என்ன தலைப்பு வைக்கிறது?

as-logo-md

தலித் விரோத ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், ‘ஜல்லிக்கட்டு தடை’க்கு எதிர்ப்புத் தெரவித்தும் ஆர்ப்பாட்டம் செய்த ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள்.
நல்ல வளர்ச்சி. வாழ்த்துகள்.

18 January at 09:46 ·

பெருமாள் முருகனை எதிர்ப்பவர்களில் மட்டுமல்ல, ஆதரிப்பவர்களிலும் மிகத் தீவிரமான இந்துத்துவவாதிகள் இருக்கிறார்கள். அதை அவர்கள் இந்தச் சூழலிலும் வெட்கம் இல்லாமல் ‘இலக்கியத் தரத்’தோடு வெளிபடுத்தவும் செய்கிறார்கள்.

24 January at 11:38 · Edited ·

தன் பிரச்சினையே சமூகப் பிரச்சினையாக மாறும்போது, துணையாகப் பெரியார் – டாக்டர் அம்பேத்கர் தொண்டர்கள் தான் வருவார்கள்; ‘ஆண்டவர்’ எப்போதுமே பார்வையாளர்தான்.. என்பதை இப்போதாவது உணர்வாரா உமா சங்கர் IAS.

30 January at 09:41 ·

எவ்வளவு வன்மம்.. எவ்வளவு ஆத்திரம்.. எவ்வளவு காழ்ப்புணர்ச்சி.. எவ்வளவு மோசமான அணுகுமுறை..

உமாசங்கர் IAS ன் ‘ஊழியம்’ குறித்து, பேட்டிக் கண்ட தினத்தந்தி ‘ஊழியரிடம்’. ச்சீ.

3 February at 09:04 .

‘ஒவ்வொரு வார்தைக்குப் பின்னும் வர்க்க சார்பு இருக்கிறது’ என்பது எவ்வளவு உண்மையோ.. அதைவிட உண்மை;
‘ஒவ்வொரு வார்தைக்குப் பின்னும் ஜாதி சார்பு இருக்கிறது’ என்பதும். இது ஜாதி எதிர்ப்புப் பேசுபவர்களிடம் கூடுதலாகவே இருக்கிறது.

3 February at 17:58 ·

ஜாதி ஆதிக்கத்தை, பார்ப்பனியத்தை, இந்து மதத்தை உயர்வாகவும்; பெரியாரை, திராவிட இயக்கத்தை இழிவாகவும் தொடர்ந்து எழுதுகிற, ‘ஜெயமோகன்’ என்பவர், கதை எல்லாம் எழுதுவாராமே? அப்டியா?

18 hrs ·

facebook விஜயகாந்த்துகள்

facebook பெரியாரிஸ்ட்டுகள்..

10 thoughts on “என்ன தலைப்பு வைக்கிறது?

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி…இனியாவது மக்கள் திருந்தினால் பாப்போம்….

    மலர்

  2. //தலித் விரோத ஜல்லிக்கட்டுக்கு//

    ஜல்லிக் கட்டில் தலித் விரோதம் எங்கிருந்து வந்தது?

    இதைப் பற்றி பதிவு ஏதாவது இருக்கலாம்; நான் பார்க்கவில்லை போலும்.

    பொதுவாக ஜல்லிக் கட்டில் மாடு பிடிப்பது, காயம் படுவது தலித் மட்டும் இல்லை; எங்கள் ஊரில் தேவர்கள், அம்பலகாரர்கள் மாடு பிடிப்பதைப் பார்த்து இருக்கிறேன். ( (1952 – 1971 :: அதற்கு ப் பிறகு கிராம வாழ்க்கை கொடுத்துவைக்கவில்லை).

  3. வசை மட்டுமே பாட தெரிந்த ஒருவர் எழுத்தாளராமே அப்படியா?

  4. dear mathimaran pls unga speech video niraiya youtubela upload pannunga….

Leave a Reply

%d bloggers like this: