இந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே
இந்தியா டுடே யில் பெருமாள் முருகன் பிரச்சினையை ஒட்டி கருத்துச் சுதந்திரம் குறித்துக் கருத்துச் சொல்லியிருக்கிறார் அசோகமித்ரன், ‘நீ போன தகராறு ஆயிடும். நான் போயி அவன செருப்பால அடிச்சுட்டு வரேன்’ ன்னு ஒருத்தர் சொன்னா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு அவருடைய கருத்து.
பெருமாள் முருகன் கதையைப் பேசச் சொன்னால், அவரு தன் கதையைப் பேசுறாரு.
‘தென்னாட்டில் சிவவாக்கியர் காலத்திலிருந்தே சிறுபான்மை சமூகம் எப்படியெல்லாம் இழிவுப்படுத்தப்படுகிறது. அந்தச் சமூகத்தினர் அதைத் தலைவிதியாக நினைத்துதான் செயல்படுகிறார்கள்’ என்று வேதனைப் படுகிறார்.
சிவவாக்கியர் காலத்துல ஏது சிறுபான்மை? என்று யோசித்தால்..
அடுத்தவரியில் குறிப்புக் கொடுக்குறார்.. ‘இவர்களுக்கு அரசியல் சாசனத்தில் எந்தச் சலுகையும் கிடையாது’ என்று.
அவர் சொல்கிற சிறுபான்மை தலையில பொறந்து நம்ம தாலி அறுக்கிற சிறுபான்மை.
பிறகு, காந்தி இந்துக்களுக்குச் செய்த ‘மோசடி’யை குறிப்பால் உணர்த்தி, அக்பர் இந்துக்களுக்குச் செய்த ‘அக்கிரம’த்தை அம்பலப்படுத்தி..
கடைசியாதான் பெருமாள் முருகன் பிரச்சினைக்கு வர்றாரு. ‘பெருமாள் முருகன் செயல் நாடகத் தன்மை கொணடது’ என்று சவுக்கடியோடு முடிக்கிறார்.
பாவம் அசோகமிதரன். அவரும் ரொம்ப நாளா தமிழ்நாட்டில் பயந்துக்கிட்டுதானே வாழ்றாரு.. பாருங்க அவரு ஒரு பிராமின் என்பதால் அவருக்கு யாருமே ஆதரவா வரல.. ரொம்பப் பாவம் அவுரும் பிராமினும்.
இருந்தாலும் அவுரு இப்ப, பெருமாள் முருகனுக்கு ‘ஆதரவா’ வர்றது.. உண்மையில் பாராட்டப்படக் கூடியது. இது தான் ‘தன் நலம் கருதாத தியாக வாழ்க்கை’.
தியாகி அசோகமித்ரனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
வாஸந்தியும் பெருமாள் முருகனுக்கு உறைப்பது மாதிரி நாலு சாத்து சாத்தி நல்லா தைரியம் கொடுக்கிறாங்க. சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, சமீபத்தில் பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல்.. இதோடல்லாம் ஒப்பிட்டா.. இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல.. இந்து அமைப்புகள் எல்லாம் சிறுபான்மை.. என்ற பொருள் படும்படி.
இந்தியா டுடேவில் பெருமாள் முருகன் பிரச்சினைக்காகக் கருத்துச் சொல்லியிருக்கிறவர்களில் ‘வாஸந்தி, அசோகமித்திரன், ஜெயமோகன், ரவிக்குமார்’ முக்கியமானவர்கள். இவர்கள் நால்வருக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை; பெரியார் மீது, திராவிட இயக்கத்தின் மீது அவதூறு செய்கிறவர்கள். காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள்.
வைதிகமானவர்கள், பிற்போக்காளர்கள் தான் எப்போதும் இந்திய டுடே விற்குக் கருத்துப் பெட்டகங்களாகத் தெரிகிறார்கள்.
அதுவும் பெரியார் எதிர்ப்பாளர்களுக்கே அதிக முக்கியத்துவம். நான் கூடப் பாரதியார் பற்றி உண்மையை எழுதியதற்குப் பதில், பெரியார் பற்றி அவதூறு எழுதியிருந்தால், தமிழகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருப்பேன். கருத்துச் சுதந்திரம் பற்றி என் கருத்தும் இந்தியா டுடே யின் இந்த இதழ்லேயும் இடம் பெற்றிருக்கும்.
பெரியாரை முன்னுறுத்தி எழுதுகிறவர்கள், பார்ப்பன-இந்து எதிர்ப்போடு எழுதுகிற அம்பேத்கரிஸ்டுகள், திராவிட இயக்க எழுத்தாளர்கள், இந்து எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட மார்க்சியவாதிகள் இவர்கள் எல்லாம் கருத்துச் சொல்கிறவர்களாக இப்போது மட்டுமல்ல; எப்போதுமே இந்தியா டுடே விற்குத் தெரிந்ததே இல்லை.
இப்போதும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரோடு இணைந்து களத்தில் இறங்கி பெருமாள் முருகனுக்காகத் தொடர்ந்து போராடுகிறவர்களில் இவர்களே முக்கியமானவர்கள்.
பரவாயில்லை. அந்த மட்ல.. கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவா ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வீரத் துறவி இராம. கோபாலன் இவர்களிடம் கருத்துக் கேட்காமல் விட்டதற்கு.
‘அதுக்குப் பதிலாதான் அசோகமித்ரனும், வாஸந்தியும், ஜெயமோகனும் கருத்தா பேசியிருக்காங்க’ என்று நினைக்கிறீர்களோ?
இந்திய டுடே – ‘கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே.’
20 January facebook ல் எழுதியது.
‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா
டாக்டர் முத்துலட்சுமி: பத்திரிகைகளின் ‘தந்திரம்’
When are you reaching Tiruchengode?
nee mattum enna getupa mathinalum kevalama edayaavadu thaane eludikitu suthara
அதுவும் பெரியார் எதிர்ப்பாளர்களுக்கே அதிக முக்கியத்துவம். நான் கூடப் பாரதியார் பற்றி உண்மையை எழுதியதற்குப் பதில், பெரியார் பற்றி அவதூறு எழுதியிருந்தால், தமிழகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருப்பேன். கருத்துச் சுதந்திரம் பற்றி என் கருத்தும் இந்தியா டுடே யின் இந்த இதழ்லேயும் இடம் பெற்றிருக்கும்
மதிமாறன் சார் …நன் கடந்த 5 வருடங்களாக திராவிட பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதிகிறேன்.இப்போது போதிய விற்பனை இல்லாததால் எனக்கு மாதம் 3000 ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது .இது என் வாழ்கையை ஓட்ட கடினமாக இருக்கின்றது ..தாங்களும் திருமுருகன் காந்தி போன்றோரும் இணையத்தளத்தில் திராவிடம் பற்றியும் பார்ப்பனீயம் பற்றி கேவலமாக மஞ்சள் பத்திரிக்கை தரத்தில் எழுதி விட்டு கொலைஞர் ராசா கனி மாரன் ப்ரோதேர்ஸ் பற்றி எழுதுவதை தவிர்த்தால் தற்போது நல்ல காசு ஒரு கட்டுரைக்கு 10 000 ரூபாய் கொடுகிறார்கள் என்று கேள்விபட்டேன். தி மு க அனுதாபிகளான வீரமனி வழக்குரைஞர் பிரசன்னா போல நல்ல வசதியாக கோட் சூட் எல்லாம் போல போட்டு வாழலாம் என்ற ஆசை எனக்கு உள்ளது 5 வருட மஞ்ச பத்திரிக்கை எழுதும் அனுபவம் உள்ளதால் நன் தங்களை போல எழுதும் திறமை கொண்டவன் தினமும் உங்களுக்கு பார்பனியத்தை பற்றி கில்மாவாக எழுதி தருகிறேன்…பாதி அமௌண்ட் தருவீர்களா
எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!