36 வயதினிலே.. வசந்தி; அண்ணாமலையின் தங்கச்சி..
பணக்கார நண்பன் தன்னை அவமானப்படுத்தியதால், ஒரு பாடலின் மான்டேஜ்களிலேயே பணக்காரனாகி காட்டும் அண்ணாமலையின் ‘திறமை’ யை போல் இருக்கிறது,
தன் கணவரால் உதாசினப்படுத்தப்பட்ட 36 வயதான பெண், சாடாரென ஜனாதிபதியே வியந்து பாராட்டி விருந்து கொடுக்கிற அளவிற்கு உயர்ந்தது.
பூச்சி மருந்து காய்கறி, இயற்கை வேளாண்மை ஏதோ என்.ஜி.வோ, பிராஜக்கெட் மேடையில் பேசப்படுகிற ‘இயற்கை வேளாண்மை’ பேச்சுப் போலவே இருக்கிறது வசனம்.
மொட்டை மாடியில் காய்கறி. ஆமாம், நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொண்டால், அப்புறம் என்ன மொட்டை மாடியிலதான் விவசாயம்.
சொந்த வீடு இல்லாதவர்கள் நிலமையோ ‘மொட்டை’தான்.
அவர்களால் ‘இயற்கை’ காய்கறியை வாங்க கூட முடியாது. அது விக்குற விலைக்கு இந்தப் படத்துல வரா மாதிரி துணிக்கடை மொதலாளிகள் தான் காய்கறி வாங்க முடியும்?
பன்னாட்டுப் பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்திய விவசாயத்தை விஷமாக்கிய அரசே; இயற்கை வேளாண்மையை உற்சாகப்படுத்துகிறதாம். படுத்தும். அப்பதானே தன்னை யோக்கியனா காட்டிக்க முடியும்.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கிடப்பில் போட்ட அரசு, ஒரு ‘சாதனை’ பெண்ணை அங்கீகரிக்கிறதாம்.
இந்த மாதிரி சாதனைகளை எல்லாத்துறைகளிலும் என்.ஜி.ஓ க்கள்தான் வழக்கமாகப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. விருதும் வாங்கிக்கிட்டு இருக்காங்க. வெளிநாடு சுற்றுப்பயணங்களும் சரமாரியா போயிகிட்டுதான் இருக்காங்க.
இந்தப் படத்திலேயும் கதாநாயகி, ‘ஜனாதிபதி’ மாளிகையில் நின்று ‘அய்ரோப்பா’ சுற்றுப் பயணம் போவதாகச் சொல்கிறார்.
அது தெளிவான என்.ஜி.ஓ. குறியீடாகத்தான் இருக்கிறது.
சுற்றுச்சூழல், காடு, காட்டுயிர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, பெண்ணியம், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இப்படிப் பல முக்கியமான பிரச்சினைகள்; இந்திய அரசு, வெளிநாட்டு உதவியுடன் ‘சொகுசா, ஜாலியா’ வெறும் ‘பிராஜக்கெட்டா’ பல இடங்களில் போயிக்கிட்டுத்தான் இருக்கு.
‘36 வயதினிலே..’ பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற திட்டங்களை நியாயப்படுத்துகிற திரைக்கதை, வசனம்.
மே19, facebook ல் எழுதியது.
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
நல்ல விமர்சனம். எல்லாரும் ஆகா ஓகோ என்று பாராட்டும் போது, உண்மையை மட்டும் முன் நிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விதம் அருமை.
பண்ணுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை .உங்க அறிவுக்கு தகுதிக்கு இப்புடி படத்தை
dear mathimaran, welcome to our native place.On 30th I think you are visiting our place: Puthusamballi, Mettur dam.3.to give address on atheism in social justice.
next: your TV interview about battleship of potemkin.
“நான்” படித்து பார்த்தேன். எனது 11 புத்தகங்களுக்குமே யாம் எவரிடமும் அணிந்துரை பெற்று போட்டுக் கொண்டதில்லை. அந்த வகையில் உங்களது கருத்தும் எமது கருத்தும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. மற்றபடி 3 வலைப்பூக்கள் நடத்தி வருகிறேன் இணையத்தில். சந்திக்க வாய்ப்பு இருப்பின் சந்திக்கலாம்.வணக்கம். நன்றி.
http://www.marubadiyumpookkum.wordpress.com
http://www.thanigaihaiku.blogspot.com
http://www.dawnpages.wordpress.com
Kavignar Thanigai.
saw your battleship potemkin tv interview..I will see it when time permits..thanks. vanakkam
அட்டகாசமான விமர்சனம். என்.ஜி.ஓ புராஜெக்ட் போல என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.