‘தகுதி’யற்ற விமர்சகர்களும்; ஷோபாவும் சுஹாசினியும்

images
“என் ஆத்துக்காரர் படத்துக்கு, என் சித்தப்பா படத்திற்குத் தயவு செய்து தகுதி ஆனவர்கள் மட்டும் விமர்சனம் எழுதுங்கள்.”

‘அப்போ மத்தவங்க படத்துக்குத் தகுதியில்லாதவர்கள், எழுதுங்க.’ அப்டியா? – என்ன ஒரு பரந்த உள்ளம்.
‘தில்’ இருந்த இப்படிச் சொல்லுங்களேன்:
‘‘என் ஆத்துக்காரர் படத்தை, என் சித்தப்பா படத்தைத் தயவு செய்து தகுதி ஆனவர்கள் மட்டும் பாருங்களேன்’ என்று.

மொதல்ல அவுங்க ரெண்டு பேரையும் சொந்தமா சிந்திச்சி படம் எடுக்கச் சொல்லுங்க.
*
இன்னைக்கெல்லாம்.. பட விளம்பரம் வரும்போதே அதோட ஒரிஜனல் படத்தின் விளம்பரத்தையும் வெளியிட்டு ‘அம்மணமா’ அம்பலமாக்கிறது ‘மவுஸ்’ புடிக்கிற ஆளுங்கதான். அந்த பயம்.
13 April at 15:24 ·

‘ஷோபா’ என்ற சிறந்த நடிகை தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால்; சுஹாசினி என்ற நடிகை உருவாகி இருக்க முடியாது.
சுஹாசினியின் சிரிப்பிலிருந்து, சின்ன அசைவுகள் வரை அப்படியே ஷோபாவிடம் இருந்து எடுக்கப்பட்டவைதான்.
13 April at 19:34 ·

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை


உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

மனோரமா-சிவாஜி ஒப்பீடல்ல..

Leave a Reply

%d bloggers like this: