கட்சிக்குள்ளும் இல்லாமல் போகிறது. தோல்வியும் உறுதியாகிறது.
ஆக, குடும்பம் தான் அண்ணா திமுக வின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.

யாருங்க சொன்னது? தி.மு.க விற்கு எதிரி, அ.தி.மு.க என்று.

January 

மூவரை விட மு.க. முத்துவே முற்போக்கு

திமுக காரர்கள் உடனடியாக செய்ய வேண்டியது

பெரியாரை விட சிறந்தவர் சுஜாதா

திமுக வாக்குகள்..

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

One thought on “குடும்பம் ‘அ’திமுக வெற்றிக்கு துணையாக ..

  1. இது இன்னிக்குத்தான் தெரியுமா? அய்யோ அய்யோ

Leave a Reply

%d bloggers like this: