வைகோ வின் நரசிம்மம் பாரதிதாசனின் இரணியன்
திராவிட இயக்கத் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வைகோ:
‘திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார்’ என்ற மேற்கோளைப் பயன்படுத்தியிருப்பது, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
தான் கொண்ட கொள்கைக்கு எதிராக – துரோகியாகத் தன் இனத்தைச் சேர்ந்தவனோ, தன் ஜாதிக்காரனோ, தன் உறவினனோ அவ்வளவு ஏன்..? தன் மகனாகவே இருந்தாலும் மன்னிக்கக் கூடாது என்ற கொள்கை உறுதியை நமக்குக் கற்றுத் தந்தவன் இரணியன்.
எதிரியிடம் சிக்கினால், சையனட் குப்பியை கடித்து, தன் இனத்திற்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட மாவீர்களே இரணியனின் வாரிசுகள்.
பார்ப்பன அடியாளான திருமால், மாமன்னன் இரணியனுக்கு எதிராகச் சதி செய்து நரசிம்ம அவதாரம் கொண்டு கொன்றான், என்பதே பிரகலாதன் கதை.
இரணியன்; ‘ஆதிக்க ஆரிய எதிர்ப்பு’ திராவிட வீரன் என்பது பெரியார் – திராவிடர் அரசியலின் அடிப்படை. பார்ப்பனக் கை கூலியாகித் தன் இனத்திற்கு எதிராக, துரோகியாக மாறினான் என்பதற்காக, தன் மகன் பிரகலாதனுக்கே மரணத் தண்டனை கொடுத்த கொள்கை வீரன் இரணியன்.
அதனால் தான், பெரியாரின் சீடரான பாவேந்தர், 1934 ஆம் ஆண்டே, பெரியாரியல் கண்ணோட்டத்தில், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நாடகத்தை எழுதினார். அதன் அரங்கேற்றம், தலைவர் பெரியார் தலைமையில் நடைபெற்றது. பிறகு தமிழகமெங்கும் அந்த நாடகம் பல முறை திராவிடர் இயக்கத்தவரால் நடத்தப்பட்டது.
ஆக, ‘நரசிம்ம அவதாரம் எடுத்து ஈவு இரக்கமில்லாமல் தமிழர்களின் குடலை உருவி மாலைப் போட்டுக் கொண்ட கொடூரன் ராஜபக்சே’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது தான் திராவிட இயக்கத் தலைவருக்கு அழகு.
‘திருமால், நரசிம்மமாக மாறி, ராஜபக்சேயை வதம் செய்து விட்டார்’ என்று சொல்வது இந்து தலைவருக்கே உரிய ‘அழகு’.
திராவிட இயக்கத் தலைவராக அடையாளப்படுத்திக் கொள்கிற வைகோ, வைணவ பக்தர்களின் பேச்சையெல்லாம் நம்புகிறார். பரிந்துரைக்கிறார். பெரியார் தொண்டர்களின் பேச்சை மட்டும் கேட்க கூட மறுக்கிறார்.
Victor Victor அவர் கொள்கைவாதியாக இல்லை அரசியல்வாதியாக மாறி விட்டா
9 January at 23:02 · Like
கவுதமன் பசு · Friends with பிரபா அழகர் and 89 others
தோழர் மதிமாறனுக்கு இவர்கள் எல்லாம் “ நிறுவனமயமானவர்கள் “ இவர்களிடம் நீங்கள் பாவேந்தரை எதிர்பார்ப்பது……….. பாவம் நீங்கள் !
9 January at 23:15 · Unlike · 2
வே மதிமாறன் பெரியார் கருத்தை இவர்கள் முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அது அவர்களால் முடியாது. குறைந்தப்பட்சம் இதுபோன்ற அடிப்படைக்கே எதிரான வற்றையாவது தவிர்க்கலமே.
9 January at 23:17 · Edited · Like · 15
Victor Victor அப்படி நினைத்திருந்தால் PJP யில் இடம்பெற்றிருக்கமாட்டார்
9 January at 23:22 · Unlike · 2
Venmani Mani அவர் என்றுமே கொள்கை வாதியாக இருந்ததே இல்லை.அவரை நாம்தான் பகுத்தறிவு வாதி மண்ணிக்கவும் நாதி என்று பிதற்றுகிறோம்… அவரும்” நம்மகிட்ட இன்னும் எதிர்பாக்றாங்கெளோ” னு பில்டப் விடுறார்..வைகோ… கருப்பு கலர் ரேமண்ட் பேண்ட் பிட்ட துண்டா போட்டவரெலாம் பகுத்தறிவு…See More
9 January at 23:27 · Unlike · 1
Radha Krishnan · 66 mutual friends
ஒரு கட்சி, தனது இருப்பிற்கான கொள்கை அடிப்படைகளை தனது தொண்டர்களுக்கும்,மக்களுக்கும் நினைவூட்டிக்கொண்டே இருப்பது மிக அவசியமானது.கெடுவாய்ப்பாக, உணர்ச்சிக் கொந்தளிப்பாக வலம் வருவதும்..அந்த வேகத்தில் முடிவுகள் எடுப்பதும், பேசுவதுமாக வைகோ வலம் வருவது சரியல்லதான்..திராவிடக் கருத்தியல் என்பது ஆரியத்துக்கு நேர் எதிராக இயங்குவது எனும் இருக்கின்ற புரிதலில், குழப்பம் விளைவிக்காமல் இருத்தலே வைகோ போன்ற தலைமைக்கு அழகு..
9 January at 23:32 · Edited · Unlike · 2
வே மதிமாறன் உணர்ச்சி வேகத்தில் கூட பெரியார் கருத்துக்களை பேச மறுக்கிறாரே?
9 January at 23:31 · Like · 8
Victor Victor 2004 ம் ஆண்டிற்கு முன் கொள்கைவாதியாக இருந்தார், ..அரசியல் ஆசை அவரையும் விட்டுவைக்கவில்லை
9 January at 23:34 · Like
Radha Krishnan · 66 mutual friends
என்ன செய்ய..டெல்லி சகவாசங்கள் அவரை இப்படித் தகவமைத்து விட்டது போல தோழர்.அரசியல் வகுப்புகளை விட நடை பயணங்களை அதிகம் நம்புகிறார்.இது அவரின் உணர்ச்சி மயமான பேச்சுக்களில் கிளர்ந்து அவரைப் பின் தொடரும் தொண்டர்களையும் மழுங்கடிக்கும்..!
9 January at 23:36 · Like · 2
Venmani Mani விக்டர்..2004 க்கு முன்தான் பிஜேபியோட கூட்டணி போட்டார் அண்ணண் வைகோ..அவருக்கு அது போன மாசம்,இது இந்த மாசம். .
9 January at 23:38 · Like · 2
Victor Victor மன்னிகவும் தோழரே
9 January at 23:39 · Like
Chittibabu Lakma · Friends with Anbu Mani and 37 others
எனக்கு வைகோ மீது பற்று இருந்தாலும் ..இதை அவரிடமிறுந்து எதிர்ப்பாற்கவில்லை..
9 January at 23:43 · Like · 2
Venmani Mani நண்பர் ராதா டெல்லி சகவாசம் அவரை தகவமைக்க அவர் என்ன தலைப்பிரட்டை யில் இருந்து தவளை யாக மாறியவரா என்ன?அதெல்லாம் இல்ல அண்ணன் வைகோ பிழைப்புவாதத்துலயும் சந்தர்ப்ப வாதத்திலயும் பழம் திண்ணு கொட்டை போட்டவரு..திட்டமிட்டே இளைஞர்களின் போர்க்குணங்களை மலடாக்கி விடுவதில் வல்லவர்..
9 January at 23:44 · Unlike · 6
தமிழ்க்கனல் இரா திராவிடர் என்பதில் ஒரு முகாந்திரம் இருப்பதை தர்க்கப்பூர்வமாக ஏற்கமுடிகிறது; இன்றைக்கு் வரலாற்றுக்குப் பொருந்தாத- மெய்யாக இல்லாத திராவிட என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ……..ஆரியர்-திராவிடர் இனக்குழு அரசியலைத் தாண்டி, தேசிய இனம் எனும் வரலாற்று வகையினம் உருவாகி, அதன் பொருட்டு சமூக இயக்கத்தைத் தடுத்துநிற்கும் முரண்பாடு பெரும் உருவமெடுத்து நிற்கையில், இன்னும் மரபினம் பற்றிப் பேசுவதை நான் ஏற்கவில்லை. பெரியார், பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை எதிர்ப்பில் பெரும்பங்கை ஆற்றியிருக்கிறார் எனும் அளவில், நான் அவரைக் கொண்டாடுகிறேன். ……….. அவரை அடையாளப்படுத்தி கட்சி தொடங்கிய அண்ணாதுரை, ஒன்றே குலம் என்றார்.. அடுத்து வந்த கருணாநிதி, சாய்பாபாவை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டுவந்தார். அவரின் முன்னாள் சீடர் முன்னாள் வை.கோபால்சாமி, பெரியாரின் பகுத்தறிவைப் பின்பற்றுவதாக எங்கு சொன்னார்? ……….. இதன் பொருட்டு அவர் மீது எதிர்வினையாற்றுவது எதற்கு?
10 January at 00:10 · Like · 3
Tamil Nationalist · 81 mutual friends
பாராளுமன்றத்தில் அண்ணாவை காங்கிரசார் கேலி செய்ததை குறித்து அண்ணா கவுரவர் சபையில் துகிலுரியப்பட்ட பாஞ்சாலியைப் போல நின்றிருந்தேன் என்கிறார்..அதை யாருமே குற்றம் என்றதாகத் தெரியவில்லை…வைகோ என்றதும் ஓடோடி வருகிறீர்கள்
10 January at 00:16 · Like · 2
Chittibabu Lakma · Friends with Anbu Mani and 37 others
ஏறாக இருந்தாலும் கொள்கையை மறப்பது ..ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
10 January at 00:23 · Edited · Like
Sivakumar Shanmugam · 39 mutual friends
ஏற்கனவே பாரதிய ஜனதா அலுவலகமான கமலாலயம் சென்று ஜனசங்கத்தை தோற்றுவித்த சியாமளா பிரசாத் முகர்ஜி படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தியவர்தானே இந்த வை கோ …
10 January at 00:55 · Unlike · 3
Sivakumar Shanmugam · 39 mutual friends
வை கோ வின் மதிமுக ஒரு இயக்கமோ அல்லது கட்சியோ கிடையாது .. அது ஒரு ரசிகர் மன்றம் .. அதன் தலைவர் வை கோ வும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்தானே தவிர முதிர்ச்சி பெற்ற தலைவரில்லை ..
10 January at 01:48 · Like · 1
Venmani Mani சிவகுமார் ஸ்டன்ட் மாஸ்டர்ணா அடி வாங்குறதயே வேலையா மண்ணிக்க தொழிலா வச்சிருப்பாரே?அவரா?அடுத்த போராட்டத்திலும்,மண்ணிக்க அடுத்த படத்திலயும் அதையே பண்ணுவாரே அவரா?
10 January at 01:54 · Like
Ranganathan Somu vaiko also slave of hinduthva
10 January at 02:31 · Like
Ramesh Periyar · Friends with பிரபா அழகர் and 198 others
யதார்த்த அரசியலும், தொடர் தோல்விகளும் அவரை கொள்கை மறந்த சைகோவாக்கி விட்டது. போலும்..
10 January at 03:02 · Like · 1
Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
அண்ணா தன்னந்தனியனாக இருந்ததைக்றினார்.அதில் இலக்கியம் கமழ்ந்தது.மயிலோடு ஒப்பிடத் தகாத லகான் கோழிஇது.நட்டகல் எவல்லாம் நரசிம்மர் என்று சொல்வது அவன் தோல்வி கடவுளால் நிகழ்ந்தது போலவும் மக்களுக்கு அதில் பங்கில்லாதது போலவும்ஒரு கடவுள் ஏற்பு பார்வையுமாக் இருக்கிறது..இலங்கையைக் கண்காணிக்க மோடி கை விட்டாலும் இவர் ராமனுக்கு கோயில் கட்டாமல் விடமாட்டார்.
10 January at 06:03 · Edited · Unlike · 2
Selvamuthu Kumar அண்மையில் ராசபக்சே திருப்பதி வந்தபோது. மதிமுக மட்டுமே அங்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்கள். வைகோ, அதனால்தான், புராண உதாரணத்தைச் சொல்லிவிட்டார். ஆழ்ந்து சிந்தித்து எழுதியதல்ல, உணர்ச்சிவசப்பட்டு எழுதியது! எப்பொதுமே உணர்ச்சிபொங்க பேசும் வைகோ , நிச்சயம் பெரியாரின் சீடர்தான்.
10 January at 04:35 · Like · 5
Gnanabharathi Chinnasamy · 19 mutual friends
ஆழ்ந்து சிந்தித்தால் உளறல் வருமோ?பாவம்.அது அரசியல்வாதிக்கு இருக்கக் கூடாத பலஹினமாயிற்றே.
10 January at 05:29 · Like · 1
கணேசன் புதுவை · Friends with பிரபா அழகர் and 98 others
சாந்தகுமார் ரங்கநாதன்
புதுச்சேரி கூட்டத்தில் மிக தெளிவாக சொன்னார் அது அவருடைய வைணவ நண்பர்கள் சொன்னதாக. வழக்கம்போல ஊடகங்கள் திரித்துவிட்டண
10 January at 07:32 · Edited · Like
Sivakumar Shanmugam · 39 mutual friends
போர் (bore) வாள் வை கோவின் செயலுக்கு சப்பைகட்டும் வை கோவின் அப்பாவி தொண்டர்களை பார்க்கையில் எனக்கு பரிதாபமாக இருக்கிறது அதே வேளை நடிகர் வடிவேலு அவர்களின் ” இன்னுமாடா நம்பள நம்ப ஒரு கூட்டம் இருக்கு ” என்ற நகைச்சுவை வசனம் ஞாபகத்துக்கு வருவதால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை
10 January at 09:21 · Like · 2
Chittibabu Lakma · Friends with Anbu Mani and 37 others
இப்போதைக்கு somthing is better than nothing மாதிரி தமிழகத்திற்கு வைகோவை விட சிறந்த தலைவர் யாரும் இல்லை என்பதுதான் உண்மை..சிறியவற்றை பெரிது படித்தினால் 100%நல்லவர்களை யாரையிம் பார்க்கமுடியாது. வைகோவின் போராட்டங்களை கொச்சைப்படுத்தவேண்டாம்..தற்போது மற்ற அரசியல்வாதிகளை விட சிறந்தவர் வைகோ வே…
10 January at 10:15 · Like · 3
Sivakumar Shanmugam · 39 mutual friends
10 January at 10:21 · Like
Rabeek Raja · Friends with பிரபா அழகர் and 199 others
தர்க்கமற்ற விமரிசனம்
10 January at 19:32 · Like · 1
மாஸ்கோ மணி.தி.சோ · 37 mutual friends
மேடையில் உலக வரலாறு எல்லாம் பேசும் வைகோ அவர்கள் இந்த புராண புலுகு மூட்டையா படித்து இல்லையா
11 January at 03:18 · Like
Muthuraman Subbiah · 5 mutual friends
உதாரணத்துக்கு சொன்னதை ஏன் இவ்ளோ விமர்சிக்கணும்.
11 January at 18:52 · Like · 2
Maha Bharathithasan · 4 mutual friends
ஒரு பேச்சுக்கு சொன்னா! ஏன் இப்படி கொந்தளிக்கிறீங்க!
11 January at 23:46 · Like · 1
Nallathambi Xavier · 251 mutual friends
ஏன்யா.. வைகோ முல்லைப்பெரியாக்காக போராடுராரு … அது உன் கண்ணுக்கு தெரியல ? அமராவதி ஆற்றுக்காக போரடுராரு அது உன் கண்ணுக்கு தெரியல ? அணுவுலை, ஸ்டர்லை , நியூட்டிரினோ , மீத்தேன் எதிர்த்து போராடுராரு அது உன் கண்ணுக்கு தெரியல ? ..
திருப்பதிக்கு வந்துட்டுப்போன ராசபக்சவை பற்றி பேசும்போது திருமாலை மேற்க்கோள் காட்டியது மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுதா ? தமிழ் மண்ணில் சாப்பிடுகிற சேற்றில் கூட வைகோ வின் போராட்டத்தின் சிறு பருக்கை கலந்துள்ளது , மதிமாறன் அவர்களிடம் இருந்து இந்த அரைவேக்காடு பதிவை எதிர்பார்க்கவில்லை …
13 January at 23:59 · Like · 1
mathi thambi idukkellam thika thimuka thiruttu muka kitta irundu evvalavu pa kaasu varudu..summa pugundu vilayadaraye pa…