இராமானுஜர் – ஜெயேந்திரன் – ஜெயலலிதா

Ramanujar-1
ஜெயேந்திரரையே கைது செய்தவர் ஜெயலலிதா? அவரைப் போய் பார்ப்பன உணர்வாளர் என்கிறீர்களே?
-ஆர்.கணேசன், திருநெல்வேலி.

அது சரி. ஜெயேந்திரன், சங்கர்ராமன்னு ஒருத்தரை போட்டுத் தள்னாரே, அவர் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா? அவரும் அய்யிருதாங்க. அப்புறம் ஏன் இவுரு அவர போட்டாரு. அது மாதிரிதான் ஜெயலலிதா ஜெயேந்திரனை கைது பண்ணதும்.

விசிஷ்டாத் துவைதத்தைப் பரப்பிய ராமானுஜர், தன் இளமை காலத்தில் யாதவப் பிரகாசர் என்பவரிடம் வேதம் படிக்க சேர்ந்திருக்கிறார்.
“கப்யாசம்’ என்ற வார்த்தையை “கபிஆஸம்’ என்று அத்வைத முறைப்படி பிரித்து விளக்கம் சொல்லியிருக்கிறார் பிரகாசர். அதற்கு “குரங்கின் ஆசன வழி’ என்று அர்த்தமாம். குருவின் இந்த விளக்கத்தால் மனம் வருந்திய ராமானுஜர், கப்யாசம் என்ற வார்த்தையை “கம்பிபதிஇதிஆஸ’ எனப் பிரித்து அதற்கு “சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு மலர்ந்த செந்தாமரையைப் போன்ற கண்களுடைய திருமகள் நாதன் என்றும் விளக்கம் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கத்தால் அவமானப்பட்ட யாதவ பிரகாசர், ராமானுஜரை கட்டம் கட்டினார்.

தன் வேத அறிவால் பிரகாசரை ஓரங்கட்டி, காஞ்சியை ஆண்ட சிற்றரசனிடம் செல்வாக்கு பெற ஆரம்பித்தார் ராமானுஜர். ‘இனி பொறுப்பதில்லை’ என்று ராமானுஜருக்கு நாள் குறித்தார் யாதவ பிரகாசர்.
தன் சீடர்களோடு ராமானுஜரை ‘தீர்த்த மாடிவர’ கங்கைக்கு அழைத்துச் சென்று சீடர்களின் உதவியோடு ராமானுஜரை கங்கையில் அமுக்கி கொல்வது என்று திட்டம். கொலைத் திட்டம் ராமானுஜருக்கும் தெரியவர, ராமானுஜர் எஸ்கேப்.

யாதவ பிரகாசரும் அய்யங்கார், ராமானுஜரும் அய்யங்கார். அப்புறம் இவரு ஏங்க அவரை போட்டுத்தள்ள பிளான் போட்டாரு.
அதிகாரம் மற்றும் சொத்துக்கான சண்டை அண்ணன் தம்பிக்குள்ளேயே நடக்கும் போது, ஜாதிக்குள்ளேயே நடக்கிறதாங்க அதிசயம். சகோதரர் களுக்குள்ளேயே சண்டைப் போட்டுக்கறதனாலே அவுங்களுக்கு ஜாதி பாசம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

ஜெயேந்திரன் கைதின் போது ஜெயலலிதாவை கண்டித்து மாமிகள் உட்பட பிராமண சங்கம் உண்ணாவிரதம் இருந்தது. ஆனா தேர்தல் வந்த போது “அதிமுக விற்குத்தான் ஓட்டு போடணு’ம்ன்னு பிராமணர் சங்கம் தீர்மானம் போட்டுது.

‘நம்ம’ ஞாநி கூட ஜெயேந்திரனை அம்பலப்படுத்தி “தீம்தரிகிட’ இதழில் கடுமையா எழுதினாரு. ஆனால் ஆனந்த விகடன்ல ஜெயேந்திரனைப் பற்றி ஒரு கட்டுரை கூட எழுதல. சரி அது அவர் சக்திக்கு மீறின விஷயம். அதனால முடியலைன்னே, வைச்சிப்போம். ஜெயேந்திரனை தீவிரமா ஆதரிச்சி ஆனந்த விகடன் எழுதியதை கண்டித்து தனது தீம்தரிகிட இதழில் ஒரு கட்டுரை கூட எழுதல. தீம்தரிகிட இதழில் எழுதுவதையும் ஆனந்தவிகடன் கட்டுப்படுத்துமா என்ன? அதுக்குப் பேருதாங்க நெட் ஒர்க் பிசி.
.
மே 2007 ‘விழிப்புணர்வு’ இதழில் எழுதியது. வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

2 thoughts on “இராமானுஜர் – ஜெயேந்திரன் – ஜெயலலிதா

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading