திட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது

10917827_591455767654529_8815641090252831910_n

‘எழுத்துப் போராளிக்கு பெரியார் விருது!’ என்று தலைப்பிட்டு ‘விடுதலை’ என்னை கவுரவித்திருக்கிறது. நன்றி :ஆசிரியருக்கும் – கவிஞருக்கும்.

தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது.

தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தான் எழுத்தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிறகு, பெரியார் மாதிரி பேசினால் திட்டு வரும். கண்ட னங்கள் வரும். இப்பொழுதுதான் விருது வந்திருக்கிறது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறிவிட்டு, பெரியாரை எதிர்க்கின்றவர்களை நன்றாக விமரிசனம் செய்.உனக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதாகத்தான் இந்த விருதை எனக்கு அளித்ததாக தான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு,

அதன்படியே தன் பணி இருக்கும் என்று கூறி, பேராசிரியரிடம் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது, தீபாவளிக்கு வழங்கும் ஊக்கத் தொகையை பொங்கலுக்குத் தரவேண் டும் என்ற வேண்டுகோளோடு தனது உரையை முடித்துக்கொண்டார்.

-விடுதலை 17-1-2014

தினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி

5 thoughts on “திட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது

  1. பெரும் மதிப்பிற்குறிய ஆசிரியர் அண்ணா அவர்களுக்கு,
    உங்களின் உண்மையான உழைப்புக்கும், சமூக அக்கறைக்கும் கிடைத்துள்ள மகத்தான் விருது!!!
    உங்களின் கூர்மையான வார்த்தைகள், “இருள் என்னும் மூடநம்பிக்கைகளை களைந்து, ஒளி என்னும் உண்மையை/பகுத்தறிவை எங்கள் வாழ்வில் பின்பற்றிட பெரும் உதவியாக இருக்கிறது”. மிக்க மகிழ்ச்சி !!!

  2. மதிமாறன் சார் …நன் கடந்த 5 வருடங்களாக திராவிட பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதிகிறேன்.இப்போது போதிய விற்பனை இல்லாததால் எனக்கு மாதம் 3000 ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது .இது என் வாழ்கையை ஓட்ட கடினமாக இருக்கின்றது ..தாங்களும் திருமுருகன் காந்தி போன்றோரும் இணையத்தளத்தில் திராவிடம் பற்றியும் பார்ப்பனீயம் பற்றி கேவலமாக மஞ்சள் பத்திரிக்கை தரத்தில் எழுதி விட்டு கொலைஞர் ராசா கனி மாரன் ப்ரோதேர்ஸ் பற்றி எழுதுவதை தவிர்த்தால் தற்போது நல்ல காசு ஒரு கட்டுரைக்கு 10 000 ரூபாய் கொடுகிறார்கள் என்று கேள்விபட்டேன். தி மு க அனுதாபிகளான வீரமனி வழக்குரைஞர் பிரசன்னா போல நல்ல வசதியாக கோட் சூட் எல்லாம் போல போட்டு வாழலாம் என்ற ஆசை எனக்கு உள்ளது 5 வருட மஞ்ச பத்திரிக்கை எழுதும் அனுபவம் உள்ளதால் நன் தங்களை போல எழுதும் திறமை கொண்டவன் தினமும் உங்களுக்கு பார்பனியத்தை பற்றி கில்மாவாக எழுதி தருகிறேன்…பாதி அமௌண்ட் தருவீர்களா

Leave a Reply

%d bloggers like this: